Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, November 30, 2023
Please specify the group
Home > Featured > உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பணத்திற்கு கொடுத்த விலை!

உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பணத்திற்கு கொடுத்த விலை!

print
வாசகர்களுக்கு வணக்கம். முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல, சம்பந்தர் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்க தற்போது மீண்டும் ஆச்சாள்புரம் (திருநல்லூர் பெருமணம்) புறப்படுகிறோம். இரவு அங்கிருந்து தஞ்சை ஒரத்தநாடு பயணம். ஒரு நாள் முழுக்க அவர்களுடன் இருந்து சம்பந்தர் திருவிழாவை கண்டுரசித்து கவர் செய்யவிருக்கிறோம். புதன்கிழமை காலை தான் சென்னை திரும்புகிறோம். ஈசனருளால் திகட்ட திகட்ட ஒரு மாபெரும் விருந்து உங்களுக்கு அடுத்து வரும் நாட்களில் காத்திருக்கிறது.

இந்தப் பதிவு மிக மிக வலிமையான ஒரு கருத்தை வலியுறுத்தும் பதிவு. எனவே தான் இதை அப்படியே அளிக்க விரும்பாமல் “யார் பணக்காரன், யார் ஏழை?” என்ற பதிவை ஒரு ட்ரெயிலர் போல அளித்தோம்.

தளம் நடத்த பொருளுதவி எதிர்பார்க்கும் ஒருவர் பொருளாதார தன்னிறைவு மற்றும் இது போன்ற பதிவுகளை அளிப்பது உங்களில் சிலருக்கு (?!) முரண்பாடாக தெரியலாம்.

அப்படிப்பட்ட எண்ணம் சரியா?

அறநெறியும் தெய்வபக்தியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அனைவரிடமும் தழைக்கச் செய்யும் ஒரு மகத்தான வேள்வியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பியே பொருளீட்டுவதற்கு எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி எத்தனை எத்தனையோ இன்னல்களுக்கு நடுவே இந்த தளத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். ஒரு சுதந்திர போராட்ட தியாகி தனக்கு வரவேண்டிய பென்ஷன் தொகைக்காக தொடரும் வழக்கில் தனது வாதத் திறமையை பயன்படுத்தி அவருக்கு வெற்றியை தேடித்தந்து அவர் கொடுக்கும் ஐநூறு ரூபாய் ஃபீஸை மனநிறைவோடு வாங்கிக்கொள்ளும் வழக்கறிஞருக்கும் அதே வாதத்திறமையை வைத்து கிரிமினல்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவிக்க ஒரு வழக்கறிஞர் பெறும் லட்சக்கணக்கான ஃபீஸுக்கும் வித்தியாசம் உள்ளது நண்பர்களே!

நமது அறிவையும் ஆற்றலையும் வைத்து என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது தான் முக்கியம், எவ்வளவு பொருளீட்டுகிறோம் என்பது அல்ல !!

உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பணத்திற்கு கொடுத்த விலை!

நாம் கூறப்போகும் இந்த விஷயம் உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மை.

1923 ஆம் ஆண்டு. உலகின் ஒன்பது பெரும் கோடீஸ்வரர்கள் அமெரிக்காவின் சிக்காகோவில் உள்ள ‘EDGE WATER BEACH HOTEL’ என்கிற மிகப் பெரிய நட்சத்திர ஓட்டலில் சந்தித்தனர். அவர்களுக்குள் ஒரு GET TOGETHER. அவர்கள் அனைவரது ஒட்டுமொத்த செல்வமும் (GROSS WEALTH) அப்போதைய அமெரிக்க அரசாங்கத்தின் செல்வத்தைவிட பல மடங்கு அதிகம். இவர்கள் அனைவருக்கும் பணத்தை எப்படி நிர்வகிப்பது, பெருக்குவது என்பது கைவந்த கலையாக இருந்தது.

யார் யாரெல்லாம் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்கள் என்றால்…

1) மிகப் பெரிய ஸ்டீல் தொழிற்சாலையின் நிறுவனர் மற்றும் தலைவர்

2) மிகப் பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர்

3) உலகப் புகழ் பெற்ற நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ஜின் தலைவர்

4) மிகப் பெரிய எரிவாயு நிறுவனத்தின் நிறுவன தலைவர்

5) சர்வதேச செட்டில்மெண்ட் வங்கியின் தலைவர்

6) மிகப் பெரிய கோதுமை உற்பத்தி கமிஷன் எஜன்ட்

7) பக்கு வர்த்தகத்தின் முதுகெலும்பான வால் ஸ்ட்ரீட்டின் மிகப் பெரிய தரகர்

8) செல்வம் கொழிக்கும் சுவீடனை சேர்ந்த மிகப் பெரிய நிதி நிறுவன அதிபர் & தொழிலதிபர்

9) அமெரிக்க மந்திரி ஒருவர்

அடேங்கப்பா… உண்மையில் பெரிய ஆளுங்க தான்! பண முதலைகள் என்ற பதத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர்கள்.

Money is not everything

சரியாக 25 வருடங்கள் கழித்து அதாவது 1948 ஆம் ஆண்டு அனைவரும் எப்படி எங்கே இருந்தனர் என்று பார்ப்போமா?

1) மிகப் பெரிய ஸ்டீல் தொழிற்சாலையின் நிறுவன தலைவரான சார்லஸ் ஷ்வாப் (பெத்லேஹம் ஸ்டீல் கார்ப்பரேஷன்​) தான் இறந்து போவதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பு அவரது தொழிற்சாலை திவாலாகி கடைசியில் கடன் வாங்கித் தான் வாழ்கையை ஓட்டினார். பென்சில்வேனியாவில் 1000 ஏக்கர் பரப்பளவில் 44 அறைகள் கொண்ட பெரிய எஸ்டேட் வீட்டில் வசித்தவர் இறுதிக் காலத்தில் ஒரு சிறிய அப்பார்ட்மெண்ட்டில் வசித்தபடி தான் இறந்துபோனார்.

2) மிகப் பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் சாமுவேல் இன்சல் இறக்கும் அவரது சட்டைப் பையில் இருந்தது ஒரு சில டாலர் நோட்டுக்கள் தான். அவரது எஸ்டேட்டின் மதிப்பு அப்போது $1,000 ஆனால் அவருக்கிருந்த கடனின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? $14,000,000

3) நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ஜின் தலைவர் ரிச்சர்ட் வொயிட்னீ சிறையில் பிறர் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக கம்பி எண்ணிக்கொண்டிருந்தார்.

4) மிகப் பெரிய இயற்கை எரிவாயு நிறுவனத்தின் நிறுவன தலைவர் ஹோவர்ட் ஹாப்சன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு காசநோய் மருத்துவமனையில் இறந்தார்.

================================================

Don’t miss these articles….

“பணத்திற்கும் காது உண்டு”- பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 6

நீங்க எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் இலக்கு என்ன?

மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்?

உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!

================================================

5) சர்வதேச செட்டில்மெண்ட் வங்கியின் தலைவர் லியோன் பிரேசர் மனஅழுத்ததால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இத்தனைக்கும் பொருளாதார நிலையில் இவர் வலுவாகத் தான் இருந்தார்.

6) கோதுமை உற்பத்தி கமிஷன் ஏஜெண்ட் ஆர்தர் கட்டன், பங்கு சந்தை திவாலாகி மாரடைப்பால் காலமானார். 1929 ஆம் ஆண்டு பங்குச் சந்தை வர்த்தகத்தின் மிகப் பெரிய சரிவில் சிக்கிய இவர், தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்து கடனாளியாகி இறந்துபோனார்.

7) அமெரிக்க பக்கு வர்த்தகத்தின் முதுகெலும்பான வால் ஸ்ட்ரீட்டின் மிகப் பெரிய பங்குத்தரகர் ஜெஸ்ஸி லிவர்மோர் தற்கொலை செய்துகொண்டார். தனது இறுதிக் காலகட்டதில் ஒரு வித மன அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தற்கொலைக்கு முன்னர் அவர் தனது மனைவிக்கு எழுதி வைத்திருந்த கடிதம் உள்ளத்தை உருக்கும் ஒன்று.

8) சுவீடனை சேர்ந்த மிகப் பெரிய நிதி நிறுவன அதிபர் & தொழிலதிபர் இவார் க்ரூகர் திவாலாகி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

9) அமெரிக்க மந்திரி ஆல்பர்ட் ஃபால் ஊழல் புகாரில் சிக்கி, பதவியிழந்து நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

இவர்கள் செய்த தவறு என்ன?

பணத்தை சம்பாதிப்பதில் காட்டிய ஆர்வத்தை எப்படி வாழவேண்டும் என்பதில் காட்டத் தவறியது தான்.

பணம் தீய விஷயம் அல்ல. அது ஒரு அற்புதமான விஷயம். நம் தேவைகளை அது நிறைவேற்றுகிறது. பசித்தோருக்கு சோறிடுகிறது. நோயுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஏழைகளுக்கு துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க உதவுகிறது. இன்னும் எத்தனை எத்தனையோ.

இரண்டு விதமான பாடங்களை கற்றுத் தரும் கல்வி ஒருவருக்கு தேவை.

1) எப்படி சம்பாதிப்பது
2) எப்படி வாழ்வது

நமது பட்டமும், படிப்புகளும் முதலில் காணும் கல்வியை தருகின்றன. ஆனால், இரண்டாவது ? நாம் தான் கற்கவேண்டும். தெளியவேண்டும். சுருக்கமாக சொன்னால் பட்டுத் தெளியவேண்டும்!

நம்மில் பலர் பணம் சம்பாதிப்பதில் மட்டும் குறியாயிருந்து, நமது குடும்பத்தை, ஆரோக்கியத்தை, பொறுப்புக்களை புறக்கணிக்கிறோம்.

“இதையெல்லாம் ஏன் செய்றீங்க?” என்று யாராவது கேட்டால், “குடும்பத்துக்காக” என்று ஒரு ரெடிமேட் பதில் பலர் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் பணம் சம்பாதிக்க(!) புறப்படும்போது, அது அவர்கள் பார்க்கும் தொழிலோ அல்லது போகும் வேலையோ எதுவாக இருந்தாலும் அவர்கள் வீட்டைவிட்டு புறப்படும்போது அவர்கள் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருப்பார்கள். திரும்ப வரும்போதும் தூங்கிக்கொண்டிருப்பார்கள். அடப்போங்கய்யா….!

சில பல வருடங்கள் கழித்து திரும்பி பார்ப்பார்கள். ஆனால் அதற்குள் குழந்தைகளுக்கு இறைக்கை முளைத்து அவரவர் கனவைத் தேடியும் வாழ்க்கையை தேடியும் பறந்திருப்பார்கள்.

தண்ணீர் இன்றி எந்தக் கப்பலும் அங்குலம் கூட நகரமுடியாது. இது அனைவருக்கும் தெரியும். கப்பலுக்கு அவசியம் தண்ணீர் தேவை. ஆனால் அதே தண்ணீர் கப்பலுக்குள் வந்தால், அந்த கப்பலே மூழ்கிவிடுகிறது. ஆக முதலில் கப்பலுக்கு அவசியமான ஒன்று பின்னர் ஆபத்தாகிவிடுகிறது.

இதே போலத் தான் நமது சம்பாத்தியமும். அது அவசியம் தான். ஆனால், அது நமது இதயத்தை ஆக்ரமிக்க அனுமதிக்க வேண்டாம். அப்படி செய்தால், வாழவேண்டி தேடிய செல்வம் நம்மை அழிக்கவும் செய்துவிடும்.

ஒரு கணம் நில்லுங்கள். உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். “தண்ணீர் நமது கப்பலுக்குள் வந்துவிட்டதா?”

நிச்சயம் வந்திருக்காது என்று நம்புவோமாக.

சம்பாதிப்பதற்கும் வாழ்வதற்கும் இருக்கும் வித்தியாசம் இப்போது புரிந்திருக்குமே.

நாம் சொல்வதெல்லாம் ஒன்று தான். பணம் சம்பாதிக்க நேரம் ஒதுக்குவதோடு கொஞ்சம் உங்கள் குடும்பத்திற்கும் கொஞ்சம் தர்மத்திற்கும் கொஞ்சம் இறைவனுக்கும் நேரம் ஒதுக்குங்கள்.

பணம் உங்களை கைவிட்டாலும் இவை உங்களை கைவிடாது. ¶¶

================================================

Are you a part in our journey?

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

================================================

Also check…

வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

யார் மிகப் பெரிய திருடன் ?

எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

தெய்வத்தான் ஆகா தெனினும்….

செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

================================================

[END]

4 thoughts on “உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பணத்திற்கு கொடுத்த விலை!

 1. டியர் ஜி,
  தாங்கள் சென்னை வந்ததும் நேரில் சந்திக்க விழைகிறேன்.

  தயவு செய்து போன் செய்யவும்.

  அன்பன்
  நாகராஜன் ஏகாம்பரம்

 2. வணக்கம் . அற்புதமான பதிவு . சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை அற வழிக்கு பயன்படுத்தி ஆன்ம திருப்தி பெறுவதோடு இல்லறத்தை நல்லறமாக்குவோம்.
  “இரை தேடுவோம் இறையும் தேடுவோம் ” – திருப்புகழ்.

 3. அருமையான பதிவு
  பணத்தை தேடி இயந்திரம் போல் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான பதிவு
  சிந்தை தெளிய வைத்து சிந்திக்க தூண்டும் பதிவு
  வாசகர்கள் இதை படிப்பதோடு நில்லாமல் இக்கருத்தை உங்களால் முடிந்தவரை பிறர்க்கு சென்று சேர உதவுங்கள்
  நம் தளத்தில் வெளிவரும் ஒவ்வொரு செய்தியும் எப்படியாவது உரியவரிடம் சென்று சேர்பிக்கும் பொறுப்பு ஆசிரியரைபோலவே நமக்கும் உள்ளது
  நம்மால் இயன்றதை செய்ய இக்கணம் உறுதி ஏற்போம்
  எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க இறைவனை பிரார்த்திப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *