Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > All in One > உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

print
மிழ் சினிமாவில் எத்தனையோ தரமான பக்தி திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. நமது ஆன்மீக பசியை தூண்டி விட்டிருக்கின்றன. துவண்டு கிடக்கும் உள்ளங்களை தட்டி எழுப்பியிருக்கின்றன. அத்தகைய திரைப்படங்களை இன்றைய இணைய வாடிக்கையாளர்களுக்கும் புதிய தலைமுறையினருக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் மீண்டும் அடையாளம் காட்டும் ஒரு முயற்சியே இந்த பகுதி.

நல்ல புத்தகங்களை, பக்தி நூல்களை படிப்பதற்கு தெரிந்து கொள்வதற்கு நேரமும் சூழ்நிலையும் ஒத்துவருவது பலருக்கு சிரமமாக இருக்கும் இன்றைய காலகட்டங்களில் அட்லீஸ்ட் இது போன்ற பக்தி படங்களையாவது பார்ப்பது உங்களை நீங்கள் பக்குவப்படுத்திக் கொள்ள உதவும் என்பதால் தான் இந்த பகுதியை துவக்கியிருக்கிறேன். நீங்கள் இதுவரை அறிந்த, அறிந்திராத தரமான பக்தி படங்கள் பற்றிய விமர்சனமும் தகவல்களும் இந்த பகுதியில் இடம்பெறும். படிப்பதோடு நிறுத்திவிடாமல் சம்பந்தப்பட்ட படங்களை ஒரிஜினல் வாங்கி பார்த்து பயன்பெறும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர் கேட்ட கேள்வியும் நான் கூறிய பதிலும்

இப்படி ஒரு பகுதி துவக்கப்போவதை பற்றி நண்பர் ஒருவரிடம் கூறினேன்.

“ஃபேஸ்புக், டுவிட்டர் என இணையமும் ஐ.டி., பி.பி.ஓ, கால்சென்டர், என்று ஒவ்வொருவர் வேலையும் இருக்கிற இந்த அவசர நாகரீக யுகத்தில் – சூழ்நிலையில் – இது போன்ற பதிவுகளுக்கு வரவேற்பு இருக்குமா?” என்று நண்பர் கேட்டார்.

அதற்கு நான் சிரித்துக்கொண்டே…. “அதெல்லாம் வெளி வாழ்க்கை. நாம் கண்ணால் பார்ப்பது. ஆனால் ஒவ்வொருவருக்கும் உள் வாழ்க்கை என்ற ஒன்று இருக்கும். அது அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதில் உள்ள ஏமாற்றங்களை, தோல்விகளை, துன்பங்களை, அவமானங்களை , வலிகளை அவர்கள் மட்டுமே அறிவார்கள். வெளித் தோற்றத்தை வைத்து எதையும் எடைபோட்டுவிடக்கூடாது. அவர்களின் மனக்காயத்திற்கான மருந்து எங்கே தேடினாலும் கிடைக்காது. அதை ‘ஆன்மிகம்’ ஒன்று மட்டுமே தரமுடியும். ஆனால் ஆன்மீகமோ ஒரு மாபெரும் சமுத்திரம். எங்கே மூழ்கி எப்போ கரையேறுவது? பார்த்து மலைப்பதிலேயே காலம் போய்விடும். அப்படிப்பட்டவர்களுக்கு இது போன்ற ஒரு பகுதி கட்டுமரமாக இருக்கும்!” என்றேன்.

ஆனால் ஆன்மீகமோ ஒரு மாபெரும் சமுத்திரம். எங்கே மூழ்கி எப்போ கரையேறுவது? பார்த்து மலைப்பதிலேயே காலம் போய்விடும். அப்படிப்பட்டவர்களுக்கு இது போன்ற ஒரு பகுதி கட்டுமரமாக இருக்கும்!

உடனே நண்பர், “சபாஷ்… WONDERFUL INSIGHT சுந்தர். எப்படி நீங்க இவ்ளோ பக்குவமாக மாறினீங்க? இணையத்தில் மிக பிரபலமான பகுதியாக இந்த பகுதி விரைவில் மாறும்! வாழ்த்துக்கள்!!” என்றார்.

