Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, November 9, 2024
Please specify the group
Home > Featured > ரைட்மந்த்ரா அலுவலகத்தில் உறுதிமொழியுடன் நடந்த அப்துல் கலாம் அவர்களின் இரங்கல் கூட்டம்!

ரைட்மந்த்ரா அலுவலகத்தில் உறுதிமொழியுடன் நடந்த அப்துல் கலாம் அவர்களின் இரங்கல் கூட்டம்!

print
நமது தளத்தின் அலுவலகத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர் கூறிய வார்த்தைகள் உறுதிமொழி எடுத்துகொள்ளப்பட்டது.

Kalam tribute 3

இன்று காலை நம்மை தொடர்புகொண்ட நண்பர் ராஜா நமது தளத்தின் அலுவலகத்தில் அப்துல் கலாம் அவர்களின் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற யோசனையை தந்தார்.

இதையடுத்து அப்துல் கலாம் அவர்களின் படம் ஒன்று தரவிறக்கம் செய்யப்பட்டு ஸ்டூடியோவில் கொடுத்து பிரிண்ட் எடுத்து லேமினேட் செய்யப்பட்டது.

 நமது அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் அவர்களின் படம். அவர் ஆசி என்றும் நமக்குண்டு அல்லவா?
நமது அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் அவர்களின் படம். அவர் ஆசி என்றும் நமக்குண்டு அல்லவா?

கலாம் அவர்களுடன் புகைப்படம் தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், இதோ அவரே நிரந்தரமாக நம்முடன் நம் அலுவலகத்திற்கு தனது திருவுருவப்படத்தின் ரூபமாக வந்துவிட்டார். இது நாம் நேற்று வரை கற்பனை செய்துகூட பார்க்காத ஒன்று.

Kalam tribute 2

மாலை 5.00 மணியளவில் தொடங்கிய அஞ்சலி கூட்டத்தில் நண்பர் ராஜா, ஸ்ரீனிவாசன், பக்கத்தில் அலுவலகம் வைத்திருக்கும் நண்பர் ராமசுப்ரமணியம், எங்கள் காம்ப்ளெக்ஸ் மானேஜர் திரு ஆகியோர் பங்கேற்றனர்.

Kalam tribute 1

Kalam tribute 5Kalam tribute 10Kalam tribute 4Kalam tribute 6Kalam tribute 7கலாம் அவர்களின் படத்திற்கு பூ தூவி பிரார்த்தனை செய்த பிறகு அவர் நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளர்களிடம் எடுத்துக்கொள்ளச் சொன்ன உறுதிமொழியின் காணொளியை கணினியில் ஓடவிட்டு, அவர் கூற கூற நாங்கள் இங்கே உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்.

கலாம் அவர்களே எங்களுடன் இருந்தது போலவே உணர்ந்தோம்.

Kalam tribute 9

கலாம் அவர்கள் சொல்லச் சொல்ல நாங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி பின்வருமாறு…

இறைவனின் மக்கள் நாங்கள்.

இறைவனின் மக்கள் நாங்கள்.

வைரத்தை மிஞ்சும் நெஞ்சம் கொண்டோம்.

வைரத்தை மிஞ்சும் நெஞ்சம் கொண்டோம்.

வெல்வோம். சாதிப்போம். வேதனைகளை துடைத்தெறிவோம்.

வெல்வோம். சாதிப்போம். வேதனைகளை துடைத்தெறிவோம்.

எந்தையருளால் எதுவும் எம் வசம் ஆகும்.

எந்தையருளால் எதுவும் எம் வசம் ஆகும்.

இறை எங்கள் பக்கம் எனில்

இறை எங்கள் பக்கம் எனில்

எவர் எங்கள் எதிர் பக்கம்?

எவர் எங்கள் எதிர் பக்கம்?

அஞ்சலி கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத பல வாசகர்கள் நமது வேண்டுகோளுக்கிணங்க அவரவர் இடங்களில் பிரார்த்தனை செய்தனர். அனைவருக்கும் நன்றி.

அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா நம்மை இனி நம்மை நிச்சயம் வழிநடத்தும் என்று நம்புவோமாக.

வாழ்க பாரதம்! வளர்க கலாம் அவர்களின் புகழ்!!

ஜெய் ஹிந்த்!!!

==================================================================

Also check from our archives:

ராக்கெட் உருவாக்கிய உங்களால் தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவரை தர முடியுமா? – விகடன் மேடையில் கலாம்!

என்றும் வாழும் எங்கள் கலாம்!

கலாம் நினைத்தார்… கடவுள் முடித்தார்!  வியக்க வைக்கும் உண்மை சம்பவம்!!

“ஒரு நாள் நிச்சயம் விடியும்; அது உன்னால் மட்டுமே முடியும்!” – கலாம் காட்டும் வழி! ABDUL KALAM B’DAY SPL

“திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்!”

==================================================================

[END]

3 thoughts on “ரைட்மந்த்ரா அலுவலகத்தில் உறுதிமொழியுடன் நடந்த அப்துல் கலாம் அவர்களின் இரங்கல் கூட்டம்!

  1. இறைவனின் மக்கள் நாங்கள்.
    இறைவனின் மக்கள் நாங்கள்.

    வைரத்தை மிஞ்சும் நெஞ்சம் கொண்டோம்.
    வைரத்தை மிஞ்சும் நெஞ்சம் கொண்டோம்.

    வெல்வோம். சாதிப்போம். வேதனைகளை துடைத்தெறிவோம்
    வெல்வோம். சாதிப்போம். வேதனைகளை துடைத்தேறிவோம்.

    எந்தையருளால் எதுவும் எம் வசம் ஆகும்.
    எந்தையருளால் எதுவும் எம் வசம் ஆகும்.

    இறை எங்கள் பக்கம் எனில்
    இறை எங்கள் பக்கம் எனில்

    எவர் எங்கள் எதிர் பக்கம்?
    எவர் எங்கள் எதிர் பக்கம்?

    ” என்றும் எங்களை வழி நடத்துங்கள் ! ”

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”


    விஜய் ஆனந்த்

  2. திரு கலாம் அவர்களின் ஆசி நம் எல்லோரையும் நல வழியில் இட்டுச் செல்லும்

    நன்றி
    உமா வெங்கட்

  3. எல்லாமே அவசரம் எதற்குமே நேரம் இல்லை என்று நினைக்கும் மனிதர்களுகுக் உங்களுடைய இந்த பங்களிப்பு ஒரு தூண்டுகோல்…அப்துல் கலாம் போல நாமும் நல்லதை நினைத்து, நல்லதை செய்தால் சொர்கதிருக்கு செல்லலாம்…

    அவர் ஆசைப்படியே அவருடைய இறுதி மூச்சு நின்றது…வெகு சிலருக்கே இந்த பாக்கியம் அமையும்…அப்துல் கலாமை போல் நாமும் அறிவாளியாக, நல்லவர்களாக இருக்க பாடுபடுவோம்…

    அவரை போல தேசபக்தி நமக்கும் அதிகரிக்க நம் நாட்டையும் சுற்றத்தையும் நேசிப்போம்

    நன்றி
    சண்முகப்ரியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *