Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, February 24, 2024
Please specify the group
Home > Featured > பாசமுள்ள பார்வையிலே ‘கடவுள்’ வாழ்கிறான்… சரித்திரம் கூறும் உண்மை நிகழ்வு!

பாசமுள்ள பார்வையிலே ‘கடவுள்’ வாழ்கிறான்… சரித்திரம் கூறும் உண்மை நிகழ்வு!

print
லய தரிசனமும், விரதமும், வழிபாடும் ‘ஆன்மிகம்’ என்னும் ஆலமரத்தில் ஒரு சிறு கிளை. அவ்வளவே. அது ஒன்றே ஆன்மீகம் ஆகிவிடாது. இறையருளையும் பெற்றுத் தராது. இறைவனை தேடி நாம் போகாமல் இறைவனை நம்மை தேடி வரச் செய்யவேண்டும். அது தான் ஆன்மிகம்.

போகிற போக்கில் மனதில் இருக்கும் சிறு ஈரத்தால் நாம் செய்யும் ஒரு செயல், இறைவனை நம் பக்கம் ஈர்த்து நமது வாழ்க்கையையே மாற்றிவிடும். இதை நாம் பலமுறை உணர்ந்திருக்கிறோம். நமது வாழக்கையிலேயே நடந்திருக்கிறது.

perambakkam narasimmar temple

வாழ்க்கையில் வெற்றிக்கு அளவுகோலாக மற்றவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியாது. ஆனால் நம்மைப் பொறுத்தவரை அது முற்றிலும் வேறு. அதற்கான பாதையில் பயணிக்க துவங்கி ஒரு சில படிகள் ஏறத் துவங்கியிருக்கிறோம். அதுவரை தெரியும்.

மனதுக்கு பிடித்ததை செய்வதே ஒரு வித வெற்றி தான். நம்மில் பலர் பிடிக்காத பணியை, குடும்ப சூழ்நிலை மற்றும் நிர்பந்தங்களுக்காக செய்துகொண்டிருப்போம். ஆனால் நம்மைப் பொறுத்தவரை மனதுக்கு பிடித்ததை செய்துகொண்டிருக்கிறோம்.

நமது பயணத்தில் சிரமங்களும் சவால்களும் நிறைய உள்ளது. இருப்பினும் இஷ்டப்பட்டு கஷ்டப்படுவதால் கஷ்டங்கள் ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை. சிங்கத்தின் வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாய் இருப்பதில் உள்ள வித்தியாசம், சிங்கத்தின் வாலாக இருப்பவர்களுக்கே தெரியும்.

இன்றும் எமக்காக எமது முன்னேற்றத்துக்காக கனவுகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை இந்த தளத்தை நாம் துவக்கி நடத்தவில்லை என்றால் இப்போது என்ன செய்துகொண்டிருப்போம் என்பதை நினைத்து பார்க்கவே திகிலாக இருக்கிறது.

இது சாதாரண விஷயம் அல்ல.

இது எப்படி சாத்தியப்பட்டது தெரியுமா?

தாசி வீட்டுக்கு பலர் சென்றாலும் அருணகிரிநாதருக்குத் தான் திருவருள் பொழிந்து திருப்புகழ் பாடும் வரம் கிடைத்தது.

எனவே தவறு செய்யும் அனைவரையுமே இறைவன் தடுத்தாட்கொண்டு விடுவதில்லை. ஒரு சிலர் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் ஒரு சிறு புண்ணியம்  அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

வெட்டிப் பொழுது போக்கிக்கொண்டு நிர்பந்தத்தின் காரணமாக பணிக்கு போய்க்கொண்டிருந்த நமக்கு இது சாத்தியப்பட்டது (இந்த தளம்) எப்படி??

சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்தது இது. சென்னையில் ஒரு நிறுவனத்தில் நாம் டிசைன் சூப்பர்வைசராக பணியாற்றிக்கொண்டிருந்தோம்.

நாம் ஒன்றை எதிர்பார்த்து வேலைக்கு சேர்ந்தால், அங்கே நமக்கு நிகழ்ந்தது வேறு ஒன்று. எப்போது பார்த்தாலும் புறம் பேசித்திரியும் சக ஊழியர்கள். தகுதிக்கு குறைவான சம்பளம். வேலை பிடிக்காமல் வேறு இடங்களில் முயற்சி செய்தோம். ஒரு சில இடங்களில் இண்டர்வியூவுக்கு அழைப்பு வந்தது. ஏதாவது காரணம் சொல்லி இண்டர்வ்யூ சென்று வரலாம் என்றால் பர்மிஷன் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. வேலையை விட்டுவிட்டு வேலை தேடலாம் என்றால் அதற்கும் வழியில்லை. வீட்டு வாடகை முதல் அனைத்தும் நம் தலையில் நம்மை நம்பி. ஒரு நாள் வேலைக்கு லீவ் போட்டாலே சம்பளம் பிடித்துவிடுவார்கள்.

தட்டுத் தடுமாறி பணிக்கு சென்றுகொண்டிருந்தோம். அந்த காலகட்டங்களில் ஒரு சிறு டைவர்ஷனுக்காக நாம் ஒதுங்கிய இடம் பிற்பாடு இருக்கும் நிம்மதியையும் பறித்தது தனிக்கதை.

போராட்டமே வாழ்க்கை என்று ஒவ்வொரு நாளும் கழிந்தது.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் நாம் அலுவலகம் செல்லும் வழியில், வள்ளுவர் கோட்டம் அருகே, கால்நடை மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே ஒரு வயதான மூதாட்டி கிட்டத்தட்ட 90 வயதுக்கு மேலிருக்கும் சாலையோரம் படுத்துக்கிடந்தார். ஆதரவற்றவர் என்பது பார்த்தாலே புரிந்தது.

destitute woman
Not actual image – used for illustrative purpose only

ஒவ்வொரு நாளும் அலுவலகம் கடந்து செல்லும்போதும், சாலையோரம் படுத்துக்கிடக்கும் அவரை பார்த்து ‘உச்’கொட்டியபடியே செல்வோம். வேறு எதுவும் செய்யமுடியாத, செய்யதெரியாத ஒரு கையறு நிலை.

ஒரு நாள்  நண்பகல் 11.00 இருக்கும். ஏதோ காரணத்தினால் அலுவலகத்திற்கு லேட். சென்னை வெயில் கேட்கவேண்டுமா? அடி கொளுத்துகிறது.

வழக்கம்போல அந்த மூதாட்டி படுத்துக்கிடந்த இடத்தை பார்த்தோம். நல்ல உச்சி வெயிலில் படுத்துக்கிடந்தார். வெயில் தாங்கமுடியாமல் அவர் கஷ்டப்படுகிறார் என்பது பார்த்தபோதே புரிந்தது. அவரால் சுயமாக எழுந்து நிச்சயம் இடம் மாற முடியாது.

கடந்து செல்லும்போது மனம் வலித்தது. முதுமை இத்தனை கொடுமையானதா? “இறைவா… என்னையெல்லாம் சரியான நேரத்திற்கு கொண்டுபோய்விடு”

அந்த மூதாட்டி வெயிலில் படுத்துப் புரண்டுகொண்டிருந்தது மனதை என்னவோ செய்தது.

ஏதாவது செய்யனுமே… என்ன செய்வது?

சில முதியோர் இல்லங்களுக்கும் தொண்டு நிறுவனத்துக்கும் ஃபோன் செய்தோம்.

பலரின் சாயம் வெளுத்தது தான் மிச்சம்.

எவரும் அவரை RESCUE செய்வதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. (சும்மா ஒப்புக்கு நான்கைந்து முதியோர்களை வைத்துக்கொண்டு அவர்களை வைத்து இவர்கள் நன்கொடை வசூலித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது பிறகு தான் புரிந்தது.)

=======================================================

Don’t miss this….

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இயற்பியல் விதிகள் தெரியும், உலகியல் விதிகள் தெரியுமா? MON MORNING SPL 57

=======================================================

வேறு சில இடங்களுக்கு போன் செய்தபோது, “அதெல்லாம் போலீஸ் பார்த்துக்கொள்வார்கள்” என்று கூலாக பதில் சொன்னார்கள்.

சுமார் ஒரு மணிநேரம் சென்றிருக்கும். நம்முடன் பணிபுரிந்துகொண்டிருந்த சக ஊழியரிடம் விஷயத்தை விளக்கி, “அந்தம்மாவை கொஞ்சம் ஓரமா நிழல்லயாவது படுக்க வெச்சிட்டு வரலாம் வர்றீங்களா… மனசு கேட்கலை” என்றோம்.

நமது அலுவலகம் நுங்கம்பாக்கத்தில் என்பதால், கால்நடை பேருந்து நிறுத்தம் தூரம் அதிகமில்லை. உடனே பைக்கில் இருவரும் விரைந்தோம். அந்த மூதாட்டியை அவர் படுத்திருந்த அந்த போர்வையோடு அப்படியே அலேக்காக தூக்கி பேருந்து நிறுத்தம் அருகே நல்ல நிழல் இருந்த இடமாக பார்த்து அவரை படுக்கவைத்தோம்.

அங்கே நின்றுகொண்டிருந்தவர்களுக்கு ஒரு நிமிடம் நாங்கள் என்ன செய்கிறோம் என்று புரியவில்லை.

புது இடத்திற்கு வெயில் வருமா? இந்த இடத்தில் மூதாட்டி கம்ஃபர்டபிளாக இருக்கிறாரா என்பதையெல்லாம் பார்த்த பின்னரே அங்கிருந்து புறப்பட்டோம். புறப்படும்போது அவரை பார்த்தோம். கையெடுத்து நன்றி கூற விரும்புகிறார். ஆனால் முடியவில்லை. எனவே அரைகுறை பார்வை இருந்த அந்த கண்களால் நன்றி சொன்னார்.

அலுவலகத்துக்கு வந்தோம். ஏதோ மிகப் பெரிய வழிபாடு ஒன்றை செய்தது போன்ற மனநிறைவு. அப்போதெல்லாம் எந்த தெய்வத்தின் மீதும் பிடிப்பு கிடையாது. சும்மா ஒப்புக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. அன்று இரவு நம்மை தொடர்பு கொண்ட ஈரா என்னும் நண்பரிடம் மட்டும் விஷயத்தை சொன்னோம். “நல்ல விஷயம் செஞ்சீங்க சுந்தர்” என்றார். அவ்வளவு தான். அதற்கு பிறகு இதை வேறு யாரிடமும் பகிர்ந்ததில்லை.

அந்த மூதாட்டியை அதற்கு பிறகு அந்த பகுதியில் பார்க்க முடியவில்லை. அவர் சில நாட்களில் இறந்துவிட்டதாக சொன்னார்கள்.

இதுவரை நாம் செய்ததிலேயே மிகப் பெரிய தொண்டாக இதைத் தான் கருதுகிறோம். நமது வாழ்க்கை மாறத் துவங்கியது இதற்கு பிறகு தான். அதுவரை எங்கோ துடுப்பிழந்த படகு போலத் தான் தத்தளித்துக்கொண்டிருந்தோம். அதன் பிறகு பல்வேறு சோதனைகள். போராட்டங்கள். இறுதியில் ஒரு கோவிலுக்கு வந்து சேர்ந்துவிட்டோம். எது இருக்கிறதோ இல்லையோ நிம்மதி இருக்கிறது. நமக்கென்று ஒரு வட்டம். நம் மீதும் நமது நலத்தின் மீது அக்கறை காட்டும் நண்பர்கள், வாசகர்கள், நமக்காக பிரார்த்திக்கும் சில நல்லுள்ளங்கள். இதைவிட ஒரு மனிதன் வேறு என்ன பெரிதாக சம்பாதித்துவிட முடியும்? இது எத்தனை பெரிய வரம் தெரியுமா?

இந்தப் புகைப்படம் இந்த பதிவில் ஏன் இடம் பெற்றது தெரியுமா? இதுவும் a small act of kindness தான். அக்டோபர் மாதம் நண்பருடன் காரில் பேரம்பாக்கம் சென்றபோது குறுகலான சாலையின் குறுக்கே இந்த ஆடு, குட்டிகளுக்கு பாலூட்டி கொண்டிருந்தது. அதை ஹாரன் அடித்து டிஸ்டர்ப் செய்யாமல் சற்று பொறுத்திருந்து வண்டியை லாவகமாக நகர்த்திச் சென்றோம்.

எதற்கு இதை சொல்கிறோம் என்றால் ஆண்டுக் கணக்கில் விரதமிருந்து, பூஜை புனஸ்காரங்கள் செய்து பெற முடியாத இறைவனின் கவனத்தை இதயத்தின் ஓரம் ஈரம் கசிந்து போகிற போக்கில் நாம் செய்யும் சிறு செயல்கள் வெகு சுலபமாக ஈர்த்துவிடுகின்றன.

நாம் புண்ணியத்தை எதிர்பார்த்தோ, பலனை எதிர்பார்த்தோ இதை செய்வதில்லை. ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறு நல்ல விஷயத்தை இந்த உலகிற்கு செய்வோம், இறைவன் கொடுத்த இந்த பிறவிக்கு ஒரு அர்த்தம் இருக்கட்டும் என்று கருதி தான் செய்கிறோம்.

நம்பி சாப்பிட்டாலும் நம்பாமல் சாப்பிட்டாலும் மருந்து அதன் வேலையை காட்டத் தானே செய்கிறது?

இப்படிப்பட்ட செயல்கள் பன்மடங்கு பிற்காலத்தில் நமக்கு நற்பலன்களை அறுவடை செய்ய வல்லவை. இந்த பிரபஞ்சம் அப்படி ஒரு சக்தி மிக்கது.

சரித்திரத்தில் இதற்கு அனேக உதாரணங்கள் இருக்கின்றன.

ஒன்றை பார்ப்போம்.

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…

போஸ்னியாவில் உள்நாட்டு போர் நடந்த சமயம். பல ஊர்கள் குண்டு வீச்சால் அழிந்தன.

மக்கள் அச்சத்தில் ஒளிந்து ஒளிந்து வாழ்ந்தனர். பிடிப்பட்டால் உயிருக்கோ உடமைக்கோ உத்திரவாதமில்லை.

அவர்கள் ஒரு இளம் தம்பதியினர். அவர்களில் கணவன் போரில் குண்டுவீச்சால் கொல்லப்பட்டுவிட, மனைவிக்கு விஷயம் தெரிந்து, இறுதியாக ஆசைக் கணவனின் முகத்தை ஒரு முறையாவது பார்க்கவேண்டும் என்று கருதி ஊருக்கு வருகிறாள்.

kindness quote

கணவனின் உடலில் இருந்த ஆடைகள் தீய்ந்து போயிருந்ததை பார்த்து கண்கலங்கி, அவன் உடல் மீது போர்த்த ஒரு போர்வையையாவது வீட்டுக்குள் சென்று எடுத்து வரலாம் என்று கருதி வீட்டுக்குள் நுழைகிறாள்.

போர்வையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வரும் நேரம் தான் ஆசையுடன் வளர்த்து வந்த தங்க மீன்கள் தொட்டியில் ஆகாரமின்றி வாடுவதைக் கண்டாள். இரக்கம் கொண்டு, அவற்றைக் தொட்டியோடு எடுத்து கிணற்றில் கொட்டிவிட்டு அவசர அவசரமாக ஓடிவிட்டாள்.

சில காலம் கழித்துப் போர் முடிந்தது. போரில் சீர்குலைந்த கிராமத்தில் புனரமைப்பு பணிகள் ஐ.நா.வால் மேற்கொள்ளப்பட்டன. எனவே அனைவரும் ஊர் திரும்பி வந்தனர்.

ஆனால் இப்போது அனைவரும் ஒன்றுமில்லாத ஏழைகள். தங்கள் உடைமைகளையும் சொத்துக்களையும் துறந்து எங்கோ அகதிகளாக வாழ்ந்தவர்கள்.

இந்தப் பெண்ணின் வீடும் மற்ற உடைமைகளும் முற்றிலும் பறிபோயிருந்தன. ஆனால் அவள் கிணற்றில் விட்ட தங்க மீன்கள் பல்கிப் பெருகிக் கிணற்றையே நிறைத்திருந்தன. அந்த அலங்கார மீன்களை கொஞ்சம் கொஞ்சமாக நகருக்கு எடுத்துச் சென்று விற்று, அவள் நிறையப் பணம் பெற்றாள். தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் பெரும் உதவி செய்தாள். தனது வீட்டையும் கட்டினாள். கணவனுக்கு ஒரு நினைவுச் சின்னத்தையும் எழுப்பினாள்.

இதயத்தின் ஓரம் கசிந்த ஈரத்தினால் போகிற போக்கில் அவள் செய்த அந்த சிறு செயல் எப்படியொரு நற்பலனை தந்தது பார்த்தீர்களா?

அடுத்த முறை இப்படியொரு சந்தர்ப்பம் எந்த சூழ்நிலையிலாவது உங்களுக்கு கிடைத்தால் நழுவ விடாதீர்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடிய சூத்திரம் அதனுள் ஒளிந்திருக்கக்கூடும்.

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் – அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்!

=======================================================

ஒரு படைப்பாளியின் உண்மையான வெற்றி எது?

எது ஒன்று சுலபமாக கிடைக்கிறதோ அதன் அருமையை எவரும் உணர்வதில்லை என்று சொல்வார்கள். நம் தளம் வணிக ரீதியாக இயங்குவதல்ல என்பது உங்களுக்கு தெரியும். வாசகர்களுக்கு எந்த நிர்பந்தத்தையும் அளிக்காமல் அவர்கள் மனமுவந்து அளிக்கும் ‘விருப்ப சந்தா’ அல்லது நிதியின் அடிப்படையில் தான் – ஒரு தனி அலுவலகம் அமைத்து – இந்த தளம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வீட்டுக்கு ஏற்படும் செலவைப் போல ஒவ்வொரு மாதமும் தளத்திற்கும் பல செலவுகள் இருக்கின்றன. வசதியும் ஓரளவு வருவாயும் உள்ள பலர் இது பற்றி யோசிக்கக் கூட மனமில்லாமல் நமது பதிவுகளை ஆண்டுக் கணக்கில் படித்து வருவது வேதனை அளிக்கிறது.

ஒரு சிலர் தங்களுக்கு புண்ணியம் சேர்க்க மட்டுமே நம்மிடம் வருகிறார்கள். பிறகு கறிவேப்பில்லையாக நம்மை வீசிவிட்டு போய்விடுகிறார்கள். இந்த தளம் எப்படி நடக்கிறது என்பது தெரிந்தும்.

யாரையும் நாம் நிர்பந்தப்படுத்துவதாக கருதி நம்மையும் நமது பணிகளையும் சிறுமைப்படுத்திவிடவேண்டம். இந்த தளத்திற்காக கேட்பதற்கு நமக்கு தகுதியோ உங்களுக்கு கொடுப்பதற்கு அவசியமோ இல்லை என்று நீங்கள் கருதினால் விட்டுவிடுங்கள். மன்னித்துவிடுங்கள்.

இருப்பவர்கள் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு உதவினால் தான் இல்லாதவர்களுக்கும் இந்த தளத்தை தொடர்ந்து கொண்டு போய் சேர்க்க முடியும். நமக்கு தெரிந்து ஒரு வாசகி, நான்கைந்து  கடைகளுக்கு சென்று கணக்கெழுதி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். அவரைப் போன்றவர்களிடம் எல்லாம் ஒரு ரூபாய் கூட நாம் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தளத்தை படித்தாலே போதுமானது.

இன்னும் சிலர் ‘உங்களுக்கு பெரிசா செய்யனும்னு நினைச்சிக்கிட்டுருக்கேன்’ என்று சொன்னார்கள். பல மாதங்கள் உருண்டோடியது தான் மிச்சம். இன்னும் செய்யப்போகிறார்கள். நம்மை பக்குவப்படுத்தியதற்குதான் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
– மகாகவி பாரதி

================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

============================================================

மரணத்தின் விளிம்பில் காப்பாற்றப்பட்ட சில ஜீவன்கள்! – நெகிழ வைக்கும் நிகழ்வு!!

யுக புருஷனை தரிசித்து பாவங்களை தொலைத்தேன்! சிலிர்க்க வைக்கும் ஒரு சந்திப்பு!!

தொலைந்த வாழ்க்கை நிமிடங்களில் மீண்ட அதிசயம் — “இதோ எந்தன் தெய்வம்” 

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி…

சூளைக்குள் சிக்கிய பூனைக்குட்டிகள் – பாண்டுரங்கன் புரிந்த அதிசயம்! கிருஷ்ண ஜெயந்தி SPL

நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்!

============================================================

[END]

7 thoughts on “பாசமுள்ள பார்வையிலே ‘கடவுள்’ வாழ்கிறான்… சரித்திரம் கூறும் உண்மை நிகழ்வு!

 1. இந்தப் பதிவை படித்த பின்னர் கடவுள் நம்மைத் தேடி வர இதுவரை நாம் என்ன செய்திருக்கிறோம் என்ற கேள்வி மனதில் எழுகிறது

  கருணையுள்ள இடத்தில் இறைவன் வாழ்கிறான் என்பது உண்மையே

  கடவுள் ஒருநாள் நம்மையும் தேடி வருவாா் என நம்புகிறோம் அதற்கான முயற்சியை நிச்சயம் செய்வோம்

 2. பல பேர் ஆன்மீக ஈடுபாடு என்று நினைப்பது வெறுமே கோவிலுக்கு போவது அல்லது கடவுளை வணங்குவது. கடவுளின் படைப்புகள் மீது அன்பு செலுத்துவதும் நம்மால் இயன்ற உதவிகளை செய்வதுமே ஆன்மிகம் ஆகும். இறைவன் நம் அனைவரின் உள்ளதில் அன்பே உருவாக இருக்கிறான். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. மனதிற்க்கு பிடித்த வேலை செய்யும் போது வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் தன்னம்பிக்கையும் ஏற்படும்.வேலையில் திருப்பயும் நமக்காக நாலு நல்லவர்கள் இருக்கும்போது ஏன் கடவுள் கூட இருப்பது பலம் வரும். நான் அனுபவத்தில் கண்டது. என் சொந்த பந்தங்களாலேயே ஏமாற்றப் பட்டு குடும்ப சூழ்நிலையால் நல்ல வேலையை இழந்து தவித்தும் நான் அதை கடவுள் கொடுத்த தண்டனையாக ஏற்கவில்லை மாறாக உள்ளிருக்கும் திறமையை கட — வுள் வெளிப்பட வைத்த வாய்ப்பாக கருதுகிறேன். அவர் அன்பே வடிவமாகி எங்களுக்கு வழி காட்டுவார்.

  தாங்களும் நானும் கடந்து வந்த பாதை முட்கள் நிறைந்த பதையாக இருக்கல்லாம் ஆனால் இறைவன் நம் பாதையை செப்பனிட்டு மலர் பாதையாக மாற்றி நமக்கு வழி காட்டுவான். உங்கள் அனுபவத்தில் வடித்த வரிகள் கண்ணில் நீரை வர வழைத்தது. கமெண்ட் செய்த நேரத்தை பார்த்தால் நான் இருக்கும் மன நிலை புரியும். நண்பருக்கு வாழ்த்துக்கள்.

 3. கண்கள் கண்ணீரால் நனைகிறது..சரித்திரத்தில் உங்களுடன் பயணிக்கிறோம் என்பதே மனம் நிறைவு அடைகிறது

 4. மனதை நெகிழச் செய்த பதிவு. தாங்கள் செய்த புண்ணியத்தினால் தான் , தளத்திற்கு என ஒரு அலுவலகம் ஆரம்பித்து ரைட் மந்த்ரா சுந்தர் என்றால் எல்லோருக்கும் தெரியும் அளவிற்கு முன்னேறி இருக்கிறீர்கள். தளம் ஆரம்பித்து ஒரு வருடம் வெற்றிகரமாக முடியப்போகிறது. தாங்கள் தானும் உயர்ந்து அடுத்தவர்கள் புண்ணியங்களை செய்வதற்கு ஒரு தூண்டுகோல் ஆக உள்ளீர்கள். தாங்கள் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் தங்களுடன் ஆன பயணம் எங்களுக்கும் நல்வழி காட்டும் எங்களால் முடிந்த உதவி கண்டிப்பாக செய்யப் படும்
  வாழ்க வளமுடன்
  நன்றி
  உமா வெங்கட்

 5. கண்கலங்கவைத்துவிட்டீர்கள். பலன் கருதாமல் அந்த பாட்டிக்கு நீங்கள செய்த அந்த சிறு உதவி உண்மையில் உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்துவிட்டது.

  அருணகிரிநாதர் குறித்த உவமையும் உதாரணமும் அற்புதம். இவாறு சிந்தித்து எழுத உங்களால் தான் முடியும். வாழ்த்துக்கள்.

  உங்களது வார்த்தைகளை பின்பற்றி செல்கிறோம். நிச்சயம் நல்லதே நடக்கும்.

  பேரம்பாக்கம் நரசிம்மர் கோவில் கோபுரம், ஆட்டுக்குட்டிகள் தாயிடம் பாலருந்தும் காட்சி, தங்க மீன்கள் குளத்தில் விளையாடும் காட்சி அதற்கு ஏற்றார்போல பொன்மொழி என இந்த பதிவே நெஞ்சுக்கும் நிம்மதியும் ஆறுதலும் தேறுதலும் அளிக்கும் ஒன்று என்றால் மிகையாகாது.

  – பிரேமலதா மணிகண்டன்,
  மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *