Wednesday, December 12, 2018
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > சந்தோஷம் எங்கே இருக்கிறது? வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஒரு மினி தொடர் – PILLAR 1

சந்தோஷம் எங்கே இருக்கிறது? வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஒரு மினி தொடர் – PILLAR 1

print
வெற்றிகரமான வாழ்க்கை என்பது பல விஷயங்களை / நுட்பங்களை உள்ளடக்கியது. அதை ஒரு ஃபார்முலாவில் சுருக்கிவிட முடியாது. அவற்றில் அனைவரும் முதன்மையாக கருதுவது பொருளாதார தன்னிறைவு. ஆகையால் தான் அதை தனி தொடராக துவக்கினேன். ஆனால் பொருளாதார தன்னிறைவு ஒன்றே வெற்றிகரமான வாழ்க்கையாகிவிட முடியாது. எனவே தான் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் இந்த தொடரை துவக்கியிருக்கிறேன்.

(ஒரு ரகசியம் சொல்லட்டுமா? இந்த தொடரும் இதில் இடம்பெறப்போகும் விஷயங்கள் எனக்கும் சேர்த்து தான்! தொடராக தரும் எண்ணம் நமக்கு ஏன் வந்ததென்றால் என்னை நான் சுயபரிசோதனை செய்துகொண்டு களத்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன். உலகமே ஒரு ஓட்டப்பந்தய மைதானம் தானே? நீங்கள் சந்தித்த சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளையும் – தோல்விகள், துரோகங்கள், பொருளாதார நெருக்கடிகள், சூழ்ச்சிகள், ஏமாற்றங்கள் உட்பட அனைத்தையும் சந்தித்தவன் நான். உங்களில் ஒருவன். ஓடவேண்டிய நேரங்களில் உறங்கியதால் தற்போது வேகமாக ஓடவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன். நீங்களும் வருவதானால் நாம் சேர்ந்து ஓடலாம். ஒத்த கருத்துடையவர்கள் ஒரே பயணத்தில் இணைந்தால் பயணம் சுவாரஸ்யமாவதோடு களைப்பும் தெரியாதல்லவா?)

அது தவிர வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களிடம் நேர்மறை சிந்தனை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தெய்வநம்பிக்கை, பொறுமை, சகிப்புத் தன்மை போன்ற சில அடிப்படை குணங்கள் அவசியம் வேண்டும். ஒரே ஒரு பதிவில் அவற்றை விளக்க முடியாது. எனவே தான் இந்த தொடர்.

இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. ஆனால் அதற்கு ஒவ்வொருவரும் கையாளும் முறைகள் தான் வேறு வேறாக இருக்கும்.

* ஒரு சிலர் ஆசைப்படுவதோடு நிறுத்திவிடுவார்கள். வெற்றிபெறுவதர்க்குரிய முயற்சிகள் அவர்களிடம் இருக்காது. பயிரிடும் காலத்தில் பட்டு மெத்தையில் தூங்கும் ரகத்தினர் இவர்கள்.

* ஒரு சிலர் குறுக்கு வழிகளில் அதற்கு முயற்சி செய்வார்கள். சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது, அடுத்தவர்களை கெடுப்பது, வஞ்சிப்பது etc. etc. இவர்கள் வெற்றி தற்காலிகமாக இருக்குமே அன்றி நிரந்தரமாக இருக்காது. வெளியில் சொல்லி பெருமைப்படும்படியாகவும் இருக்காது. தங்களது செயல்களுக்கு ஒரு நாள் இவர்கள் விலை கொடுத்தே தீருவார்கள்.

* வேறு சிலர் அவர்கள் அறியாமையினால், நாம் சரியாகத் தான் போய் கொண்டிருக்கிறோம் என்றெண்ணி தவறான பாதையில் போய்கொண்டிருப்பார்கள். (Unintentional).

* வேறு சிலர் எப்படிஎன்றால் இலட்சியங்கள் எல்லாம் உயர்ந்தவைகளாகத் தான் இருக்கும். நல்லவர்களாகத் தான் இருப்பார்கள். ஆனால் தவறான நபர்களுடன் பழகிக்கொண்டிருப்பார்கள். அதாவது படிப்பது இராமாயணம். சகவாசம் பெருமாள் கோவிலை இடிப்பவர்களுடன்.

* வேறு ஒரு சிலருக்கு நேர்மையான வழியில் நியாயமாக உழைத்து வெற்றி பெறவேண்டும், சொந்தபந்தம் முதல் நண்பர்கள் வரை அனைவர் எதிரிலும் வாழ்ந்து காட்டவேண்டும் என்கிற துடிப்பு இருக்கும். ஆனால் எப்படி எங்கே தொடங்குவது, என்ன செய்வது என்று தெரியாது. அதாவது வழி தெரியாமல் அவதிப்படுகிறவர்கள் இவர்கள். இவர்களை பொறுத்தவரை கடந்த காலத்தையே நினைத்து வருந்திக்கொண்டிருப்பார்கள்.

இப்படி வெற்றி பெற விரும்புகிறவர்களில் பலப்பபல ரகத்தினர் உண்டு

கடைசி கேட்டகரியில் இருப்பவர்களுக்கு தான் இந்த தொடர்.

எனவே இந்த மினிதொடரை ஒரு பத்து பாகங்களாக தர உத்தேசித்திருக்கிறேன். இதை தொடராக நாம் தந்தாலும் – நீங்கள் தனித் தனி பதிவாக படித்தாலும் அர்த்தம் இருக்கும். இவற்றை நீங்கள் கட்டப்போகும் வெற்றிக்கோட்டையின் பத்து தூண்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

பத்து பாகம் என்றதும் ஏதோ மாதக்கணக்கில் ஜவ்விழுப்பு இழுத்துவிடுவேன் என்று எண்ண வேண்டாம். இது ஒரு விரைவு தொடர். EXPRESS SERIES. வாரமிருமுறை பதிவை போட்டு நிறைவு செய்ய உத்தேசித்திருக்கிறேன்.

ஒவ்வொரு பாகத்திலும் நாம் விளக்க வரும் விஷயத்தை நாம் படித்த கேள்விப்பட்ட ஒரு சிறிய கதை அல்லது சம்பவத்துடன் இணைத்து சொல்லப்போவதால் உங்கள் மனதில் நிச்சயம் நாம் சொல்ல வரும் விஷயம் ஆழப்பதியும் என்று நம்புகிறேன். பதிவும் சற்று சுருக்கமாகவே இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும். உங்கள் கடந்த காலத்து கசப்புக்களை எல்லாம் துடைத்து எறிந்துவிட்டு இந்த வெற்றிகரமான பயணத்திற்கு தயாராகுங்கள்.

எப்போது நீங்கள் நம்ம தளத்தின் வாசகராக மாறிவிட்டீர்களோ அப்போதே வெற்றிக்கான பயணத்தில் முதல் படியில் காலை வைத்துவிட்டீர்கள் என்று தான் அர்த்தம். பதிவுகளில் படிப்பவற்றை நடைமுறைப்படுத்தினீர்கள் என்றால் வேகமாக வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

PILLAR 1 – CHANGE YOUR ATTITUDE TOWARDS LIFE

நிம்மதி, சந்தோஷம் இவ்விரண்டையும் தேடி தான் அனைவரும் அலைந்துகொண்டிருக்கிறோம். அது உண்மையில் எங்கே இருக்கிறது என்பதை மிக அற்புதமாக விளக்கும் சுவாமி சுகபோதானந்தாவின் கதை இது.

வாழ்க்கையில் ஏற்றமும் மாற்றமும் காணவிரும்புகிறவர்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? வாழ்க்கை குறித்த தங்கள் அணுகுமுறைகளையும் எண்ணங்களையும் மாற்றிக்கொள்வது தான். அதை நீங்கள் மாற்றிக்கொள்ளாத வரையில் சொர்க்கமே உங்கள் காலடியில் இருந்தாலும் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

================================================
எது சந்தோஷம் ?

அவன் மாபெரும் செல்வந்தன். சந்தோஷம்தான் இல்லை. தேடிக்கொண்டு வெவ்வேறு நாடுகளுக்குப் போய்ப் பார்த்தான்.

சந்தோஷம் கிடைக்கவில்லை. மது, மங்கையர், போதைப் பொருள் என்று எல்லாவற்றின் பின்னாலும் அலைந்து பார்த்தான்… மனம் மகிழ்ச்சியே அடையவில்லை.

‘துறவறத்தில் இறங்கினால் சந்தோஷம் கிடைக்கும்’ என்று யாரோ சொல்ல… அதையும் அவன் முயற்சி செய்து பார்க்க முடிவெடுத்தான். தனது வீட்டிலிருந்த தங்கம், வைரம், வைடூரியம் என்று எல்லாவற்றையும் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு போய் ஒரு யோகியின் காலடியில் வைத்துவிட்டு…

“ஸ்வாமி  இதோ என் அத்தனை சொத்துக்களையும் உங்கள் காலடியில் வைத்திருக்கிறேன்.  இனி இதில் எதுவுமே எனக்குத் தேவையில்லை.  நான் நாடிவந்திருப்பது அமைதியையும் மன சந்தோஷத்தையும் மட்டுமே” என்று யோகியிடம் சரணடைந்தான்.

அந்த யோகியோ அந்த செல்வந்தன் சொன்னதைக் காதில் வாங்கிய மாதிரியே தெரியவில்லை. அவன் கொண்டுவந்த மூட்டையை மட்டும் அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். கண்ணைக் கூசவைக்கும் ஒளியுடன் ஜொலித்த தங்கத்தையும், வைரக்கற்களையும் பார்த்த யோகி, மூட்டையைச் சுருட்டி எடுத்துத் தன் தலையில் வைத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.

செல்வந்தனுக்குப் பெரும் அதிர்ச்சி  ‘அடடா  இருந்திருந்து ஒரு போலிச் சாமியாரிடம் போய் நம் செல்வத்தை ஏமாந்து கோட்டை விட்டு விட்டோமே’ என்ற துக்கம்… ஆத்திரமாக மாற… அந்தச் செல்வந்தன் யோகியைத் துரத்த ஆரம்பித்தான்.

யோகியின் ஓட்டத்துக்குச் செல்வந்தனால் ஈடுகொடுக்க முடியவில்லை. சந்துபொந்துகளில் எல்லாம் புகுந்து புகுந்து ஓடிய யோகி, கடைசியில் தான் புறப்பட்ட அதே மரத்தடிக்கு வந்து நின்றார். மூச்சு இரைக்க இரைக்க அவரைத் துரத்திக்கொண்டு வந்த செல்வந்தனிடம் யோகி,

“என்ன பயந்துவிட்டாயா ? இந்தா உன் செல்வம். நீயே வைத்துக்கொள்” என்று மூட்டையைத் திருப்பிக் கொடுத்தார்.

கைவிட்டுப் போன தங்கமும் வைரமும் திரும்பக் கிடைத்துவிட்டது என்பதில் செல்வந்தனுக்குப் பிடிபடாத சந்தோஷம்.

அப்போது அந்த யோகி, செல்வந்தனைப் பார்த்துச் சொன்னார்.

“இங்கே வருவதற்கு முன்னால்கூட இந்தத் தங்கமும் வைரமும் உன்னிடம்தான் இருந்தன. ஆனால், அப்போது உனக்குச் சந்தோஷம் இல்லை. இப்போது உன்னிடம் இருப்பதும் அதே தங்கமும் வைரமும்தான். ஆனால் உன் மனதில் இப்போது சந்தோஷம் இருக்கிறது”

இதிலிருந்து புலப்படும் உண்மை ஒன்றுதான்.

சந்தோஷம் என்பது நமக்கு வெளியே இல்லை…  மனதில்தான் இருக்கிறது.

இந்த உண்மை, செல்வத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரிந்த செல்வந்தனைப் போலவே நம்மில் பலருக்கும்கூடத் தெரியவில்லை. அதனால்தான் நாம் பல சமயங்களில் நமது சந்தோஷத்துக்காகப் பிறரைச் சார்ந்து இருக்கிறோம்.

(-சுவாமி சுகபோதானந்தா, மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்)

எவ்ளோ பெரிய விஷயத்தை சுவாமி சுகபோதானந்தா எத்தனை எளிமையாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்….! ரியல்லி கிரேட்!!

………… தொடரும்

=================================================
சுந்தரகாண்டம் UPDATE

சுந்தரகாண்டம் நூல் கேட்டவர்கள் அனைவருக்கும் இன்று அனுப்பியாகிவிட்டது. இரண்டொரு நாளில் கிடைக்காதவர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மிகப் பெரிய சேவைக்கு நம்மை ஆளாக்கியமைக்கு என் நன்றிகள் !

தொடர்புக்கு : simplesundar@gmail.com
=================================================

[PAGE END]

 

16 thoughts on “சந்தோஷம் எங்கே இருக்கிறது? வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஒரு மினி தொடர் – PILLAR 1

 1. ///எப்போது நீங்கள் நம்ம தளத்தின் வாசகராக மாறிவிட்டீர்களோ அப்போதே வெற்றி அடீந்து விட்டம் என்று தான் அர்த்தம்.///

  சார், உண்மையில் என் மனதார சொல்கிறான் RIGHTMANTRA படிக்க ஆரம்பித்ததில் இருந்து மனதில் கவலை இல்லை அப்படியே கவலை இருந்தாலும் சார் அததற்கு தகுந்தார்ப்போல் ஒரு பதியு போட்டு மனதை மாற்றி விடுகிறார்

  சுந்தர் சரின் அம்மா அப்பா ரொம்ப புண்ணியம் செய்தவர்கள் ஆகவா
  தான் சுந்தர் மாதிரி ஒரு நல்ல பிள்ளை கிடைத்து உள்ளது

  என் மகனுக்கு நான் ரோல் மாடல் அக வைப்பது சுந்தர் சார்.
  நிறைய சொல்ல வேண்டும் ஆனால் டைப் செய்க செஇர்யவில்லை
  selvi

 2. சுந்தர் சார் இந்த கட்டுரையை படிக்கும் போது நீங்க எங்களை ஒரு வழிக்கு கொண்டு வராம விடமாட்டிங்க போல இருக்கு (பணம் நிம்மதி ,சந்தோசம்,பக்தி,பொதுநலம்)இப்படி…

  அந்த நிலைக்கு எல்லோரும் வருகிறோமோ இல்லையோ ,ஆனால் உங்களுடைய இந்த முயற்சி,எங்களை ஒருமுறை சிந்திக்க வைக்கிறது

  நாமும் இப்படி ஒருநாள் நல்லா இருப்போம் என்று..

  வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களிடம் நேர்மறை சிந்தனை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தெய்வநம்பிக்கை, பொறுமை, சகிப்புத் தன்மை போன்ற சில அடிப்படை குணங்கள் அவசியம் வேண்டும். – என்று மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்…..
  எது எப்படியோ நீங்கள் காட்டும் வழியில் பயணம் செய்ய நாங்கள் தயாராகிவிட்டோம் என்பதே உண்மை…

 3. வாழ்கவளமுடன் சுந்தர் சார் பதிவு அருமையாக உள்ளது
  நன்றி
  .சின்னதுரை

 4. சுந்தர் சார்

  நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும். கண்டிப்பா சார்

  நம்முடைய ரைட் மந்தர பயணத்தில் எவளவு தூரம் வேண்டுமாலும் ஓடி இலட்சியத்தை அடைவோம்..

  மிகவும் அருமையான பதிவு

  நன்றி…

 5. நாங்கள் வெற்றி என்னும் படியில் காலை வைத்து ஒரு வருடம் ஆக போகின்றது.இந்த ஒரு வருடத்தில் நாங்கள் எத்தனையோ கவலைகள், வருத்தங்கள் இருந்தாலும் தளத்தை ஒரு முறை பார்த்தவுடன் துள்ளி ஓடும் கன்று குட்டியை போல் நாங்கள் எல்லாவற்றையும் மறந்து சகஜ நிலைக்கு வந்து விடுவோம்.

  எது எப்படியோ இந்த வெற்றிகரமான பயணத்திற்கு நாங்கள் ரெடி.

 6. ரொம்பவும் பெரிய விஷயத்தை மனதில் எளிமையா பதிய வித்து விட்டீர்கள்….நாம் பெரும்பாலும் கவலைப்படுவதற்கான காரணிகளைத் தேடித்தேடி கவலைப்படுகிறோமே தவிர நம்மைச் சுற்றி இருக்கும் சந்தோசக் காரணிகளை நாம் கவனிப்பதே இல்லை.

  விவேகானந்தர் “நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்”-ன்னு சொன்னார் ….அது மாதிரி நாம் சந்தோசமாக இருக்கிறோம் என்று நினைத்தால் சந்தோசமாக இருப்போம்….இல்லை என்றால் எப்போதும் கவலை நம்மை ஆட்கொண்டு விடும்…..!

  நான் படித்தது:

  ஒரு சீடர் குருவிடம் சென்று “குருவே….நான் எப்போதும் கவலையாகவே உணர்கிறேன்..என் கவலைகள் தீர ஒரு வழி சொல்லுங்கள் ” என்று கேட்டார்…குருவும் ஒரு குப்பைத்தொட்டியை எடுத்து சீடனிடம் தந்து “அடுத்த ஒரு மாதத்திற்கு உன் வீட்டில் சேரும் குப்பைகளை தினமும் இதில் சேகரித்து வா…கீழே கொட்டி விடாதே ” என்று சொன்னார்…ஒன்றும் புரியாமல் சீடனும் “சரி” என்று தலையாட்டி கொண்டே தினமும் குப்பைகளை சேகரிக்க ஆரம்பித்தான்…ஒரு வாரம் கழிந்தது.. குப்பைதொட்டியில் இருந்து கடும் நாற்றம் வீசத் தொடங்கியது….ஒரு கட்டத்தில் குப்பைத்தொட்டியை எடுத்துக் கொண்டு குருவிடம் ஓடினான்…”குருவே…என்னால் நாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்றான்…குருவும் அமைதியாகச் சிரித்துக் கொண்டே சொன்னார் “சீடனே, இந்தக் குப்பைத் தொட்டி போலத் தான் மனிதனின் மனமும்….மனதில் கவலை என்னும் குப்பையை நீ சேர்த்துக் கொண்டே சென்றால் உன் உடம்பும் செயலும் இந்தக் குப்பைத் தொட்டி போல நாற்றம் வீசத் தொடங்கி சந்தோசத்தை அழித்து விடும்…மனக் குப்பைகளை மனதில் சேர்த்து வைக்காமல் நீ அகற்றினால் உன் வாழ்வில் சந்தோசம் தழைத்து மணம் வீசும்” என்று புத்தி கூறி ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார்…மனம் தெளிந்த சீடனும் மகிழ்வுடன் வீடு திரும்பினான்….!

  “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

  விஜய் ஆனந்த்

  1. அற்புதமான கதை!
   நன்றி சுவாமி விஜயானந்தா அவர்களே!!
   – சுந்தர்

 7. மிகவும் அருமையான பதிவு.
  நீங்கள் ஒரு ஒரு படியாக மேலே ஏறி எங்களையும் கை பிடித்து ஏற்றி விடுகிறிர்கள்.
  தற்போது வேகம் ஓட்டத்தில் உள்ளது.
  நீங்கள் நடைமுறை படுத்தாத எதையும் எங்களுக்கு சொல்லித்தருவதில்லை அதனால் நீங்கள் கை காட்ட எங்கள் பயணம் உங்களுடன் தொடரும் எப்பொழுதும்.

 8. சரியான நேரத்தில் சரியான தொடர் சுந்தர்ஜி. நிச்சயம் தங்கள் படைக்க உள்ள இந்த தொடரை நான் தவறாமல் படிப்பேன். நமது தளத்திற்கு வந்து சில கட்டுரைகள் படித்து சென்றால் வாழ்கையின் மற்றுமொரு பதையும் பரிமாணமும் தெரிகிறது. நிச்சயம் இந்த தொடரை நான் followup செய்வேன்.

 9. சுந்தரின் கைவண்ணத்தில் மற்றுமோர் பயனுள்ள பதிவு. இந்த பதிவை படித்தபிறகு அதன்படி நடப்பதில்தான் நம் வெற்றி அடங்கியுள்ளது. அந்த வெற்றிக்காக காத்திருக்கவும் தெரியவேண்டும். உழைப்புடன் சேர்ந்த பொறுமையான அணுகுமுறை வெற்றிக்கு அவசியம். இதை விளக்க ஒரு சின்ன கதை (எங்கேயோ படித்த ஞாபகம்).

  ஒரு புகழ் பெற்ற பாடகரிடம் ஒரு வரல்லற்றுப்பெருமை கொண்ட மேடையில் பாடியபிறகு ஒரு பத்திரிக்கை நிருபர் கேட்டார் – நீங்கள் எப்படி இந்த இடத்திற்கு வந்தீர்கள்? அதற்கு அந்த சாதனையாளர் சொன்னார் – 25 வருடங்களுக்கு முன்பு இந்த புகழ் பெற்ற கட்டிடத்திற்கு எதிர்புறம் சாலையில் நின்றுகொண்டு ஒரு நாள் இங்கு பாடி கை தட்டல் வாங்குவேன் என்று கனவு கண்டேன். சாலையை கடந்து இங்குவந்து பாடுவதற்கு 25 ஆண்டுகள் பிடித்தது என்று ஹாஸ்யமாக கூறினார். அவருடைய 25 ஆண்டுகால உழைப்பை அவர் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

 10. நன்மை கொடுத்தால் நன்மை கிடைக்கும்.

  தீமை கொடுத்தால், தீமை நல்கும். ஆகவே எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க விரும்பினால் பிறர்க்கு எப்போதும் நன்மையே செய்யுங்கள். பிறரும் உங்களுக்கு நல்லதையே வழங்குவார்கள்.

  வாழக்கை இனிமையானதாக மாறும்.

  நம் வாழ்வில் உறுதியான குறிக்கோளும், சமூகத்திற்கு நன்மை பயக்கும் சிறந்த செயல்களும் காணப்பட்டால், நம்
  கண்ணோட்டம் நிச்சயம் நேர்மறையாக மாறிவிடும். இத்தகைய நேர்மறை கண்ணோட்டம் நம் உறவுகளை மேம்படுத்தும். துணிச்சலை அதிகப்படுத்தும். நேர்மையை அதிகரிக்கும். தன்னம்பிக்கையை உயர்த்தும். இத்தகைய நேர்மறை தன்மைகள் நம்மிடம் வந்தால்வெற்றி உறுதி சந்தோஷமும் நிச்சயம்.

 11. டியர் அண்ணா

  வாழ்க்கையில் வெற்றி பெற நேர்மறை சிந்தனை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தெய்வநம்பிக்கை, பொறுமை, சகிப்புத் தன்மை போன்ற சில அடிப்படை குணங்கள் அவசியம் வேண்டும். – என்று மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்…..
  நீங்கள் காட்டும் வழி உயர்வுக்கு காட்டும் வழி.

 12. மாற்றங்கள் நிறைந்த வாழ்க்கையில்
  மாறாத கனவுகளோடும்,

  மறையாத நினைவுகளோடும்
  மாற்றத்தை எதிர்நோக்கி,

  புதிய விடியலில் புத்துணர்வுடன் பயணிப்போம்…

 13. வணக்கம் சார். மிக அருமையான பதிவு.உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.

 14. சமதளமான வாழ்க்கை சுகம் தராது
  மேடு பள்ளங்கள் கடந்து
  வெற்றி தோல்விகளை சுவைத்து
  இன்ப துன்பத்தோடு பயணித்து
  சுயநலம் இன்றி தம்மால் இயன்றதை மற்றவர்க்கு உதவி செய்து
  முதுமையில் தான் பெற்ற அனுபவங்களை இளைய தலைமுறைக்கு எடுத்துரைத்து
  இறுதியாக தன்னை உணர்ந்து
  ஞான மார்கத்தை அடைந்து
  முக்தி பெறுவதே முழுமையான வாழ்க்கை !!!

  முயன்றவரை வரை மற்றவர் மனம் புண் படாமல் வாழ்வோம் !!!

  வாழ்க வளமுடன்!!!

 15. மிகவும் arumaiyaana pathivu,. Naangal right mantra vaasagaraagi vetrip padikkattil eri vegu naatkalagi vitathu.
  I request yr gooself to send one book for me. This is reminder. 5 months back I asked the same,

  நன்றி
  Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *