Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா? – பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 4

அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா? – பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 4

print
பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் தொடரின் அடுத்த பாகம்  இது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருப்பதாக கருதுகிறோம். ரைட்மந்த்ரா வாசகர்கள் ஒருவர் விடாமல் அனைவரையும் ஒரு சாதனையாளர்களாகவும் தன்னிறைவு மிக்கவர்களாகவும் பார்க்கவேண்டும் என்பதே நமது ஆசை. நாமும் நம்முடன் பல வாசகர்களும் நண்பர்களும் இந்த தன்னிறைவை நோக்கிய பயணத்தில் கூட வருகிறார்கள். நீங்களும் வர ஆசைப்படுகிறீர்களா?  முதல் மூன்று பாகத்தையும் படியுங்கள். அதில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துங்கள். உங்களுக்கே புரியும். அனைத்தும் சுலபமானவை தான். பின்னர் எங்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள்.

சரி…. இந்த நான்காம் பாகத்திற்கு செல்வோமா?

“வெற்றிகரமான மனிதர்கள் சந்தர்ப்பங்களுக்காக காத்திருப்பதில்லை. அவற்றை உருவாக்குகிறார்கள்!” என்று கூறப்படுவதுண்டு. இதையே தான் ரொம்ப நாளா சொல்லிகிட்டிருக்காங்க சிலர். ‘சந்தர்ப்பத்தை நாம் தான் உருவாக்கணும்… சந்தர்ப்பத்தை நாம் தான் உருவாக்கணும்…’ அப்படின்னு. அதெப்படி சந்தர்ப்ப சூழ்நிலைகளை நாம உருவாக்குறது? அதுவாத்தானே அமையனும்?

“பிசினஸ்ல எனக்கு பெரிய டர்னிங் பாயிண்ட் வேணும். அதை எப்படி நான் உருவாக்குறது? அதுவா அமைஞ்சா உண்டு சார்” ……..

“அதே போல எனக்கு ஒரு வீடு கட்டனும். நான் இருக்குற நிலைமைக்கு எனக்கு லோன் எல்லாம் கிடைக்காது. அப்போ அதுக்கேத்த சூழ்நிலையை நானா உருவாக்க முடியுமா? நடக்கிற காரியமா அது?” ……..

அப்படி இப்படி என்று நீங்கள் எதிர் கேள்வி கேட்டால், நமது மனதின் சக்தி புரியாதவர்கள் நீங்கள் என்று தான் அர்த்தம்.

Treasure chest

நாம் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறோம். மனிதனின் மனமும் மூளையும் மிக மிக அற்புதமான ஒரு படைப்பு. நீங்கள் ஒரு லட்சியத்தில் குறி வைத்து உழைக்க ஆரம்பித்துவிட்டால் அதை அடையாமல் அது விடவே விடாது.

சரி.. நீங்கள் விரும்பும் உங்களுக்கு சாதகமான சந்தர்ப்ப சூழ்நிலைகளை எப்படி உருவாக்குவது ?

இது மிக மிக எளிமையான ஒரு விஷயம். ஜஸ்ட் முயற்சி செய்து பாருங்களேன்…

முதல்ல ஒரு விஷயத்தை நீங்க எல்லாரும் புரிஞ்சிக்கணும். WE BECOME WHAT WE THINK அப்படின்னு சொல்வாங்க. ‘நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய்’.

நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று நினைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். துரதிர்ஷ்டசாலி என்று நினைத்தால் துரதிர்ஷ்டசாலி தான். ஒரு லட்சியத்தை உங்களால் அடைய முடியும் என்று நினைத்தால் நிச்சயம் உங்களால் முடியும். முடியாது என்று நினைத்தால் முடியாது.

Bernard Shw

“தாங்கள் இருக்கும் தற்போதைய நிலைக்கு காரணமாக சந்தர்ப்ப சூழ்நிலைகளையே பெரும்பாலான மனிதர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். நான் சூழ்நிலைகளை நம்புவதில்லை. இந்த உலகில் வெற்றி பெறுகிறவர்கள் யார் தெரியுமா? சூழ்நிலைகளையும் சந்தர்ப்பங்களையும் எதிர்பார்த்து காத்திருக்காமல் உருவாக்குபவர்கள் தான்.” – பெர்னார்ட் ஷா

இது தான் எனது பாதை. இப்படித் தான் எனது பயணம் இருக்கும். இந்த உயரத்தை தான் நான் எட்டவேண்டும் என்று நினைக்கும் ஒருவரால் நிச்சயம் அதை அடைய முடியும். அது எதுவாக இருந்தாலும் சரி.

அதே சமயம், வாழ்க்கையில் எந்த வித லட்சியமும் இன்றி, எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்கிற சிந்தனை இன்றி மனபோன போக்கில் வாழ்ந்து கொண்டு அவர்கள் தவறுகளுக்கு விதியையும், கிரகங்களையும் குறைகூறிக்கொண்டு ஒரு வித குழப்பத்தோடும், பயத்தோடும், கவலையோடும் ஒவ்வொரு நொடியையும் கழிப்பவர்களால் என்ன சாதிக்க முடியும்? நீங்களே சொல்லுங்கள்… அவர்கள் நினைப்பது போலவே அவர்கள் அதிர்ஷ்டம் கெட்டவர்கள் தான்.

இது எப்படி நடக்கிறது?

ஒரு எளிய உதாரணம் கூறுகிறோம்.

ஒரு விவசாயி இருக்கிறார். அவரிடம் ஒரே மாதிரியான நல்ல மண்வளம் கொண்ட இரண்டு நிலம் இருக்கிறது. அந்த நிலமானது அந்த விவசாயிக்கு இதைத் தான் நீ பயிரிடவேண்டும் என்று எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. விவசாயி தனக்கு விருப்பமானது எதுவோ அதை விதைத்து பன்மடங்கு அறுவடை செய்துகொள்ளலாம். நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சாய்ஸ் விவசாயினுடையது தான். எதை விரும்புகிறாரோ அதை தனது மண்ணில் விதைக்கலாம். அது அவர் கையில் தான் இருக்கிறது. நிலத்தின் கையில் இல்லை.

மனிதனின் மனதை அந்த நிலத்துடன் இங்கு கொஞ்சம் ஒப்பிடலாம். காரணம்  நம் மனமும் அந்த நிலத்தை போலத் தான். நிலமானது நாம் என்ன விதைக்கிறோம் என்பதை பற்றி கவலைப்படுவதில்லை. மாறாக என்ன விதைக்கிறோமோ அதை அது பன்மடங்கு திருப்பித் தருகிறது.

இப்போ அந்த விவசாயிக்கு இரண்டு வெவ்வேறு விதைகள் கைகளில் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோமே… ஒன்று தரமான நெல். மற்றொன்று பார்த்தீனியம் என்னும் போதை வஸ்து அதாவது நஞ்சு. தனது ஒரு நிலத்தில் நெல்லும் மற்றொரு நிலத்தில் பார்த்தீனியமும் விதைக்கிறார். அவற்றுக்கு நீரூற்றி பராமரிக்கிறார்.

இப்போது என்ன ஆகும்?

அவர் என்ன விதைத்தாரோ அதை நிலமானது திருப்பித் தரும் அல்லவா?

நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எதை விதைத்தாலும் நிலமானது அதைத் தான் திருப்பித் தரும்.

நெல் விதைத்த நிலத்தில் அபரிமிதமாக நெல்லும், பார்த்தீனியம் விதைத்த நிலத்தில் பார்த்தீனியமும் கிடைத்தன. விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?

IMG_6630 copy copy

நமது ஆழ்மனது நிலத்தை விட பன்மடங்கு சக்தி மிக்கது. அபூர்வமானது. ஆற்றல்மிக்கது. ஆனால் நிலத்தை போலத் தான் அது வேலை செய்யும். அதாவது நாம் என்ன நமது மனதில் போடுகிறோமோ அதைத் தான் எடுக்க முடியும். நமது எண்ணங்களே அவற்றுக்கு நாம் இடும் விதைகள். நமது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பது தான் அதன் வேலை.

எனவே என்றுமே நல்லவற்றையே எண்ண வேண்டும். துரோகத்தையும், பொறாமையையும், தோல்வியையும், தரித்திரத்தையும் நினைத்துக்கொண்டிருந்தால் திரும்ப திரும்ப அதைத் தான் நீங்கள் சந்தித்துக்கொண்டிருப்பீர்கள்.

நல்லவர்களை பாருங்கள். நல்லவர்களோடு பேசுங்கள். நல்லவர்களோடு பழகுங்கள். நல்ல விஷயங்களில் உங்கள் மனதையும் நேரத்தையும்  செலுத்துங்கள்.

“எவன் நல்லவன்.. எவன் கெட்டவன்னே… எனக்கு தெரியலே…” என்றால் அது உங்கள் தவறு. நீங்க வாழ்க்கையில் எதையும் இதுவரை கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

சிலரிடம் பேசும்போதும் பழகும்போதும் தான் புரிகிறது அவர்கள் ஏன் எப்போதும் எதிலும் தோல்வியையே தழுவிக்கொண்டிருக்கிறார்கள் என்று. எங்கும் எதிலும் எதிர்மறை எண்ணம், நம்பிக்கையின்மை இவைகள் தான் அவர்கள் சிந்தனையை ஆக்கிரமித்துள்ளது.  ஒரு நல்லவனைப் பார்த்தால் கூட அவர்கள் கண்களுக்கு அவன் கெட்டவனாகத் தான் தெரிவான். காரணம் அவர்கள் சிந்தனையை ஆக்கிரமித்திருப்பது அது தானே?அவர்கள் எப்படி வெற்றியை அரவணைக்க முடியும்? (யதார்த்தம் என்பது வேறு. நம்பிக்கையின்மை என்பது வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.)

மறுபடியும் சொல்கிறோம். நமது மனதில் நாம் என்ன போடுகிறோமோ என்ன விதைக்கிறோமோ அதைத் தான் எடுக்க முடியும்.

இப்போது சொல்லுங்கள் நமது மனதில் என்ன விதைக்கவேண்டும்?

வெற்றிகரமான நல்லதொரு எதிர்காலத்தையா? அல்லது தோல்வியும் அவமானமும் அச்சமும் நிறைந்த ஒரு எதிர்காலத்தையா?

நாம் என்ன விதைக்கிறோமோ அதைத் தான் அறுவடை செய்வோம்.

Swami-Vivekananda-Simple Quote

இந்த உலகில் இன்னமும் முற்றிலும் ஆராயப்படாத இடம் ஒன்று உண்டென்றால் அது மனிதனின் மனமே. நமது கற்பனைக்கெட்டாத மகத்தான பொக்கிஷங்கள், செல்வங்கள் அதில் புதைந்துள்ளன. நாம் அதில் என்ன விதைத்தலும் பன்மடங்கு அது திருப்பித் தர தயாராக இருக்கிறது.

நல்லவற்றை விதைப்போம். நல்லவற்றை அறுவடை செய்வோம். பன்மடங்கு.

நீங்கள் விதைக்கத் தயார் என்றால் நல்லவற்றை அறுவடை செய்யவும் தயாராக இருங்கள்.

இப்போது  முதலில் கேட்ட கேள்விக்கு வருகிறோம்.

நமக்கு சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவது எப்படி?

இப்போது விடை கிட்டத்தட்ட முக்கால்வாசி தெரிந்திருக்குமே.

நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்கு முதல் விதியே எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் தூக்கிஎறிந்து நல்ல சிந்தனைகளை விதைக்கத் துவங்குவதே. நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கவேண்டும் என்றால் நல்ல எண்ணங்களை மனதில் விதைக்கவேண்டும்.

நீங்கள் முதலில் நல்ல எண்ணங்களை மனதில் விதையுங்கள். அப்புறம் எப்படி அதை வைத்து சந்தர்ப்பங்களை உருவாக்குவது என்று பார்க்கலாம்.

அடுத்த பாகத்தில் சற்று விரிவாக பார்க்கலாம்….

==============================================================

Also check previous chapters….

பணத்தை ஈர்க்கலாம் வாருங்கள் – பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 3

அள்ளித் தரும் இந்த வங்கியிடம் பெற்றுக்கொள்ளத் தயாரா? பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 2

அடிப்படை பணகாந்த விதிகள் – பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 1

==============================================================

தொடர்புடைய பதிவுகள் :

நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ

காலடியில் ஒரு வைரச் சுரங்கம் – கண்ணுக்கு தெரிகிறதா?

சாப்பாட்டுக்காக க்யூவில் நின்ற அதே இடத்திற்கு பின்னாளில் கோடீஸ்வரராக நுழைந்த ஒருவர் கதை!

மலையை பிளந்த ஒற்றை மனிதன் – ‘முடியாது’ என்கிற வார்த்தையை இனி நாம் சொல்லலாமா?

நீங்க எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் இலக்கு என்ன?

விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!

மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்?

உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

==============================================================

[END]

14 thoughts on “அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா? – பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 4

  1. //நல்லவர்களை பாருங்கள். நல்லவர்களோடு பேசுங்கள். நல்லவர்களோடு பழகுங்கள். நல்ல விஷயங்களில் உங்கள் மனதையும் நேரத்தையும் செலுத்துங்கள்//

    இந்த பதிவின் ஒவொரு வரிகளும் வைர வரிகள். மிகவும் அருமையான பதிவு. பொட்டில் அடித்தாற்போல் உள்ளது இந்த பதிவு

    மிக்க மகிழ்ச்சி இந்த பதிவை அளித்ததற்கு. சுபெர்ப் . இந்த வருடத்தின் அசத்தல் பதிவு

    நாம் நலவற்றை நினைத்தால் நமக்கு நல்ல விஷயங்கள் தாமாகவே நடக்கும்

    நன்றி
    உமா வெங்கட்

  2. Hi Sundarji,

    Fantastic. It’s like have double dose of motivation from this article.
    **
    What’s pressing us. What need to be cleared. Everything has been put together pakka – with the perfect example.

    Mind is so powerful as you said. It’s what every great perspn has said in the past – right from Swami Vivekananda (Thoughts becomes Things) to Jesus Christ (Everything is possible for the person who believes).

    **
    When life takes its shape, so do our limitations as well. We should free ourselves from all those limitations.

    To free ourself, First is to clear our negative thoughts. Like cleaning the uncleaned dustbin which hasn’t been cleaned for days, we should remove the present things first, only then can we put new wastes there.
    **
    New year has started with wonderful thing for me. All thanks to you.

    1. Night awakening for vaikunda ekadesi – that itself first time, that too in the wake of first day of the year, was fantastic.
    2. Been there in bhajan with you – what a vibration it was, plus that person’s few thought provoking speech.
    3. Temple visits – wow, I couldn’t ask more – seeing Vaikunda pramapada vasal for the first time in my life.
    As usual, Our leader, Narasimmar too had given us a darshan. Plus, Prasadams given in each temple – especially laddu, which you took more than me – three times 😉 hehe. everything was fabulous.
    **
    Thanks so much for all this. Without you, It couldn’t have been possible for me this time.
    **
    And this year will be a fantastic year for everyone of us. By the end of this yr, most of our readers will have achieved marvellous things with your body, mind and soul stimulating articles.

    God bless.

    Everything is possible. Most of the top billionaires of the world today – are not inheriters but first generation ones only.
    **
    **Chitti**.
    “Thoughts becomes Things”.

  3. Excellent Article
    As you said ,What we think we become.Secondary thing is what ever we think it will happen.When we start thinking ,magnetic rays gets out and the same will happen for us sure.So we have to think positive and attain positive things.
    Another thing is what ever we think it wont happen immediately, if it does so it leads to problem.Going deeply into this ,every one can read secret book and follow mirror exercise .I am reading secret book and I have applied things and many good things have happened to me.

    Thanks
    Harish V

  4. அசத்தலான பதிவு.
    நீண்ட இடைவெளிக்கு பின் வந்தாலும் ஒவ்வொரு வார்த்தையும் அருமையாக உள்ளது. ஆழ்ந்து அனுபவித்து படித்து செயலாக்க வேண்டிய பதிவு.
    பதிவு படிக்க படிக்க துவண்டு கிடக்கும் மனமும் செயலாற்ற துடிக்கும்.
    சோர்ந்த மனம் உத்வேகத்துடன் செயல் பட ஒரு தூண்டு கோல் மாதிரி உங்களின் இந்த பதிவு உள்ளது.
    குருவருளும் திருவருளும் ஒன்று சேர்ந்து நீங்கள் மென்மேலும் பல வெற்றிகள் சந்திக்க வாழ்த்துகிறோம்.
    நன்றி

  5. Superb article sir. Best article ever read by me. I also read Secret book. Wonderful wordings. I am trying to be positive to the extent of 95%, becaz of previous experience my mind going behind failure thinking. I dont know how to avoid. Sai is with me to overcome. He shown such a wonderful person (u)

    1. Just engage yourself in good things. Negative things will vanish automatically. You are living in West Mambalam. What a place… Please make use of it.

      Always remember that your Past mistakes should refine you not define you.

      Hope i will meet a changed Rajkumar soon.

      All the best.

      1. //No matter what you’re going through, there’s a light at the end of the tunnel and it may seem hard to get to it but you can do it and just keep working towards it and you’ll find the positive side of things.//

        Regards
        Uma Venkat

        1. மிக்க நன்றி நண்பரே மற்றும் உமா மேடம் அவர்களுக்கும்.

          நாம் காரிருளில் நிற்கும்போதுதான் நம்பிக்கை வெளிச்சம் தெரியும். எனக்கு அந்த மகாபெரியவாளையும், என்னை என்றும் துணை நின்று காக்கும் சீரடி சாயி பாபாவும் என்றும் என் துணை நின்று காப்பார்கள். கிடைத்தற்கு அரிய நண்பர்கள் சூழ இருக்கும்போது எனக்கு என்ன கவலை. நம்முடைய இன்றைய ஆலய தரிசனம் மிகவும் அருமையாக அமைந்ததற்க்கு நண்பருக்கு ஒரு சபாஷ் போடுவோம்.

          கவலை இருக்கும்போது கண்ணனை நினை, விழியில் உருண்டோடும் கண்ணீரை விரட்ட விட்டலன் ஓடோடி வருவான்.

          1. Always remember that your Past mistakes should refine you not define you. Amazing wordings. I am only concentrating on my future, leaving all the past behind. Thanks to you and your efforts in giving such wonderful articles.

            I can understand the pain you go thro and the time you devote yourself in preparing each and every article. Afterall you dont make any money out of it (rather u only spend). But the interest you are showing in developing the society should be learnt by all of us.

            Lets make this mother earth a peaceful and Lovable area to live.

            Jai Sairam.

    2. Rajkumar Sir,

      Glad to hear that you are reading secret book.Secret book is equal to devaamrutham.Morning after wake up ,keep your legs down and pray for seconds .The most powerful thing is we have to design our day and work accordingly.

      After that engage yourself with secret book for half an hour.Stand up in front of mirror and just smile and say ,this is my day and I love my people ,I love my family etc etc.If negative thoughts are coming just realize and tell yourself that u r getting negative thoughts please tune it and do something you like the most.
      please do all these and sure shot at the end of day ,you will find an awesome feel.

      These things will look like a comedy thing for others ,but people did that and achieved the greatest.

      I am doing it on daily basis and many people including my mother says ,you are completely different from past.

      Thanks
      HARISH V

  6. சுந்தர், இந்த பதிவை படித்ததும் மனதிற்கு உடனடியாக தோன்றிய வைர வரிகள்

    நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும் நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்.

    சூப்பர் பதிவுக்கு நன்றிகள் கோடி.

  7. மிக மிக அருமையான பதிவு…

    மனம் குழந்தையைப் போன்றது.. அது நல்லவனாவதும் தீயவனாவதும் அவரவர் வளர்ப்பினிலே ….

    வயதுக்கு ஏற்றார் போல மனமும் வளர வேண்டாமா?
    மனமது செம்மையாக மந்திரங்கள் ஜெபிக்கவேண்டும் …

  8. “ரைட்மந்த்ரா வாசகர்கள் ஒருவர் விடாமல் அனைவரையும் ஒரு சாதனையாளர்களாகவும் தன்னிறைவு மிக்கவர்களாகவும் பார்க்கவேண்டும் என்பதே நமது ஆசை” – அருமை !

    “அத்தனைக்கும் ஆசைபடு” என்பது தன்முனைப்புக்கு வழிகாட்டும்.
    “அத்தனைக்கும் ஆசைபடு, அது எப்போதும் நேர்வழியில் நலம் பயக்க ஆசைபடு” என்பது நல்வழிக்கு இட்டுசெல்லும்.

  9. சுந்தர்ஜி,

    பதிவு மிகவும் அருமையாக உள்ளது. இதை படிப்பவர்கள் அனைவருக்கும் உற்சாகத்தை கொடுக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.தேடி தேடி தாங்கள் கொடுக்கும் இந்த தேனான பதிவுகல் அனைத்தும் அனைவரின் வாழ்கையிலும் ஏதோ ஒரு விதத்தில் நல்லதொரு திருப்பத்தை கொடுத்து உள்ளது. சாதித்து விட்டீர்கள். அடுத்த ஆண்டு விழாவில் ரைட் மந்த்ரா வாசகர்ளாகிய நாங்கள் அனைவரும் சேர்ந்து தங்களுக்கு சாதனையாளர் விருது கொடுக்க போகின்றோம்.

    தாங்கள் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.

    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *