Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 27, 2024
Please specify the group
Home > Featured > கடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்? Rightmantra Prayer Club

கடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்? Rightmantra Prayer Club

print
ஹேர் கட் செய்துகொள்வதற்கும் தாடியை ட்ரிம் செய்து கொள்வதற்கும் சலூனுக்கு சென்றான் அவன். பார்பர் அவனுக்கு முடியை வெட்டிக்கொண்டே பேச்சு கொடுத்தார். சற்று நேரத்தில் இருவரும் நன்கு பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.

பகுத்தறிவுவாதியான அந்த பார்பர், “எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. கடவுள் இருக்கிறார் என்று நான் கருதவில்லை!” என்றார்.

“ஏன் அப்படி சொல்கிறீர்கள் ?” என்று இவன் கேட்க, “கொஞ்சம் கண்ணை நல்லா திறந்து வெச்சிகிட்டு ரோட்டுல நடந்து பாருங்க. எத்தனை மக்கள் கஷ்டப்படுறாங்க. எத்தனை குழந்தைங்க ரோட்டுல ஆதரவில்லாம பிச்சை எடுத்துக்கிட்டுருக்காங்க. எவ்ளோ விபத்து… துன்பம்… கடவுள்னு ஒருத்தர் இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமா? இதையெல்லாம் பார்த்துகிட்டு சும்மாயிருக்கிற ஒருத்தரை கடவுள், அவர் அன்பே வடிவமானவர்னு என்னால் ஏத்துக்க முடியலே…! என்றார்.

வந்திருந்த கஸ்டமருக்கு என்னென்னவோ சொல்லத் தோன்றியது. அவருடன் விவாதத்தில் ஈடுபடுவது வெட்டிவேலை என்று தோன்றியது. ஹேர் கட் செய்ததற்கு பணத்தை கொடுத்துவிட்டு நடையை கட்டினார்.

தரையில் இறங்கி நடந்தவர், அழுக்கு மற்றும் கந்தல் உடைகளுடன் நீண்ட தாடியும், பரமாரிக்கப்படாத தலையும் வைத்துக்கொண்டு பார்ப்பதற்கே அருவருப்பான தோற்றத்தை உடைய ஒருவனை கண்டார்.

என்ன தோன்றியதோ…. உடனே திரும்பவும் சலூன் கடைக்கு சென்றார்.

“உங்களுக்கு தெரியுமா? பார்பர்கள் அதாவது முடி திருத்துபவர்கள் என்று இந்த உலகில் யாரும் இல்லை.”

“என்னது முடி திருத்துபவர்கள் என்று யாரும் இல்லையா? இப்போ தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்களுக்கு நான் ஹேர் கட் செஞ்சி, தாடியெல்லாம் கூட ட்ரிம் பண்ணினேன். அதுக்குள்ளே அப்படி ஒருத்தரு கிடையவே கிடையாதுங்குறீங்க…?”

“இல்லை… இருக்க முடியாது. முடி திருத்துபவர்கள் என்று எவரும் உலகில் இல்லை. இருந்திருந்தா தெருவுல இப்படி அழுக்கு தலையோட ஷேவ் செய்தே பல நாட்களான பரதேசிகளை பார்க்க முடியுமா? அங்கே பாருங்க… எதிர்ல உங்க கடைக்கு முன்னாடியே ஒருத்தன் அப்படி நிக்கிறதை!”

“ஆனா… முடி திருத்துபவர்கள் இருக்காங்க. அவங்க என்னை தேடி கட்டிங் செய்ய என்கிட்டே வராதப்போ  நான் என்ன செய்ய முடியும் ? இப்படித் தான் இருப்பாங்க!”

“அதே தான்…அது தான் விஷயமே… கடவுள் என்பவரும் இருக்கிறார். அவரிடம் சென்று அவரை வேண்டி வணங்கி நாம் தான் அவர் இன்னருளை பெறவேண்டும். அவரை சரணடைந்து மக்கள் அவரிடம் உதவி கேட்காதவரை உலகில் இது போன்ற துன்பங்கள் இருக்கத்தான் செய்யும்.” என்று கூறிவிட்டு நடையை கட்டினான்.

எத்தனை அற்புதமான கருத்து…. மிகப் பெரிய உண்மை ஒன்றை அந்த கஸ்டமர் அந்த பார்பருக்கு மட்டுமல்ல… நமக்கு அல்லவா புரியவைத்திருகிறார்….!

====================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் யார் தெரியுமா?

பன்னிரு திருமுறைக்கு விழா எடுக்கும் ஒரு தொண்டர்!

எத்தனையோ பேர் தினசரி வாழ்க்கையில் / செய்யும் தொழிலில் / வணிகத்தில் போராடுகிறார்கள். முன்னுக்கு வருகிறார்கள். லட்ச லட்சமாக கோடி கோடியாக சம்பாதித்து மிகப் பெரும் செல்வந்தர்களாகிறார்கள். ஆனால் தாம் சம்பாதித்த செல்வத்தில் இந்த சமுதாயத்திற்காக, ஆன்மீகத்திற்க்காக, நாட்டிற்காக செலவிடுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (குறள் 215)

அதாவது பொதுநலன் விழையும் பேரறிவுடையவனின் செல்வம் ஊருக்கு நடுவே உள்ள குளத்து நீர் எப்படி அனைவருக்கும் பயன்படுகிறதோ அப்படி பயன்படுமாம்.

திருமுறைத் தொண்டர் திரு.என்.சுவாமிநாதன்

அது போல தான் ஈட்டும் பொருளை கொண்டு சிறந்த முறையில் சமயத் தொண்டு செய்துவருபவர் திரு.என் சுவாமிநாதன்.

ஐ.ஓ.பி. வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்ற இவர் அதன் பிறகு ரியல் எஸ்டேட் / கட்டுமான தொழிலில் ஈடுபட்டு, சென்னை நகரில் தி.நகர் உள்ளிட்ட பிரதான இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புக்களை கட்டிவருகிறார். அதில் வரும் வருவாயில் ஒரு பகுதியை கொண்டு ‘வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம்’ என்ற ஒரு அமைப்பை நிறுவி, அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண கான சபாவில் ‘பன்னிரு திருமுறை இசை விழா’ என்ற விழாவை நடத்தி பக்தி இசைக்கு பெரும் தொண்டாற்றுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இசைக்கலைஞர்கள் மற்றும் சொற்பொழிவாளர்களை வைத்து பன்னிரு திருமுறை இசை விழாவை நடத்துவது இவர் வழக்கம். இது வரை எட்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்த இசை விழா நடைபெற்று வந்துள்ளது.

இவ்விழாவில் தமிழ் நாட்டில் உள்ள தலை சிறந்த ஒதுவா மூர்த்திகள், சொற்பொழிவாளர்கள், இசை சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமை வெளிப்படுத்துகின்றனர். விழாவில் வேத விற்பன்னர்களும், வேத ஆகம ஆச்சார்யாள்களும், சிறந்த ஒதுவா மூர்த்திகளும் பதக்கங்களும் பாராட்டுக்களும், பணமும் அளித்து கௌரவிக்கப்படுகின்றனர்.

சமூகத்திற்கும் சமயத்திற்கும் பாடுபடும் உத்தமர்கள் – பன்னிரு திருமுறை விழாவில் ஒரு நெகிழ்ச்சியான காட்சி

வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம் சார்பாக இலவச தேவார வகுப்பும் நடைபெற்று வருகிறது. இதில் பலரும் சேர்ந்து தேவாரம் உள்ளிட்ட திருமுறைகள் கற்று பயன்பெற்று வருகின்றனர்.

இம்மன்றத்தின் நோக்கம் யாதெனில் 1) வேத, ஆகம, தெய்வத் தமிழிசை இம்மூன்றையும் காப்பது. 2) ஓதுவார்களை ஊக்குவித்து கௌரவப்படுத்துவது 3) வேதம் ஆகமம், தெய்வத் தமிழசை மூன்றையும் சொற்பொழிவு மூலம் மக்களிடையே கொண்டு செல்பவர்களை கௌரவிப்பது இவை தான்.

தேவாரத் திருமுறைகளையும் அதன் பெருமைகளையும் அனைவரும் மறந்து வரும் இந்த சூழ்நிலையில் திரு.என்.சுவாமிநாதன் அவர்கள் தனது அமைப்பு மூலம் அவற்றுக்கு விழா நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கௌரவிப்பது மிகப் பெரிய பணி.

சிறப்பு விருந்தினர்களிடம் ஆசி பெறுகிறார் சுவாமிநாதன்

அனைவரும் பயன்பெறவேண்டும் என்று கருதி, கடந்த சில ஆண்டுகளாக நுழைவுக் கட்டணம் எதுவும் இன்றி இலவசமாகவே இந்த விழாக்களை நடத்தி வருகிறார் திரு.சுவாமிநாதன். மேற்கூறிய விழாவிற்கு விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்கள் கிடைத்தாலும், அது மொத்த செலவினத்தில் ஓரளவே ஈடுகட்டுகிறது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட சிறப்பாக  பன்னிரு திருமுறை விழாவை நடத்திவிடுகிறார்.

இவரது நட்பும் அறிமுகமும் கிடைத்ததை பெருமையாக கருதுகிறோம்.

வாழ்க இவர் தொண்டு. ஓங்குக இவரது பக்தி. வளர்க இந்த சமுதாயம்.

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

====================================================

விபத்தில் சிக்கிய கணவர் – கஷ்டப்படும் குடும்பம் – உறவுப் பெண்ணுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும்

சுந்தர் சார்…

என் உறவுப் பெண் ஒருத்தரை தற்செயலாக பஸ்ஸில் வரும் போதுதான் பல வருடங்களுக்கு பிறகு பார்த்தேன். பெயர் ரதி தேவி. அவர்கள்  குடும்பம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. அவளுக்கு இரண்டு குழந்தைகள். அவளுடைய கணவன் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி (இடுப்பிற்கு கீழ் செயல் இழந்து போய்விட்டது) படுத்த படக்கையாக இருக்கிறார். அவளின் குடும்பம் மிகவும் சிரமத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருக்கிறது. அவளுக்காக பிராத்தனை வைக்கும் படி தங்களே கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.
கௌரிமணி
====================================================

புற்றுநோயால் தவிக்கும் மகள் – தாயின் வேதனை

ரைட்மந்த்ரா நண்பர்களுக்கும் ஆசிரியருக்கும் என் வணக்கங்கள்..

என் மகளின் பெயர் சிவசக்தி. வயது 35. அவளுக்கு வாயில் தொண்டை அருகே புற்றுநோய் ஏற்பட்டு தற்போது மிகவும் சிரமப்படுகிறாள். அவள் சிரமப்படுவதை ஒரு தாயாக என்னால் பார்க்க முடியவில்லை. 12 வயதி அவளுக்கு ஒரு பையன் இருக்கிறான். அவளுக்கு தகுந்த சிகிச்சை முறைகளை  ஆலோசித்து வருகிறேன். எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்க இயலவில்லை. அவளுக்கு விரைவில் புற்றுநோய்  பரிபூரண குணமடைய இறைவனை வேண்டிக்கொள்ளும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

– ராணி, கோவை
====================================================

 குடும்ப விளக்கு மரணத்தின் கோரப்பிடியிலிருந்து விடுபடவேண்டும்

என்னுடைய நண்பர் திரு கருணாகரன் வயது 55. சென்னை வளசரவாக்கம் துராக்கியா, மூக்கு கண்ணாடி நிறுவனத்தில் மேனேஜராக இருந்தவர். அவருடைய ஒரே மகனுடைய மனைவி (மருமகள்) வயது 33 அவருக்கு 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டு நாள் முன்னர் சாதாரண ஜுரம் வந்தது ,அப்பல்லோவில் அனுமதித்து ட்ரீட்மென்ட் ஆரம்பித்த அடுத்தநாளே ஒரு கிட்னி செயலிழந்து போனது. பின்பு சுயநினைவற்று கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

டாக்டர்கள் பிழைப்பது 90% கஷ்டம் என சொல்லிவிட்டனர். குடும்பமே அழுது கொண்டுள்ளது. எனக்கு இன்று மலை 2 மணிக்குதான் விவரம் தெரியவந்தது நம் வாசகர்கள் தயவுகூர்ந்து அன்னாரின் குடும்பத்துக்காகவும் பிரார்த்தனை செய்யவேண்டும் என வேண்டுகின்றேன் …

– என்.சந்திரசேகரன்

====================================================

என் பிரார்த்தனை…

சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் படித்தது….மனதை மிகவும் உருக்குவதாக இருந்தது…. எனவே இங்கு …பகிர்ந்துகொள்கிறேன். இவர் குணமடைய பிரார்த்திப்போம்.

விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்த கல்லூரி மாணவி – உயிருக்கு போராடும் பரிதாபம்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் நிவேதிதா (21), அரியலூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ  சேர்ந்தார். விடுதியில் தங்கியிருந்த இவர், இறுதியாண்டு படித்த போது, கடும் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார்.

பல்வேறு டாக்டர்களிடம் காட்டியும் நோய் குணமாகவில்லை. நோய் என்னவென்றே தெரியாத நிலையில், 50 கிலோ எடையிருந்த நிவேதிதா, 25 கிலோவாக  மெலிந்து உயிருக்கு போராடி வருகிறார்.

நிவேதிதா குடும்பம் வறுமையில் வாடுகிறது. சிகிச்சைக்காக அவரது பெற்றோர் வட்டிக்கு ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர். முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலமும் சிகிச்சை பெற முடியவில்லை. இந்நிலையில், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள், நிவேதிதாவை சந்தித்து பல்வேறு உதவிகளை செய்தனர். தகவல் அறிந்த தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெற்றோரிடம் பேசி நிவேதிதாவை சென்னைக்கு அழைத்துவர உத்தரவிட்டார்.

அதன்படி, நிவேதிதாவை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றனர். நிவேதிதா கூறும்போது, நான் கண்டிப்பாக நல்ல நிலையில் திரும்புவேன். எனக்காக உதவியவர்களுக்கு சேவை செய்வேன் என்றார். தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
===================================================

செல்வி கௌரிமணி அவர்களின் உறவினர் திருமதி.ரதி தேவி அவர்களின் கணவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறை நீங்கி அவர் முன்பை போல் பொலிவுடன் எழுந்துவரவும்… குடும்பத் தலைவர் இரு கால்களையும் இழந்து தவிக்கும் நிலையில் செய்வதறியாது திகைக்கும் ஆதரவற்ற அந்த குடும்பத்திற்கு வேண்டிய உதவிகள் .கிடைக்கவும், அவர்கள் சீரும் சிறப்பும் பெற்று வாழவும், இறைவனை வேண்டிக்கொள்வோம். அதே போல, வாசகி ராணி அவர்களின் மகளுக்கு ஏற்பட்டுள்ள வாய் புற்றுநோய் நீங்கி அவர் பரிப்பூறன ஆரோக்கியம் பெற்று நிம்மதியாக சந்தோஷமாக வாழவும் இறைவனை வேண்டிக்கொள்வோம். அதே போல கொடுநோயின் பிடியில் சிக்கி தவிக்கும் திரு.கருணாகரன் அவர்களின் மருமகள், விரைவில் நலம்பெற்று வீடு திரும்பவேண்டும். அவர்தம் குடும்பம் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கவேண்டும்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgமுகம் தெரியாத அந்த அரியலூரை சேர்ந்த சகோதரி நிவேதிதாவுக்கு ஏற்பட்டுள்ள விபரீத உடல்நலக்குறை இருந்த சுவடு தெரியாமல் நீங்கி அவர் நலம் பெதூர் வாழ்வும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கு அந்த பெண்ணுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவும் பிரார்த்திப்போம். அவருக்கு உதவிகள் செய்து சென்னை அழைத்து வந்து மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்த அனைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

============================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : செப்டம்பர் 8, 2013 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் :
Shivatemples.com திரு.நாராயணசாமி

14 thoughts on “கடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்? Rightmantra Prayer Club

  1. வணக்கத்திற்குரிய சுந்தர் அவர்களுக்கு,

    எங்கும் எதிலும் எப்பொழுதும் கடவுளை காணும் உங்களின் உயரிய பதிப்பிற்கு பல பல நன்றிகள்.

  2. கடவுள் என்பவரும் இருக்கிறார். அவரிடம் சென்று அவரை வேண்டி வணங்கி நாம் தான் அவர் இன்னருளை பெறவேண்டும். அவரை சரணடைந்து மக்கள் அவரிடம் உதவி கேட்காதவரை உலகில் இது போன்ற துன்பங்கள் இருக்கத்தான் செய்யும்.”

    செல்வி கௌரிமணி அவர்களின் உறவினர் திருமதி.ரதி தேவி அவர்களின் கணவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறை நீங்கி அவர் முன்பை போல் பொலிவுடன் எழுந்துவரவும்… குடும்பத் தலைவர் இரு கால்களையும் இழந்து தவிக்கும் நிலையில் செய்வதறியாது திகைக்கும் ஆதரவற்ற அந்த குடும்பத்திற்கு வேண்டிய உதவிகள் .கிடைக்கவும், அவர்கள் சீரும் சிறப்பும் பெற்று வாழவும், இறைவனை வேண்டிக்கொள்வோம். அதே போல, வாசகி ராணி அவர்களின் மகளுக்கு ஏற்பட்டுள்ள வாய் புற்றுநோய் நீங்கி அவர் பரிப்பூறன ஆரோக்கியம் பெற்று நிம்மதியாக சந்தோஷமாக வாழவும் இறைவனை வேண்டிக்கொள்வோம்.

    முகம் தெரியாத அந்த அரியலூரை சேர்ந்த சகோதரி நிவேதிதாவுக்கு ஏற்பட்டுள்ள விபரீத உடல்நலக்குறை இருந்த சுவடு தெரியாமல் நீங்கி அவர் நலம் பெர வாழ்வும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கு அந்த பெண்ணுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவும் பிரார்த்திப்போம்…

    அதேபோல் என்னுடைய நண்பர் திரு கருணாகரன் வயது 55. சென்னை வளசரவாக்கம் துராக்கியா, மூக்கு கண்ணாடி நிறுவனத்தில் மேனேஜராக இருந்தவர். அவருடைய ஒரே மகனுடைய மனைவி (மருமகள்) வயது 33 அவருக்கு 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டு நாள் முன்னர் சாதாரண ஜுரம் வந்தது ,அப்பல்லோவில் அனுமதித்து ட்ரீட்மென்ட் ஆரம்பித்த அடுத்தநாளே ஒரு கிட்னி செயலிழந்து போனது. பின்பு சுயநினைவற்று கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

    டாக்டர்கள் பிழைப்பது 90% கஷ்டம் என சொல்லிவிட்டனர். குடும்பமே அழுது கொண்டுள்ளது. எனக்கு இன்று மலை 2 மணிக்குதான் விவரம் தெரியவந்தது நம் வாசகர்கள் தயவுகூர்ந்து அன்னாரின் குடும்பத்துக்காகவும் பிரார்த்தனை செய்யவேண்டும் என வேண்டுகின்றேன்.

    – என்.சந்திரசேகரன்

  3. செல்வி கௌரிமணி அவர்களின் உறவினர் திருமதி.ரதி தேவி அவர்களின் கணவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு நீங்கி அவர் முன்பை போல் பொலிவுடன் எழுந்துவரவும்… குடும்பத் தலைவர் இரு கால்களையும் இழந்து தவிக்கும் நிலையில் செய்வதறியாது திகைக்கும் ஆதரவற்ற அந்த குடும்பத்திற்கு வேண்டிய உதவிகள் கிடைக்கவும், அவர்கள் சீரும் சிறப்பும் பெற்று வாழவும், இறைவனை வேண்டிக்கொள்வோம். அதே போல, வாசகி ராணி அவர்களின் மகளுக்கு ஏற்பட்டுள்ள வாய் புற்றுநோய் நீங்கி அவர் பரிப்பூறன ஆரோக்கியம் பெற்று நிம்மதியாக சந்தோஷமாக வாழவும் இறைவனை வேண்டிக்கொள்வோம்.

    அரியலூரை சேர்ந்த சகோதரி நிவேதிதாவுக்கு ஏற்பட்டுள்ள விபரீத உடல்நலக்குறை இருந்த சுவடு தெரியாமல் நீங்கி அவர் நலம் பெதூர் வாழ்வும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கு அந்த பெண்ணுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவும் பிரார்த்திப்போம்.

    மற்றும் திரு.சந்திரசேகர் அவர்களுடைய நண்பர் திரு.கருணாகரன் அவர்களின் குடும்பத்துக்காகவும் பிரார்த்திப்போம்.

  4. பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்றுள்ள அனைவரின் பிரார்த்தனைகளும் நிச்சயம் நிறைவேறும். அவசரமாக நண்பர் சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ள திரு.கருணாகரன் அவர்களின் மருமகளுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்வோம் .

    மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திருமுறைத் தொண்டர் திரு.என்.சுவாமிநாதன் அவர்களின் ஆசியும் நமக்கு கூடுதல் பலம். எல்லோரும் நம்பிகையுடன் பிரார்த்தனை செய்வோம் .

    ஒரு மகிழ்ச்சியான செய்தி:

    எனது நண்பர் தேவன் அவர்கள் எங்கள் கம்பெனி வாசலில் சில மாதங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளானார். அவருக்காக நமது பிரார்த்தனை கிளப் பகுதியில் பிரார்த்தனை எனது சார்பாக வைத்தது நினைவிருக்கலாம்.

    http://rightmantra.com/?p=5170

    அவர் தற்போது பூரண குணம் அடைந்து (06/9/13 வெள்ளி கிழமை) நேற்று முதல் பணிக்கு திரும்பி விட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அவர் நமது தளத்திற்கு மகிழ்ச்சியும், நன்றியினையும் தெரிவிதுக்கொன்டுள்ளார் . அவருக்காக பிரார்த்தனை செய்த http://rightmantra.com/ நண்பர்களுக்கும் சுந்தர் ஜிக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் .

    –மனோகர்

  5. இந்த வாரம் அனைவரது பிராத்தனைகளும் இறைவன் அருளாம் நிறைவேறி அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியோடும் வாழ ஆண்டவனை பிராத்திக்கிறேன்

  6. இந்த வார பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்றுள்ள எல்லோரது பிரார்த்தனையும் மகா பெரியவா அருளால் பூரண குணமடைய பிரார்த்தனை செய்வோம்.
    திரு. கருணாகரன் அவர்கள் மருமகள் கோமா கட்டத்தில் இருந்து விடுபட்டு நல்லபடியா குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல நம் அப்பாவிடம் மிகவும் வேண்டிகொள்கிறேன்.

  7. சுந்தர்ஜி,

    இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு.சுவாமிநாதன் அவர்களுக்கு நம் தளம் சார்பாக தலை வணங்கி நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவரைப்போல் இறைபணியில் உள்ள நல்ல உள்ளங்களை நாம் பெற அந்த ஈசன் நமக்கு தங்கள் மூலம் அருள்கிறார். வருடா வருடம் பன்னிரு திருமுறை இசை விழாவை நடத்துவது என்பது அரிதான காரியமே.

    இந்த வாரம் பிரார்த்தனைக்கு அனுப்பிய அனைவரும் நலம் பெற நாம் அனைவரும் பிரார்த்திப்போம் . நீங்கள் மேற்சொன்ன கதை போல நாம் தேடி போகும்போது இறைவன் நமக்கு நிச்சயம் இறங்கி வருவார். சகோதரர் மனோகரன் மேற்சொன்னதே அதற்கு ஒரு சாட்சி . நன்றி

  8. சுந்தர் சார்,
    எல்லோரும் நலம் பெற வேண்டிகொள்கிறோம். மனோகர் சாரின் நண்பர் குணம் அடைந்ததை போல் இவர்களும் மகா பெரியவாவின் ஆசியால் குணம் அடைய பிரார்த்திப்போம்.
    நன்றியுடன் அருண்.

  9. நலம் பெற வேண்டும் பகுதில் வந்த அனைவரும் நலம் பெற நான் கடவுளை வேண்டிகொள்கிறேன்

  10. ஆயிரம் நல்ல மனங்கள் சேர்ந்து செய்யும் கூட்டுப் பிரார்த்தனைக்கு நிச்சயம் நல்ல பலன் கிட்டும். இதனால் எத்தனையோ Miracle அதிசயங்கள் தோன்ற வாய்ப்பு உண்டு.

    அன்பே சிவம்

  11. மேலே கூறப்பட்டுள்ள ஒவ்வொரு பிரார்த்தனை கோரிக்கைகளும் நம் மனதை உருக்குவதாக உள்ளது

    பிரார்த்தனைகள் நிறைவேறி அவரவர் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் ஆரோக்கியமும் என்றென்றும் நிலைத்திட எல்லாம் வல்ல பரம்பொருளிடம் மன்றாடி வேண்டிடுவோம்

    தான் தனது என்று எண்ணும் இந்த காலகட்டத்தில் திரு சுவாமிநாதன் அவர்களின் தொண்டு போற்றுதலுக்குரியது – அவர்தம் பணி சிறந்திடவும் திருத்தொண்டு தொடர்ந்திடவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்

    வாழ்க வளமுடன் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *