Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > வரும் சிவராத்திரி 3 கோடி விரதத்திற்கு சமமான உத்தம சிவராத்திரி – முழு தகவல்கள் – சிவராத்திரி SPL 4

வரும் சிவராத்திரி 3 கோடி விரதத்திற்கு சமமான உத்தம சிவராத்திரி – முழு தகவல்கள் – சிவராத்திரி SPL 4

print
சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி என்கிற பதிவை முந்தைய ஆண்டுகளிலேயே நாம் அளித்திருந்தாலும் புதிதாக நம் தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு தேதி மற்றும் திதி குறித்த குழப்பம் ஏற்படுகிறது. எனவே சிற்சில திருத்தங்களுடன் மீண்டும் ஒரு முழுமையான பதிவை அளிக்க விரும்பி இதை பதிவு செய்கிறோம். மேலும் இந்த ஆண்டு மகா சிவராத்திரிக்கு ‘உத்தம சிவராத்திரி’ என்கிற ஒரு பெருமை இருக்கிறது. அதையும் பதிவில் விளக்கியிருக்கிறோம்.

siva on rishabaசிவராத்திரி விரதம் குறித்த சிந்தனை உங்களுக்கு வந்தாலே நீங்கள் கொடுத்து வைத்தவர், பாக்கியசாலி என்று தான் அர்த்தம். ஏனெனில் எல்லாருக்கும் சிவசிந்தனை வாய்க்காது. அது ஒரு வரம். (இதெல்லாம் சொன்னா புரியாது. உணரும்போது தான் இதுக்கு அர்த்தம் புரியும்! MARK MY WORDS!).

ஒரு முறை சிவராத்திரி விரதம் இருந்து பாருங்கள்… உங்கள் வாழ்க்கையின் போக்கே மாறத் துவங்குவதை உணர்வீர்கள். நல்லவர் நட்பு கைகூடும், பயம் விலகும், சத்ருக்கள் தொல்லை மறையும், தரித்திரம் விலகும், இப்படிப் பலப்பல. இதெல்லாம் நிச்சயம் நடக்கும். எத்தனை வேகமாக நடக்கிறது என்பது உங்கள் கடந்த கால தவறுகளின் தீவிரத்தையும் பக்தியின் தன்மையையும் பொறுத்தது அது.

நம்மைப் பொறுத்தவரை கடந்த நான்கு ஆண்டுகளாக சிவராத்திரி விரதம் இருந்து வருகிறோம். முதல்முறை விரதம் இருந்தது 2012 ஆம் ஆண்டு.

அன்று…

கடந்த 2012 ஆம் ஆண்டு நாம் மகா சிவராத்திரி விரதம் இருந்த சூழலை நினைத்துப் பார்க்கிறோம்.

அன்றைய நிலையில் ஒரு ஜீரோ. சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. ‘என் உலகம்’ என்று நாம் நம்பிக்கொண்டிருந்த ஒன்று நம்மை குப்புறத் தள்ளி குழியும் பறித்து புதைத்தும் விட்டது. அழுதழுது வறண்டு போன கண்கள். இது தான் நம் சொத்து. இது தான் 2012 சிவராத்திரிக்கு முன்பு நாமிருந்த நிலை.

அன்றைய நிலையில் நமக்கிருந்த ஒரே ஆறுதல் பேரம்பாக்கம் நரசிம்மரும் சிவராத்திரி விரதமும் தான்.

சிவராத்திரி விரதம் இருப்பது என்று முடிவு செய்தாயிற்று. விரதத்திற்கான விதிமுறைகளை தெரிந்துகொண்டபோது “நம்மால இப்படியெல்லாம் இருக்க முடியுமா?” என்கிற மலைப்பே ஏற்பட்டது.

காரணம் நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ‘இந்த விரதம்னா என்னா?’ என்று கேட்கும் நிலையில் தான் அதுவரை நமது வாழ்க்கைமுறை இருந்தது.

நல்வழிக்கு திரும்பினாலும் ஏதோ வாழ்க்கையின் போக்கில் அவ்வப்போது படித்த உணர்ந்த சில ஆன்மீக விஷயங்கள் மட்டுமே அப்போது நமக்கு தெரியும். மற்றபடி ஆன்மீக உலகமே நமக்கு புதிதாக இருந்தது. என்ன செய்வது…? எப்படி தூய்மையான விரதத்தை அனுஷ்டிப்பது…? கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.

“100% சரியான நியம நிஷ்டைப்படி விரதம் இருக்க முடியாவிட்டாலும், ஏதாவது ஒரு சிவன் கோவில்ல போய் உட்கார்ந்துக்குவோம். தூங்காம கண் முழிப்போம்” என்று முடிவு செய்து, தூக்கத்தை விரட்ட கையில் திருவிளையாடற் புராணத்தை (அன்று தான் வாங்கினோம்) எடுத்துக்கொண்டு பூவிருந்தவல்லி வைத்திய நாதசுவாமி கோவிலில் போய் உட்கார்ந்தோம்.

உட்கார்ந்தது சிவாலயம் அல்ல. முன்னேற்றத்தின் வாயிற்படி. ஆம்… முன்னேற்றத்தின் வாயிற்படி.

கோவிலில் திருவிளையாடற் புராணத்தை படித்துக்கொண்டு நாலு கால பூஜையும் பார்த்துகொண்டு இடையிடையே கோவிலில் தந்த பிரசாதத்தை சாப்பிட்டுக்கொண்டு ஏதோ விரதம் இருந்தோம்.

இது தான் நமது முதல் சிவராத்திரி விரதம்.

இன்று….

Bramma kumarigal sangam speech

ஒரு ஆன்மீக / சுயமுன்னேற்ற தளத்தின் ஆசிரியராக ‘சிவராத்திரி ஸ்பெஷல்’ என்கிற ஒரு தொடரே அளிக்கும் அளவிற்கு என்னை அவன் உயர்த்தியிருப்பததோடு சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி என்கிற பதிவை வேறு அளிக்கக்கூடிய நிலையில் இருக்கிறோம்.

அது மட்டுமா?

அவன் பெருமைகளை சொற்பொழிவுகளிலும் மேடைகளிலும் பேசுமளவிற்கு நம்மை உயர்த்தியிருக்கிறான்.

Bramma kumarigal sangam speech 2

இது என்ன சாதாரண விஷயமா? இல்லை சாதாரண மாற்றமா??

(* பிரம்ம குமாரிகள் ஆன்மீக சங்கத்தின் சார்பில் சென்னை மேற்கு சைதையில் நடைபெற்று வரும் ஜோதிர்லிங்க கண்காட்சியில் நேற்று 04/03/16 மாலை அடியேன் கலந்துகொண்டு சில கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அப்போது எடுத்த படம். இது தொடர்பான விரிவான பதிவு தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்போதைக்கு கண்காட்சி போஸ்டரை மட்டும் பதிவின் இறுதியில் இணைத்துள்ளோம்.)

நாம் ஏதோ தற்பெருமை பேசுவதாக யாரும் நினைத்துவிடக்கூடாது. சிவசிந்தனை ஒருவருக்கு எந்தளவு ஏற்றத்தை கொடுக்கும் என்பதை ஆதாரப்பூர்வமாக உணர்த்தவே இதை சொல்கிறோம். மற்றபடி இந்த வாழ்க்கை அவன் இட்ட பிச்சை.

வாசக அன்பர்களே, ஒரு முறை அன்போடும் பக்தியோடும் சிவராத்திரி விரதம் இருந்து பாருங்கள்….! உங்களுக்கு அருள் செய்ய அவன் காத்திருக்கிறான்!!

நிஜமாத்தாங்க…. நம்புங்க….!

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

எல்லா விரதங்களை போலவே சிவராத்திரிக்கும் சில விதிகள் உண்டு. மற்ற விரதங்களை போல இது கிடையாது. கொஞ்சம் கடுமையாகத்தான் விரதம் இருக்க வேண்டும். மற்ற விரதங்களில் வழிபாட்டில் ஆரம்பித்து விருந்தில் முடியும். ஆனால் சிவராத்திரி அப்படி அல்ல.

மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும். உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு இருக்க இயலாதவர்களுக்கு (வயது முதிர்ந்தோர், வியாதியஸ்தர்கள் ஆகியோர்) விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால், பழங்கள் மட்டுமே சாப்பிட்டு விரதமிருக்கலாம் அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கை உப்பில்லாமல் வேக வைத்து உண்ணலாம் அல்லது சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரே ஒருவேளை மட்டும் உண்ணலாம்.

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய இரவை சிவாலயத்தில் கழிப்பது சாலச் சிறந்தது. சிவாலயங்களில் நடைபெறும் மூன்று கால பங்கேற்று சிவபெருமானை தரிசிக்கவேண்டும்.

சிவராத்திரிக்கு முதல் நாள் (06/03/2016) ஒரே ஒரு நேரம் மட்டும் சாப்பிட வேண்டும். துவைத்த ஆடை உடுத்த வேண்டும். தூய்மையான மனதுடன் சிவனை வணங்க வேண்டும். அன்று இரவு (ஞாயிற்றுக் கிழமை இரவு) முழுவதும் சிவனை நினைத்து மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ உறங்க வேண்டும். மறு நாள் திங்கள் (அதாவது அன்று இரவு தான் சிவராத்திரி) அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்து சூரிய உதயத்துக்கு முன்பாக சிவசிந்தனையோட சிவாலயத்திற்கு போய் இறைவனை வணங்க வேண்டும். பகல் முழுவதும் உணவு எதுவும் சாப்பிடக்கூடாது.

மாலையில் மறுமுறை குளித்து, கோவிலில் நான்கு காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். அவசியம் நாலுகால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி கால பூஜையையாவது பார்ப்பது அவசியம்.

சுருங்கக் கூறின் மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதற்கு முந்தைய தினம் (திரயோதசி) அன்று ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, மறுநாள் சதுர்த்தசி அன்று உபவாசம் இருந்து தூக்கம் களைந்து இரவு நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை பூஜித்து வழிபட்டு அதற்கு அடுத்த நாள் காலை ஏழைகளுக்கும் தகுதியுடையோருக்கும் அன்னதானம் செய்யவேண்டும்.

சிவராத்திரி அன்னைக்கு விரதம் இருந்தா போதாதா ? அது எதுக்கு முந்தின நாளும் இருக்கணும் ?

அப்படி கேளுங்க…..

வேளா வேளைக்கு நேரம் தவறாம உண்டு உறங்கும் நம்மால், திடீரென்று மகாசிவராத்திரி அன்னைக்கு கண் விழித்து உபவாசம் இருந்து பக்தி செலுத்துவது சிரமமாக இருக்குமல்லவா? எனவே நம் உடலையும் மனதையும் அதற்கு தயார் செய்வதன் பொருட்டே பெரியோர்கள் முந்தைய நாள் திரயோதசி அன்றும் விரதம் இருக்க சொல்லியிருக்கிறார்கள். திரயோதசி அன்று விரதம் இருக்கும்போது நம் மனமும் உடலும் ஓரளவு அதற்கு பழகிவிட, அடுத்த நாள் சிவராத்திரி அன்று குறைகள் இன்றி முழு திருப்தியுடன் விரதம் இருந்து, பூரண பலனையும் அடைய முடியும்.

மற்றபடி சிவராத்திரியன்று :

சிவராத்திரியன்று கோவிலில் இருக்கும்போது இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதத்தை (கோவில் மடப்பள்ளியில் தயார் செய்தது) சாப்பிடலாம். தரிசனத்திற்கு வரும் சேவார்த்திகள் சேவை நோக்கோடு தரும் பால், சுண்டல் முதலியவற்றை உட்கொள்வது அவரவர் விருப்பம்.

போகும்போது சிவாலயத்திற்கு வில்வ இலை மற்றும் இதர புஷ்பங்களை அவரவர் சக்திக்கேற்ப வாங்கி செல்லவேண்டும்.

தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது. அபிஷேகம் எதற்காகச் செய்யப்படுறது சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.

சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம். சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

அதே போல் தான் லிங்கபுராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், திருவாசகம் ஆகியவற்றைப் படித்தாலும் கேட்டாலும் பலன்கள் மற்ற நாட்களை விட அதிகமாகவே கிடைக்கும். சிவராத்திரி விரதத்தின் மகிமையை, சிவன் நந்திக்கு உபதேசித்தார். அதனைக் கேட்ட நந்தி அதை அனைத்துத் தேவர்களுக்கும் கூறினார். அந்தத் தேவர்கள் அனைத்து முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் அதனைக் கூறினார். சிவராத்திரி தினத்தன்று மன சுத்தியோட `ஓம் நமச் சிவாய’ அல்லது ‘ சிவாய நம’ என்று உச்சரித்துக்கொண்டு இருந்தாலே போதும் எல்லா பலன்களும் கிடைக்கும்.

========================================================

வரும் திங்கட்கிழமை வரக்கூடிய சிவராத்திரி உத்தம சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்த சிவராத்திரிக்கு விரதம் இருந்தால், 3 கோடி சிவராத்திரிக்கு விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தினமலர் நாளிதழில் வெளியான ஒரு செய்தியை கீழே தருகிறோம்….

‘மார்ச் 7ல் சிவராத்திரி விரதம் இருந்தால் மூன்று கோடி விரத பலன் கிடைக்கும்!’

ரும் 7 ம் தேதி சிவராத்திரி விரதம் இருந்தால், 3 கோடி சிவராத்திரிக்கு விரதம் இருந்த பலன் கிடைக்கும்’ என, காஞ்சிபுரம், கைலாசநாதர் கோவில் மற்றும் ஏகாம்பரநாதர் கோவில் ஸ்தானிகர் ராஜப்பா குருக்கள் தெரிவித்தார்.

இதுகுறித்து, ராஜப்பா குருக்கள் மேலும் கூறியதாவது:சைவ மதத்தில், சிவனை வேண்டியிருக்கும் விரதங்களில், மகா சிவராத்திரி விரதமே அதிக சிறப்புடையது. சிவராத்திரி விரதம், உத்தமம், மத்தியமம், அதமம் என, மூன்று வகைப்படும்.

சிவராத்திரி அன்று இரவில், நிசியில் சதுர்தசி திதி இருப்பது முக்கியம் என, பல ஆகமங்கள் கூறுகின்றன. சிவராத்திரி அன்று திரியோதசி திதியும், அன்று இரவே சதுர்தசி திதியும் இருப்பது, உத்தம சிவராத்திரி என்பதாகும்.

அந்த நாள், இவ்வாண்டு மார்ச், 7ம் தேதி வருகிறது. அன்றைய தினம், திரியோதசி திதி பகலிலும், சதுர்தசி திதி இரவு முழுவதும், மறுநாள் காலை, 9:00 மணி வரையிலும் இருப்பதால், இது உத்தம சிவராத்திரி ஆகும்.உத்தரகாரண ஆகமத்தில் உள்ளபடி, திங்கட்கிழமையும், சிவராத்திரியும் ஒன்று சேர்ந்தால் அது, 3 கோடி சிவராத்திரிக்கு சமமாகும்.

இந்த ஆண்டு மார்ச், 7ம் தேதி, திங்கட்கிழமையும், சதுர்தசி திதியும் சேர்ந்துள்ளதால், 3 கோடி சிவராத்திரி விரதம் இருந்தால் என்ன பலனோ, அந்த பலன், அன்று விரதம் இருந்தால் கிடைக்கும்.

எனவே, அனைவரும் அவரவர் வழக்கப்படி, இந்த சிவராத்திரி விரத நாளில், கோவிலுக்கு சென்று வழிபடுவதும், இரவு முழுவதும் கண் விழித்து, சிவ நாமத்தை உச்சரித்தும், சகல சவுபாக்கியங்களையும் அடைய வேண்டும். இவ்வாறு குருக்கள் தெரிவித்தார்.

========================================================

Jyothirlinga Darshan

========================================================

Help Rightmantra to function without any hassles!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest or ad revenues. We are purely relying on our readers’ contribution. Donate us liberally. Small or big your contribution really matters.

Our A/c Details

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Or you can send Cheque / DD / MO to the following address:

Rightmantra Soul Solutions, Shop. No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033. Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also Check :

காகம் சிவகணங்களில் ஒன்றான கதை – அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 3

பதினோறாயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த ஏழை!  அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 2

காமுகன் கயிலை சென்ற கதை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 1

மனிதன் நினைக்கிறான் அவிநாசியப்பன் முடிக்கிறான்!

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

========================================================

சென்ற ஆண்டு அளித்த சிவராத்திரி ஸ்பெஷல் தொடர் மற்றும் இதற்கு முன்பு நாம் அளித்த சிவராத்திரி சிறப்பு பதிவுகளுக்கு….

கண்ணைக் கட்டிக்கொண்டு துவங்கிய ஒரு சிவராத்திரி பயணம்! – சிவராத்திரி ஸ்பெஷல் FINAL

மனக்கோயில் கொண்ட மாணிக்கத்துடன் ஒரு மாலை! – சிவராத்திரி ஸ்பெஷல் 6

சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 5

சிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்! சிவராத்திரி ஸ்பெஷல் 4

இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3

கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

========================================================

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

========================================================

[END]

One thought on “வரும் சிவராத்திரி 3 கோடி விரதத்திற்கு சமமான உத்தம சிவராத்திரி – முழு தகவல்கள் – சிவராத்திரி SPL 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *