இதை பார்க்கும் சம்பந்தப்பட்ட ராசிக்கார்கள் பலர் தன்னம்பிக்கையை இழந்து, தெய்வ பக்தியும் குறைந்து ஒரு வித விரக்தியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நம்மிடம் சிலர் பேசும்போதே இதை உணர முடிந்தது. அவர்கள் அறியாமையை நினைத்து சிரிக்கத் தான் முடிந்தது.
எதற்கு சனீஸ்வரனை கண்டு இந்த பீதி? காவலரை கண்டால் கள்வன் தானே பயப்படவேண்டும்? நல்லவர்கள் எதற்கு பயப்படவேண்டும்?
சனீச்வரன் பாடாய்படுத்துவான், மிகவும் சிரமம் கொடுப்பான், ஏழரைச் சனியின் போது சிறைத் தண்டனை கூட கொடுப்பான் என்று கூறுவதெல்லாம் உண்மை தான்.
ஆனால் அதெல்லாம் யாருக்கு தெரியுமா?
தீயவைகளையே சிந்தித்து தீயவைகளையே செய்துகொண்டு இருப்பவர்களுக்கு. அவர்கள் தான் பயப்படவேண்டும். அவர்களுக்கு தான் இப்போது நேரம் சரில்லை.
இதுவரை செய்த தவறுகளுக்கெல்லாம் தப்பித்து வந்தவர்கள், இனி செய்யாத தவறுக்கு மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை வரும். ‘பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்பதெல்லாம் சனிப்பெயர்ச்சியில் தான் நடக்கும்.
இதுவரை அல்லது செய்தாலும் அது நல்லதாய் முடியக் கண்ட தீயவர்கள் இனி நல்லது செய்தாலும் அது அல்லதாய் போய் முடியும். (நல்லது என்றால் புண்ணிய செயல்கள் அல்ல. அவர்களுக்கு லாபம் தரும் என்று கருதி அவர்கள் செய்யும் லௌகீக காரியங்கள். கொடுக்கல் வாங்கல், சொத்து விற்பனை, வாகனம் வாங்குவது etc. etc.,)
அடுத்தவர்களை பழி சுமத்தி வாழ்ந்து வந்தவர்கள் தாங்கள் வீண் பழிகளில் இனி சிக்குவார்கள்.
துடுக்கத்தனமாக பேசிக்கொண்டு திரிந்தவர்கள், அந்த துடுக்குத்தனத்தின் காரணமாக பிரச்னையில் சிக்குவார்கள்.
ஏய்த்து பிழைத்து வந்தவர்கள், குடி கெடுத்து வாழ்ந்து வந்தவர்கள் இனி அவ்வாறு செய்ய முடியாது. அவர்கள் முடக்கப்படுவார்கள்.
முதியோர்களையும், பெண்களையும், திருநங்கைகளையும், பிராமணர்களையும் கேலி செய்தவர்களுக்கு அதற்குரிய தண்டனையை சனீச்வரன் கொடுப்பான்.
சுயநலமே வாழ்க்கை என்று கருதி, தான தர்மங்களில் ஈடுபடாமல், தன் மனைவி மக்களுக்கு சொத்து சேர்க்க மட்டுமே நேரத்தை செலவழித்தவன் இனி சனீஸ்வரனிடம் சிக்கி படாத படுவான். இனி அவன் நேரம் வழக்காடு மன்றங்களிலும், வழக்கறிஞர்களிடமும் தான் அதிகம் செலவாகும்.
சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் விரதம் அனுஷ்டிக்காமல் அன்று வயிறு புடைக்கத் தின்றவனும், இறைவனை தொழாதவனும் ஆலயங்களுக்கு செல்லாதவனும், அறச் செயல்களில் ஈடுபடாதவனும் சனீஸ்வரனிடம் தப்பிக்க இயலாது. அவர்களுக்கு சோதனை மேல் சோதனை தந்து, “உன் கையில் ஒன்றுமில்லை… ஓடு… போ சர்வேஸ்வரனை சரணடை” என்று இறைவனை நோக்கி ஓடவைப்பது சனீஸ்வரனின் முதல் வேலையாக இருக்கும்.
கேளிக்கையும் கொண்டாட்டமுமே வாழ்க்கை என்று கருதி, அறநெறியை மறந்து, கடமையை புறக்கணித்து, மது மயக்கத்தில் ஆட்டம்போட்டு வந்தவர்கள் வாழ்க்கை இனி ஆட்டம் காணும்.
‘காலம் சிவ ஸ்வரூபம்’ என்று கூறுவார்கள். அத்தகைய நேரத்தை வெட்டிப் பேச்சு பேசுவது, வம்பு பேசுவது, புறம் பேசுவது, தகுதியற்றவர்களை புகழ்ந்து பேசுவது, அரசியல் சண்டை சச்சரவு செய்வது, உள்ளிட்ட பயனற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தவர்கள் அதற்குரிய விலையை சனீஸ்வரனிடம் கொடுக்கவேண்டியிருக்கும்.
பொறாமையின் காரணமாக பிறர் முன்னேற்றத்தை தடுத்தவர்களின் பாடு இனி திண்டாட்டம் தான்.
தான தர்மங்களில் ஈடுபடாத கருமிகள் தங்கள் சொத்துக்களை கள்வர்களிடம் பறிகொடுப்பார்கள். ‘ஈயார் தேட்டை தீயோர் கொள்வர்’ என்பதன் அர்த்தம் இது தான்.
சனீஸ்வரனை கண்டு மேற்படி பாபச் செயல்கள் செய்தவர்கள் தான் பயப்படவேண்டும்.
ஹரியையும் ஹரனையும் சுப்ரமணியனையும் ஒயாமல் தொழும் நாம் ஏன் பயப்படவேண்டும்?
மன்னன் சுண்ணாம்பு கால்வாயில் தள்ளியபோது, “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” கர்ஜித்த நாவுக்கரசரின் வழி வந்தவர்களல்லவா நாம் அனைவரும்?
“உங்களுக்கு சனிப்பெயர்ச்சி சரியில்லை போலருக்கே…” என்று யாராவது உங்களிடம் சொன்னால், “அது எனக்கில்லை ஊரை அடிச்சி உலையில் போடுறவனுக்கு” என்று தைரியமாக சொல்லுங்கள்.
தான தர்மங்களில் ஈடுபடுபவர்கள், பாப காரியங்களுக்கு அஞ்சுபவர்கள், சிவராத்திரி, ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர்கள், கிரிவலம் செல்பவர்கள், கோ-சம்ரோக்ஷனம் செய்பவர்கள், ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவியவர்கள், ஏழை எளியோருக்கு ஆடை தானம் செய்தவர்கள், உதிரம் (ரத்தம்) தானம் செய்பவர்கள், அற்றார் அழிப்பசி தீர்க்கும் அன்னதானம் செய்பவர்கள், ஏழை குழந்தைகளுக்கு சேவை நோக்கோடு வித்தை சொல்லித் தருபவர்கள், அம்பிகை வளர்த்த அறங்களில் ஒன்றையேனும் செய்பவர்கள் இவர்கள் யாரும் சனீஸ்வரனை கண்டு பயப்படவேண்டியதில்லை.
மேலும் ரைட்மந்த்ரா வாசகர்கள் மற்றும் இந்த தளத்தின் கருத்துக்கள் படி வாழ முயற்சிப்பவர்கள் வாழ்ந்து வருபவர்கள் நிச்சயம் கலங்க வேண்டியதில்லை. சரிதானுங்களே? (காரணத்தை வேறொரு பதிவில் சொல்கிறோம்!)
உங்கள் ராசிக்கு சனிப்பெயர்ச்சி சரியில்லை என்று கூறப்பட்டிருந்தால் தயவு செய்து அச்சப்படவேண்டாம். சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நன்மையே செய்யும்.
ஏற்கனவே ஒரு பதிவில் கூறியபடி இந்த சனிப் பெயர்ச்சி போன்ற கிரகங்களின் பெயர்ச்சி பலன்களை ஒரு எச்சரிக்கையாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அதுவே இறுதியானதல்ல. முடிவும் அல்ல.
ஒரு ஊருக்கு போகிறீர்கள். பாதை எப்படி இருக்கும் என்று தெரியாது. “இன்னின்ன இடத்தில் இன்னின்ன தடைகள் இருக்கும்…. சாலை இத்தனை மோசமாக இருக்கும்… அங்கு பார்த்து ஜாக்கிரதையாக செல்லுங்கள்!” என்று உங்களுக்கு சொன்னால், அது உங்கள் பயணத்திற்கு எவ்வளவு உபயோகமாக இருக்கும்! அது போலத் தான் இந்த பெயர்ச்சி பலன்கள். இவை அனைத்தும், நமது சுமூகமான வாழ்க்கைப் பயணத்திற்கு உதவிடவே கூறப்படுபவை. நம்மை பயமுறுத்த அல்ல.
மேலும் நவக்கிரகங்கள் என்பவை இறைவன் இட்ட ஏவலை, அவன் வகுத்த நெறிமுறைகளின்படி அவன் சார்பாக செய்பவை. எனவே, எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் நவக்கிரகங்களை விட, நாம் வணங்கும் இறைவன் பெரியவன் என்பதை மறக்கக்கூடாது.
”நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.”
பொருள் : எல்லாம் வல்ல முருகபெருமானின் குஞ்சித பாதங்களும்,கால்சிலம்பும்,’ஜல் ஜல்’ என ஜலஜலக்கும் கால் சதங்கையும், தண்டையும்,அழகிய ஷண்முகனின் தோள்களும்,கடம்பும் எனக்கு முன் தெரியும் போது நாள், நக்ஷத்ரம், கொடிய விதி என்று எதுவுமே என்னை எதுவும் பண்ணமுடியாது!
சனிப்பெயர்ச்சியால் கலங்குவதற்கு பதில் இறைவனை சிந்திப்பதற்கும், தான தர்ம காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வதற்கும் அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளதாக கருதி நல்ல செயல்களில் ஈடுபட்டு வாருங்கள்.
நல்லதே நினையுங்கள். நல்லதே பேசுங்கள். நல்லதே செய்யுங்கள். நல்லதே நடக்கும்!
காலதேவனும், சநீஸ்வரனும் கடமையை செய்யும் தர்ம தேவதைகள். காக்கும் நேரம் வரும்போது நிச்சயம் ஓடி வந்து காப்பார்கள்.
சனீஸ்வரனுக்கு பரிகாரம் செய்ய விரும்புகிறவர்கள் ‘சர்வே ஜனா சுகினோ பவந்து’ என்ற சிந்தனையை வளர்த்துகொள்ளவேண்டும். எல்லாரும் எப்பொழுதும் நன்றாக இருக்கவேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
மேலும் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சுத்த பத்தமாக நீராடி முடித்து, காக்கைக்கு எள்ளும் தயிரும் கலந்த சாதம் கொடுத்து வரவேண்டும்.
கருங்குவளை மலர்களால் எமனுக்கு அர்ச்சனை செய்து, சிவாலயங்களில் சனீஸ்வரனுக்கு எள் முத்தளத்துடன் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி, எள்ளுருண்டை தானம் செய்யவேண்டும். எள்ளுருண்டையை தானமாக ஏற்க சிலர் தயங்குவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நல்லெண்ணையை தானமாக தரலாம். ஆலயங்களில் தீபமேற்ற நல்லெண்ணெய் வாங்கித் தரலாம்.
திருநள்ளாறுக்கு ஒரு முறை சென்று அங்கிருக்கும் தர்பாரண்யேஸ்வரரை தரிசித்து அர்ச்சனை செய்யுங்கள்.
ஆலய தரிசனம், கோ சம்ரோக்ஷனம், அன்னதானம், ஊனமுற்றோர்களுக்கு உதவி, பார்வையற்ற மாணவ மாணவியர் தேர்வு எழுத உதவுது, திருகோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி, மரம் நடுதல், ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வாருங்கள். சனீச்வரன் உங்களுக்கு நல்லதே செய்வான். “சனி கொடுத்தால் எவர் தடுப்பர்?” என்ற பழமொழியே உள்ளது குறிப்பிடத்தக்கது.
சனிப்பெயர்ச்சி பரிகாரங்கள் குறித்து மேலும் ஒரு விரிவான பதிவு இடம்பெறும். அதில் பல கூடுதல் தகவல்களை அளிக்கிறோம். நன்றி!
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே!
===============================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
================================================================
Also check :
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
அன்றும், இன்றும், என்றும், ஆண்டவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?
கலியின் தீமை, ஊழின் கடுமை நீக்கும் அருட்கொடை = பன்னிரு திருமுறை!
நாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமையும்!
துன்பத்திலும் தொடரும் பக்தியே தூய்மையானது – Rightmantra Prayer Club
குரு பெயர்ச்சி 2014 – பலன்கள் & பரிகாரங்கள்!
================================================================
[END]
சனிப்பெயர்ச்சியைப் பற்றிய சிறப்பு பதிவு மனதை தெளிய வைத்தது. சனிபகவான் பார்க்கும் இடம் சரியில்லை என்றால் மனம் குழம்பிவிடுகிறது. சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி.
வணக்கம் சார்,
இந்த பதிவை எதிர் பார்த்து இருந்தேன் .நமது வலை தளத்தில்
நீங்க கூறிய படி நான் பயந்தேன் அனால் இப்போது அந்த பயம் கிடையாது.இன்னும் சில தகவல் தேவை.ஓம் நாம சிவாய…….
நன்றி………
சனிப்பெயர்ச்சி குறித்த பயத்தை விளக்கி , தெளிவு படுத்தியமைக்கு நன்றி ,நன்றி……
-மனோகர்
மிகவும் அருமையாக உள்ளது. மிக விரைவில் பரிகாரங்களையும் பதிவு செய்யும் படி வேண்டுகின்றோம் .
ஜோ. அந்தோணிராஜ்
அன்பு தம்பி
மிக சரியான பதிவு மிக சரியான நேரத்தில்….மிக்க மகிழ்ச்சி தம்பி…தீதும் நன்றும் பிறர் தர வாரா…வேறு என்ன சொல்ல….உங்களைப் போன்றவர்களின் நல்லவர்களின் சூழல் இருக்கும் போதும்…எங்களுக்காக ஒரு நிமிடம் இறைவனிடம் கையேந்தும் உங்கள் நல எண்ணங்கள் இருக்கும் பொது நமனை அஞ்சோம்… _()_ 🙂
நல்லதை சொன்னால் கேட்க யாரும் தயாரில்லாத கலியுகத்தில் நாம் வாழ்கிறோம். அப்படிப்பட்டதொரு சூழ்நிலையில் உங்களைப் போன்ற நல்லுள்ளங்களை வாசகர்களாக பெற்றது சர்வேஸ்வரன் எமக்களித்த பிச்சையே அன்றி வேறில்லை.
தாங்கள் இந்த எளியோன் மீது வைத்துள்ள அன்புக்கும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி.
‘சர்வே ஜனா சுகினோ பவந்து’
– சுந்தர்
சனீஸ்வரர் பற்றியும் சனி பெயர்ச்சி பற்றியும் அழகான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.உண்மையில் அழகான இந்த வாழ்க்கையின் அர்த்ததையும் இறைவன் ஒருவன் உண்மையில் இருக்கிறான் என்பதையும் அனுபவ ரீதியாக நமக்கு புரிய வைப்பபவர் சனீஸ்வர பகவானே..அதற்காக அவருக்கு நன்றிகூறி நல்வழியில் நடந்தாலே நம் வாழ்வு இனிமையாக இருக்கும்..
நன்றி
எங்களை போன்றவர்களின் தவிப்பு உங்களுக்கு எப்படித் தான் தெரிகிறதோ. உண்மையில் சனிப்பெயர்ச்சி குறித்து சற்று கலக்கத்தில் இருந்தேன். ஆனால் இந்த பதிவு அந்த கலக்கத்தை போக்கிவிட்டது. நீங்கள் சொல்வது போல, தீயவர்ககே சனிப்பெயர்ச்சி குறித்து அஞ்சவேண்டும்.
அறம் செய்து வாழ்வோம். சனி பகவானின் அருளை பெறுவோம்.
சிவாய நம என்று சிந்திதிருப்போருக்கு அபாயம் இல்லை ஒரு நாளும்.
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கும் வாசகர்களில் ஒருவள்.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
வணக்கம்……
மனக் குழப்பத்தில் இருந்த எங்களுக்கு இந்த பதிவு ஆறுதலைக் கொடுத்துள்ளது……..மடியில் கனமில்லாத போது வழியில் பயப்படத் தேவை இல்லை என்று தோன்றுகிறது……….தெய்வம் துணை நிற்க வேண்டும்………
சனீஸ்வரர் பற்றியும் சனி பெயர்ச்சி பற்றியும் அழகான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.உண்மையில் அழகான இந்த வாழ்க்கையின் அர்த்ததையும் இறைவன் ஒருவன் உண்மையில் இருக்கிறான் என்பதையும் அனுபவ ரீதியாக நமக்கு புரிய வைப்பபவர் சனீஸ்வர பகவானே..அதற்காக அவருக்கு நன்றிகூறி நல்வழியில் நடந்தாலே நம் வாழ்வு இனிமையாக இருக்கும்.. ………………………….நன்றி
நல்ல பதிவு ஆனால் ஊழ்வினையால் வரும் பாதிப்பை நாம் இறைவனை வழிபடுவதால் மட்டுமே தீரும் . திருவானைக்காவலில் உள்ள சனீஸ்வரர் குடும்ப சகிதமாக மற்றும் .சுவாதி நக்ஷத்ரம் சனீஸ்வரர்யாக அருள்பாலிக்கிறார் .
நன்றி
வெங்கடேஷ்
அருமையான விளக்கம்.
தக்க விளக்கத்திற்கு மிக்க நன்றி.
சனி பெயர்ச்சியை பற்றிய பயம் போக்கும் பதிவு .
நானும் எனக்கு 71/2 சனி ஆரம்பம் ஆகிறது என்று கவலை பட்டேன். பதிவை படித்ததும் மனம் தெளிவு பெற்றது.
நம்மிடம் குருவருளும் திருவருளும் இருக்க கவலை etharku.
ஒரு சிறிய திருத்தம். நடந்து முடிந்த சனி பெயர்ச்சி என்று பதிவில் ullathu. சனி பெயர்ச்சி டிசம்பர் 16
நன்றி
உமா
Very good – Thank you
மக்களின் பயத்தையும் ஆசையும் இன்று வியாபாரமாகி கொண்டு இருக்கிறது
எனக்கு விவரம் தெரிந்த வரை 10 வருடங்கள் முன்பு எல்லாம் இந்த சனி பெயர்ச்சி குரு பெயர்ச்சி போன்ற விஷயங்கள் பெரிதாக நான் கேள்வி பட்டது இல்லை அதே போல் இந்த அட்சய திரிதை இதையும் நான் கேள்விபட்டது இல்லை
நகை வியாபாரிகள் தங்கள் வியபாரத்தை பெருக்க அட்சய திரிதை அன்று நகை வாங்கினால் செல்வம் அதிகரிக்கும் என்று மக்களின் ஆசையை தூண்டினார்கள் இதனால் பணம் இருப்பவர்களை விட இருக்கும் நகை அடமானம் வைத்து அந்த பணத்தில் புது நகை வாங்குவதை நானே பார்த்து இருக்கிறேன் ,நாம் உழைத்த பணத்தில் வாங்கினால் என்றுமே நல்ல நாள் தான்
அதே போல் தான் குரு பெயர்ச்சி அந்த பெயர்ச்சி அது இது பிரகாரம் என்று ஜோசியர்கள் சாமியார்கள் சில பேர் பணம் சம்பாதிக்க மக்களை பயமுறுத்தி வைத்து உள்ளார்கள்,இறைவனை நம்பினால் எந்த பிரச்சனையும் இருக்காது.
அதுவும் சனீச்வரனால் பிடிக்க முடியாதவர்கள் விநாயகரும் அய்யப்பனும் அவர்களையும் ,முருகனையும் மனம் உருக வேண்டினாலே போதும்
மதிப்பிற்குரிய சுந்தர் அவர்களுக்கு,
நேற்று மாலை உங்களிடம் அலைபேசியில் பேசியபிறகு…இன்று… சனி யாரை என்ன செய்வர் என்று பார்த்தேன்…அந்த பதிவில் உள்ளது போல் தவறுகள் செயவில்லை என்றாலும்…. நான் தெரிந்து செய்த தவருகளுக்காகவே இன்று பாடம் படிக்கிறேன்… மனதை ஒருமுகபடுதிவிட்டல் கஷ்டங்களை ஜெயிக்க முடியும்… முயற்சிக்கிறேன்… நன்றி…
ஷண்முகப்ரிய