Saturday, December 15, 2018
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > அன்றும், இன்றும், என்றும், ஆண்டவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?

அன்றும், இன்றும், என்றும், ஆண்டவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?

print
கோவிலுக்கு செல்கிறோம். இறைவனை வணங்குகிறோம். அர்ச்சனை செய்கிறோம். விலை உயர்ந்த பொருட்களை காணிக்கையாக தருகிறோம்.மாலை சூட்டுகிறோம். இன்னும் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறோம்.  இவை அனைத்தும் நமது திருப்திக்காக நாம் செய்வது. ஏற்படுத்திக்கொண்டது. ஆனால் இது எதையுமே இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை என்பது தான் உண்மை.  அப்படியெனில் ஆண்டவன் நம்மிடம் உண்மையில் எதிர்பார்ப்பது என்ன?

அன்றும், இன்றும், என்றும்… ஆண்டவன் நம்மிடம் எதிர்பார்ப்பது நமது நற்பண்புகளையே.

ஆண்டவனுக்கு நீங்கள் ஏதேனும் பரிசளிக்க விரும்பினால் உங்கள் நற்குணத்தை பரிசாக கொடுங்கள். உங்களை நீங்கள் மிக மிக நல்லவராக, உண்மையானவராக மாற்றிக்கொள்ளுங்கள். அது தான் நீங்கள் ஆண்டவனுக்கு தரும் உண்மையான பரிசாக இருக்க முடியும்.

DSC01545

நம்மைப் பொருத்தவரை நம்முடைய வாழ்க்கையை ரைட்மந்த்ராவுக்கு முன், ரைட்மந்த்ராவுக்கு பின் என்று இரண்டாக பிரிக்கலாம். அந்தளவு இந்த தளம் எம்மை பக்குவப்படுத்தியிருக்கிறது. மாற்றியிருக்கிறது.  மாற்றிக்கொண்டு வருகிறது. இதுவே இறைவன் எமக்களித்த மிகப் பெரிய பரிசாக நாம் கருதுகிறோம். தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னசிறு கதைகள் பேசிக்கொண்டிருந்தவனை தன்னிலை உணரச் செய்திருக்கிறானே எத்தனை பெரிய உதவி இது? இதற்கே பல ஜென்மங்கள் எடுத்து அவனுக்கு நாம் நன்றிக்கடன் தீர்க்கவேண்டும்.

இன்றும் ஒவ்வொரு முறையும் மிகப் பெரிய கோரிக்கை ஒன்றுடன் ஆண்டவனை தரிசிக்க செல்லும்போது நம்மிடம் உள்ள மிக பெரிய குறை ஒன்றை கழுவி, நீக்கிவிட்டு தான் செல்கிறோம். ஒரு வகையில் உண்மையான ஸ்நானம் அது தான்.

பல முறை கோவிலுக்கு சென்று ஆண்டவனை தஞ்சமடைந்தும் அவன் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லையே என்று கருதுபவர்கள் ஒரு பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள குறைகளாக நீங்கள் நினைப்பவற்றை பட்டியலிடுங்கள். முடிந்தால் உங்கள் அன்புக்குரியவர்களிடம் கேளுங்கள். முக்கியமாக உங்கள் மனசாட்சியை கேளுங்கள். மனசாட்சியை ஏமாற்றுவது அதன் குரலை புறக்கணிப்பது அத்தனை சுலபமல்ல.

அனைத்தையும் குறித்துக்கொள்ளுங்கள். நிச்சயம் அனைவருக்கும் ஒரு மிகப் பெரிய பட்டியல் வரும். ஏனெனில் நாமெல்லாம் மனிதர்கள்.

அந்த பட்டியலில் உள்ளவற்றை ஒவ்வொன்றாக ஒவ்வொரு முறையும் இறைவனை தரிசிக்க செல்லும்போதும் விட்டுவிடுவதாக உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். இறைவனுக்கு அதைவிட மிகப் பெரிய பரிசை நீங்கள் தரமுடியாது.

பட்டியலில் குறித்தபடி ஒவ்வொன்றாக அனைத்தையும் விட்டுவிட சில மாதங்கள் பிடிக்கும். ஆனால், அனைத்தும் நீங்கி, பட்டியல் வெறுமையடைந்த பின்னர் பாருங்கள்… உங்கள் வாழ்க்கையே மாறியிருக்கும்.

