Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, May 18, 2024
Please specify the group
Home > Featured > ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)

ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)

print
நம் தளத்தில் வெளியாகும் பதிவுகள் சில தொடராக வந்து கொண்டிருக்கிறது. பதிவுகளை ஒரு வகைப்படுத்தி ஒரு குடையின் கீழே கொண்டு வரவே தொடராக தருகிறோம். மற்றபடி தனித் தனியாக அவற்றை படித்தாலும் சரி, முன்னும்பின்னும் படித்தலும் சரி அது புரியும் வண்ணமே எழுதி வருகிறோம். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு குறித்த மெஸ்ஸேஜை கன்வே செய்யும். That’s all.

நமது ஆளுமை முன்னேற்றத் தொடரில் இது ஐந்தாம் அத்தியாயம்.

நாளுக்கொரு சவால், நொடிக்கொரு பிரச்னை… என்ன செய்வது?

வாழ்க்கை என்னும் பயணம் பலருக்கு ஒரே மாதிரி சீராக இருப்பதில்லை. நாளுக்கொரு சவால், நொடிக்கொரு பிரச்னை என்று முளைப்பதுண்டு.

“எல்லாம் நல்லத் தானே போய்க்கிட்டுருக்கு… ஏன் இப்படி திடீர்னு பிரச்சனை வருது?”

“நம்ம பக்தியில என்ன குறை வெச்சோம்? ஏன் இப்படி நம்மளை படுத்துறான் ஆண்டவன்?”

பலரின் கேள்வி இது தான். சில காலம் முன்பு வரை நாம் கூட இந்த கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தோம்.

தாங்கள் பாட்டுக்கு தங்கள் கடமையை சரியாக செய்து வாழ்ந்து வருபவர்களுக்கு கூட பல சமயங்களில் திடீர் திடீர் பிரச்சனைகள் முளைக்கும். பல மகான்களின் வாழ்வில், சாதனையாளர்கள் வாழ்வில் இது நடந்திருக்கிறது. இப்படி பிரச்னைகள் வரும்போது சாமானியர்கள் பலர் நிலைகுலைந்துவிடுகிறார்கள். சாதனையாளர்கள் ஒரு கை பார்த்துவிடுகிறார்கள்.

சுவாமி விவேகானந்தர் சந்திக்காத பிரச்சனைகளா? இல்லை சவால்களா?

ஓர் இலட்சிய தீபத்தின் நிழலில் இருந்த இருள், நமக்கு இன்றும் வியப்பாய் இருக்கிறது. இருளை உள்வாங்கி அருளைப் பரப்பிய வித்தியாசமான தீபம்தான் விவேகானந்தர்.

விவேகானந்தர் என்றால் ஏதோ ஒரு ஆஸ்ரமத்தில் ஒரு மகானால் அடையாளம் காணப்பட்டு அலட்டிக்கொள்ளாமல் வளர்ந்தவர் என்று தவறாக கருதுபவர்கள் இருக்கிறார்கள். வறுமை, அயல்நாட்டில் சந்தித்த சோதனைகள், குருதேவரின் மறைவு போன்ற சூழ்நிலைகளில் விவேகானந்தர் மேற்கொண்ட இலட்சியப் போராட்டத்தை இன்று நினைத்தாலும் இதயம் சிலிர்க்கிறது.

Swami vivekananda golden quote

மிகப் பெரிய லட்சியத்தின் அழைப்பிற்கும் சராசாரி வாழ்க்கை சக்கரத்தை ஓட்டும் ஓட்டத்திற்கும் நடுவே ஊசலாட்டங்கள் இருந்துகொண்டு தான் இருக்கும். அந்த ஊசலாட்டத்தில், சராசரித் தேவைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஒரு மகத்தான இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல, மிகப்பெரிய உறுதி தேவைப்படுகிறது. அப்படி ஒரு போராட்டத்தின் உச்சியில் பூத்த குறிஞ்சி மலர்தான் விவேகானந்தர்.

எதற்கும் நிலைகுலையாத அந்த போர்க்குணம் தான் விவேகானந்தரை ஒரு வீரத்துறவியாகச் செதுக்கின. விவேகானந்தர் பாரதியை போல உலகில் வலம் வந்தது சொற்ப ஆண்டுகள் தான். ஆனால் அதற்குள், பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய நம்பிக்கைக் கருவூலத்தை விவேகானந்தர் வழங்கிச் சென்றிருக்கிறார். எப்பேற்பட்ட கொடை இது?

இன்றும் நமக்கு என்ன பிரச்சனை என்றாலும் விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்றையும் திருக்குறளையும் புரட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஏதோ ஒரு தீர்வு அதில் கிடைத்துவிடும்.

பிரச்னைகளை பொருத்தவரை ஆண்டவன் எல்லோருக்கும் குறிப்பாக தன் அன்புக்குரியவர்களுக்கு பஞ்சமேயில்லாமல் வாரி வழங்குவான். ஏனெனில் பிரச்சனைகள் தோன்றும்போது தான் ஐம்புலன்களும் ஒருவருக்கு விழிப்பாக இருக்கும். மேலும் சோதனைகள் ஒன்ற ஒன்று இல்லையென்றால் உங்களைச் சுற்றியிருப்பவர்களை உங்களால் இறுதி வரை அடையாளம் காணமுடியாமலே போய்விடும்.

========================================================

Also check : ‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா? 

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா! – தனி ஒருவன் (2)

அக்கினிக் குஞ்சு மூட்டிய காட்டுத் தீ ! – தனி ஒருவன் (1)

========================================================

கிரிக்கெட் விளையாட்டில் ஒன்று உண்டு. ஒவ்வொரு கிரவுண்டும் ஒரு மாதிரி இருக்கும். ஒரு ஊரில் இருக்கும் கிரவுண்ட் போல மற்றொரு ஊரில் நாட்டில் இருக்காது. விளையாடுபவர்கள் எண்ணிக்கை, ஓவர்கள் எண்ணிக்கை, பிட்சின் நீளம் உள்ளிட்ட அனைத்திலும் ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வந்தவர்கள், கிரவுண்ட் விஷயத்தில் அப்படி கொண்டு வரவில்லை. கிரவுண்ட் என்றால் அது வட்டமாகத் தான் இருக்கவேண்டும், சதுரமாகத் தான் இருக்கவேண்டும், செவ்வகமாக இருக்கவேண்டும் என்றெல்லாம் கிடையாது. அதே போல பேட்டிங்கிற்கு சாதகமான பேட்டிங் பிட்ச், பௌலிங்கிற்கு சாதகமான பௌலிங் பிட்ச், பீல்டிங்கிற்கு பிட்ச் சாதகமான பீல்டிங் பிட்ச் என்று பல வகைகள் உண்டு.

இது தொடர்பான ஒழுங்கை சுலபமாக கொண்டு வரமுடியும்.

ஆனால் ஏன் இப்படி விட்டுவிட்டார்கள் தெரியுமா?

வீரர்கள் எப்படிப்பட்ட மைதானத்திலும் விளையாடக்கூடிய திறன் பெறவேண்டும் என்பதற்காகத் தான்.

ஒரு வீரர் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் மட்டுமே தன்னால் நன்றாக ஸ்கோர் செய்யமுடியும் அல்லது பீல்டிங் செய்யமுடியும் என்றால் அவரை நீங்கள் ஒரு நல்ல வீரன் என்று ஒப்புக்கொள்வீர்களா?

ஒரு சிறந்த வீரன் என்பவன் எப்பேற்ப்பட்ட சூழ்நிலையிலும் களத்திலும் திறமையை வெளிப்படுத்துபவனாக இருக்கவேண்டும். எல்லாமே சுலபமாக போய்விட்டால் சுயபுத்தி என்பதே இல்லாமல் போய்விடும். மூளைக்கு வேலை இருக்காது. திறமை வெளியே வரவே வராது. சவலைப் பிள்ளைகளாகத் தான் இருப்போம்.

இறைவன், வாழ்க்கை எனும் விளையாட்டில் நமக்கு வெவ்வேறு களத்தை கொடுப்பதன் காரணமும் அது தான். ஒரு களம் போல இன்னொரு களம் இருக்காது.

நாம் ஸ்கோர் செய்ய பக்கபலமாக நம்முடன் சிலர் ஓடிவருவார்கள். அதே நேரம் நம்மை வீழ்த்த பலர் ஆவலுடன் காத்திருப்பார்கள். எனவே விழிப்புடன் ஓடவேண்டும். சில சமயம், நம்முடன் இருப்பவர்கள் செய்யும் தவறுக்கு நாம் ஆட்டமிழக்க நேர்வதும் உண்டு. எனவே யார் நம்முடன் ஓடுகிறார்கள் என்பதும் முக்கியம்.

இது எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று இருக்கிறது. அந்த விளையாட்டை பற்றி நன்கு தெரிந்த அதாவது சரியான ஆடியன்ஸ் முன் விளையாடுவது.

ந்த ஊரில் மையப்பகுதியில் உள்ள காலி மைதானம் ஒன்றில் கிரிக்கெட் போட்டி நடந்த முடிவானது. அந்த மைதானத்திற்கு சொந்தமான ஒரு மிகப் பெரிய செல்வந்தனை சிறப்பு பார்வையாளராக அழைத்திருந்தார்கள். ஆட்டம் முழுவதையும் கைதட்டி உற்சாகத்துடன் ரசித்துக்கொண்டிருந்தான் அவன்.

வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கொடுக்கும்போது, “ஒரே பந்துக்கு இப்படி பலர் ஓடுவதும் சண்டையிடுவதும் வருத்தமாயிருக்கிறது. அடுத்த முறை அனைவருக்கும் தலா ஒரு பந்தை நானே என் செலவில் வாங்கித் தருகிறேன்… கவலை வேண்டாம்” என்றானாம்.

இது எப்படி இருக்கு?

ஆக, நமது ஆட்டத்தின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் முன்பு விளையாடுவது அதைவிட முக்கியம்.

ரைட்மந்த்ராவை பொருத்தவரை நமது ஒவ்வொரு பதிவுக்கும் அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பவர்கள் முன்பு தான் இவற்றை காட்சிக்கு வைக்கிறோம் என்று நம்புகிறோம். மேலும் நாம் நிற்கும் களம் நம் தனிப்பட்ட வாழ்க்கை மட்டும் அல்ல. பலரின் முன்னேற்றம், மனநிம்மதி, ஆறுதல், பக்தி, தெய்வநம்பிக்கை இவற்றோடு பின்னிப் பிணைந்துள்ள ஒன்று. அதை அனைவரும் உணரவேண்டும்.

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to SUSTAIN. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions   A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account   Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Rightmantra Soul Solutions, Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also check previous Episodes….

ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அழகை விட எது முக்கியம்? – ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 4

செல்ஃபோன் நாகரீகம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 3

உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி செலவழிக்கிறீர்கள்? ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 2

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா? — உங்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்ள உதவும் ஒரு தொடர் — Episode 1

========================================================

[END]

2 thoughts on “ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)

 1. ரொம்ப அருமையான பதிவு சார்.

  சோ. ரவிச்சந்திரன்
  கர்நாடகா

 2. மிகவும் அருமையான பதிவு.. பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் அதை எதிர் நீச்சல் போட்டு போராடினால் வெற்றி நிச்சயம்/
  //He who struggles is better than he who never attempts // சுவாமி விவேகானந்தர்
  வாழ்க .. வளமுடன்
  நன்றி
  உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *