நம்முடைய ஒரே குறிக்கோள், இந்த தளத்தை முதன்மையான ஆன்மீக சுயமுன்னேற்ற தளமாக கொண்டு வரவேண்டும், பலரது வாழ்க்கையை செம்மைப்படுத்த வேண்டும் என்பது தான். இந்த உலகில் பக்தியும் அறமும் தழைக்கவும், மனங்கள் பக்குவப்படவும், வாழ்வு செழிக்கவும் உதவும் ஒரு கருவியாக நம் தளம் இருக்கவேண்டும் என்பதே நம் லட்சியம். எனவே பதிவுகளை அளிப்பதில் மட்டுமே நமது கவனம் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஒருபோதும் செலவினங்களை சமாளிப்பது பற்றிய சிந்தனை நமக்கு வரவேக்கூடாது. ஆனால் அது வாசகர்களாகிய உங்கள் கைகளில் தான் இருக்கிறது.
ஒரு நல்ல ஓட்டுனரின் கவனம் முழுமையும் சாலையில் வாகனத்தை பாதுகாப்பாக செலுத்தி, உரிய இடத்தில் அனைவரையும் கொண்டு போய் சேர்ப்பதில் மட்டுமே இருக்கவேண்டுமே தவிர எரிபொருள் பற்றியோ அல்லது இதர தேவைகளை பற்றியோ சிந்திக்கக் கூடாது. அது போல இந்த தளத்தை மேன்மேலும் சிறப்பாக கொண்டு செல்வதை பற்றி மட்டுமே நாம் கவனம் செலுத்த விரும்புகிறோம்.
பணத்தின் பின்னே ஒரு போதும் அடியேன் ஓடும் நிலை வரக்கூடாது. ஆகையால் தான் நம் அலுவலகம் பூஜை போடப்பட்ட அன்று நண்பர் ஒருவர் ரத்தினகிரி குபேரனின் திருக்கோவிலுக்கு சென்று பூஜித்து நமக்களித்த குபேரன் திருவுருவப் படத்தையும் குபேரன் திருவுருவம் பொறித்த பொற்காசையும் எங்கே வைத்திருக்கிறோம் பாருங்கள்… எங்கள் குல தெய்வம் வயலூர் முருகனின் காலடியில். குபேரன் எந்தை முருகனுக்கு ஏவல் செய்பவன். அதில் பெருமிதம் கொள்பவன்.
VOLUNTARY SUBSCRIPTION
ஊர் கூடி இழுக்கவேண்டிய தேர் இது. தளத்திற்கென்று தனியாக அலுவலகம் அமைத்துவிட்ட நிலையில் தளத்தை தொய்வின்றி நடத்திட செலவுகளை சமாளிக்க வாசகர்கள் பங்களிப்பு இனி அவசியம் தேவை. எனவே வாசகர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் மாதம் தோறும் அவர்களால் இயன்ற தொகையை பெற நினைக்கிறோம். எனவே VOLUNTARY SUBSCRIPTION என்ற ஒரு முறையை அறிமுகப்படுத்தவிருக்கிறோம். அதாவது மனமுவந்து தாமாக சந்தா செலுத்துவது. இது கட்டாயமல்ல. ஒரு கோரிக்கை.
வாசகர்கள் ரூ.500/- அல்லது ரூ.1000/- அல்லது ரூ.2000/- என அவர்கள் சக்திக்கு ஏற்ப இயன்ற தொகையை பிரதி மாதம் நமது தளத்திற்கு அளித்து உதவிட வேண்டும். தளத்தை மேலும் மேலும் விரிவுபடுத்த, தொடர்ந்து நடத்திட, இது உதவும். குறைந்த பட்சம் ஒரு வருட காலம் வாசகர்கள் இதற்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதற்கு பிறகு இதை நீட்டிப்பது உங்கள் விருப்பம். விரும்பினால் மேலும் தங்கள் சந்தாவை நீட்டிக்கலாம். இடையே நிறுத்திக்கொள்ள விரும்பினாலும் நமக்கு ஒரு தகவல் தெரிவித்துவிட்டு நிறுத்திக்கொள்ளலாம்.
இந்த ‘விருப்ப சந்தா’ மூலம் வசூலாகும் தொகை தான் நமது வாழ்வாதாரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமக்கு ஏதேனும் உதவி செய்யவேண்டும் என்று நீங்கள் கருதினால் இதில் உதவுங்கள். இந்த சமூகத்திற்கு தேவையானதை நாம் பார்த்துக்கொள்கிறோம். இன்னும் அதிகமாக. விரைவாக.
தளத்தை படிக்கும் அத்தனை பேரும் உதவிக்கரம் நீட்டுவார்கள் என கருதமுடியாது. எனவே இயன்றவர்கள் உதவிட முன்வந்தால் இயலாதவர்களுக்கும் தளத்தை இப்போது போல எப்போதும் இலவசமாக கொண்டு சேர்க்க அது உதவும்.
* * தளத்திற்கு வருகை தரும் அயல்நாட்டு வாசகர்கள் இது சம்பந்தமாக தாராளமாக தங்கள் உதவிக்கரத்தை நீட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஒருவருடம் போகட்டும்… நீங்கள் நமக்கு செய்யும் இந்த உதவியானது சமூகத்திற்கும் ஆன்மீக உலகிற்கும் எந்தளவு உறுதுணையாய் இருக்கிறது என்பதை உணர்வீர்கள். நாம் இதுவரை கடந்து வந்த பாதையே அதற்கு சிறந்த உரை கல் என்று நாம் கருதுகிறோம்.
ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். நமது தளத்திற்கு நீங்கள் செலுத்தும் சந்தாவானது பன்மடங்கு உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் திரும்ப கிடைக்கும் என்று மட்டும் உறுதி கூறுகிறோம். புண்ணிய காரியம் என்று எதையும் நம் வருவாயில் செய்யமுடியவில்லையே என எவரும் வருந்த வேண்டாம். நம் தளம் தொய்வின்றி தொடர்ந்து நடக்க நீங்கள் செய்யும் உதவியும் ஒரு வகையில் மிகப் பெரிய புண்ணியமே.
மூன்று முக்கிய சந்திப்புக்கள் நம் அலுவலகத்தில் இதுவரை நிகழ்ந்துவிட்டன. ஒவ்வொன்றாக எழுதவேண்டியது தான் பாக்கி. (* ஒரே ஒரு சந்திப்பின் புகைப்படத்தை மட்டும் இணைத்திருக்கிறோம். அறுபத்துமூவர் வரலாற்றை நாட்டிய நாடகம் மூலம் பாமரரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் வடிவமைத்து அதை கிராமப்புறங்களில் அரங்கேற்றிவருகிறார் திரு.முத்துராமலிங்கம் என்பவர். அவரை நமது அலுவலகத்தில் வைத்து சந்தித்து கௌரவித்தபோது.)
எம் நேரம் மிக மிக மதிப்பு வாய்ந்தது. அது முழுவதும் இந்த தளத்திற்கே அதன் பணிகளுக்கே செலவிடப்படவேண்டும் என்று விரும்புகிறோம்.
(விளம்பரங்களை பொருத்தவரை நாமாக அவற்றை தேடிச் சென்று நம் நேரத்தை செலவிட விரும்பவில்லை. நம்மை தேடி வந்தால் அதை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அதற்கு தளம் இன்னும் வளரவேண்டும். இந்த வளர்ச்சி போதாது.)
FREELANCE JOB எடுத்து செய்வதில் நமக்கொன்றும் தயக்கமில்லை. களத்தில் இறங்கினால் அடித்து நொறுக்கிவிடுவோம். ஆனால் அலுவலகம் துவங்கிய நோக்கம் அதுவல்ல. ரைட்மந்த்ராவை மேன்மேலும் வளர்ப்பதே.
எதிர்காலத்தில் பணியாளர்களை அமர்த்தி JOB WORK ஐ எடுத்து செய்ய முடியும். இப்போதைக்கு எம் நேரமானது தளத்திற்கும் பதிவுகளுக்கும் மட்டுமே பயன்படுத்தபடவேண்டும் என விரும்புகிறோம்.
கோ-சம்ரோக்ஷனம், அன்னதானம் உள்ளிட்ட தளத்தின் ரெகுலர் அறப்பணிகள் அது பாட்டுக்கு தொடரும். அதற்கு உதவி வரும் அன்பர்கள் வழக்கம் போல உதவி வரலாம். அதே நேரம் மாதா மாதம் மனமுவந்து தாங்கள் விரும்பும் தொகையை நம் கணக்கில் செலுத்தவும்.
விருப்ப சந்தா செலுத்த விரும்பும் வாசகர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் (NET-BANKING) நமது தளத்தை ADD செய்து ஒவ்வொரு மாதமும் 1 முதல் 10 தேதிக்குள் AUTO DEBIT ஆகுமாறு செய்யலாம். ஏற்கனவே ஒரு சில வாசகர்கள் இவ்வாறு செய்து வருகின்றனர்.
இது தவிர தளத்திற்கு ONE TIME DONATION அளிக்க விரும்பினாலும் அளிக்கலாம். Or மாதந்தோறும் அல்லது உங்கள் சௌகரியப்படி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் உதவி எம் சேவையை மேலும் செம்மையாக்கும்.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்த முடியாத வாசகர்கள், நமக்கு நமது அலுவலக முகவரிக்கு மணியார்டர் அனுப்பலாம். அல்லது பிரதி மாதம் காசோலைகள் அனுப்பலாம். காசோலைகளை RIGHTMANTRA SOUL SOLUTIONS என்கிற பெயரில் எடுத்து நமது அலுவலக முகவரிக்கு அனுப்பலாம். சாதாரண தபாலை தவிர்த்து கூரியர் மூலம் மட்டுமே அனுப்பவேண்டுகிறோம்.
தமிழகத்தின் கிராமப்புறங்களில் கூட மெல்ல மெல்ல நமது தளம் ஊடுருவத் துவங்கியுள்ளது. வீட்டின் நிதிச் சுமையை குறைக்க ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து தெரிந்த பணிகளை செய்து பொருளீட்டி வரும் குறைந்த வருவாய் கொண்ட பல வாசகர்கள் வாசகியர்கள் நம் தளத்திற்கு புதிது புதிதாக வருகிறார்கள். அவர்களை மனதில் கொண்டே தளத்திற்கு LOG IN போன்றவற்றை நாம் அறிமுகப்படுத்தவில்லை. தளம் எத்தனை வளர்ந்தாலும் இப்போதிருப்பது போன்றே எந்த வித நிர்பந்தமும் இன்றி எவரும் எளிதில் சுலபமாக ACCESS செய்யும் வண்ணம் OPEN SOURCE ஆக செயல்படும்.
வரும் 10 தேதிக்குள் வாசகர்கள் இதில் இணைந்து தங்கள் ஆதரவை தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதற்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்தே நமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்க இயலும்.
தளத்தின் அலுவலக முகவரி :
Rightmantra Soul Solutions
Rightmantra.com, Shop. No.64,
II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel),
82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 Mobile : 9840169215
Bank A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.
தங்கள் ஆதரவுக்கு நன்றி!
Rightmantra Sundar,
Founder & Editor,
www.rightmantra.com and Right Mantra Soul Solutions
===========================================================
Also check articles related to above post:
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!
‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78
===========================================================
[END]
தாங்கள் இந்த தளம் ஆரம்பித்து அதற்குள் ஒரு மாதம் ஓடி விட்டது. தாங்கள் தளம் மேலும் மேலும் மேலும் ஆல விருட்சம் போல் பல கிளைகளை கொண்ட எல்லோருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய, நல்ல புத்தகங்களை பதிப்பிக்ககூடிய நிறுவனமாக மாற வேண்டும். வாசகர்களாகிய நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.
Nandri.
Uma venkat
Sundar, Good luck with this. Please consider starting an NGO soon. God bless.
உயர்வான தூய்மையான கருத்துக்கள் உலகெங்கும் பரவட்டும். தங்கள் நற்பணி என்றென்றும் வளர நம் முருகப்பெருமானை வேண்டுகிறோம். வாழ்க வளமுடன்.
தங்களின் இந்த நியாயமான கோரிக்கைக்கு எங்களுடைய முழு ஒத்துழைப்பு எப்போதும் உண்டு. தள வாசகர்கள் புண்ணியம் பெற ஒரு வழி ஏற்படித்தியதற்கு நன்றி.
சுந்தர்ஜி
நம் தளம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் நாம் எல்லோரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும் . எம்மாதிரி தளம் நம்மைப்போல் எல்லோருக்கும் பயன் பெற நாம் எல்லோரும் ஒன்றுகூடி ஆதரவு தருவோம்.
” ஒன்று கூடினால் உண்டு நன்மை”
வாழ்க வளமுடன்.
நாம் மகா பெரியவா இருக்கிறார் அவர் ஆசிவாதம் உண்டு.என்னவே வெற்றி நமக்கே
கண்டிப்பாக எங்கள் ஆதரவு உங்களுக்கு எல்லா வகையிலும் உண்டு.
தங்கள் எண்ணம் போல தங்கள் பணிகள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்
நன்றி
வாழ்க வளமுடன்
உறவுக்கு கை கொடுப்போம்
நட்புக்கு நம் தோள் கொடுப்போம்
என்பதற்கு ஏற்ப நம் வாசகர்கள் அனைவரும் ஒன்று கூடி தேர் இழுப்போம்.
நன்றி
தங்களின் இந்த நல்ல முடிவிற்கு நாங்கள் உடன் இருப்போம் சுந்தர்.
நாம் முன்பே கூறியதுபோல் இத்தொகையானது தள நிர்வாகச் செலவுகளுக்கு மட்டுமின்றி, பல நல்ல காரியங்களுக்கும் உபயோகப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
நன்றி,
கே.எஸ். வெங்கட்,
முகலிவாக்கம், சென்னை – 125
வாழ்க வளமுடன்
பிட்டுக்கு மண் சுமந்த நம் பெருமான் , நம் சுந்தர் ஐயாவின் மனம் குளிரும்படி அடியார்களின் மனங்களை ஆட்கொள்வார் . ஐயம் , வேண்டாம். நும் பணி தொடரட்டும்
நன்றி
விவேகானந்தரின் கனவுகளை நிஜமாக்க நினைக்கும் 100 இளைஞ்ர்களில் ஒருவரின் கோரிக்கை . கண்டிப்பாக நடக்கும்
முழு மனதுடன் ஒத்துழைப்பு தருகிறோம்.