Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > “என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள்?” MUST READ

“என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள்?” MUST READ

print
மீபத்தில் நமது உள்ளத்தை உருக்கிய நிகழ்வு இது. அவசியம் படிக்கவும். பகிரவும்.

‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ – இந்தச் சொற்களை எங்கே கேட்டாலும் ஒரு முகம் உங்கள் மனக்கண் முன்வந்து நிற்கும். அவர்தான் சகாயம் ஐ.ஏ.எஸ். அதிகார வர்க்கத்தின் எந்தப் பதவியில் இருந்தாலும் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு சில அதிகாரிகளில் சகாயமும் ஒருவர். பல அதிகாரிகள் தன்னளவில் நேர்மையாளர்களாக இருந்தால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், சகாயம், அதைவிட முக்கியமாக தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் நேர்மையானவர்களாக மாற்றும் பிரசாரத்தையும் தொடர்ந்து செய்துவருபவர்.

DSC_6743

தான் பங்கேற்கும் விழாக்களில் ஆட்சியாளர்களை துதிபாடாமல் அந்த மேடைகளை சரியாக பயன்படுத்தி, பார்வையாளர்களின் மனசாட்சியை உலுக்கி எழுப்புவதில் திரு.சகாயத்திற்கு நிகர் திரு.சகாயமே தான்.

சமீபத்தில் அப்படி அவர் கலந்துகொண்டு ஒரு விழாவில் பேசிய விபரம் இதோ. அவசியம் படிக்கவும். பகிரவும்.

மனுஸ்ரீ பிலிம் இண்டர் நேஷனல் தயாரிப்பில் மனுக் கண்ணன் இயக்கியுள்ள படம் ‘அங்குசம்’. காதலையும் வன்முறையையும் பிரதானமான கருப் பொருளாக்கி உருவாகி வரும் படங்கள் மத்தியில் ‘தகவல் அறியும் சட்டம்’ பற்றிய விழிப்புணர்வு நோக்கில் உருவாகியுள்ள முதல் தமிழ்ப்படம் தான் ‘அங்குசம்’.

ஆர்.கே.வி. ஸ்டுடியோ திரையரங்கில் ‘அங்குசம்’ திரையிடப்பட்டது. திரையீடு முடிந்த பிறகு புதுமை நிகழ்வாக அங்குசம் படக்குழுவினர் பெருமையுடன் வழங்கும் ‘தெரிந்த வீரர்கள் தெரியாத விவரங்கள்’, என்கிற இந்திய விடுதலை வீரர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பேடு வெளியீட்டு விழா நடந்தது.சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் இந்நூலினை வெளியிட்டார்.

DSC_6717

குழந்தையை பறித்துக்கொண்ட இறைவன்

விழாவில் இயக்குநர் மனுக்கண்ணன் அனைவரையும் வரவேற்றுப் பேசுகையில், “நான் பொறியியல் மற்றும் மேலாண்மை முதுகலைப் பட்டதாரி. துபாயில் உயரதிகாரியாக நல்லவேலை பார்த்து வந்தேன். எங்களுக்கு 11 ஆண்டுகளாக குழந்தை இல்லை. எனவே சென்னை வந்து எழும்பூர் கில்டு ஆப் சர்வீஸில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு வளர்த்தோம். வானம்பாடிகள் போல வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. கடவுள் என்ன நினைத்தாரோ நான்கே ஆண்டுகள்தான் எங்கள் மகள் மனுவை எடுத்துக் கொண்டார். என்ன இருந்தும் மனுவை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. நானும் என் மனைவியும் உடைந்து போய்விட்டோம். எல்லாம் அவ்வளவுதானா இனி ஒன்றுமே இல்லையா என்று தோன்றியது. இந்தியா திரும்பினோம்.

சில பத்திரிகை செய்திகள் எங்களைச் சிந்திக்க வைத்தது. தகவல் உரிமைச்சட்டம் பற்றி திருச்சி வாலிபர் ஒருவர் சந்தித்த போராட்டத்தை அறிந்தோம்,

மகள் பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்தோம் நாம் ஏன் ‘தகவல் அறியும் சட்டம்’ பற்றி மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்தக் கூடாது என்று நினைத்தோம்.நான் சினிமாக்காரனும் இல்லை. சினிமா தொடர்பும் இல்லாதவன். படம் எடுக்க முடிவு செய்தோம். அப்படி உருவானதுதான் ‘அங்குசம்’

என் மகள் பெயர் மனு. அப்பா பெயர் கண்ணன். இரண்டையும் இணைத்துதான் மனுக்கண்ணனானேன். படம் இயக்கினேன்.

இந்தப படத்தினால் பல பிரச்சினைகள். அதுபற்றி இப்போது பேச விரும்பவில்லை. வரிவிலக்கிற்காக போராடிப் பெற்றோம்.

61 வது திரைப்பட விருதுகளுக்கு அனுப்பினோம். கிடைக்க வில்லை. பிறகு கேள்விப் பட்டோம். படம் தீவிரவாதம் பேசியது என்றார்களாம். இது தேசிய வாதம் தான் பேசியது. இவ்விழாவில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்று வழிகாட்டி வரும் சகாயம் அவர்கள் நூலினை வெளியிடுவதில் மகிழ்ச்சி. நன்றி. ஊடகங்கள் தான் ‘அங்குசம்’படத்தை மக்களிடம் கொண்டு சென்றன. இனியும் கொண்டு சேர்க்கும்.” என்று தெரிவித்தார்.

என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள்? சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் உருக்கம்!

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பேசும் பேசுகையில், “இங்கே இந்த நூல் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். நேர்மையான கருத்தை இந்த சமூகத்தில் விதைக்க முடியுமா என்று மனுக்கண்ணன் கொண்டு வந்திருக்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன்.

லஞ்சம் என்பது எழைகளுக்கு எதிரானது, பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் விரோதமானது, தேசத்துக்கு தடையானது.

DSC_6734 copyதகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 சாதாரண மக்கள் கையில் கிடைத்துள்ள அசாதாரண ஆயுதம் என்று கருதுகிறேன். அதைப் பற்றி ‘அங்குசம்’படமெடுத்துள்ள இயக்குநர் மனுக்கண்ணன் நிச்சயம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். நம்நாட்டு தேச விடுதலைக்கு பாடுபட்டவர்களை நாம் எப்படி மதிக்கிறோம்? என்ன தெரிந்து கொண்டு இருக்கிறோம்.?

இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தாகத்தோடும் வேகத்தோடும் வருகிற இளைஞர்கள், படைப்பாளிகள், முதியவர்கள் பலரை சந்தித்திருக்கிறேன்.

மதுரையில் நான் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது மனுநீதி நாள் அன்று திங்கள் கிழமை மக்களிடம் மனுக்கள் வாங்குவதுண்டு. பல ஊர்களிலிருந்து தொலை தூரத்திலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அப்படி ஒரு நாள் மதிய உணவு கூட உண்ணாமல் 3,4 மணிவரை வாங்கினேன். முடித்துவிட்டு வெளியே வந்த போது ஒரு 45 வயதுக்காரர் அழுக்குச்சட்டை கைலியுடன் வந்தார். 10 நாள் பட்டினி கிடந்த சோர்வுடன் இருந்தார். முன்பே வரவேண்டியது தானே என்றேன். கூட்டமாக இருந்தது ஐயா என்றார். எங்கே இருந்தீர்கள் என்றேன். இங்குதான் இருந்தேன் என்றார். நீங்கள் யார் என்றேன். நான் வ.உ.சி.யின் பேரன் என்றார். நான் அதிர்ந்தேன். நான் வ.உ.சி.யின் பேரன் என்று சொல்ல வேண்டியதுதானே என்றேன். .. காவலர்கள் உள்ளே விடவில்லை என்றார். உனக்கு இங்கே நிற்க உரிமை வாங்கிக் கொடுத்தது என் பாட்டன் தான் என்று சொல்ல வேண்டியதுதானே? என்றேன்.

என்ன செய்கிறீர்கள் என்றேன். அவ்வளவு வறுமையில் இருந்தார். கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கிறோம் என்றார். அப்படி பெயிண்ட் அடித்ததில் கீழே விழுந்து சகோதரருக்கு அடிபட்டு காயமாகி முடியாமல் இருக்கிறார் உதவுங்கள் என்றார். திருமணம் கூட செய்யவில்லை. நான் உடனடியாக மதுரை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட உழவர் உணவகம் தொடங்க கடன் அனுமதித்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கினேன்.

V O Cவெள்ளையனுக்கு எதிராக சுதேசிக்கப்பல் விட்டவர் வ.உ.சி. இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர். கையிலும் காலிலும் விலங்குகள் போடப்பட்டு செக்கிழுத்தவர். அப்போது குடும்பத்தினர் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா? அவர் செக்கிழுக்கட்டும் கை கால் விலங்குகளை கழற்றி விட்டு இழுக்கச் செய்யுங்கள் என்பது தான். அவரது குடும்பமே வக்கீல் குடும்பம். அவரது குடும்பத்துக்கு வந்த நிலையைப் பாருங்கள். இதுதான் தியாகிகளின் நிலைமை.என் தேசம் விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் மலர்ச்சி வளர்ச்சி என்று மார் தட்டுகிறோமே இதன் பலனை யார் அனுபவிக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில் என்ன ?

நான் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது மனுநீதி நாள் மக்களிடம் மனுக்கள் வாங்கியபோது உமாராணி என்கிற ஒரு பெண்மணி உதவி கேட்டார்.42 வயதிருக்கும்.என் தந்தையின் தகுதிக்கு ஏற்றமாதிரி உதவுங்கள் ஐயா என்றார். தந்தையின் தகுதி என்றால் உங்கள் தந்தை யார் என்றேன். அவர் பாண்டமங்கலம் தர்மலிங்கம் பிள்ளை என்றார். தர்மலிங்கம் பிள்ளை சுதந்திரப் போராட்டவீரர். போராட்டத்தில் ஈடுபட்டதால் சொத்துகளை இழந்தவர்.

DSC_6729

அவருக்கு உடனடியாக என்னால் உதவ முடியவில்லை. வட்டாட்சியரைக் கேட்டேன். முடியாது விதிகள் இல்லை என்றார். ஏன் என்றேன். சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுக்கு 25 வயது வரைதான் உதவித்தொகை கிடைக்கும் என்றார். அதுதான் சட்டம்? நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்களுக்கே உதவாத சட்டம் என்ன பெரிய சட்டம்? அதை மாற்ற வேண்டும் என்று போராடி தமிழக அரசு தலைமை செயலகத்துக்கு எழுதி கருத்துரு பெற்று சிறப்பு இனமாக கருதிட எழுதினேன். 5 ஆயிரம் பெற உதவினேன். ஐயா என்று உதவி கேட்ட உமாராணி இப்போது அண்ணா என்கிறார். என்னைப் பார்க்க சென்னை வருவதாகக் கூறினார். நானே நேரில் போய் அவரைப் பார்த்த போது அவருக்கு இரு கண்பார்வையும் போய்விட்டதை அறிந்த போது வேதனைப்பட்டேன்.

தேசத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தியாகிகள் வரலாறுகளை எடுத்துச் சொல்லுங்கள். இந்த தேசத்தில் 1999-2005 ல் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது நம் உணவுக்கு பயிரிடும் விவசாயிகள் நிலை.

[button bg_color=”#ff0062″]தேசத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தியாகிகள் வரலாறுகளை எடுத்துச் சொல்லுங்கள். இந்த தேசத்தில் 1999-2005 ல் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இது நம் உணவுக்கு பயிரிடும் விவசாயிகள் நிலை.[/button]

நம் நாகரிகம் பண்பாட்டை காக்கும் நெசவாளர்கள் வறுமையில் இருக்கிறார்கள். கோ ஆப் டெக்ஸ் இயக்குநராக இருக்கிறேன். இப்போது கண்டாங்கி சேலை மீட்டுருவாக்கம் திட்டத்தை செய்கிறோம். 3 மாதங்களுக்கு முன் காரைக்குடி சென்றேன். அங்கு அவ்வளவு வறுமை. பல வீடுகளுக்கு கதவுகள் இல்லை. கதவுகள் போட முடியாத அளவுக்கு அவ்வளவு வறுமை. இங்கு என்ன இருக்கிறது எடுத்துச் செல்ல என்கிறார்கள். எவ்வளவு வேதனை? என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள்?. இந்தக் கேள்விக்கு பதில் தேடவும் கேள்வி எழுப்பவும் அங்குசம் உதவும்.” இவ்வாறு சகாயம் ஐ.ஏ.எஸ் பேசினார்.

[END]

11 thoughts on ““என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள்?” MUST READ

  1. திரு சகாயம் அய்யா மாதிரி ஒரு நேர்மையான அதிகாரியை யாரும் பார்க்கமுடியாது,இவர் தன் கலக்டெர் பொறுப்பில் இருக்கும்போது பெரிய புள்ளிகள் இவரது நேர்மை பிடிக்காமல் அடிக்கடி பதவி மாற்றம் செய்தனர் ,அதனால் இவரது குடும்பம பட்ட துன்பம் ஏராலம் அப்படியும் இவர் மனம் தளரவில்லை தன் நேர்மையும் தவறுவதில்லை இப்படிப்பட்ட மனிதர்கள்தான் இந்த நாட்டை ஆளவேண்டும் ,ஆனால் இவர்கள் பதவிக்கு வர ஏன் மறுக்கின்றார்கள் என்பதுதான் வேதனையாக இருக்கிறது

  2. அன்று சுதேசி இயக்கம் நடத்தி வெள்ளையரின் பகட்டான துணிகளை வேண்டாம் என ஒதுக்கி வைத்து நம் தேசத்தின் சுதேசி கதர் ஆடை அணிய சொல்லி காந்தியடிகளார் ,மற்றும் தென்னாட்டில் வ உ சிதம்பரனார் போராட்டம் நடத்தினர் .
    இன்று இந்திய சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகியும் இந்த போராட்டம் ஓயவில்லை . திரு சகாயம் அவர்கள் co-optex நிர்வாக இயக்குனராய் அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக globalization என்ற பெயரில் விலை மிக மிக அதிகமான வெளி நாட்டு துணி வகைகள் பகட்டான A/C SHOW ROOM களில் விற்பதற்கு , இணையாக நம் துணிவகைகளில் புதுமை புகுத்தி மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்து , பல சாதனைகள் புரிந்துள்ளார். எண்ணற்ற co-optex ஐ நம்பி உள்ள நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயர காரணம் அவர் தான் . எப்படி தேர்தல் ஆணையம் என்றால் T N Seshan நினைவுக்கு வருவாரோ அதுபோல் co-optex என்றால் அது திரு சகாயம் அவர்கள் தான் HERO.
    நன்றி சுந்தர்ஜி

  3. திரு சகாயம், அவர் போன்ற அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து இன்றைய சமூகத்தை (முக்கியமாக இளைய சமூகத்தை) நல்ல வழியில் கொண்டு செல்ல, ஒரு பாதையை காண்பிக்கலாம். இருக்கவே இருக்கு சமூக வலைத்தளம். இன்று இல்லாவிடிலும் ஒரு நாள், ஒரு நல்ல விடியலுக்கு, அவர்களின் இன்றைய விதை, வழி வகுக்கும்.

  4. 100 சகாயம் ஐயாவந்தல்லும் திருந்தாது மனம் வருந்தாது தனி மனிதன் திருந்த வேண்டும்

  5. Honorable Collector Mr.Sahayam Speech is hitting at our hearts. And the state of respect for VOC’s Grandson? 🙁 Feeling ashamed of our Character and behaviour. Wondering where our nation heads…For Cheap people and Pleasures.. This article is making a deep retrospection in my heart. Its High time, we change ourselves.

  6. சகா [நேயத்துடன்] வாழும், சகாயம் சாருக்கு நெஞ்சம் நிமிர் வாழ்த்துக்களும்,நன்றிகளும் ரைட் மந்த்ரா சார்பில்..

  7. நான் வணங்கும் தெய்வங்களுடன் வாழ்கிறார் வ வு சிதம்பரனார்.நாமெல்லாம் கோயில் குளம் நு போக வேண்டாம் ,என்றாவது ஒரு நாள் ஒரு நிமிடம் இவரை நினைத்தாலே முக்தி அடைவோம்!!!!!

    1. நாம் ஒரு புதிய சுதந்திர போராட்டம் நடத்துவோம் காந்தி வழியில் செல்வோம் நாட்டை சூறையாடும் அரசியல் கேடிகளுக்கு படம் புகட்டுவோம் சஹாயம் நமக்கு சஹாயமாக இருக்கட்டும்

  8. திரு சஹாயம் சார் அவர்களுக்கு நாம் கை
    கொடுப்போம். நன்மை நடக்கும்.

  9. வா வூ சி போன்ற மனிதர்களுக்கு நாம் செய்த துரோகம் தான் இந்த அறமற்ற poomiyil இருக்கின்றோம் என்று நினிக்கிறேன்

  10. கப்பல் ஒட்டிய மிழனுக்கு பரம்பரைக்கு இந்த கதியா,,,,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *