Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > என்றும் வாழும் எங்கள் கலாம்!

என்றும் வாழும் எங்கள் கலாம்!

print
ம் ஆதர்ஷ நாயகன், ரோல்மாடல், இளைஞர்களின் விடிவெள்ளி, நவீன இந்தியாவின் சிற்பி, எளிமையின் திருவுருவம் திரு.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் மறைந்ததை இன்னும் நம்மால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. நமது மிகப் பெரிய லட்சியங்களுள் ஒன்று அவரை சந்தித்து அளவளாவி புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே என்று நம் வாசகர்கள் அனைவரும் அறிவீர்கள். அது கடைசி வரை நிறைவேறாமலே போய்விட்டதே என்கிற துக்கம் தான் நம்மை ஆட்டிப்படைக்கிறது. ஒருவேளை இன்னும் கடுமையாக முயற்சித்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்குமோ என்னவோ? இறைவன் உங்களை இவ்வளவு சீக்கிரம் அழைத்துகொள்வான் என்று எதிர்பார்க்கவில்லையே ஐயா… மன்னித்துவிடுங்கள்!!

Abdul Kalam

ஜாதி, மதம், இனம், அரசியல், மொழி பேதம் பாராமல் ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒருவர் மறைவுக்கு கண்ணீர் சிந்துகிறார்கள் என்றால் அது கலாம் ஒருவருக்காக மட்டுமே.

காதலியை காண வேண்டும் என்று தவித்த வாலிபர்களை விட கலாமை காண வேண்டும் என்று தவித்த வாலிபர்கள் தான் இங்கே அதிகம்…!!! அபிமான நடிகருடன் புகைப்படமெடுப்பதே பெருமை என்கிற ஒரு வழக்கம் இருந்த காலகட்டத்தில் தன்னுடன் புகைப்படம் எடுப்பதே பெருமை என்கிற நிலைக்கு வித்திட்டவர் கலாம். இது சாதாரண சாதனையல்ல. சரித்திர சாதனை.

அப்துல் கலாம் அவர்கள் கடைசி புகைப்படம் - மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன்...
அப்துல் கலாம் அவர்கள் கடைசி புகைப்படம் – மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன்…

‘ஏகாதசி மரணம், துவாதசி தகனம்’ என்பது எல்லாருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பல்ல. அந்த வகையில் திரு.அப்துல் கலாம் அவர்கள் அந்த பரம்பொருளோடு இரண்டறக் கலந்துவிட்டார். மேலும் தனக்கு பிடித்ததொரு பணியை செய்துகொண்டிருக்கும்போதே (மாணவர்கள் மத்தியில் உரையாடும்போது) அவருடைய உயிர் பிரிந்துவிட்டது. இதுவும் எல்லாருக்கும் கிடைக்கக்கூடிய பேறு அல்ல.

அவர் மரித்துவிட்டதாக நாம் நினைக்கவில்லை. திருவள்ளுவர், விவேகானந்தர், மகாகவி பாரதி போன்றோர் மரித்துவிட்டார்களா என்ன? தேசப்பற்றும், தெய்வப் பற்றும், தன்னம்பிக்கையும் மிக்க ஒவ்வொரு இளைஞனின் இதயத்திலும் வாழ்கிறார்கள் அல்லவா? அது போல கலாம் அவர்களும் வாழ்வார். அவர் மறைவுக்கு கண்ணீர் சிந்துவதை விடுத்து, அவர் வழி நடக்க உறுதி ஏற்போம். இதுவே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.

வாழ்க பாரதம்! வளர்க கலாம் அவர்களின் புகழ்!!

ஜெய் ஹிந்த்!!!

(அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று கலாம் அவர்கள் தொடர்புடைய பதிவுகளே இடம்பெறும்!)

==================================================================

Also check from our archives:

கலாம் நினைத்தார்… கடவுள் முடித்தார்!  வியக்க வைக்கும் உண்மை சம்பவம்!!

“ஒரு நாள் நிச்சயம் விடியும்; அது உன்னால் மட்டுமே முடியும்!” – கலாம் காட்டும் வழி! ABDUL KALAM B’DAY SPL

“திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்!”

==================================================================

[END]

5 thoughts on “என்றும் வாழும் எங்கள் கலாம்!

  1. கலாம் அவர்கள் நம்மிடம் இல்லை என்ற செய்தி படிக்க படிக்க மனம் வேதனை அடைகிறது.. மிகவும் அதிர்ச்சியான செய்தியை கேள்விப் பட்டு நேற்று முழுவதும் தூங்காத இரவாக கழிந்தது.

    அவர் கண்ட கனவை நாம் நனவாக்குவோம்.

    அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது நம் எல்லோருக்கும் பெருமை. அவருடன் தாங்கள் உரையாடும் பேட்டி தங்கள் தளத்தில் வர வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் இருந்தேன். அந்த கனவு நிறைவேறாமல் போய் விட்டது. அவர் பேட்டி வந்திருந்தாள் நாம் மிகவும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று இருப்போம். கால தேவனிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது .

    அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஈசனை வேண்டுவோம் .

    //இருந்தாலும் மறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்/

    நன்றி
    உமா வெங்கட்

  2. திரு.கலாம் அவர்களின் கனவை நனவாக்குவதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை.

  3. As of me A Man Known as Abdul Kalam has Not Died.
    A God Know as Abdul Kalam Has Died.

    He is an Living God.

    An Royal Salute to the Great Legend and our People”s President to Dr. Abdul Kalam.

    Hereafter no body is to born and Live as Abdul Kalam.

    S. Narayanan.

  4. திரு. கலாம் அவர்கள் மறைந்த செய்தியை இன்னும் என்னால் தாங்க முடியவில்லை. இவ்வளவு சிக்கிரம் கடவுள் அவரை அழைத்து கொள்வர் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.
    அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

  5. இப்பொழுது வரை நீங்கள் இறந்த செய்தியை என்னால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகப்பெரிய தாக்கத்தை என் மனதில் மட்டுமல்ல, கோடான கோடி இந்திய இளைஞர்கள் மனதில் விட்டுச் சென்றுள்ளீர்கள். நீங்கள் மரிக்கவில்லை ஐயா. எங்களுக்குள் விதைக்கப்பட்டுள்ளீர்கள் ! உங்களின் “அக்னிச்சிறகுகள்” எங்களுக்குள்ளும் சிறகடித்துக் கொண்டிருக்கிறது, உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும்.

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”

    விஜய் ஆனந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *