Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

print
நேபாளத்தில் நடைபெற்ற பூகம்பத்தை பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் முகநூலிலும், வாட்ஸ் ஆப்பிலும் சுற்றிவரும் அதே நேரம் சென்ற ஆண்டு இறுதியில் நேபாளத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை பற்றி படிக்க நேர்ந்தது. இந்து மதக் கடவுளான “காதிமாய்“ என்கிற தெய்வத்தின் பெயரில் நேபாளத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 5000 க்கும் மேற்பட்ட எருமைகள் துடிக்க துடிக்க தலை வெட்டப்பட்டு பலியிடப்படுகின்றன. சென்ற நவம்பர் மாத இறுதியில் இந்த உயிர்ப்பலி திருவிழா நடைபெற்று, ஆயிரக்கணக்கான கால்நடைகள் தெய்வத்தின் பெயரால் பலியிடப்பட்டன. இப்படி செய்தால் பொன்னையும் பொருளையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வாரி வழங்குவாளாம் காதிமாய். இதற்கும் அண்மையில் நேபாளத்தை புரட்டிப்போட்ட பூகம்பத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்கிற ஆராய்ச்சியை உங்களிடமே விட்டுவிடுகிறோம்.

Photo coutesy : Reuters
நேபாளத்தில் சென்ற ஆண்டு இறுதியில் ஆயிரக்கணக்கில் பலியிடப்பட்ட எருமைகள்

உயிர்பயத்தில் ஒரு பிராணி அலறுவதையே கேட்க முடியாது… ஆயிரக்கணக்கான கால்நடைகள் ஒரே நேரத்தில் அலறினால்? பூமாதேவி பொறுப்பாளா? பொறுத்து பொறுத்து பார்த்து கடைசியில் பொங்கிவிட்டாள்!

தப்பி ஓட முயற்சிக்கும் கன்று வாலை பிடித்து இழுத்து வெட்டப்படுகிறது...
தப்பி ஓட முயற்சிக்கும் கன்று வாலை பிடித்து இழுத்து வெட்டப்படுகிறது…

இதற்கிடையே நாம் அறிந்தவரை நமது சிற்றறிவுக்கு எட்டியவரை கோவில்களில் கடவுளின் பெயரால் உயிர்ப்பலி கொடுப்பதை இந்து மதம் அனுமதிப்பதே இல்லை. ஆனாலும் காலப்போக்கில் பலர் தங்கள் சொந்த விருப்பங்களை, ஆசைகளை இந்த விஷயத்தில் திணித்து உயிர்ப்பலியை ஒரு முக்கிய சடங்காக்கிவிட்டனர்.

இது தொடர்பாக திருமால் அடியவர்களின் திவ்ய சரிதங்களை கூறும் மஹா பக்த விஜயத்தில் வரும் ஒரு உண்மை கதையை, முற்றிலும் மெருகூட்டி நமது பாணியில் தந்திருக்கிறோம்.

முகம் சுளித்த ஹரி பக்தர்; பதறி ஓடிவந்த காளி!

கவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த மதுராவில் ஹரி வியாசர் என்கிற பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். கலியுகத்தில் இறைவனை சுலபத்தில் அடைய உதவியாக இருக்கும் நாம ஸ்மரணம் தான் இவர் உயிர் மூச்சு. சதாசர்வ காலமும் ஹரி நாமம் சொல்வதில் அளவற்ற ஈடுபாடுடைய இவர் எப்போது “ஹரி சரணம்” “ஹரி சரணம்” என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அதனால் இவருக்கு ‘ஹரி வியாசர்’ என்கிற பெயர் ஏற்பட்டது.

ஒரு முறை இவர் பூரியில் எழுந்தருளியுள்ள ஜகன்னாதரை தரிசிக்க மதுராவிலிருந்து பாத யாத்திரை புறப்பட்டார். அந்த காலங்களில் எல்லாம் யாத்திரை என்றாலே பாத யாத்திரை தான். செல்லும் வழியில் ஒரு வனப்பிரதேசதில் ஒரு அழகிய காட்டாறு குறுக்கிட்டது. ஆற்றின் மறுகரையில் ஒரு மிகப் பெரிய மண்டபம் போன்ற அமைப்பு காணப்பட்டது. ஏதோ கோவில் போல, போய் இறைவனை தரிசித்துவிட்டு ஏதேனும் சாப்பிட கிடைத்தால் சாப்பிட்டுவிட்டு சற்று இளைப்பாறிவிட்டு மீண்டும் நம் பயணத்தை தொடரலாம் என்று கருதிய ஹரி வியாசர் கோவிலுக்குள் சென்றார். உள்ளே சென்ற பிறகு தான் தெரிந்தது அது ஒரு காளி கோவில். உள்ளே அந்த பகுதிவாசிகள் சிலர் ஒரு ஆட்டை குளிப்பாட்டி மஞ்சள் குங்குமம் வைத்து வழிபாடு நடத்திக்கொண்டிருந்தனர். இவர் சென்ற நேரம், வழிபாடு முடிந்து, சரியாக ஆட்டை பலியிடும் நேரம். உயிருக்கு போராடும் அந்த ஆடு எழுப்பிய மரண ஓலம் அந்த பிரதேசம் முழுக்க ‘ம்மே… ம்மே…” பரிதாபகரமாக எதிரொலித்தது.

Kali devi

இதைக் கண்டதும் ஹரி வியாசர் மனம் புழுங்கியது. “சே…சே.. கோவிலுக்குள் இதென்ன கொடுமை…. அறியாமை…” என்று தனக்குள் சொல்லிகொண்டே முகம் சுளித்தபடி வெளியே வந்தார்.

பரம பாகவதரான ஒரு அந்தணர் தனது கோவிலுக்குள் பசியோடு வந்து, சாப்பிடாமல் அருவருப்புடன் செல்வது காளிக்கு தெரிந்தது. ஹரி பக்தரை பட்டினியோடு அனுப்பினால் தனக்கு அது தீராப் பழியை தருமே என்று பதறிய காளி தேவி, தனது சுய உருவோடு அவரை வழிமறித்தாள்.

“ஹரி வியாசரே… என்னுடைய ஆலயத்துக்கு வந்து நீங்கள் இப்படி சாப்பிடாமல் போகலாமா? இருந்து உச்சிக்கால பூஜை முடிந்தவுடன் உணவருந்திவிட்டு செல்லலாம்” என்றாள்.

ஹரி வியாசர் காளி தேவியின் தரிசனம் கிடைத்தது கண்டு மகிழ்ந்தாலும், “தேவி, தங்களது ஆலயத்திலே பிராணிகள் வதை செய்யப்படுவதை தாங்கள் ஏற்று மகிழ்கிறீர்கள். இப்படியொரு கொலைக் களத்திலே படைக்கப்படும் உணவு, உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தாலும் எனக்கு அது ஏற்புடையதல்ல… என்னை மன்னிக்கவேண்டும்” என்றார் மனம்திறந்து.

Tamil-Daily-News_16503107548 (1)
கோவில்களில் நடைபெறும் உயிர்ப் பலி

“இவர்கள் உயிர்ப் பலியை நான் ஏற்றுக்கொண்டு அருள்பாளிக்கிறேன் என்று கருதுவது தவறு. இதை நான் விரும்புவதில்லை. தங்கள் நாவின் ஆசையை தீர்த்துக்கொள்ளவே இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் பழி என் மீது விழுகிறது!” என்றாள் கனிவான குரலில்.

“நீங்கள் விரும்பவில்லையானால், அதை ஏன் தடுக்க முற்படவில்லை? ஒரு குற்றம் நடக்கும்போது அதை தடுக்காமல் பார்த்துக்கொண்டிருப்பது, அந்த குற்றத்தை ஏற்றுகொள்வதாகாதா? எனவே நீங்கள் விரும்பித் தான் உங்கள்  விருப்பத்துடன் தான் இங்கு உயிர்ப் பலி நடக்கிறது. எனவே நான் இங்கே உணவருந்த முடியாது” என்றார் தீர்க்கமாக.

“குழந்தாய்… மக்களுக்கு அறிவாற்றலை கொடுத்து நன்மை தீமைகளை பகுத்துப் பார்க்கும் சுதந்திரமான சிந்தனையையும் நாம் கொடுத்தோம். அவர்கள் அதை தவறான வழியில் பயன்படுத்தினால் நான் என்ன செய்ய முடியும்? அறிவைக் கொடுப்பதும், அதை நல்லவிதத்தில் பயன்படுத்துகிறவர்களுக்கு நன்மைகளை செய்வதும் தவறான வழிகளில் செல்பவர்களை தண்டிப்பதும் எம் கடமை. ஆனால், மதி கெட்டு தவறான வழியில் செல்பவர்களை தடுத்து நல்ல வழியிலே திருப்ப வேண்டியது உன் போன்ற உத்தம சீலர்களின் கடமை. பலியை நிறுத்த நீயே முயற்சி செய்” என்றாள்.

“அம்மா.. பாரதநாடு முழுதும் உயிர்ப்பலி உன் பெயரை சொல்லி நடைபெறுகிறது. அதை நான் ஒருவன் நிறுத்துவது என்பது பெரிய செயல். என்றாலும் நீங்களே இதை ஏற்காமல் ஏன் மறுக்கக்கூடாது?” என்றார் ஹரி வியாசர்.

அதற்கு தேவி, “இனி இந்த கோவிலில் உயிர்ப் பலி நடக்காமல் செய்துவிடுகிறேன்” என்று கூறி, அந்த நாட்டு மன்னன் கனவில் தோன்றி, தனது ஆலயத்தில் இனி உயிர்ப் பலி நிகழ்த்தவேண்டாம் என்றும் அதை தான் விரும்பவில்லை என்றும் அதற்கு பதில் பால் பொங்கல் செய்து தமக்கு படைக்கும்படியும் உத்தரவிட்டாள்.

அரசனும் உடனடியாக கோவிலில் உயிர்ப் பலியை தடை செய்து ஆணை வெளியிட்டான். மேலும் தானே கோவிலுக்கு வந்து காளியை வணங்கி, பால் பொங்கல் படைத்து வழிபட்டான்.

அரசனே முன்வந்து பலியை நிறுத்தியதும், தேவியே தனது மனதில் உள்ளவைகளை கொட்டித் தீர்த்ததும் ஹரி வியாசரை நெகிழச் செய்தது. மேலும் சில காலம் அந்த கோவிலில் தங்கினார். பின்னர் மீண்டும் பூரியை நோக்கி தனது யாத்திரையை தொடர்ந்தார். செல்லும் வழியில் உள்ள மற்ற ஊர்களில் கொல்லாமை பற்றி பிரச்சாரம் செய்து, உயிர்பலிகளை நிறுத்தினார்.

ஹரிவியாசர் என்கிற விஷ்ணு பக்தர், இப்படி கொல்லாமையை நிலைநிறுத்தி உயிர்பலியை முடிவுக்கு கொண்டு வந்தது கண்டு சான்றோர்கள் அகமகிழ்ந்தனர். அந்த வழக்கத்தை விட மறுத்த வேறு சிலரோ, “இப்படி செய்வது தெய்வக் குத்தம் ஆகிவிடும்” என்று விதண்டாவாதம் பேசினார்.

ஆனாலும் ஹரி வியாசரே இறுதியில் வென்றார். காலப்போக்கில் அந்த பிரதேசத்தில் புலால் உண்பவர்கள் குறைந்தனர். கால்நடை செல்வங்கள் பெருகி, கழனிகள் செழித்தன. எங்கும் பசுமை தழைத்தோங்கியது. மக்கள் ஆரோக்கியம் பெற்றனர். இதனால் பவானி தேவி மனம் குளிர்ந்து மாதம் மும்மாரி பொழிந்தது.

ஹரி வியாசருக்கு அருள் புரிந்த காளி, இன்றும் பூரி ஜகன்னாதர் கோவிலுக்கு தென் கிழக்கே உள்ள பாலி சாஹி என்னுமிடத்தில் தக்ஷின காளி என்ற பெயரில் விளங்குகிறாள்.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று (குறள் 259)

(பொருள் : நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.)

=========================================================

Also check :

இறைவனுக்கு நிழல் தந்த அன்பு – பெரியகோயில் கட்டும்போது நடைபெற்ற உண்மை சம்பவம் !

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம்

=========================================================

[END]

4 thoughts on “அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

  1. இந்த பதிவை படிக்கும் பொழுது நெஞ்சு பதை பதிக்கிறது. என்ன பாவம் செய்தன இத்தனை எருமை மாடுகளும்.,… ஹரி வியாசர் கதை தெரியாத கதை.

    உயிர் பலி இடுவதை தடுப்பது நம் அரசாங்கத்தின் கடமையாகும்

    நன்றி
    உமா வெங்கட்

  2. வணக்கம்………..கால்நடைகள் பலியிடப்படும் படங்களைப் பார்க்கையில் நம் மனமும் அவற்றுடன் சேர்ந்து அலறுகின்றது………..

    கடவுளின் பெயரால் நடக்கும் உயிர்ப்பலிகளை கண்டு மிகுந்த மனவேதனை எற்படுகிறது…….. குறிப்பிட்டவர்களின் கனவில் காளி தேவி தோன்றி இத்தகைய பலிகளை தடுக்கட்டும்…………

  3. சுந்தர் அண்ணா..

    பொறுத்து பொறுத்து பார்த்து கடைசியில் பொங்கிவிட்டாள்! என்பது தான் உண்மை.
    ஹரி வியாசர் கதையை இணைத்து மிகவும் சிறப்பு.

    மிக்க நன்றி அண்ணா ..

  4. இனி மேல் மாடுகள் உயிர் பலிக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய மிக்க மகிழ்ச்சி

    நமது ஈஎசனின் அருளை என்னவென்று சொல்வது

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *