Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > ‘பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை’ – பன்னிரு திருமுறை இசைவிழாவில் ஒரு அரிய செய்தி!

‘பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை’ – பன்னிரு திருமுறை இசைவிழாவில் ஒரு அரிய செய்தி!

print
வேத ஆகம தெய்வ தமிழிசை மன்றமும், ஸ்ரீ கிருஷ்ண கான சபாவும் இணைந்து நடத்தும், 10ம் ஆண்டு, பன்னிரு திருமுறை இசை விழா தி.நகர். கிருஷ்ண கான சபாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.

வரும் 8ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், தமிழகத்தில் உள்ள தலைசிறந்த ஓதுவா மூர்த்திகள் பங்கேற்கின்றனர். தேவார இன்னிசை, பட்டிமன்றம், புலவர்களின் சொற்பொழிவு, உபன்யாசம், ஹரிகதை, இசை சொற்பொழிவு போன்றவை நடக்க உள்ளன.

(முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி குறித்த கவரேஜ் நமது தளத்தில் நாம் அளித்தது குறிப்பிடத்தக்கது.)

Panniruthirumurai Isai Vizha 1

சனி, ஞாயிற்று கிழமைகளில், காலை, 8:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரையும், மற்ற தினங்களில் மாலை, 3:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரையும், இசை விழா நடைபெறும். அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், அனுமதி இலவசம்.

Panniruthirumurai Isai Vizha 2

Panniruthirumurai Isai Vizha 3

உங்கள் சுற்றத்துக்கும் நட்புக்கும் இதைப் பகிர்ந்து அவர்கள் பலன் பெற உதவுங்கள்.

Panniru Thirumurai

Panniru Thirumurai 8நேற்று திரு.வர்ஷாஜி என்பவரது தேவார இன்னிசையும் தொடர்ந்து தேச மங்கையர்க்கரசி அவர்களின் சொற்பொழிவும் நடைபெற்றது.

Panniru Thirumurai 2

Panniru Thirumurai 5இந்த பன்னிரு திருமுறை இசைவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சான்றோர் கௌரவிக்கப்படுகிறார். நேற்றைய சிறப்பு விருந்தினர் வலையப்பேட்டை ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள். தேவாரம்,திருப்புகழ் பெற்ற தலங்களுள் சில தலங்கள் எங்கு உள்ளன என்று தெரியாத நிலையில் மிக்க முயற்சி எடுத்து அவற்றின் இருப்பிடத்தைக் கண்டறிந்ததவர்கள் வரிசையில் வலையப்பேட்டை ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களும் ஒருவர். சக்தி  விகடனில் தொடராக வெளியான் முத்தமிழ் முருகனின் உத்தம் தொண்டர்கள் என்ற தொடரை எழுதியவர்கள். அருணகிரிநாதரால் பாடப்பெற்ற திருப்புகழ் தலங்கள் அனைத்திற்கும் சென்று அங்கு திருப்பணிகளை மேற்கொள்வதை லட்சியமாக கொண்டு செயல்பட்டுவருகிறார்.

Panniru Thirumurai 4Panniru Thirumurai 6

இவரைப் பற்றி நாம் ஏற்கனவே கேள்விப்பட்டு இவரை சந்திக்க சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தோம். இந்நிலையில் ‘வான் கலந்த மாணிக்கவாசகர்’ நாடகத்தை கடந்த வெள்ளி அன்று மாலை காமராஜர் அரங்கத்தில் காணச் சென்றபோது, நமது அழைப்புக்கு இணங்க வந்திருந்த நாட்டியப் பேரொளி நர்த்தகி நட்ராஜ் அவர்கள் இவரை நமக்கு அறிமுகம் செய்துவைத்து, நீங்கள் அவசியம் சந்திக்க வேண்டிய நபர் என்றார்.

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல அவரது அறிமுகம் அங்கேயே கிடைத்தது. பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டு விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்றோம்.

(* நர்த்தகி நட்ராஜ் அவர்களை பற்றி தெரியுமா? சிவபெருமானே நாட்டியம் கற்றுத் தந்த பெருமையுடைய திருநங்கை அவர். நாட்டியப் பேரொளி. அவருடனான நமது தளத்தின் ‘ரோல்மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு’ ஏற்கனவே முடிந்துவிட்டது. எழுதவேண்டியது தான் பாக்கி.)

'வான் கலந்த மாணிக்கவாசகர்' நாடகத்தின் போது... நர்த்தகி நட்ராஜ் அவர்களுடன் வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள்
‘வான் கலந்த மாணிக்கவாசகர்’ நாடகத்தின் போது… நர்த்தகி நட்ராஜ் அவர்களுடன் வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள்

நேற்று வேத ஆகம தமிழிசை மன்றத்தின் 10 ஆம் ஆண்டு பன்னிரு திருமுறை விழாவிற்கு சென்றபோது அங்கு,  விருந்தினராக வந்திருந்தார் வலையப்பேட்டை ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள். சிறப்பு விருந்தினர் அவர் தான் என்று தெரிந்தவுடன் புறப்படவிருந்த நாம் அங்கேயே காத்திருந்து அவரை கௌரவிப்பதை கண்குளிர பார்த்து ரசித்துவிட்டு அவர் பேசியதையும் அப்படியே குறிப்பெடுத்துக்கொண்டு வந்தோம்.

வலையப்பேட்டை ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் பேசும்போது, திருமுறைகள் சொல்லாத தீர்வே கிடையாது என்று திருமுறைகளின் பெருமைகள் மற்றும் அருமைகள் குறித்து பேசினார். ஆஹா…. ஆஹா.. என்ன தவம் செய்தேன் இதை கேட்பதற்கு… அப்படி அடியேன் கேட்டு அதை நீங்கள் இங்கே படிப்பதற்கு… ஈசனருள் நம் அனைவருக்கும் நிச்சயம் உண்டு.

Panniru Thirumurai 7

திருக்கடவூர் மயானம் என்று போற்றப்படும் திருமெய்ஞானம் தலத்து இறைவனை பற்றி குறிப்பிடும்போது, பொதுவாக திருக்கடையூர் செல்லும் பக்தர்கள் அனைவரும் கடவூர் மயானத் தலம் என்றால் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலைத்தான் குறிக்கிறது என நினைக்கிறார்கள். உண்மையில் இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்தான் கடவூர் மயானம். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் உள்ளூர் மக்களுக்கோ, சுற்றுவட்டார மக்களுக்கோ இப்படி ஒரு திருக்கோயில் இங்கு இருப்பதே தெரியவில்லை என்பதுதான் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

பாசமான களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
காசை மலர் போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பேசவருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே

மேற்படி பதிகத்தில் தன்னை நாடி வருவோருக்கு ஆசை தீர கொடுப்பார், மனம் நிரம்பும் வகையில் அடியவர்களுக்கு அருள் புரிபவர்; கடவூர் மயானத்தில் வீற்றிருப்பவர் பேசவும் செய்வார் என்று கூறப்பட்டிருப்பதை கவனியுங்கள்.

அடுத்து திருவலஞ்சுழி.

அழல் அது ஓம்பிய அலர்மிசை அண்ணலும், அரவு அணைத் துயின்றானும்,
கழலும் சென்னியும் காண்பு அரிது ஆயவர்; மாண்பு அமர் தடக்கையில்
மழலை வீணையர்; மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால்
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே.

கடைசி வரியை கவனியுங்கள்… பாதத்தால் சுழலும் மாந்தர்கள் – அதாவது திருவலஞ்சுழி இறைவனை பாதத்தால் வலம் வரும் பக்தர்களின் தொல்வினை தீரும் என்கிறார் சம்பந்தர்.

இப்படி ஒவ்வொரு பாடலின் பின்னேயும் ஆழ்ந்த பொருள் புதைந்திருப்பதை மிக அழகாக சுட்டிக்காட்டினார் திரு.வலையப்பேட்டை கிருஷ்ணன்.

நம் தளம் சார்பாக விரைவில் இவரை ரோல் மாடல் சந்திப்புக்காக இவரது இல்லத்தில் சந்திக்கவிருக்கிறோம்.

Panniru Thirumurai Isai Vizha Schedule

Inv2

Inv3Inv4
=======================================================

Also check related articles….

நான்கு யுகங்களில் சிறந்தது எது? ஏன்? MUST READ!

இறைவனையே குருவாக பெற்ற மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்று கூறிக்கொண்டது ஏன் ?

கடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்?

=======================================================

[END]

2 thoughts on “‘பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை’ – பன்னிரு திருமுறை இசைவிழாவில் ஒரு அரிய செய்தி!

  1. பன்னிரு திருமுறை இசைவிழாவை பற்றிய செய்தியை பதிவாக போட்டு அசத்தி விட்டர்கள். கண்ணுக்கு விருந்தாக உள்ளது .போன முறை தாங்கள் இதை பற்றி பதிவாகப் போட்ட பொழுதே நான் செல்லவில்லையே என்று வருத்தமாக இருந்தது, இந்த முறை கட்டாயம் இந்த நிகழ்ச்சிக்கு செல்வேன்.

    பிரம்ம புரீஸ்வரர் கோயில் சீர்காழியில் உள்ள திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலம் தானே. அங்கு ‘ஒரிருவாயினை மானாங்காரத்து ” என்ற அழகிய பாடலை தனது தந்தைக்காக திருஞானசம்பந்தர் எழுதியிருக்கிறார். இந்த பாடலை படித்தால் அனைத்து திருமுறைகளையும் படித்ததற்குச் சமம்.

    ஒவ்வொரு நாள் நிகழ்ச்சி நிரலும் அருமை. தினமும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளது,

    திரு வளையப்பட்டி கிருஷ்ணன் அவர்களைப் பற்றி கேள்வி பற்றிருக்கிறேன். அவரை ரோல் மாடல் சந்திப்பிற்காக சந்தித்து அவரைப் பற்றி பதிவாக தங்களின் கை வண்ணத்தில் படிக்க விருப்பம்.

    நர்த்தகி நடராஜ் அவர்களின் ரோல் மாடல் சந்திப்பின் பதிவை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன். தங்கள் ஆன்மிகப் பணி செவ்வனே தொடர வாழ்த்துக்கள். தங்களின் நாகை பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்.

    நன்றி
    உமா வெங்கட்

  2. சுந்தர்ஜி
    இவ்வாறு ஒரு சிறப்புமிக்க செய்திகள்,நிகழ்ச்சிகள்,அதை பற்றி ஒரு விரிவான விளக்கம் போன்றவற்றை நம் தாள வாசகராகிய நாம் மிகவும் பேரு பெற்றவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *