ஜோதிட கட்டங்களை ஆராய்ந்து கொண்டு, ஜாதகத்தின் மீதும் கிரகங்களின் மீதும் பழியை போட்டுக்கொண்டு திரிபவர்கள் என்றுமே கடவுளின் அருளுக்கு பாத்திரமாக முடியாது.
நமக்கு பாதகமான சந்தர்ப்ப சூழ்நிலைகளை கூட நாம் நினைத்தால் நமக்கு சாதகமாக மாற்ற முடியும். அது எப்படி என்பது குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
ஒரு மனிதன் பெறக்கூடிய ஆற்றல்களிலேயே மிக மிக வலுவானது, பயனுள்ளது மனதின் ஆற்றலே.
இந்த ஆற்றல் உங்கள் எண்ணங்களிலிருந்து வருகிறது என்பது தான் விசேஷமே.
நம் மனதில் தோன்றும் எண்ணங்களே நமது வாழ்க்கையில் நடக்கும் அனைத்திற்கும் காரணம். விதியோ ஜாதகமோ அல்ல. நம் மனதில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணங்களே நமது நடத்தை மற்றும் மனப்பான்மை மீது பாதிப்பை ஏற்படுத்தி நமது செயலையும் அதன் பின்விளைவுகளையும் தீர்மானிக்கிறது. எனவே நமது எண்ணங்கள் எப்படியோ நமது வாழ்க்கையும் அப்படியே.
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது குறித்து கவனமாயிருங்கள்…
நமது மனதுக்குள் ஓடும் வீடியோ போன்றவை நமது எண்ணங்கள். நாம் அங்கே என்ன பிளே செய்கிறோம் என்பதை பொறுத்தே என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறோம், என்ன மாதிரியான அனுபவங்களை சந்திக்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது. ஒருவர் தமது வாழ்க்கையில் இனிமையான மாற்றங்களை காணவிரும்பினால் அவர்கள் அதற்கு ஏற்றார்போல தாங்கள் விரும்பும் வீடியோவை பிளே செய்யவேண்டும்.
நமது எண்ணங்களின் சக்தி என்பது ஆக்கப்பூர்வ சக்தியாகும்.
இந்த எண்ணங்களை நாம் பயிற்சி மூலம் மேலும் வலுவுள்ளதாக ஆக்க முடியும். இதை பயன்படுத்தி, நாம் நமது வாழ்க்கையில் மட்டுமல்ல, மற்றவர்கள் மனத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஒரு விதையை நீங்கள் நட்டு, அதை நல்ல முறையில் நீரூற்றி பரமாரித்தால் அது எப்படி வளர்ந்து பலன் தருகிறதோ அதே போலத் தான் நம் எண்ணங்களும். நமது எண்ணங்களுக்கு நாம் அக்கறை, ஆர்வம், உற்சாகம் ஆகியவற்றை ஊட்டி வளர்த்து வந்தால் அவை வளர்ந்து நிச்சயம் பல கொடுக்கும்.
உங்கள் எண்ணங்கள் உங்கள் மனதிலிருந்து ஆழ்மனதிற்கு சென்று, அங்கு அவை நம் செயலை தீர்மானிக்கின்றன. அதே நேரம், நமது எண்ணங்கள் மற்றவர்கள் மனதிற்கும் சில சமயம் சென்றடைந்து நமக்கு உதவக்கூடிய நிலையில் உள்ளவர்கள் ஏன் என்று புரியாமலே நமக்கு உதவுவார்கள்.
இது நம்புவதற்கு கடினமாகவும் கஷ்டமாகவும் இருக்கலாம். ஆனால் உண்மை இது தான். மனதின் சக்தியை அறிந்தவர்கள் நிச்சயம் இதை ஒப்புக்கொள்வார்கள். உங்கள் சிந்தனைகளையும் நீங்கள் வாழும் வாழ்க்கையையும் சற்று ஆராய்ந்து ஒப்பிட்டு பார்த்தீர்கள் என்றால் மனதை பற்றிய பல ரகசியங்களை புரிந்துகொள்ளமுடியும்.
இந்த பிரபஞ்சத்தின் அளவற்ற சக்திக்கும் உங்கள் மனதின் சக்திக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை. ஒரே விதமான சிந்தனையை திரும்ப திரும்ப நீங்கள் உங்கள் மனதில் செலுத்துவதன் மூலம் இந்த பிரபஞ்சம் ஏதோ ஒரு வழியில் அதை செயல்படுத்த உதவுகிறது. அதற்குரிய சூழலை கனிய வைக்கிறது.
சரி… நமது எண்ணங்களின் சக்தியை எப்படி பயன்படுத்துவது?
* நீங்கள் சாதிக்கவேண்டிய சாதனை அல்லது இருக்க விரும்பும் நிலை குறித்த ஒரு பக்காவான காட்சியை உங்கள் மனதில் தயார் செய்யுங்கள்.
* மனதில் தோன்றும் அந்த வீடியோ காட்சிக்கு ஒலி, ஒளி, வண்ணம், வாசனை, உயிர் என அனைத்தையும் கொடுங்கள். இதற்கு பெயர் தான் VISUALIZATION.
* இந்த VISUALIZATION ஐ அடிக்கடி நம்பிக்கையுடனும், கவனத்துடனும் மனதுக்குள் ஓடவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
* அப்படி ஓடவிட்டுக்கொண்டே இருந்தீர்கள் என்றால், உங்கள் ஆழ்மனது அதை உண்மையான அனுபவங்கள் என்று நம்பத் துவங்கும். ஆழ்மனதிற்கு உண்மையான அனுபவம், கற்பனையான அனுபவம் என்று வேறுபடுத்தி பார்க்க தெரியாது. எனவே அது மாற்றங்களை ஏற்படுத்தி, வாய்ப்புக்களை ஈர்த்து மனதில் உள்ள அனுபவத்துடன் யதார்த்தத்தை பொருத்திப் பார்க்க துவங்கும்.
நாம் அடிக்கடி இப்படி VISUALIZE செய்யும் செயல்கள், சூழ்நிலைகள் மற்றும் பொருட்கள் நடைமுறை உலகில் இயற்கையான முறையில் நிஜமாகிவிடும். கனவு நனவாவது இப்படித் தான். இப்படி கனவு நனவாவது சினிமாவில் வரும் பாடல் போல ஒரே நாளில் நடக்கக்கூடியதல்ல. உங்கள் லட்சியத்தில் நீங்கள் எந்த அளவு உறுதியாக, உண்மையாக இருக்கிறீர்கள், எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள், எந்தளவு அக்கறை செலுத்துகிறீர்கள் என்பதை பொறுத்து அதற்கு சற்று கால அவகாசம் பிடிக்கும்.
மேற்கூறிய இந்த பழக்கத்தை பயன்படுத்தி, உங்களிடம் இருக்கும் எதிர்மறையான (நெகட்டிவ்) பழக்கங்களை மாற்றி, புதிய நேர்மறையான (பாஸிட்டிவ்) பழக்கங்களை, திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
பணத்தை ஈர்ப்பதற்கும், சொத்துக்களை பெருக்குவதற்கும், பணியிடங்களில் உத்தியோக உயர்வை பெறுவதற்கும், வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கும், உடல் நலத்தை பேணுவதற்கும், உறவு முறைகளை பராமரிப்பதற்கும், சாதகமற்ற சூழ்நிலைகளை சாதகமான சூழ்நிலைகளாக மாற்றுவதற்கும்… இப்படி எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
எனவே எப்போதும் உங்கள் சிந்தனைகளில் கவனமாக இருக்கவேண்டும். எதிர்மறையான எண்ணங்களை, நபர்களை ஒரு போதும் ஊக்குவிக்காதீர்கள். என்றும் எப்போதும் உங்களுக்கு மகிழ்ச்சியையும், நல்லதையும், பாஸிட்டிவ்வான முடிவுகளையும் தரும் சிந்தனைகளை மட்டுமே உங்கள் மனதிற்குள் அனுமதிக்கவேண்டும்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. (குறள் 595)
நீரைக் குறிக்க எத்தனையோ உதாரணங்கள் இருக்க வெள்ளத்தை இந்த குறளில் ஏன் வள்ளுவர் குறிப்பிடுகிறார் தெரியுமா?
எப்போதுமே வெள்ளம் என்பது எதிர்பாராமல் வருவது. நமக்கு பிரச்சனைகள் என்பதும் அப்படித் தான். அப்படி பிரச்சனைகள் வரும்போது நாம் அவற்றை எப்படி எதிர்கொள்கிறோமோ அதை பொறுத்தே நமது உயர்வும் இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.
மிகவும் அருமையான சிந்திக்க வைக்கும் பதிவு . இந்த பதிவை படிக்கும் பொழுது இன்று திங்கள் கிழமையோ என்று நினைத்தேன்.
//தீதும் நன்றும் பிறர் தர வாரா //
நாம் செய்யும் அனைத்திற்கும் நாம் தான் பொறுப்பு. நாம் நல்லவற்றையே நினைத்தால்………… நமக்கு கண்டிப்பாக நல்லதே விளையும்
நமது சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ……..மிக அழகிய கதை மூலம் தெளிவு படுத்திவிட்டீர்கள் .
இவ்வளவு தன்னம்பிக்கை பதிவை நம் தளம் மூலம் படிக்கும் நம் வாசகர்கள் நேர் மறை சிந்தனை உள்ளவர்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ. … தங்களின் ஒவ்வொரு பதிவின் மூலம் எங்களுக்கு விதைத்த நற் சிந்தனை என்னும் விதை …………..தற்பொழுது விருட்சமாக வளர்ந்து வருகிறது………….
நன்றி
உமா வெங்கட்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் அவர்கள் சொல்லியது ” தீதும் நன்றும் பிறர் தர வாரா”
நமது நல்லவைகளுக்கும் , அல்லவைகளுக்கும் நாம் மட்டுமே பொறுப்பு
“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நன்று”
சிறந்த பதிவு.
இப்பதிவினை படிக்கும்போது கீழ் கண்ட வாக்கியங்களே நினைவுக்கு வருகின்றன.
“WHEN THE GOING GETS TOUGH, ONLY THE TOUGH GETS GOING.”
அதேபோல் உயரிய சிந்தனைகளே நம் வாழ்க்கையினை
தீர்மானிக்கின்றன என்பதை மிக சிறப்பான உதாரணத்துடன் விளக்கியுள்ளீர்.
உயரிய சிந்தனைகளை கொள்வோம். சீறான வாழ்வினை பெறுவோம்.
Very Energetic and Excellent Article. If we follow this the life will be pleasant.
Narayanan.
SundarJi,
Very good one… thanks for this…
Rgds,
Ramesh
சார்
படிக்கும்போதே கண்ணில் நீர் வருகிறது.
சத்தியமாக நீங்கள் எனக்காகத் தான் எழுதியுள்ளீர்கள்.
காலையில் மனது கஷ்டமாக இருந்தது. வீட்டுக்காரம்மா ரூ.5,00,000/- கேட்டார்கள். என்ன செய்வது என்று மனம் கஷ்டத்தோடு ஆபீஸ் வந்தேன். படித்தவுடன் மனம் தெளிவாகி விட்டது.
selvi
வணக்கம் சுந்தர். எண்ணங்கள் செயலாகும் என்பது உண்மைதான்.ஆனால், குழப்பத்திலும் ,பிரச்சனைலும், தினசரி வேலைகளிலும் சிக்கி இருக்கும் மனைதை இந்த எண்ணங்களில் இருந்து திசை திருப்பி ஆக்கபூர்வமாக சிந்திப்பது சிரமம்தான்.ஆனால் முயன்றால் முடியாதது இல்லை. நன்றி.
கலங்கரை விளக்கம் போல வாழ்க்கைக்கு வழிகாட்டும் அருமையான பதிவு
உறக்கத்தில் இருப்பவர்களை உசுப்பி எழுப்பும் உன்னதமான பதிவு
சிறுகதை மூலம் நம்பிக்கை என்னும் பெரும் விதையை விதைத்தமைக்கு மிக்க நன்றி
வாழ்க வளமுடன் !!!
Nice article…
Only Positive thoughts get results…
Wonderfully explained.
**
I really appreciate for this article. Only few like you can write like this.
**
Each points touch the chord. Lovely story.
**
I appreciate reader viji’s comments. Yes, only few of us fix one aim and try to achieve it. Most of us are just living daily life.
**
**Chitti**.
நினைப்பதை அடிய “visualization technique” சொல்லி கொடுத்து இருக்கீங்க. முடிஞ்ச வர முயற்சி பண்ணுறோம்
சிந்தனை சிறுகதை – சிந்திக்க தூண்டியது.
இந்த பதிவு – கட்டாயம் அனைவரும் படித்து,பின்பற்ற வேண்டிய ஒன்று.
மிக்க நன்றி
Very Nice Article Sundar g..
Thanks for sharing..
மிகவும் அருமை, உண்மை