Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, July 13, 2024
Please specify the group
Home > Featured > ஞானசூரியனும் தியாக சூரியனும் சந்தித்தபோது….! காமராஜர் B’DAY SPL 1

ஞானசூரியனும் தியாக சூரியனும் சந்தித்தபோது….! காமராஜர் B’DAY SPL 1

print
மக்கு நீண்டகாலமாகவே இது பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் இருந்து வந்தது. பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் மகா பெரியவாவை எப்பொழுதாவது சந்தித்திருக்கிறாரா? அவரைப் பற்றி இவரது அபிப்ராயம் என்ன? என்பது தான் அது. குருக்கிருபையால் சமீபத்தில் அதற்கான பதில் கிடைத்தது. அழுத்தந்திருத்தமாகவே. கல்வெட்டில் பொறித்ததை போல…!!

இன்று ஜூலை 15 பெருந்தலைவர்  காமராஜர் அவர்களின் பிறந்த நாள். அதையொட்டி இந்த சிறப்பு பதிவு அளிக்கப்படுகிறது.

Kamarajar Mahaperiya
The photograph is joined for illustrative purpose. Not original photograph. They never posed together.

“எப்போவோ வந்திருக்கணும். இப்போ தான் சந்தர்ப்பம் கிடைச்சது”

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் காஞ்சி மகா சுவாமிகள் கலவையில் தங்கியிருந்தார்கள்.

வேலூரில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த காமராஜர், ஆச்சாரிய சுவாமிகளிடம் பெரும் பக்தி உடையவரும் காங்கிரஸ்காரருமான அரக்கோணம் ராஜகோபால் அவர்களிடம், “நாளைக்கு பெரியவாளை தரிசிக்கணும். அதுக்கு என்ன ஏற்பாடு செய்யணுமோ செய்யுங்க” என்றார். (அரக்கோணத்தில் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்கு நிச்சயம் திரு.ராஜகோபால் அவர்களை தெரிந்திருக்கும். அந்தளவு அரக்கோணத்தில் அவர் பிரபலம்!)

ஸ்ரீ ஸ்வாமிகளிடம் தகவல் நேரில் தெரிவிக்கப்படவில்லையென்றாலும் முகாம் மானேஜர் போன்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. (இப்போதுள்ளது போல, அப்போது தகவல் தொடர்பு சாதனங்கள் கிடையாது. டெலிபோனே ஊருக்கு ஒரு வீட்டில் இருந்தால் பெரிய விஷயம்.)

மறுநாள் மாலை ஆறரை மணி. நல்ல இருட்டு.

கலவை மடத்தின் சுற்றுச் சுவரை கடந்து சென்று, காரை விட்டு இறங்கினார் காமராஜர். இறங்கியதுமே கைகளை உயர்த்திக் கும்பிட்டபடியே, சுவாமிகளை நோக்கிச் சென்றார். கொண்டு வந்திருந்த பழங்களையும் மலர்களையும் பணிவன்புடன் ஆச்சார்யாளிடம் சமர்பித்தார்.

மங்கிய ஒளியில் ஞானசூரியனின் தரிசனம்.

காமராஜர் வணங்கியபடியே நின்றார்.

“எப்போவோ வந்திருக்கணும். இப்போ தான் சந்தர்ப்பம் கிடைச்சது.”

பின் மங்கிய குரலில் சில நேரம் சம்பாஷணை. இறுதியில் பிரசாதமாக பழங்கள் கொடுத்து ஆசீர்வதித்தார் பெரியவர்.

தரிசனம் முடிந்து வேலூருக்கு பயணம்.

உடன் அமர்ந்திருந்த ராஜகோபாலிடம், “இப்படி ஒரு துறவியை நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. கண்களில் என்ன வசீகரம்…! என்ன பிரகாசம்…! மெலிந்த உருவத்தில் என்ன தெய்வீகம்…!” பரவசமாக பேசிக்கொண்டே வந்தார் தலைவர்.

“இப்படி ஒரு துறவியை நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. கண்களில் என்ன வசீகரம்…! என்ன பிரகாசம்…! மெலிந்த உருவத்தில் என்ன தெய்வீகம்…!” பரவசமாக பேசிக்கொண்டே வந்தார் தலைவர்.

பேசவில்லை என்றால் தானே ஆச்சரியம்.

இது எப்படியோ வேறு சில காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கு தெரிந்துவிட்டது.

தலைவருடன் நெருங்கிப் பழகக்கூடியவரும், அவரது அபிமானத்துக்குரிய இளம் காங்கிரஸ்காரர் ஒருவர், ‘இன்னைக்கு சாயங்காலம் இங்கே பக்கத்திலுள இன்னொரு சாமியாரை பார்க்க வரணும்!’ என்றார்.

ஆச்சாரிய சுவாமிகளிடம் தனக்கிருக்கும் பக்தியின் காரணமாக அரக்கோணம் ராஜகோபால், தலைவரை கலவைக்கு அழைத்துக்கொண்டு போய் மகா பெரியவாளை தரிசிக்க வைத்துவிட்டார்’ என்கிற உள்கிடக்கை அவருடைய பேச்சில் தெரிந்தது.

‘எனக்குக் கூட ஒரு சாமியாரைத் தெரியும். தலைவர் அவர்களை நான் என் சாமியாரிடம் அழைத்துப் போய், தலைவரிடம் எனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்கிறேன்!’ என்ற தன்முனைப்பு தெரிந்தது.

காமராஜருக்கு கற்பூர புத்தி.

ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியாகியிருந்த பல புத்தகங்களின் பெயர்களை, ஒரு மாணவன் ஒப்புவிப்பது போல படபடவென்று கூறினார். அந்த நூல்களின் ஆசிரியர்களின் பெருமைகளையும் விளக்கினார். பின், “இந்த புத்தகத்தை பத்தி உனக்கு தெரியுமா? கேள்விப்பட்டிருக்கியா? இவங்க யாருமே தமிழ்நாட்டுக்காரங்க இல்லே. சங்கராச்சாரியாருக்கு வேண்டியவங்களும் இல்லே…. இதையெல்லாம் படிச்சிப் பாரு. அப்போ புரியும் — சந்காராச்சாரியாருக்கும் மத்த சில சாமியாருங்களுக்கும் உள்ள வித்தியாசம்!”

இதையெல்லாம் படிச்சிப் பாரு. அப்போ புரியும் — சந்காராச்சாரியாருக்கும் மத்த சில சாமியாருங்களுக்கும் உள்ள வித்தியாசம்!”

இப்படி, இன்னும் பல தகவல்கள்.

ஓய்வேயில்லாத தனது வேலைகளுக்கிடையில், மகாசுவாமிகளை பற்றி பெருந்தலைவர் எவ்வாறு இவ்வளவு செய்திகளை தெரிந்து வைத்திருந்தார் என்று அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டுப்போனார்களாம்!

‘காம’கோடிக்கும் ‘காம’ராஜருக்கும் இடையே தங்கக் கம்பி போல நுட்பமான தொடர்பு இருந்தது போல!

(ஆக்கத்தில் உதவி : கே.கல்யாணம், கலவை @ டி.எஸ்.கோதண்டராம சர்மாவின் ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’)

===============================================================================

Maha periyava about kamarajar

காமராஜர் ஒரு மகாபுருஷர்!

“தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே, சகல தர்மங்களையும் நீதிகளையும் நன்குணர்ந்தவரே, காமராஜர். காமராஜர் மகாபுருஷர்!” 

– காஞ்சி மகா பெரியவர் ஒரு  முறை பெருந்தலைவரைப் பற்றி கூறியது.

===============================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

For details please check : http://rightmantra.com/?page_id=7762

===============================================================================

Also check our earlier articles about Kamarajar:

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிய பெருந்தலைவர் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

சென்ற ஆண்டு காமராஜரின் பிறந்த நாளையொட்டி நாம் அளித்த பதிவு…

காமராஜரும் ராமராஜ்ஜியமும்!  கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்!!

காமராஜர் வாழ்வில் நடைபெற்ற நெகிழ வைக்கும் சில சம்பவங்கள் – காமராஜர் B’DAY SPL 2

2013 ஆம் ஆண்டு காமராஜரின் பிறந்த நாளையொட்டி நாம் அளித்த பதிவு…

===============================================================================

Also check our earlier articles about Kannadasan :

“நடமாடும் தெய்வத்துடன் சில நிமிடங்கள்!” – மஹா பெரியவரை சந்தித்த கண்ணதாசன்!

“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!

கடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி!

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1

கண்ணதாசன் கூறும் தியான யோகமும் பிரார்த்தனை கீதமும் – கண்ணதாசன் B’DAY SPL 2

விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் என்னும் இறைவன் வகுத்த நியதி!

துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !

கடவுள் சொல்லாத ஆறுதலை சொன்னவர் – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1

சரித்திரம் படைத்த வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு ஒற்றுமை என்ன? திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 2

===============================================================================

Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…

‘சில சமயம் பகவான் மீதே கோபம் வருகிறதே?’ – தெய்வத்திடம் சில கேள்விகள்! (Part II)

“தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது எதை ஸ்வாமி?” தெய்வத்திடம் சில கேள்விகள்!

தெய்வத்தின் குரலில் தெய்வக் குழந்தையின் வரலாறு!

தர்மம் தழைக்க தோன்றிய தயாபரன் – மகா பெரியவா ஜயந்தி Spl & Excl.Pics!

எது நிஜமான பக்தி?

“கேட்டால் கொடுக்கும் தெய்வம். கேளாமலே கொடுப்பவர் குரு!” – குரு தரிசனம் (37)

தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)

மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)

நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)

அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு!  குரு தரிசனம் (33)

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!!  குரு தரிசனம் (32)

சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

===============================================================================

Also check short series on Kalady & Sornaththu Manai :

வையம் செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)

சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)

பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

===============================================================================

[END]

5 thoughts on “ஞானசூரியனும் தியாக சூரியனும் சந்தித்தபோது….! காமராஜர் B’DAY SPL 1

 1. காமராஜரின் பிறந்த நாள் ஸ்பெஷல் பதிவில் காமராஜருக்கும் , மகா பெரியவருக்கும் உண்டான தொடர்பைப் போட்டு பதிவை புனிதப் படுத்தி விட்டீர்கள். தெரியாத நிகழ்வை தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. உலகமே போற்றும் உத்தமருக்கும் மகா பெரியவரின் அருட்பார்வை கிடைத்ததில் வியப்பேது.

  காமராஜரை பற்றி மகா பெரியவர் உதிர்த்த வார்த்தைகள் எவ்வளவு ஆழமானவை . ஒரு யுக புருஷரிடமிருந்து ஒரு மகா மேதைக்கு எவ்வளவு பெரிய பாராட்டுக்கள் …

  இந்த உலகம் உள்ளவரை காமராஜரின் புகழ் நிலைத்திருக்கும்.

  வாழ்க அவர் புகழ்…..

  மகா பெரியவரின் அருகில் காமராஜரின் படம் பார்க்க பரவசம் …

  மகா பெரியவருக்கும் மற்ற சாமிங்களுக்கும் உள்ள வித்யாசத்தை காமாராஜர் சொல்வது மெய் சிலிர்க்கிறது. இந்த வரிகள் மிகவும் உணர்வு பூரணமான வைர வரிகள் இந்த பதிவிற்கு.

  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  வாழ்க …. வளமுடன்

  நன்றி
  உமா வெங்கட்

 2. வணக்கம் சுந்தர். உண்மைதான்,கிடைத்தற்கு அரிய மாணிக்கம் அவர். பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவந்த மகான்.மீண்டும் யாரினும் இப்படி வருவார்கலு என்னவோ.இறைவனே அறிவான்.நன்றி.

 3. முற்றிலும் உண்மை. தாங்கள் குரு மஹா பெரியவாளுக்கும், தியாக உள்ளம் படைத்த திரு. காமராஜர் அவர்களுக்கும் சூட்டிய ஞான சூரியன் மற்றும் தியாக சூரியன் என்கின்ற வார்த்தைகள் கனகச்சிதம். இவர்களைப் போன்ற பெரியவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதே மிகவும் நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய விஷயம்.

  அறிய தகவலுக்கு மிக்க நன்றி.

 4. “மகா பெரியவா”வின் மகிமையை தியாக சூரியன் எடுத்து சொன்னதும்..
  “கருப்பு காந்தி ” யின் கருணையை ஞான சூரியன் எடுத்து சொன்னதும்..

  மிக மிக, அறிய கிடைக்காத தகவல்கள். இது போன்ற முத்தான பதிவுகள் “Right Mantra” எனும் ஆன்மிக கடலில் தான் கிடைக்கும். தங்களின் தேடல் தொடர வாழ்த்துக்கள் அண்ணா..

 5. நன்றி . இதே போல் ராஜாஜி அண்ட் சங்கரா சாரியார் பற்றி பதிவு செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *