Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > ஐக்கிய அரபு நாடுகளில் குருவின் மகிமையை கேட்க ஒரு அரிய வாய்ப்பு! GURU MAHIMAI @ UAE

ஐக்கிய அரபு நாடுகளில் குருவின் மகிமையை கேட்க ஒரு அரிய வாய்ப்பு! GURU MAHIMAI @ UAE

print
நண்பர்களே, நம் இனிய நண்பரும் பிரபல ஆன்மீக எழுத்தாளரும் சொற்பொழிவாளருமான திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் மஹா பெரியவா அவர்களின் சீரிய தொண்டர். குருவின் பெருமையை பரப்பவுதே தமது லட்சியமாக கருதி செயல்பட்டு வருகிறார். இதுவரை சென்னை, பெங்களூர் உட்பட பல்வேறு நகரங்களில் மஹா பெரியவா அவர்களின் மகிமை குறித்து சொற்பொழிவாற்றியிருக்கிறார்.
சென்ற ஆண்டு நமது தளம் சார்பாக நடைபெற்ற குரு மகிமை சொற்பொழிவின் போது
சென்ற ஆண்டு நமது தளம் சார்பாக நடைபெற்ற குரு மகிமை சொற்பொழிவின் போது

ஐக்கிய அரபு நாடுகளில் வசிப்போர்களுக்கு குருவின் மகிமையை கேட்பதற்கு இனியதொரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. விரைவில் திரு.சுவாமிநாதன் அவர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் ‘மகா பெரியவா மகிமைகள்’ சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார்.

DSC_7250

பஹ்ரெய்ன், அபுதாபி, துபாய், மஸ்கட் ஆகிய நகரங்களில் வசிக்கும் நம் வாசக அன்பர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குருவின் மகிமையை கேட்டு பயன்பெறவேண்டுகிறோம்.

குருவின் பெருமையை சிரவணம் செய்வது (கேட்பது) இரு வினையை தீர்க்க வல்லது. கலியுகத்தில் சிரவணம் தான் கண்கண்ட மருந்து.

நமது ஆண்டுவிழாவில் திரு.சுவாமிநாதன் அவர்கள் கௌரவிக்கப்பட்டபோது...
நமது ஆண்டுவிழாவில் திரு.சுவாமிநாதன் அவர்கள் கௌரவிக்கப்பட்டபோது…

சென்ற ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி, நமது தளம் சார்பாக குரு மகிமை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மஹா பெரியவா குறித்து திரு.சுவாமிநாதன் சொற்பொழிவு நிகழ்த்தினார். தவிர நமது ஆண்டு விழாவிலும் கலந்துகொண்டு  உரையாற்றி நமது தளத்தை கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

======================================================
அன்புடையீர்,நமஸ்காரம்.

மகா பெரியவா சரணம்.

காஞ்சி மகா பெரியவாளின் கருணையாலும் ஆசிர்வாதத்தாலும் அவரது மகிமையை ஐக்கிய அரபு நாடுகளில் சொல்லப் போகின்ற ஒரு வாய்ப்பு எனக்கு அமைந்திருக்கிறது.

ஆம்!

பஹ்ரெய்ன், அபுதாபி, துபாய், மஸ்கட் ஆகிய இடங்களில் எனது ‘மகா பெரியவா மகிமை’ உட்பட பல ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ இருக்கின்றன.

நிகழ்ச்சிகள் விவரம்:

பஹ்ரெய்ன்: 2014 ஜனவரி 17 மற்றும் 18
………………………………………………………….

அபுதாபி: ஜனவரி 23 மற்றும் 24
……………………………………………….

துபாய்: ஜனவரி 25, 26, 27
………………………………………….

மஸ்கட்: ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1
……………………………………………………………….

பஹ்ரெய்ன் மற்றும் மஸ்கட்டில் காலை (10.00 – 12.00) மற்றும் மாலை (4.00 – 6.00) ஆகிய இரு வேளைகளிலும் நிகழ்ச்சிகள் அமைய உள்ளன.ஜனவரி 15-ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து பயணப்பட்டு, பிப்ரவரி 3-ஆம் தேதி சென்னை திரும்புகிறேன்.எனது இந்தப் பயணத்துக்கு பெரும் அக்கறை எடுத்துக் கொண்ட என் ஆத்மார்த்த நண்பன் ரமேஷுக்கும், சென்னையில் நான் சந்தித்த மஸ்கட் நண்பர் ஸ்ரீதர் நாராயணஸ்வாமி மற்றும் ஐக்கிய அரபு தேசத்தில் உள்ள சத் சங்க அன்பர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பயணம் குறித்த மேல் விவரங்களுக்கும் மற்ற விசாரிப்புகளுக்கும்:

n.ramesh1967@gmail.com மற்றும் swami1964@gmail.com ஆகிய இரண்டு மெயில் ஐ.டி.க்கும் தொடர்பு கொள்ளவும்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்
சென்னை

======================================================
[END]

4 thoughts on “ஐக்கிய அரபு நாடுகளில் குருவின் மகிமையை கேட்க ஒரு அரிய வாய்ப்பு! GURU MAHIMAI @ UAE

  1. சுந்தர்ஜி
    ஜெகமெங்கும் தன் அருளை வாரி வழங்க திரு.சுவாமிநாதன் வாயிலாக மஹா பெரியவா கிளம்புவதாகதான் அடியேன் எண்ணுகிறேன். திரு.சுவாமிநாதன் அவர்களின் ஜீ டிவி சொற்பொழிவு எல்லோர் இல்லங்களிலும் பெரியவாவை அமர வைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. அடுத்து பெரியவாவை பற்றிய அவரது புத்தகமும் பெரியவாவின் அருள் பிரவாகத்தை நம் இதயங்களில் பொழிய செய்கிறது. நம் தளத்திற்கு அடுத்தபடியாக, மஹா பெரியவா மகிமைகளை திரு.சுவாமிநாதன் மூலம் உலகமெங்கும் உள்ள் வாசகர்கள் பெற்று உய்ய இந்த தகவலை பரிமாறியதற்கு நன்றி.

  2. மஹா பெரியவாவின் கருணை மகத்தானது.
    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர…
    -மனோகர்

  3. டியர் சுந்தர்ஜி

    மகா பெரியவரின் பெருமையை உலகெங்கும் பரப்பும் திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.

    வாழ்க அவரது தொண்டு
    நன்றி
    uma

  4. நன்றி சுந்தர்.

    எல்லாமே மகா பெரியவா அருள் அன்றி வேறில்லை.

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

    அன்புடன்,

    பி. சுவாமிநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *