ஒன்று…. ஆடி ஸ்பெஷல் குறுந்தொடர் தளத்தில் துவக்கியாகிவிட்டது. குறைந்தது வாரத்துக்கு ஒரு பதிவாவது போடவேண்டும்.
சும்மா அரைத்த மாவையே அரைக்காமல் புதிதாக ஏதேனும் நம் வாசகர்களுக்கு சொல்லவேண்டும. ஏதாவது சக்திமிக்க அதே சமயம் அதிகம் அறியப்படாத ஆலயத்திற்கு செல்லவேண்டும் என்று ஆசை. அப்போது மனதில் தோன்றியது தான் சிறு வயதில் நாம் சென்ற மத்தூர் மஹிஷாசுரமர்தினி ஆலயம். (திருத்தணி – திருப்பதி நெடுஞ்சாலையில், பொன்பாடி இரயில் நிலையத்தில் இருந்து மேற்கே அமைந்துள்ளது மத்தூர் மஹிஷாசுரமர்தினி அம்மன் ஆலயம்).
****************************************************************************************
இந்தப் பதிவை தொடர்வதற்கு முன்பு இது தொடர்பான முந்தைய பதிவை முதலில் படிக்கவும்:
திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)
****************************************************************************************
எத்தனையோ அம்மன் கோவில்கள் இருந்தாலும் இந்த ஆலயம் ஏன் மனதுக்குள் தோன்றியது என்று தெரியாது. ஆனால், மத்தூரை பற்றிய சிந்தனை வந்தவுடன் அங்கு நம் ஆடி ஸ்பெஷல் பதிவுக்காக செல்லவேண்டும் என்கிற ஆசை அரும்பிவிட்டது. செல்லவேண்டும் என்கிற ஆசை தான் அரும்பியதே தவிர எப்போது செல்லவேண்டும், எப்படி செல்லவேண்டும் யாரை உடன் அழைத்துச் செல்லலாம் என்றெல்லாம் தீர்மானமாகவில்லை. ஏனெனில் அடுத்தடுத்து வார இறுதிகளில் நமக்கு பல்வேறு கமிட்மெண்ட்டுகள் இருந்தன.
இரண்டு…. கோ-சம்ரட்சணத்திற்கு வேறு ஒரு கோவிலை புதிதாக தேர்ந்தெடுக்கவேண்டும்.
தற்போது மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலிலும் நூம்பல் அகத்தீஸ்வரர் கோவிலிலும் கோ-சம்ரட்சணம் செய்து வருகிறோம். நூம்பலில் வைக்கோல் + தீவனம் இரண்டுமே அளித்து வருகிறோம். நூம்பல் கோவிலுக்கு வைக்கோல் மட்டும் இனி அளித்துவிட்டு தீவனத்திற்கு வேறு கோவில் (சில பல காரணங்களால்) தேர்ந்தெடுக்க முடிவு செய்திருந்தோம். அடுத்தடுத்து இரண்டு மூன்று முறை நாம் நூம்பல் சென்றபோது இந்த எண்ணம் தோன்றியது. (இங்கே பசுக்களை மேய்ச்சலுக்கு அனுப்பிவிடுகிறார்கள்.) எனவே புதிய ஆலயத்தை தேர்ந்தெடுக்கவேண்டும் என்கிற அவசியம் ஏற்பட்டது.
பிரபல கோ சாலைகளில் கோ-சம்ரட்சணம் செய்யலாம். ஆனால் அதில் நமக்கு விருப்பமில்லை.
"
கோ-சம்ரட்சணத்திற்கு ஏற்றதொரு ஆலயத்தை தேர்ந்தெடுப்பது அத்தனை சுலபமான விஷயமா என்ன ? அதுவும் நமது CRITERIA வுக்குள் அந்த கோவில் அடங்குவது என்பது எளிதல்ல. உண்மையில் பசுக்களுக்கு தீவனத்தின் தேவையுள்ள நல்ல ஆலயமாக, பசுக்களை சும்மா கடமைக்காக பராமரிக்காமல் நன்கு பார்த்துக்கொள்கிற ஆலயமாக இருக்கவேண்டும். பாலை வைத்து வியாபாரம் செய்யக்கூடாது. இப்படி பல விஷயங்கள் உள்ளன.
பொதுவாக ஒரு ஆலயத்தில் நான்கைந்து பசுக்கள் இருந்தால் அனைத்துமே கறவைப் பசுக்களாக இருக்காது. கறவை நின்று போன பசுக்களும் இருக்கும். இப்படி பல விஷயங்கள் உள்ளன.
இதனிடையே, நம்மை இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு நாள் நண்பர் ஸ்ரீராமுலு தொடர்புகொண்டார். தமது குழுவினருடன் தான் திருமலைக்கு பாதயாத்திரை புறப்படுவதாகவும் இதையொட்டி வீட்டில் அடியார்கள் பங்குபெறும் பஜனைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவசியம் வந்து கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
(Check : ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!)
பஜனைக்கும் நாமசங்கீர்த்தனத்திற்கும் தனி சக்தி உண்டு. உங்கள் கிரகத்தில் அடிக்கடி இது நடைபெற்றால் மிகவும் நல்லது. இல்லையா அது நடைபெறும் இடங்களிலாவது அடிக்கடி தலையை காட்டிவிட்டு வரவேண்டும்.
எனவே அவர் அழைத்த நாளன்று, (சேக்கிழார் மணிமண்டபத்தில் நாம் உழவாரப்பணி செய்த நாள் அன்று) மாலை மதனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீராமுலு அவர்களின் வீட்டுக்கு சென்றோம்.
அவரது பஜனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாதயாத்திரையை தலைமையேற்று நடத்திச் செல்லும் குரு திரு.பாபு என்பவர் மற்றும் ஸ்ரீராமுலுவின் மார்கழி மாத பஜனைக்குழு உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
நமது முகநூலில் அறிமுகமான திருமதி.உஷா விஸ்வநாதன் அம்மா அவர்களையும் அங்கே சந்திக்க நேர்ந்தது. அவர்கள் ஸ்ரீராமுலு அவர்களின் குடும்ப நண்பர்.
பஜனைக்குழுவினர் சுமார் ஒரு மணிநேரம் பல்வேறு பக்தி பாடல்கள் பாடினர். நாம் இரண்டு பாடல்கள் பாடினோம். ஒன்று அம்மன் பாடல் மற்றொன்று நாராயண மந்திரத்தின் பெருமையை விளக்கும் பாடல்.
முடிவில், ஸ்ரீராமுலு அவர்களின் பூஜையறையை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. பூஜை அறையில் இருந்த ஏழுமலையான் திருவுருவப்படத்திற்கு மலர்களை போட்டுவிட்டு நமஸ்கரித்தோம்.
இறுதியாக சுடச் சுட கேசரியும் கொண்டைக்கடலை சுண்டலும். நம்பினால் நம்புங்கள்… கொஞ்சம்… கொஞ்சம் தான் நாம் சாப்பிட்டோம். (வீட்டுக்கு தனியாக பார்சல் கட்டி தந்துவிட்டார் ஸ்ரீராமுலு!!!!).
புறப்படும் முன் அவரிடம் ஆசிபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.
ஜூலை 26, சனிக்கிழமை காலை பூவிருந்தவல்லி வரதராஜப் பெருமாள் கோவிலிலிருந்து தாம் திருமலைக்கு யாத்திரை புறப்படுவதாகவும் நாம் அவசியம் வந்திருந்து வழியனுப்பவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆஹா.. நாம் தான் பாதயாத்திரை செல்லவில்லை. செல்பவர்களை வழியனுப்பவாவது வாய்ப்பு கிடைக்கிறதே என்று சந்தோஷப்பட்டோம்.
ஜூலை 26 சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் பூவிருந்தவல்லி வரதராஜப் பெருமாள் கோவில் சென்றிருந்தோம்.
மிகவும் பழமையான கோவில் இது. இங்குள்ள தாயாரின் பெயர் தான் பூவிருந்தவல்லி தாயார். இவர் பெயர் தான் ஊருக்கு சூட்டப்பட்டு பூவிருந்தவல்லி என்று அழைக்கப்படலாயிற்று.
நாம் சென்ற நேரம் யாத்திரை குழுவினர் ஒருவர் பின் ஒருவராக வந்துகொண்டிருந்தனர். அந்தக் காலை நேரம், கோவில் முழுதும் பாதயாத்திரை குழுவினரால் நிரம்பியிருந்தது.
ஸ்ரீராமுலு அவர்களை தேடிச் சென்று அவர் முன்னாள் நின்றோம்.
“வாங்க சுந்தர் சார்… வாங்க… நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்”
ஏற்பாடுகள் எல்லாம் எந்தளவு இருக்கிறது, நாம் ஏதேனும் உதவவேண்டுமா என்று கேட்டோம்.
எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது என்றும் நாம் இருந்து பூஜை முடிந்தவுடன் அடியார்களுடன் சேர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு தான் கிளம்பவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“சரி… நீங்க புறப்படுறதுக்கான வேலையை பாருங்க… நான் கோவிலை சுத்தி பார்த்துவிட்டு வந்துடுறேன்” என்றோம்.
சொல்லிவிட்டு சுவாமியை தரிசித்துவிட்டு கோவிலை சுற்றிப் பார்த்தோம். மிகவும் அழகான கோவில் என்பதால் நமது காமிராவுக்கு நல்ல தீனி.
கொடிமரத்துக்கு அப்பால், ஒரு வேலிக்குள் இரண்டு பசுக்கள் மேய்ந்துகொண்டிருந்தன.
இந்த பக்கம் ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள் சன்னதிக்கு பக்கவாட்டில் கோ-சாலை. இதற்கு முன் இந்த ஆலயத்திற்கு வந்தோம். அப்போது இங்கு கோ-சாலை இருக்கவில்லை. தற்போது தான் அமைத்திருப்பார்கள் போல.
கோ-சாலை பரமாரிப்பவர் யார் என்று விசாரித்ததில் அங்கிருந்த ஒரு பெரியவரை காண்பித்தார்கள். அவரிடம் பேச்சு கொடுத்ததில் அவர் தான் கோ-சாலையை பரமாரிப்பவர் என்று தெரிந்தது.
மிகவும் ஆத்மார்த்தமாக பராமரிப்பு பணியை செய்து வந்தது கோ-சாலை இருந்த நேர்த்தியை பார்க்கும்போதே புரிந்தது. மொத்தம் 20 பசுக்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.
ஆனால் “கோ-சாலையில் இருந்தது மூன்று அல்லது நான்கு கொடி மரத்திற்கு அருகே மேய்ந்துகொண்டிருந்தது இரண்டு. ஆக மொத்தம் ஆறு பசுக்கள் தானே?” என்று கேட்டோம்.
“என் கூட வாங்க” என்று கூறி பின்புறம் அழைத்துச் சென்றவர், அங்கே மதில் சுவற்றுக்கு பின்புறம் இருந்த காலி மனையை காண்பித்தார்.
எட்டிப் பார்த்தால் அங்கு சுமார் 10 பசுக்கள் இருந்தன. எங்களை பார்த்ததும் எங்களை நோக்கி வந்தன.
“என் குரல் கேட்டாலோ எல்லாம் வந்துடும்” என்றார்.
[pulledquote]இப்படி ஒரு கோ-சாலையைத் தான் தேடிக் கொண்டிருந்தோம். ஏனெனில் ஏற்கனவே சிவலாயத்தில் கோ-சம்ரட்சணம் நடைபெற்று வருகிறது. தற்போது பெருமாள் கோவிலிலும் செய்ய ஒரு அருமையான வாய்ப்பு![/pulledquote]
“அவசியம் சார்… தீவனம் வைக்கோல் இதெல்லாம் தேவை.”
“வாங்கித் தர்றதா இருந்தா எப்படி?”
“மெயின்ரோட்ல தீவனக் கடை இருக்கு. அங்கே பணம் கட்டிட்டா போதும். அவங்க கொண்டு வந்து போட்டுடுவாங்க”
“சரி… இத்தனை மாடு இருக்கே இந்த பால் எல்லாம் என்ன பண்ணுவீங்க?”
“அத்தனை மாடும் பால் கறக்காது சார். ஒன்னு ரெண்டு தான் கறக்கும்.”
மீண்டும் கோ-சாலைக்கு வந்தோம். மிகவும் சுத்தமாக இருந்தது. இப்படி ஒரு கோ-சாலையைத் தான் தேடிக்கொண்டிருந்தோம். ஏனெனில் ஏற்கனவே சிவலாயத்தில் கோ-சம்ரட்சணம் நடைபெற்று வருகிறது. தற்போது பெருமாள் கோவிலிலும் செய்ய ஒரு அருமையான வாய்ப்பு.
உள்ளே எட்டிப் பார்த்ததில், ஒரு பசுவின் காலடியில் புத்தம் புதிய கன்றுக்குட்டி. பிறந்து மூன்று நாட்கள் தான் ஆனதாம். ஆண் கன்று.
கன்றுக் குட்டி கொள்ளை அழகு. உள்ளே செல்லாமல் வெளியே இருந்தபடியே நமது சிறிது நேரம் கொஞ்சினோம். (இந்த பசுக்கள் நம்மிடம் இன்னும் பழகவில்லை. இன்னும் இரண்டு மூன்று விசிட்களில் ஃபிரெண்ட்ஸாகிவிடுவோம்.)
“அடுத்த மாதம் முதல் இங்கு தீவனம் ஏற்பாடு செய்கிறேன். போகப் போக அதிகரிக்கிறேன்” என்றோம்.
“தாராளமாக சார்…!”
அவருக்கு ஒரே சந்தோஷம்.
"
வெளியே கொடிமரத்திற்கு அருகில் மேய்ந்து கொண்டிருக்கும் பசு தான் மூத்த பசுவாம். கிட்டத்தட்ட 10 கன்றுகளுக்கும் மேல் போட்டுள்ளதாம். காலை விஸ்வரூப தரிசனத்திற்கு இந்த பசு தான் செல்கிறதாம்.
பசுவை பார்த்து கொஞ்ச நேரம் கண்கள் மூடி தியானித்தோம்.
ஸர்வ காமதுகே தேவி சர்வ தீர்த் தாபிஷேகினீ
பாவனே ஸுரபிச்ரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே
நீங்களும் இவளை பார்த்துவிட்டு ஒரு முறை சொல்லுங்கள்.
கடந்த மார்கழி மாதம் நாம் தினமும் ஒரு கோவில் சென்றோம் அல்லவா? அப்போது ஒரு நாள் காலை இந்த கோவிலுக்கு சென்றிருந்தோம். அப்போது விஸ்வரூப தரிசனத்தில் எடுக்கப்பட்ட கோ-பூஜை புகைப்படங்கள் இரண்டை கீழே தந்திருக்கிறோம். அவர் குறிப்பிட்ட அந்த பசு கன்றுடன் இருப்பதை கவனியுங்கள்…
இவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே பாதயாத்திரை குழுவினர் புறப்படத் தயாரானார்கள். அனைவரும் வந்து சேர்ந்த பின்னர், சுவாமியை தரிசனம் செய்துவிட்டு கோவிந்த நாமாவை கூறிக்கொண்டே மூன்று முறை கோவிலை வலம் வந்தனர்.
9.00 மணிக்கு ராகு காலம் துவங்குகிற படியால் அதற்கு முன் புறப்படவேண்டும் என்கிற பதைபதைப்பு அனைவரிடமும் இருந்தது. அடுத்து உடனடியாக யாத்ரீகர்களுக்கு அன்னம் பாலிப்பு.
கிட்டத்தட்ட ஒரு 200 பேர் சாப்பிடும் அளவிற்கு வெண்பொங்கலும் சாம்பாரும் சூடாக இருந்தது.
யாத்ரீகர்கள் மட்டுமல்லாது அந்நேரம் கோவிலுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் இந்த பிரசாதம் கிடைத்தது.
அனைவரும் வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிட, நாமும் திரு.ஸ்ரீராமுலுவும் வாங்கிக்கொண்டு கோவில் தரையில் அருகருகே சாப்பிட அமர்ந்தோம்.
இது போன்று நாம் செய்யவேண்டும் என்றால் (அன்னம்பாலிப்பு) எவ்வளவு செலவாகும் என்று கேட்டோம். அது வேறு ஒருவர் ஏற்பாடு என்றும் விசாரித்துவிட்டு சொல்வதாகவும் சொன்னார்.
அடுத்த முறை நாம் அன்னம்பாலிப்பு செய்யவேண்டும் என்று ஒரு ஆசை.
சாப்பிடும்போது அவர் தலைமையேற்று நடத்திய பிரார்த்தனை பற்றி குறிப்பிட்டு அவர்களுக்காக மீண்டும் ஒரு முறை ஏழுமலையானிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்ரீராமுலு அவர்கள் சொன்ன தகவல் தான் முந்தைய பதிவில் படித்த ‘பிராமணப்பட்டு அம்மன்’ சம்பவம்.
அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன், பின்னர் கொடி மரத்திற்கு அருகில் சூடம் ஏற்றி நமஸ்கரித்துவிட்டு, குழுவினர் புறப்பட்டனர்.
நாம் வேகவேகமாக ஸ்ரீராமுலு அவர்களிடம் சென்றோம்.
“சார்… உங்களையும் யாத்திரையை தலைமையேற்று நடத்தும் உங்கள் குரு திரு.பாபு அவர்களையும் என் வாசகர்கள் சார்பாக கௌரவிக்க ஆசைப்படுகிறேன்”
“எதுக்கு சார் இதெல்லாம்?” மிகவும் சங்கோஜப்பட்டார்.
“இது ஏதோ எங்க சந்தோஷத்துக்கு சார்… தவிர உங்களை கௌரவிக்கவேண்டியது எங்க கடமை”
“அப்போ வெளியே கோபுரத்துக்கு கீழே வெச்சு பண்ணுங்க சார்” என்றார்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்மல்லாண்ட
திண்தோள் மணிவண்ணா!
உன்செவ்வடி செவ்விதிருக் காப்பு
என்று பல்லாண்டு பாடியபடியே, தயாராக இருந்த இரண்டு பொன்னாடைகளில் ஒன்றை திரு.ஸ்ரீராமுலு அவர்களிடம் கொடுத்து முதலில் அவரது குருவுக்கு அவரைகொண்டே போடச் செய்தோம்.
“கோவிந்தா… கோவிந்தா” நாமம் தான் எங்கும் ஒலித்தது.
பின்னர் நாம் ஸ்ரீராமுலு அவர்களுக்கு நாம் போட விரும்பி சுற்றும் முற்றும் பார்த்தோம்… நமது காமிராவை எதிரே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, நாம் பொன்னாடை போர்த்துவதை படமெடுக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
பின்னர் அப்படியே சாஷ்டாங்கமாக அவர்கள் கால்களில் அப்படியே விழுந்து வணங்கி ஆசிபெற்றோம்.
(பாதயாத்திரை செல்பவர்களை கண்டால் விழுந்து வணங்கவேண்டும்!)
“பெருமாளோட அருள் உங்களுக்கு என்னைக்கும் உண்டு சார்” என்றார்.
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
குழுவினர் அனைவரிடம் விடைபெற்றுக்கொண்டு, மேலும் ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்று கேட்டோம்.
“நீங்க வந்ததே சந்தோஷம் சார்… எதுவும் வேண்டாம்… ரொம்ப நன்றி” என்றனர்.
“இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததற்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும் நீங்கள் அல்ல!” என்று கூறிவிட்டு மீண்டும் ஒருமுறை கோபுர தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டோம்.
அலுவலகத்துக்கு புறப்பட்டு வந்து முகநூலில் முதலில் இதை பகிரலாம் என்று மெமரி கார்டை கார்ட் ரீடரில் சொருகி புகைப்படங்களை பார்த்தால், எல்லாப் புகைப்படங்களும் இருக்கிறது. நாம் ஸ்ரீராமுலு அவர்களை கௌரவிக்கும் படத்தை தவிர.
நம்மிடம் காமிராவை வாங்கிய நபர், அதை எடுக்கவே இல்லை என்று அப்போது தான் புரிந்தது. அவருக்கு புகைப்படம் எடுக்கத் தெரியவில்லை. அதை நம்மிடம் சொல்லவும் இல்லை. ஏதோ காமிராவை வாங்கி எடுக்கத் தெரியாமல் அதை ஆப்பரேட் செய்துவிட்டு திருப்பி கொடுத்துவிட்டார் என்பது புரிந்தது.
நமது சந்தோஷமே இது போன்ற அடியார்களுடன் எடுக்கும் புகைப்படங்களும் சாதனையாளர்களுடன் எடுக்கும் புகைப்படங்களும் தான். நமக்கு எப்படி இருக்கும்?
ஆசை ஆசையாய் அலுவலகம் வந்து கடைசியில் ஏமாற்றத்தில் தள்ளப்பட்டது ஒரு மாதிரி இருந்தது.
இதற்கு பின்னணியில் ஏதோ காரணம் இருக்கிறது! ஆனால், அது என்ன என்று மட்டும் புரியவில்லை.
பிறகு தான் புரிந்தது அது மத்தூர் மகிஷாஷுர மர்த்தினி நடத்திய லீலை என்று.
(மேலே நாம் கடைசியாக அளித்துள்ள அடியார்களுக்கு உணவு & மளிகைப் பொருட்களை எடுத்துச் செல்லும் வேன் புகைப்படத்தை பாருங்கள். புகைப்படங்களை தரவிறக்கம் செய்தபோது தான் அதை கவனித்தோம்!)
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்,
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்,
போற்றாத நாளில்லை தாயே உன்னை,
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை
எப்படி? இந்த நிகழ்வுக்கும் மத்தூருக்கும் என்ன தொடர்பு?
– விடை அடுத்த பதிவில்…!
================================================================
Also check :
திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)
ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)
எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ? ஆடி ஸ்பெஷல் !
அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!
ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
அன்னையின் அருள் வெளிப்பட்ட ‘தை அமாவாசை’ – திருக்கடையூர் கோவில் குருக்கள் கூறும் தகவல்கள்!
சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)
உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1
திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!
வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!
================================================================
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
================================================================
கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!
அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?
================================================================
[END]
வாவ்.. . படிக்க படிக்க ஆனந்தம் . பெருமாள் கோவிலிலும் தங்களின் கோஷால சம்ரோக்ஷனம் தொடரட்டும் .
இந்த பதிவை படிக்கும் பொழுது மனதில் இனம் புரியாத ஓர் அதிர்வலை ஏற்பட்டது .
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
வாழ்க வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
Sir,
Arumayaana padhivu, remaining part eppo endru waiting.
Tkd
Ranjini.
இன்று நம் தளத்தை திறந்த உடன் இன்ப வெள்ளம் என்றே சொல்ல வேண்டும். நேற்றைய அம்மன் தரிசன மகிழ்ச்சி கடலில் மூழ்கி கொண்டுஇருக்கும் போது..அடுத்த ஆடி ஸ்பெஷல் பதிவு..
ஆடி ஸ்பெஷல் பதிவுகள் அனைத்தும் அருமை. அனைத்துமே வழக்கமான பதிவுகள் அல்ல.ஒவ்வொரு ஆடி ஸ்பெஷல் பதிவும் ஆனந்தம் தான்.
நம் தளம் மூலமாக ஆன்மிகம் மட்டும் கற்றுக்கொள்ளவில்லை.வாழ்தலுக்கான புரிதல்,நெறிகள் என ஒவ்வொன்றாக கற்றுகொள்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.
கோமாதாவை பார்த்து சொல்லிவிட்டோம் .
ஸர்வ காமதுகே தேவி சர்வ தீர்த் தாபிஷேகினீ
பாவனே ஸுரபிச்ரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே
“அம்மன் அருள்” மூலம் தாங்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு அடுத்த பதிவினை நோக்கி காத்திருக்க செய்கிறது.
நன்றி அண்ணா..
சுந்தர்ஜி
தாங்கள் தளத்திற்கு என்று அலுவலகம் தொடங்கியதும் பல முத்தான பதிவுகளும், ஆன்மிக சேவைகளும் அடுத்து அடுத்து அளிப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் சேவைகளில் பங்கு எடுக்க முடியாவிட்டாலும், உங்கள் வளர்ச்சியினையும், விடா முயற்சியினையும் பாராட்டியே தீர வேண்டும்! தங்களுக்கு உதவும் வாசகர்கள் அனைவருக்கும் அதுவே ஒரு பரிகாரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வெறும் பணம் மட்டும் இல்லாமல் களத்தில் இறங்கி அந்த உதவி சரியான நபருக்கு சரியான நேரத்தில் செய்வதில் உங்களுக்கு இணை தாங்கள் தான் ! ஏன் இந்த நேரத்தில் இதை சொல்லுகிறேன் என்றால் தளத்தின் தொடக்க காலம் எமக்கு நினைவு வந்ததால் இப்போதிய வளர்ச்சிக்கு உங்களை பாராட்ட தோன்றியது !
இன்னும் பல சேவைகள் செய்து நீங்களும் தள வாசகர்களும் நன்றாக வாழ எல்லாம் வல்ல மஹா பெரியவா துணை இருக்கட்டும் ! நன்றி