ஊமைப்படங்களிலிருந்து சினிமா வளர்ச்சி பெற்று பேசும் படமாக மாறிய பிறகு (அதாவது 1940 களில்) வெளியான பல படங்கள் பக்தி திரைப்படங்களாகவே இருந்தன. ஹரிதாஸ், சிவகவி, சாந்த சக்குபாய் உள்ளிட்ட அந்த காலத்து சூப்பர் ஹிட் படங்கள் அனைத்தும் பக்தி & புராண படங்களே. இவைகளில் பல படங்கள் வருடக்கணக்கில் ஓடின. மேற்படி பக்தி படங்களில் பல பக்த விஜயத்தை அடிப்படையாக வைத்தே வெளிவந்தன.

ஆன்மீக வரலாற்றின் முதுகுத் தண்டு

‘பக்த விஜயம்’ என்பது பரந்தாமனை நேரில் கண்ட பரம பக்தர்களின் வாழ்க்கை வரலாற்று நூல். சுருங்கக்கூறின் நமது ஆன்மீக வரலாற்றின் முதுகுத் தண்டு (VERTEBRAL HISTORY) போல. இவை அனைத்தும் வெவ்வேறு காலகட்டத்தில் உண்மையாக நம் நாட்டில் வெகு சமீபத்தில் நடைபெற்றவை. அதாவது 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டில் நடைபெற்றவை. படிக்க படிக்க நமது நாடி நரம்புகள் எல்லாம் சிலிர்த்து, ‘இதுவன்றோ பக்தி… இப்படி இருந்தால் இறைவன் ஏன் நேரில் வரமாட்டான்?’ என்று உங்களுக்கு தோன்றுவது உறுதி.

பள்ளியில் நாம் வரலாறு பாடத்தில் படிக்கும் வரலாறுகளை “இதெல்லாம் உண்மையா?” என்று கேட்பது எத்தனை அறிவீனமோ அது போலத் தான் பக்த விஜயத்தில் உள்ள வரலாறுகளை பற்றி சந்தேகங்கொண்டு கேட்பதும்.

ஆன்மீக அன்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இந்த ‘பக்த விஜயம்’. இந்த நூல் வீட்டில் இருப்பதே விசேஷம் தான். எளிய, இனிய தமிழில் அமைந்திருக்கும் இந்த நூல், படிக்க படிக்க தீஞ்சுவை விருந்து. பல பதிப்பகங்கள் பக்த விஜயத்தை வெளியிட்டிருந்தாலும், படிப்பதற்கு மிகவும் எளிமையாக, இனிமையாக விலையும் மலிவாக அமைந்திருப்பது லிப்கோ வெளியிட்டிருக்கும் நூல் தான்.

‘சக்ரதாரி’ என்னும் காவியம்

இந்த பக்த விஜயத்தில் உள்ள கதை ஒன்றை அடிப்படையாக வைத்து ஜெமினி பிக்சர்ஸ் சார்பாக 1948 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் படம் தான் ‘சக்ரதாரி’. கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி.நாகைய்யா, ஜெமினி கணேசன், புஷ்பவல்லி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இசை பார்த்தசாரதி. நண்பர் ஒருவரிடம் பேசியபோது இந்த படத்தை பற்றி பேச்சு எழுந்தது.

கோராக்கும்பர் என்னும் பானை செய்யும் தொழிலை செய்யும் அடியவர் ஒருவரின் உண்மை சரிதம் தான் இது. சித்தூர் நாகைய்யா பிரதான நாயகன். அவர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்பதை விட, கோராவாக வாழ்ந்திருக்கிறார் என்பதே உண்மை. அவரது மனைவியாக வரும் புஷ்பவல்லி மற்ற பாத்திரங்களும் அப்படியே. (இவர்கள் அழகு நம்மை வணங்க வைக்கும் ஒரு தெய்வீகப் பேரழகு.) படம் பார்க்க ஆரம்பித்தவுடன், ஒரு திரைப்படத்தை பார்க்கிறோம் என்ற உணர்வு உங்களிடம் இருந்து அகன்று, ஏதோ நம் கண்ணெதிரே சம்பவங்களை நேரடியாக பார்ப்பது போன்றே உங்களுக்கு தோன்றும்.

இந்த படத்தை பார்த்திராத ஆன்மீக அன்பர்கள் அனைவரும் ஒரு முறை இந்த படத்தை பார்க்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். பார்த்தவர்கள் அதன் பெருமையை, தங்கள் கருத்தை இங்கே பதியும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பகவான் கண்ணீர் வடிக்கும் சம்பவம்

பக்தன் படும் துயரம் கண்டு பகவான் கண்ணீர் வடிக்கும் சம்பவத்தை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? படித்திருக்கிறீர்களா? இந்தப் படத்தில் அப்படி ஒரு சம்பவம் உண்டு. அதற்காக இது ஏதோ அழுகாச்சி காவியம் அல்ல. எத்துனை முறை பார்த்தாலும் திகட்டாத அற்புத காவியம். இன்றைய சமகால ஆக்ஷன் திரைப்படங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல இந்த பக்தி திரைப்படம்.

[pulledquote] [typography font=”Cantarell” size=”13″ size_format=”px”] பக்தி என்றால் என்ன? ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?  நமக்கு தீங்கு செய்வோரிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? ஆண்டவன் நமக்கு துன்பங்களை தருவது ஏன்? பத்தினி என்றால் எப்படி இருக்கவேண்டும்? அவளது கடமைகள் என்ன? இப்படி பலப் பல கேள்விகளுக்கு ஒரே பதில் இந்த படம் தான். [/typography] [/pulledquote]

தாங்கள் பெரிய பக்தர்கள் என்று கருதுபவர்கள் அனைவரும் அவசியம் இந்த படத்தை பார்க்கவேண்டும். அப்போது தான் தங்கள் பக்தி எந்த நிலையில் இருக்கிறது என்று அவர்களுக்கு புரியும்.

அதே போல பக்தி என்றால் என்ன? ஒரு பக்தன் எப்படி இருக்கவேண்டும்?  நமக்கு தீங்கு செய்வோரிடம் நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? ஆண்டவன் நமக்கு துன்பங்களை தருவது ஏன்? பத்தினி என்றால் எப்படி இருக்கவேண்டும்? அவளது கடமைகள் என்ன? இப்படி பலப் பல கேள்விகளுக்கு ஒரே பதில் இந்த படம் தான்.

பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, வசனம், திரைக்கதை என ஒவ்வொன்றும் இப்படத்தில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு தரமாக இருக்கும். அந்தக் காலத்தில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடிந்தது என்றால் நாம் நம் தமிழ் திரையுலகை நினைத்து மார்தட்டிக் கொள்ளலாம்.

‘நச்’ வசனம்!

வசனங்கள் பல இடங்களில் ஆச்சரியப்படவைக்கும். அதில் இழையோடும் மெல்லிய நகைச்சுவை… சான்ஸேயில்லை போங்கள்.

உதாரணத்திற்கு, வீடு வாசலை இழந்து நிராயுதபாணியாக நிற்கும் நாயகன் கோரா குடும்பத்திடம், ஜெமினி, “எங்களை விட்டுட்டு எங்கே போறீங்க மாமா? எங்களுக்கு துணையாக இங்கயே இருக்கக்கூடாதா?” என்று கேட்பார். அதற்கு நாகைய்யாவின் மனைவியாக வரும் புஷ்பவல்லி, “என்னது துணையாகவா? இது எப்படி இருக்கு தெரியுமா? ஏகாதசி சிவராத்திரியை துணைக்கு கூப்பிடுற மாதிரியில்லே இருக்கு…” என்பார் சிரித்துகொண்டே

அப்புறம், “அவன் கிட்டே வாங்கின கடனுக்கு வீட்டை ஏலம் போட ஏற்பாடு செய்யுங்க.. இல்லேன்னா நம்ம பணம் கோவிந்தா தான்” என்று சாரங்கபாணியிடம் அவன் மனைவி கூறும் காட்சி. “சொல்லுடி… நல்லா சொல்லு…. இன்னும் நாலு தரம் சொல்லு. கோராவுக்கு நீ கடன் கொடுக்கலேன்னா இந்த ‘கோவிந்தா’ என்கிற பேர் உன் வாயில வந்திருக்குமா?” என்று சாரங்கபாணி அதற்கு தரும் பதில். இப்படி பல வசனங்கள் மிக டைமிங்காக இருக்கும்.

சிறு வயதில் தூர்தர்ஷனில் இந்த படத்தை பார்த்திருக்கிறேன். சென்ற ஆண்டு ஒரு நாள் இந்த படத்தை மறுபடியும் பார்க்கவேண்டும் என்று நினைத்து ஒரிஜினல் டி.வி.டி. எங்காவது கிடைக்குமா என்று பார்த்தபோது ராஜ் வீடியோ விஷன் இதை வெளியிட்டிருப்பது தெரிந்து அதன் ஒரிஜினலை வாங்கினேன். இந்த படம் என்னை பொறுத்தவரை நான் சார்ஜ் ஏற்றிக்கொள்ள உதவும் ஒரு மாபெரும் பவர் ஹவுஸ். இதுவரை பல முறை பார்த்துவிட்டேன். ஆனால் துளியும் அலுக்கவில்லை.

இறை நம்பிக்கை அசைத்து பார்க்கப்படும்போது

என்ன தான் ஆழமான கடவுள் நம்பிக்கை ஒருவருக்கு இருந்தாலும் அது அசைத்து பார்க்கப்படுவது போல சில சம்பவங்கள் வாழ்க்கையில் அவ்வப்போது நடைபெறுவதுண்டு. விபத்து, நமக்கு வேண்டியவர்களின் இழப்பு, இப்படி பலப்பல. இதற்கு எவரும் விதிவிலக்கல்ல. அது போன்ற நேரங்களில் இந்தப் படத்தை ஒரு முறை பாருங்கள். உங்கள் மனம் மனம் லேசாகிவிடும். ஒரு பக்குவத்துக்கு வந்துவிடும்.

நாமெல்லாம் ஒரு சிறு கஷ்டம் வந்தாலே அதை தாங்கிக்கொள்ள முடியாது இறைவனை நிந்திக்க ஆரம்பித்துவிடுவோம். ஆனால் இந்த கதையின் நாயகன் கோராக்கும்பர், தன் வீடு வாசலை இழந்து நடுத்தெருவுக்கு வரும்  நிலையிலும் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு, இறைவனை அணுவளவும் நிந்திக்காது அந்த நிலையிலும் தன்னை அந்த இழிநிலைக்கு ஆளாக்கியவர்களை கடிந்துகொள்ளாது இன்முகத்தோடு அந்த சூழலை எதிர்கொள்வாரே… அது… அது தான் பக்திக்கு இலக்கணம்! பக்தனுக்கும் இலக்கணம்!!

மாஸ் திரைப்படங்களில் தரப்படும் ஹீரோவின் என்ட்ரியை விட இந்த படத்தில் பகவானின் என்ட்ரி பல மடங்கு பிரமாதமாக இருக்கும். அந்த ஒரு காட்சிக்காகவே படத்தை பலமுறை பார்க்கலாம். நீங்களும் பார்ப்பீர்கள்.

மிதமிஞ்சிய செல்வ செருக்கிலும் கர்வத்திலும் மற்றவர்களுக்கு அதுவும் இறைவனின் அடியவர்களுக்கு தீங்கு செய்பவர்களுக்கு முடிவில் என்ன ஆகும் என்பது இந்த படத்தில் மிக அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன்.

முதல் பாதியில் தன் பக்தனை படுத்தியவர்களுக்கு எல்லாம் பிற்பாதியில் பகவான் வட்டி, முதல், அசல் என ஒன்றுவிடாமல் திருப்பி தரும் ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் கைதட்டி ரசிப்பீர்கள் என்பது மட்டும் உறுதி.

ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு….

FAITH IN GOD INCLUDES FAITH IN HIS TIMING என்று.

அந்த டைமிங் என்றால் என்ன என்று இந்த படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். பக்தனுக்கு உதவுவதற்காக நீங்கள் எதிர்பாராத நேரத்தில் பகவான் பிரத்யக்ஷமாகும் அந்த காட்சியில், உங்கள் நாடி நரம்புகள் எல்லாம் சிலிர்க்கும் என்பது மட்டும் உறுதி.

ஆண்டாண்டு காலம் பல புத்தகங்களும் புராணங்களும், இதிகாசங்களும் படித்து தெரிந்துகொள்ளமுடியாத விஷயங்களை இந்த ஒரு படம் பார்ப்பதின் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம், பக்தியின் அடுத்த நிலைக்கு செல்லலாம் என்பது என் கருத்து.

ஆண்டாண்டு காலம் பல புத்தகங்களும் புராணங்களும், இதிகாசங்களும் படித்து தெரிந்துகொள்ளமுடியாத விஷயங்களை இந்த ஒரு படம் பார்ப்பதின் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம், பக்தியின் அடுத்த நிலைக்கு செல்லலாம் என்பது என் கருத்து.

படத்தின் பல காட்சிகள் கண்களில் நீரை வரவழைத்துவிடும். அது உங்களையறியாமல் வரும் என்பது தான் விஷயமே. பகவானுக்கே வரும்போது உங்களுக்கு வராதா என்ன? மறுபடியும் சொல்கிறேன் இது அழுகாச்சி படம் அல்ல. அனைத்தும் சரிவிகிதத்தில் தரப்பட்டுள்ள ஒரு அறுசுவை விருந்து.

நான் கூறியது சற்றும் மிகையல்ல.. உண்மையினும் உண்மை என்று படம் பார்த்தவர்களுக்கு தெரியும். பார்த்த பின்னர் உங்களுக்கு புரியும்.

இந்த படம் இணையத்தில் டவுன்லோட செய்து பார்க்க எங்கும் கிடைக்காது…. தேடுவது வீண் வேலை…. எனவே ஒரிஜினலை கீழ்கண்ட ராஜ் வீடியோ விஷன் இணைய முகவரியில் வாங்குங்கள். முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கிறது.  விலை ரூ.99/-

http://rajvideovision.net/product_info.php?products_id=211

பக்த விஜயம் நூலுக்கு கீழ்கண்ட இணைய முகவரியை செக் செய்யவும். விலை ரூ.70/-

http://lifcobooks.com/booktitles/details/138/6/devotional/sri-mahabaktha-vijayam.html

வெளிநாடுகளில் வசிப்போர் எவருக்கேனும் இவை தேவைப்பாட்டால் என்னை தொடர்புகொள்ளவும்… நான் வாங்கி அனுப்புகிறேன்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாயா!

[END]

8 thoughts on “உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

  1. இந்த படம் பற்றி நீங்களே ஏற்கனவே என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள். தற்போது பதிவாகவே நீங்கள் சொல்லியிருப்பதை பார்த்தால் அப்படி என்ன தான் இருக்கு இந்த படத்தில் என தெரிந்துகொள்ள ஆர்வமாய்ருக்கிறது. இணையத்தில் டவுன்லோட் செய்ய கிடைக்காது என்று வேறு சொல்லிவிட்டீர்கள். 🙁 ஒரிஜினல் வாங்கி பார்த்துவிட்டு சொல்கிறேன்.

  2. Hi Sundar,

    It’s great that you have started one more new section. With this, movie lovers cum divine seeking people would surely get benefit out of it.

    More over, people who may not love to read books but love to see movies also would get the perfect source of divine soul.

    Great attempt. After you have put all this points about the film, I wish I also would love to watch the film.

    When I come to chennai next time, I would try at most to get this film DVD from Raj video vision and would see how well this film provides immense joy of divine relations as you had put it.

    Thanks so much for this new part to you and as well to Raj video vision and book publishers those who’re still having such a old but gold things in our life time.

    by,

    Chitti.

  3. டியர் சுந்தர், அருமையான பதிவு.. நானும் இந்த திரைபடத்தை என் சிறு வயதில் பார்த்த ஞாபகம்… இது போன்ற பதிவுகள் இட அசாத்தியமான தேடுதல் வேண்டும். நீங்கள் மனதில் நினைத்தவுடன் இது போன்ற பொகிஷங்கள் உங்கள் கைகளில் வந்து சேர எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி கொள்கிறேன். நன்றி, வினோத் புதுடில்லி.

  4. நல்ல முயற்சி மற்றும் பதிவு…வாழ்க்கையின் ஓட்டத்தில் தொலைந்தபோன நிமிடங்களை நினைத்துபார்க்க இந்த பதிவு உதவும் என்பதில் ஐயமில்லை…
    .
    இப்படி ஒரு படம் வந்தது என்னக்கு இதுவரை தெரியாது…நிச்சயம் ஒரிஜினல் DVD பார்க்க முடிவு செய்துளேன்…..

  5. அன்புள்ள சுந்தர்
    இதே போல் 1950 களில் “நந்தனார்” என்னும் ஒரு திரை காவியம் வந்தது. (என்னிடம் CD உள்ளது). 63 நாயன்மார் களில் ஒருவர் தான் இந்த “திருநாளைபோவார்” என்னும் நந்தனார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவரின் சிவ பக்தி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த திரைபடத்தை காணும் எல்லோருக்கும் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும். இந்த படத்தை பார்த்து தான் எனக்கு சிவபெருமான் மேல் அளவு கடந்த பக்தி வந்தது. அந்த பக்தி தான் என்னை கடந்த ஒன்னரை ஆண்டுகளில் 60 க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவாலயங்களுக்கு செல்லவைத்தது, கிடைத்த அனுபவங்கள் ஓவொன்றும் என் வாழ்வில் மறக்க முடியாதவை.

    CD அல்லது DVD ராஜ் வீடியோ vision லையே கிடைக்கும்.

    நன்றி.

    ——————————–
    ‘நந்தனார்’ என்னிடமே சி.டி இருக்கிறதென்று நினைக்கிறேன். நல்ல படத்தை பற்றி நினைவூட்டியமைக்கு நன்றி.
    – சுந்தர்

  6. சமீபத்தில்தான் எனது தந்தை கோரகும்பர் நாகையாவின் நடிப்பை பார்க்கணும், அதுபோல் இனிமேல் யாரும் அந்த கேரக்டரை பண்ண முடியாது என்று சொன்னார். (எனது தந்தை வயது 81 – வயதானதால் அவருக்கு கண் தெரியாது, மேலும் கம்ப்யூட்டர் நெட் இதல்லாம் ரொம்ப தூரம். So அவர் உங்கள் சைட்டை பார்த்திருக்க வாய்ப்பில்லை.

    இப்போது உங்கள் சைடில் இந்த படத்தை பற்றி படித்ததும் கோரகும்பர் cd வாங்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன்.

    உங்கள் சைட்டை பரிந்துரைத்த ஸ்ரீராமுக்கு நன்றி.

  7. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ஆயிரமாயிரம் புத்தகங்கள் படித்து பெறவேண்டிய பக்குவம், சில சமயம் இது போன்ற உன்னதமான பக்தி படங்களை பார்க்கும்போது ஒருவருக்கு கிடைத்துவிடும். தொடர்ந்து இது போன்ற நல்ல படங்களை அடையாளம் காட்டவும். நானும் இது போன்ற படங்களுக்கென்றே ஒரு மினி லைப்ரரியை என் வீட்டில் உருவாக்குகிறேன்.

    ப.சங்கரநாராயணன்

  8. நன்றி…சுந்தர் ஜி. உங்கள் சேவை..வளர்க..ஓங்குக…

    அமுதன் சேகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *