சிலர் குறுக்கு வழிகளில் ஓடிப்போய் கீழே விழுகிறார்கள். கைகால்களை உடைத்துக் கொள்கிறார்கள். சிலர் மீள முடியாத பாதாளத்தில் விழுகிறார்கள்.
சிலர் நேர்வழிகளில் ஓடுகிறார்கள். இலக்கை அடைகிறார்கள்.
அவரவருக்கு இருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையை பொறுத்து வேகமாகவோ, மெதுவாகவோ ஓடுகிறார்கள். அதை பொறுத்தே அவர்கள் எவ்வளவு சீக்கிரம் அந்த இலக்கை அடைகிறார்கள் என்பதை தீர்மானிக்க முடிகிறது.
நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்…. நாம் மேலே ஏறுவது மட்டுமின்றி நம் வாசகர்கள் குறைந்தது ஒரு ஆயிரம் பேரையாவது மேலே ஏற்றுவதே நம் லட்சியம் என்பதை. || நம் கருத்துக்களை நடைமுறைப் படுத்தவேண்டும். || அது தான் ஒரே நிபந்தனை.
பணம் சம்பாதிக்க இந்த உலகில் எத்தனையோ வழிகள் இருக்கிறது. அது பலருக்கு தெரியும். ஆனால், அதை தக்கவைத்துக்கொள்ளவும், வினையற்ற செல்வமாக விருத்தி செய்யவும் தான் பலருக்கு தெரிவதில்லை. ஏனெனில், இவையெல்லாம் அனுபவப் பாடங்கள். ஏட்டில் கிடைக்காது.
“பணத்தை பெருக்குறதுல விருத்தி செய்யறதுல என்ன சூட்சுமம் வேண்டிக்கிடக்கு? ஒரு நல்ல இடத்துல ஃபிளாட்டோ, வீடோ, மனையோ இல்லே தங்கமாகவோ வாங்கிப் போட்டா அப்புறம் VALUE ஏறும் போது வித்தாப் போகுது…” என்று சிலர் நினைக்கலாம். அப்படி வாங்கிப் போட்டு அதை தேவைக்கு விற்க முடியாமல் பணமும் முடங்கிப்போய் அவஸ்தைபடுபவர்கள் பலரை நமக்கு தெரியும்.
* பணம் என்பது வெறும் காகிதமல்ல. அது எப்போதும் நினைவிருக்கட்டும்.*
பணத்தை ஆளவேண்டும் என்றால் பணம் குறித்த உங்கள் அணுகுமுறை மாறவேண்டும். அதுவரை கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் என்பது அரிது தான்.
நம்மில் பலருக்கு சில சமயம் பணத்தை விரும்பியோ விரும்பாமலோ ஒரு விஷயத்திற்கு செலவு செய்யவேண்டியிருக்கிறது. சிலருக்கு கொடுக்கவேண்டியிருக்கிறது. அது போன்ற தருணங்களில் முனகிக்கொண்டோ மூக்கால் அழுதுகொண்டோ பணத்தை கொடுக்கக்கூடாது. பணத்தை மகிழ்ச்சியுடன் கொடுக்கவேண்டும்.
“இந்த பணம் இவரது தேவைகளை நிறைவேற்றி இவருக்கு சந்தோஷத்தை கொடுக்கட்டும்… என்னிடம் பல்கி பெருகி வரட்டும்” என்று மனமார நினைத்துக்கொண்டு – நீங்கள் கொடுப்பது பத்து ரூபாயாக இருந்தால் கூட – கொடுத்துப் பாருங்கள்… பத்துக்கு நூறாக உங்களிடம் திரும்பி வரும். இது தான் பணத்தின் தன்மை.
ஒரு மிகப் பெரிய சூட்சும ரகசியத்தை சொல்கிறோம். அதுவும் இந்த பதிவுக்கு தொடர்புடையது உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதால் சொல்கிறோம். ஏதோ தற்பெருமை பேசுவதாக நினைத்துவிடக்கூடாது. ஒ.கே.?
இந்த எளிய காணிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும்…
இந்த தளம் சார்பாக நாம் செய்யும் அறப்பணிகளை நீங்கள் அறிவீர்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் நாம் நம் சக்திக்கு ஏற்றவாறு பல செய்துவருகிறோம். ஒரு சில உங்களுக்கு தெரியும். அவற்றில் ஒன்று மங்கள வாத்தியக் கலைஞர்களை எங்கு கண்டாலும் உதவுவது. அவர்களை பார்க்கும்போதெல்லாம் நம்மால் இயன்ற தொகையை கொடுப்பது வழக்கம். நீண்டநாட்களாக இதை செய்துவருகிறோம். அதுவும் முழு மனதுடன் மகிழ்ச்சியுடன். அவர்களிடம் கொடுக்கும்போது மரியாதையாக, “உங்கள் சேவைக்கு என்னால் முடிந்த இந்த எளிய காணிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று முகத்தில் புன்னகையை சிந்தியபடி தான் கொடுப்போம்.
எதிர்பாராமல் கிடைக்கும் இந்த சிறு தொகை அவர்கள் முகத்தில் வரவழைக்கும் அந்த நொடி மலர்ச்சி…. கொடுத்துப் பாருங்கள் புரியும்.
“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்” (குறள் 754) என்று சொன்னார் வள்ளுவர்.
அதையே நாம் சற்று திருத்தி,
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி தந்த பொருள்
என்று சொல்கிறோம்.
உண்மை தான். நேர்மையான வழியில் யார்க்கும் தீமை இல்லாமல் தகுதியுடையோர்க்கு கொடுத்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.
நாம் சற்று நகர்ந்திருப்போம். அவர்களில் ஒருவர் மற்றவரிடம் சொல்கிறார்… “தவில் வாடகைக்கு என்ன செய்றது… பணம் இல்லையேன்னு சொன்னியே… இப்போ பார்த்தியா சுவாமி தேடி வரவெச்சார்?”
மேற்கூறிய வார்த்தைகளை கேட்டவுடன் நமக்கு அத்தனை சந்தோஷம். எவ்ளோ பெரிய தொண்டுக்கு ஈசன் நம்மை கருவியாக்கியிருக்கிறான்… அகமும் புறமும் குளிர்ந்தது. நாம் திரும்பிப் பார்த்தால் அவர்கள் சங்கோஜப்படுவார்கள் என்பதால் திரும்பி கூட பார்க்காமல் அங்கிருந்து அகன்றோம்.
நாம் நல்லெண்ணத்துடன் கொடுக்கும் ஒரு தொகை, சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி உதவுகிறது பார்த்தீர்களா? சரியான நேரத்தில் சரியானவர்களுக்கு கொடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததில் ரொம்ப சந்தோஷப்பட்டோம்.
இவர்களை போன்றவர்களுக்கு நாம் உதவி செய்வதை ஒரு போதும் சுமையாகவோ நிர்பந்தமாகவோ கடினமாகவோ கருதியதில்லை. நமது சூழல் அப்போது எப்படி இருந்தாலும் “ஆஹா… நல்லதொரு கைகளுக்கு போக நம்மிடமுள்ள பணத்திற்கு வாய்ப்பு கிடைத்ததே” என்ற எண்ணமே எழும்.
========================================================
Similar articles…
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!
புல்லுக்கு இறைக்கும் நீரை கொஞ்சம் நெல்லுக்கும் இறைக்கலாமே?
========================================================
மேற்படி சம்பவம் நடந்த அன்று அலுவலகத்துக்கு வந்து ஏதோ பதிவை தயார் செய்துகொண்டிருந்தோம்.
அன்று மாலை கோடம்பாக்கத்தை சேர்ந்த நம் தள வாசகர்கள் திரு.கார்த்திகேயன் மற்றும் திருமதி.சுபாஷினி கார்த்திகேயன் தம்பதியினர் (நமது நூல் வெளியீட்டு விழாவிற்கு கூட இவர்கள் வந்திருந்தனர்) நம்மை தொடர்பு கொண்டு நம்மை சந்திக்க விரும்புவதாகவும் அலுவலகத்தில் நாம் இருக்கிறோமா என்றும் விசாரித்தனர். நாம் வரச்சொன்னோம்.
சொன்னபடி வந்த தம்பதியினர் நம்மிடம் தளம் குறித்தும் நமது பணிகள் குறித்தும் வேறு பல விஷயங்கள் குறித்தும் பேசினர். நமது வாசகர்களுடன் பேசுவதைவிட நமக்கு மகிழ்ச்சியான ஒன்று வேறு இருக்கமுடியுமா என்ன?
சுமார் அரைமணி நேரம் கழித்து புறப்படும் போது நாம் எதிர்பார்க்காத வகையில் அவர்களால் இயன்ற தொகையை விருப்ப சந்தாவாக நம்மிடம் கொடுத்துவிட்டு “எங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் உதவுகிறோம் சுந்தர் சார்” என்று கூறிவிட்டு வாழ்த்திவிட்டு சென்றனர்.
காலை நாம் மங்கள வாத்தியக் கலைஞர்களிடம் கொடுத்ததற்கு மாலை ஐந்து மடங்கு நம்மிடம் வந்துவிட்டது. அது தான் பணகாந்த விதி என்பது.
இதை பலமுறை உணர்ந்திருக்கிறோம். ஆனால் அதற்காக காலை தர்மம் செய்துவிட்டு மாலை அலுவலகத்துக்கு யாராவது வருகிறார்களா அல்லது நமக்கு கணக்கில் யாராவது பணம் போடுகிறார்களா என்றெல்லாம் பார்க்கும் வழக்கம் நமக்கு கிடையாது. அதன் பெயர் தர்மம் அல்ல பேரம். என்ன சொல்ல வருகிறோம் என்றால் மனமுவந்து தகுதியுடையோருக்கு உதவி செய்தால் அந்தப் பணம் ஏதோ ஒரு ரூபத்தில் பன்மடங்கு திரும்ப நம்மிடம் வந்துவிடும்.
* மகிழ்ச்சியுடன் ஒருவருக்கு (பெரும்பாலும் தகுதியுடையவர்களுக்கு) நீங்கள் பணத்தை கொடுக்கும்போது, அது பன்மடங்கு திரும்ப வரும். பணகாந்த விதிகளுள் இது மிக முக்கியமான ஒன்று இது. அதாவது பணத்தை மகிழ்ச்சியுடன் மனநிறைவுடன் கொடுப்பது.*
நண்பர்கள் சிலர் உங்களிடம் அடிக்கடி கடன் கேட்பார்கள். கொடுப்பதோ மறுப்பதோ உங்கள் உரிமை. உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கும் நட்பின் ஆழம், அப்போதைய உங்கள் சூழ்நிலை மற்றும் உங்களுக்கு இடையேயான புரிதலைப் பொருத்தது அது.
ஒருவேளை மறுக்க முடியாமல் கொடுத்தே தீரவேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் கொடுக்க வேண்டியிருந்தால்….
“இது எங்கே வரப்போகுது… காந்தி கணக்கு தான்”
“கேட்குறான்… கொடுத்து தொலையவேண்டியிருக்கே என்ன செய்றது?”
“இந்த பணத்தை மறந்துடவேண்டியது தான்”
இப்படியெல்லாம் நினைத்தபடி கொடுக்கக்கூடாது. அப்படி கொடுத்தால் அந்தப் பணம் உங்களுக்கு வரவே வராது. அவர்களுக்கும் அது சரியாக பயன்படாமல் போகக்கூடும்.
அதற்கு பதில், “இந்த பணம் இவர்களின் தேவையை பூர்த்தி செய்யட்டும். எனக்கும் திரும்ப கிடைக்கட்டும்” என்று மனதுக்குள் வாழ்த்தியபடி கொடுத்துப் பாருங்கள்… அந்த பணம் எப்படியோ உங்களிடம் திரும்ப வந்துவிடும். பன்மடங்கு.
* பணப்பரிமாற்றங்களில் எதிர்மறை சிந்தனை கூடவே கூடாது.*
சரி… நமது பணிகளை பார்த்து நம்மை தேடி வந்து நாம் கேட்காமல் பணத்தை கொடுத்த கார்த்திகேயன் தம்பதியினருக்கு நிச்சயம் பலன் கிடைத்திருக்குமே? அது என்ன?? அதை அவர்களே விரைவில் சொல்வார்கள்.
அதற்கு முன்பாக வேறு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறோம்.
அடுத்த அத்தியாயத்தில் தொடரும்…
========================================================
- இந்த தொடரின் 4ஆம் பாகம் மிக முக்கியமான ஒன்று. படிக்காதவர்கள் தயவு செய்து படிக்கவும். கீழே சுட்டி அளிக்கப்பட்டுள்ளது.
========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
========================================================
Also check previous chapters….
அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா? – பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 4
பணத்தை ஈர்க்கலாம் வாருங்கள் – பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 3
அள்ளித் தரும் இந்த வங்கியிடம் பெற்றுக்கொள்ளத் தயாரா? பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 2 –
அடிப்படை பணகாந்த விதிகள் – பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 1 –
========================================================
தொடர்புடைய பதிவுகள் :
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ
காலடியில் ஒரு வைரச் சுரங்கம் – கண்ணுக்கு தெரிகிறதா?
சாப்பாட்டுக்காக க்யூவில் நின்ற அதே இடத்திற்கு பின்னாளில் கோடீஸ்வரராக நுழைந்த ஒருவர் கதை!
மலையை பிளந்த ஒற்றை மனிதன் – ‘முடியாது’ என்கிற வார்த்தையை இனி நாம் சொல்லலாமா?
நீங்க எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் இலக்கு என்ன?
விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!
மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்?
உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!
அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
========================================================
[END]
பண காந்த விதிகள் பதிவு மிகவும் அமர்க்களமாக உள்ளது. நாம் அடுத்தவர்களுக்கு செய்யும் உதவியை மனம் உவந்து செய்தால் கண்டிப்பாக அவர்களும் பயன் அடைவார்கள் நாமும் பயன் அடைவோம் . ஒருவருக்கு உதவி செய்வதன் மூலம் கடவுள் நமக்கு ஓர் அறிய சந்தர்பத்தை அளித்து உள்ளார் என சந்தோசப் படவேண்டும்
இந்த மாதம் நம் தளம் சந்தா செலுத்த கொஞ்சம் delay ஆகி விட்டது.நான் தங்களுக்கு போன வாரம் சந்தா transfer பண்ணி 1 மணி நேரத்தில் எனக்கு அதைவிட அதிகமாக நான் எதிர்பார்க்காத ஒரு பணம் என் அக்கௌன்ட்ற்கு transfer ஆனது மிகவும் மகிழ்ச்சியுடன் இதை பகிர்கிறேன்
தாங்கள் நாதஸ்வர கலைஞர்களுக்கு செய்யும் தொண்டு அளப்பற்கரியது. சுவாமி படங்கள் கண்ணை கவர்கிறது. மேலும் தங்கள் இலட்ச்சியம் நிறைவேற வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
பணத்தின் தன்மை குறித்த அற்புதமான பதிவு. உண்மையில் பல முறை நானே உணர்ந்திருக்கிறேன்.
நல்ல விஷயங்களுக்கு செய்யும் செலவானது என்னை பொருத்தவரை புண்ணியத்தைத் தருவதோடு பன்மடங்கு திரும்ப கிடைத்துவிடுகிறது.
உங்களாது அனுபவத்தோடு அதை படிக்கும்போது அந்த உண்மைக்கு மேலும் ஒரு அத்தாட்சி கிடைத்துவிடுகிறது.
ரைட்மந்த்ராவை படிப்பதே புண்ணியம் தான் எனும்போது அதற்கு உதவிடுவது எத்தனை பெரிய புண்ணியம் என்பதை நான் அறிவேன். உங்களது பணிக்கு கடுகளவாவது உதவ முடிவதில் மகிழ்ச்சி.
இந்தப் தொடரை புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
வாழ்க வளமுடன் நலமுடன்
– பிரேமலதா மணிகண்டன்
சுந்தர் சார்,
அருமையான பதிவு. நீண்ட நாட்களுக்கு பின் ரைட் மந்தரவில் பதிவுகளை படிகின்றேன். இந்த தொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
நன்றி