இந்த குறைகளில் ஒன்றோ, சிலதோ, பலதோ உங்களிடம் இருக்கலாம். அப்படி இருப்பின் நாம் கூறியுள்ள முறைப்படி அவற்றை விட்டொழிக்க முயற்சியை மேற்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

DSC01578

அடுத்த முறை கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு வரிசையில் நிற்கும்போது, ‘என்னிடம் உள்ள இந்த குறைகள் என்னை விட்டு நீங்கவேண்டும்’ என்று நினைத்துக்கொள்ளுங்கள். நவக்கிரகங்களை சுற்றும்போது ‘என்னை சுற்றி, கட்டிப்போட்டிருக்கும் இந்த தீய குணங்கள் என்னை விட்டு நீங்கவேண்டும்’ என்று பிரார்த்தித்துக்கொள்ளுங்கள்.

உண்மை என்னும் மலராலே அர்ச்சிக்கும் நிலை வேண்டும்!

எண்ணுகின்ற நினைவெல்லாம் உனக்கிசைவாய் அமைய வேண்டும்!!

மனிதர்கள் விட்டொழிக்க வேண்டிய 21 குணங்கள் குறித்து தினமலர் இணையத்தில் படித்து நண்பர்கள் சிலர் முகநூலில் பகிர்ந்தவற்றை இங்கு தருகிறோம். (இது ஒரு உத்தேசப் பட்டியல் தான். இதில் பட்டியலிடப்பட்டுள்ளவற்றை தவிர மேலும் பல தீய குணங்கள் நம்மிடம் இருக்கலாம். அவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.)

மனிதன் விட்டொழிக்க வேண்டிய 21 தீய குணங்கள்!

1. தற்பெருமை கொள்ளுதல்

2. பிறரைக் கொடுமை செய்தல்

3. கோபப்படுதல்

4. பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல்.

5. பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்

6. பொய் பேசுதல்

7. கெட்ட சொற்களைப் பேசுதல்

8. நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை

9. புறம்பேசுதல்

10. தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்

11. பாரபட்சமாக நடத்தல்

12. பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல்

13. பொய்சாட்சி கூறுதல்

14. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்

15. வாக்குறுதியை மீறுதல்

16. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்

17. குறை கூறுதல்

18. வதந்தி பரப்புதல், கோள் சொல்லுதல்

19. பிறர் பொருளுக்கு, பணத்துக்கு ஆசைப்படுதல்

20. பொறாமைப்படுதல்

21. பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்.

[END]

5 thoughts on “அன்றும், இன்றும், என்றும், ஆண்டவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?

 1. Really superb artical அன்றும், இன்றும், என்றும்… ஆண்டவன் நம்மிடம்
  எதிர்பார்ப்பது நமது நற்பண்புகளையே

 2. Very eccentric article. மனிதனிடமுள்ள 21 தீய குணங்களையும் பட்டியலிட்டு கொடுத்ததற்கு நன்றி. நம்மிடம் உள்ள தீய குணங்களை விட்டொழித்து நம் நற் பண்புகளை இரைவனனுக்கு பரிசாக தருவோம்.

  ” அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்று மாணிக்க வாசகர் கூறியது போல் நம் நற்பண்புகள் மூலம் இறைவனை சரணடைந்து அவன் அன்புக்கு பாத்திரமாவோம்.

  தங்கள் பதிவிற்கு நன்றி

  உமா வெங்கட்

 3. ஆம்
  விட்டோழிப்பதற்க்கு பல குப்பைகள் உள்ளன.

  ஆனால் விட்டொழிப்பதற்கு உண்டான சுய தீர்மானம் எனும் முதல் படி மிகுந்த மன வலிமை கொண்டு மேற்கொண்டாகப்பட வேண்டும்.

  கட்டுரை கூறும் வழிமுறை குப்பைகளை குறைப்பதற்கு நல்ல ஒரு உபாயம்.

  நல்ல கட்டுரை சுந்தர்.
  நன்றி !

 4. தங்கள் பதிவிற்கு நன்றி

  நந்தா கோபால்
  வந்தவாசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *