கேட்பது மட்டுமல்ல கேட்க நினைப்பதை கூட அள்ளித் தரும் கற்பகத்தருவாம் கந்தன் கழலை பற்றுவோம் வாருங்கள்…!!
கந்தனிடம் செல்லுங்கள் – என்ன வேண்டும் சொல்லுங்கள்
வந்த வினை தீர்ந்து விடும் – மற்றவற்றைத் தள்ளுங்கள்!
(கந்தசஷ்டியை முன்னிட்டு சென்னை போரூரில் உள்ள பாலசுப்ரமணியர் கோவிலுக்கு தினமும் சென்று வருகிறோம். அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் இந்த பதிவில் இடம்பெற்றுள்ளது.)
‘உடைப்பு அடைய அடைத்து உதிரம் நிறைத்து…’ சிலிர்ப்பூட்டும் உண்மை சம்பவம்!
சின்மயா நகரை சேர்ந்த நடுத்தரக் குடும்ப பெண் பாக்யலக்ஷ்மி (55). கணவர் திரு.சேதுராமன் (58). எளிமையான கட்டுக்கோப்பான குடும்பம். கணவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. பிள்ளைகள் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தார்கள்.
ஒரு காலை சமையலறையில் பிஸியாக இருந்த பாக்யலக்ஷ்மி அவர்களுக்கு திடீரென்று தலைசுற்றியது. “அம்மா… நெஞ்சு வலிக்குதே…” நெஞ்சில் கை வைத்து ஹாலுக்கு வந்து ஃபேனை போட்டுவிட்டு சோபாவில் உட்கார்ந்தார். சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துவிட, கணவரும் பிள்ளைகளும் அலறியடித்துக்கொண்டு பாக்யலக்ஷ்மி அவர்களை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.
அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐ.சி.யு.வில் சேர்க்கப்பட்டார் பாக்யலக்ஷ்மி.
மருத்துவமனைகளுக்கே உரிய PROCEDURES, TEST, SCANNING அனைத்தும் விறுவிறுவென நடந்தன.
“அம்மா… அம்மா…” என்று பிள்ளைகள் ஒரு பக்கம் ஐ.சி.யு. அறைக்கு வெளியே அழுது அரற்றிக்கொண்டிருக்க, கணவர் செய்வதறியாது திகைத்து நின்றார். “டெஸ்ட் ரிப்போர்ட்டில் என்ன சொல்லப்போகிறார்களோ? ஆண்டவா…. உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை!” என்றால் போதும்… என்று தன் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொள்ள ஆரம்பித்தார்.
ஒவ்வொரு நொடியும் யுகமாய் கழிந்தது. மாலை அனைத்து ரிப்போர்ட்டுகளும் வந்து சேர்ந்தன.
இதய நோய் பிரிவின் சீஃப் டாக்டரை சென்று பார்த்தபோது, அவர் மனைவிக்கு ஏற்பட்டது ‘கார்டியோ ஜெனிக் ஷாக்’ என்று தெரிவித்தார்.
இதயத்தின் மூன்று ரத்தக்குழாய்களும் அடைக்கப்பட்டு, மயக்க நிலை ஏற்பட்டால், ‘கார்டியோ ஜெனிக் ஷாக்’ என்று பெயர். பாதிப்பின் தன்மை அதிகம். இதற்கு, ஐ.ஏ.பி.பி., (இண்டிரா அயோதிக் பலூன் பம்ப்) சிகிச்சை அளிக்கப்படுகிறது. நரம்பு வழியாக ஒரு பலூனை மகா தமணியின் இடது பக்கம் செலுத்தி, ‘ஹீலியம்’ என்ற வாயுவை அந்த பலூனில் செலுத்தி, இயந்திரத்தில் இணைத்து விடுவர். அந்த இயந்திரம் பலூனை சுருங்கி, விரிவடையச் செய்து, இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும். இதனால், இதயம் ஓய்வெடுப்பதால், அது நலம் பெற்று மீண்டும் சீராக இயங்க முடியும். இந்த அதிநவீன சிகிச்சையால் மட்டுமே, மிகப்பெரிய மாரடைப்பில் இருந்து ஒருவரை காப்பாற்ற முடியும். மாநகரங்களில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் தான், இந்த வசதி உள்ளது. அதிலும், தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் மிக குறைவே.
இவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“சார்… நாங்க ஆர்டினரி மிடில் கிளாஸ் ஃபாமிலி. எங்களால எவ்ளோ செலவு பண்ணமுடியுமோ அவ்வளவு பண்றோம். எப்படியாவது அவளை காப்பாத்துங்க டாக்டர்….”
“சார்… இங்கே அந்த FACILITIES இல்லை. இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் பாக்கி இருக்கு. நாளைக்கு எடுத்துடுறோம். அதை பார்த்தப்புறம் என்ன பண்றதுன்னு முடிவு பண்ணிக்கலாம். நீங்க பணத்தை ரெடி பண்ணனுமேன்னு தான் இதை இப்போ சொன்னேன். எதுக்கும் நீங்க வேற ஏதாச்சும் பெரிய ஆஸ்பிடல் ட்ரை பண்ணுங்க…. டிலே பண்ற ஒவ்வொரு மணிநேரமும் அவங்க உயிருக்கு ஆபத்து” என்று கூறிவிட்டு போய்விட்டார்.
இவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் போன் செய்ய ஆரம்பித்தார்.
விஷயம் கேள்விப்பட்டு பாக்யலக்ஷ்மியின் தோழி கீதா நங்கநல்லூரிலிருந்து பாக்யலக்ஷ்மியை பார்க்க மருத்துவமனைக்கு வந்தார்.
“என்னென்னமோ சொல்றாங்களே… பயமாயிருக்கு எனக்கு… என் பிள்ளைகளையும் ஹஸ்பெண்டையும் அனாதையா விட்டுட்டுட்டு போய்டுவேன் போலிருக்கே கீதா….”
“நீ ஒன்னும் கவலைப்படாதே பாக்கி…. இதோ நான் ஒரு ஸ்லோகம் புஸ்தகம் தர்றேன் அதை சொல்லிண்டே இரு போறும்…. எல்லாம் சரியாயிடும்!” என்று கூறியபடி ‘வேல்மாறல்’ என்னும் மஹாமந்த்ரத்தை தர, அதை ஆச்சரியத்தோடு வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார்.
கடலில் மூழ்கி உயிருக்கு போராடி தத்தளிப்பவனுக்கு பிடித்துக்கொள்ள ஒரு கயிறு கிடைத்தால் அதை எப்படி கெட்டியாக பற்றிகொள்வானோ அதே போல பாக்யலக்ஷ்மி அதை கெட்டியாக பற்றிக்கொண்டார்.
‘வேல்மாறல்’ ஸ்லோகத்தை படிக்க ஆரம்பித்தவர், 14 வது ஸ்லோகமாக வரும்,
திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை விருத்தன்
என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்து குஹன்வேலே.
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும் (14)
வரிகளை படித்தவர், என்ன நினைத்தோரோ ஏதோ ஒரு INTUITION ல் திரும்ப திரும்ப அதே வரிகளை படிக்க ஆரம்பித்தார். மேற்படி வரிகளை நன்றாக மனப்பாடம் செய்துகொண்டவர் அன்று முழுதும் திரும்ப திரும்ப எண்ணற்ற முறைகள் சொல்லியபடி இருந்தார்.
மறுநாள் காலை பாக்கியிருந்த ஒரே டெஸ்ட்டையும் முடித்துவிட்டு, மாலை அதன் ரிசல்ட்டுக்காக காத்திருந்தபோது, சீப் டாக்டர் உடனடியாக அழைக்க திரு.சேதுராமன் உடனே அவர் அறைக்கு விரைந்தார்.
“மிஸ்டர்.சேதுராமன், WHAT A MIRACLE IS THIS…! உங்க மனைவியோட இதயம் இப்போ ரொம்ப நார்மலா ஹெல்தியா இருக்கு. அடைப்பு இருந்ததுக்கான சுவடே தெரியலே. ஒரே நாள்ல என்ன நடந்தது எப்படி இது நடந்ததுன்னு புரியலே. லேப்ல கூட ஒரு தரம் போய் ரெபர் பண்ணினேன். இ.சி.ஜி. கூட இன்னொரு முறை எடுத்துப் பார்த்தோம். SHE NO NEEDS ANY SURGERY. REALLY IT IS A MEDICAL MIRACLE. WHAT HAPPENED?” என்று சொல்ல, இவர்… “முருகா” என்று அலறியே விட்டார்.
முந்தைய தினம், அவர் தோழி ஒருவர் வந்து ‘வேல்மாறல்’ என்னும் ஸ்லோகத்தை படிக்கும்படி சொல்லிச் சென்றதும், அதில் ஒரு குறிப்பிட்ட அடியை இவர் திரும்ப திரும்ப சொல்லிவந்ததையும் கூறினார்.
அந்த மருத்துவர் மிகவும் நல்லவர்… பக்திமான் போல. அனைவருக்கும் இந்த பயன் போய் சேரட்டும் என்று இதய நோய் பிரிவில் இருக்கும் அனைவருக்கும் ‘வேல்மாறல்’ புத்தகத்தை மறுநாள் வரவழைத்து கொடுத்தார். பலர் வியக்கத்தக்க அளவில் குணமடைந்து வீடு திரும்பினர்.
அதெப்படி ‘வேல்மாறல்’ ஸ்லோகமும் குறிப்பாக அந்த குறிப்பிட்ட வரிகளும் இந்த அற்புதத்தை நிகழ்த்தியது ?
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும்
மேற்படி வரிகளை திரும்ப திரும்ப படியுங்கள்.
திரைக்கடலை … அலைகள் வீசும் கடலை
உடைத்து … பிளந்து, உடையும் … உடைப்பு எடுத்து ஓடும் (நீரை)
உடைப்பை அடைய அடைத்து … உடைப்பு முழுவதும் பல வகையிலும் சிதறாதபடி ஆங்காங்கு அணையிட்டது போல் அடைத்து,
நிறை புனர் கடிது குடித்து … சமுத்திரத்தில் நிறைந்துள்ள நீரை விரைவில் உருஞ்சிப் பருகி,
உதிரம் நிறைத்து விளையாடும் … வெற்றிடமாய் இருந்த கடல் பரப்பில் அவுணர்களின் இரத்தத்தை நீருக்குப் பதிலாக நிரப்பி விளையாடி நிற்கும் குகன் வேலே.
இப்போது புரிகிறதா?
(இது சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் உண்மையில் நடந்தது. திருமதி.பாக்யலக்ஷ்மி அவர்களின் தொடர்பு எண் கிடைத்தவுடன் அவரிடம் பேசி டிசம்பரில் நடக்கவிருக்கும் நமது ஆண்டுவிழாவிற்கு அழைக்க உத்தேசித்துள்ளோம்!)
==============================================================
‘வேல்மாறல்’ என்றால் என்ன?
அதை அருளியது யார்?
அதை எப்படி பாராயணம் செய்யவேண்டும்?
அதை பாராயணம் செய்தால் என்னென்ன கிடைக்கும்?
வேறு யாராவது பாக்யலக்ஷ்மி அவர்களைப் போல, பாராயணம் செய்து பலன் பெற்றிருக்கிறார்களா?
அடுத்த பாகத்தில் விரிவாக…. to be continued in Part 2
==============================================================
இந்த தொடரின் ஆக்கத்தில் நமக்கு பலவிதங்களில் உறுதுணையாக இருந்து வரும் மௌலிவாக்கத்தை சேர்ந்த நண்பர் வெங்கட் அவர்களுக்கு நம் தளம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி!
==============================================================
Also check :
உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2
நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!
கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!
ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
==============================================================
[END]
வியக்க வைக்கும் பதிவு
அருமை …வேலும் மயிலும் சேவலும் துணை….வள்ளிமலைத் திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் திருகுருவடிகள் போற்றி …..குரு குஹா போற்றி போற்றி ….தக்க சமயத்தில் பலர் பயன் பெற உதவும் “வேல்மாறல்” மஹாமந்திரம் ,கந்தர் சஷ்டியில் தந்த சுந்தர் சார் குமாரவயலூர் குகன் அருளால் பல்லாண்டு வாழ்க …..சிவாய நம….
கந்த சஷ்டி சமயத்தில் ஒரு உண்மை சம்பவத்தை போட்டு அசத்தி விட்டீர்கள் . பதிவை படிக்கும் பொழுதே பரவசமாக ullathu. இந்த பதிவின் ஆக்கத்திற்கு உதவியாக இருந்த திரு வெங்கட் அவர்களுக்கு vanakkangal. இந்த பதிவின் மூலம் வேல்மாரல் சுலோகம் பற்றி தெரிந்து கொண்டோம் . அடுத்த பதிவை எதிர் பார்க்கிறோம்
நன்றி
உமா
அன்பார்ந்த ஆன்மீக அன்பர்களுக்கு,
நாத்திகமும், தீவிரவாதமும், கொலை, கொள்ளை மற்றும் எல்லாமே மூடநம்பிக்கை என்பது போன்ற எண்ணங்கள், எண்ணற்ற வியாதிகள் பரவலாகத் தோன்றியுள்ள இக்காலத்தில், தெய்வம் ப்ரத்யட்சமாக, தன் பேரருளை இப்பொழுதும் தம் அடியார்களுக்கு உணர்த்திக் கொண்டுதான் உள்ளது. வேல்மாறல் என்னும் மஹாமந்த்ரத்தை தங்களிடம் சேர்க்கச் சொல்லி முருகப் பெருமான் எங்களிருவரையும் ஆணையிட்டுள்ளான் என்றே நாங்கள் நினைக்கிறோம். இன்றிலிருந்து திரு.சுந்தர் கைவண்ணத்தில் வரும் இத்தொடரினை, ரைட்மந்த்ரா வாசகர்கள் தங்கள் சுற்றம் மற்றும் நட்புடன் பகிர்ந்து, அனைவரும் அந்த ஆண்டவனின் அருளைப் பெறுமாறுகேட்டுக் கொள்கிறோம்.
நன்றியுடன்,
வெங்கட் சுப்ரமணியம்.
முருகனின் அருளை நினைத்து கண்கள் குளமாகிறது. இவ்வாறான அற்புதங்களை தேடி தரும் உங்களுக்கும் கோடி புண்ணியம் கிடைக்கும்.
”நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் எனை நாடி வந்த கோள் என்செயும் …… அவனருள் உள்ளபோது.
மிக அற்புதம் நண்பர்களே!
வேல் மாறல் நான் இத்தனை ஆண்டுகள் தெரியாமலே இருந்தது வருத்சம். இப்போதாவது தங்கள் மூலம் தெரிந்தது மகிழ்ச்சி. கந்தன் கருணை எல்லையற்றது. ஓம் சரவண பவ!
அற்புதம் நிறைந்த பதிவு
அடுத்த பாகத்தினையும் படிப்பதற்கு ஆவலாக உள்ளோம்…
கந்தா சரணம் கதிர்வேலா சரணம்
முருகா சரணம்………வேல் மாறல் மந்திரத்தை தந்திட வேண்டுகிறேன்…….
Thanks Sundar ji. Eagerly awaiting part-2.
Om Nama Sivaya
முருகா சரணம் வெற்றிவேல் முருகன்னுக்கு அரோகரா நல்ல பதிப்பை பகிர்தம்மைக்கு நன்றி
வணக்கம்!
மிக அருமையான அனுபவம். முருகன் விளையாட்டுக்கு எல்லையே இல்லை என்பதை, இந்நிகழ்ச்சி ஒரு சாட்சி. முருகனை நம்பினோர், அவனால் சோதிக்கப்படுவார், ஆனால் அவன் ஒருபொழுதும் கை விடான். நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!
கார்த்திகேயன்!
தங்கள் வருகைக்கு நன்றி கார்த்திகேயன் அவர்களே.
அறுமுகனின் அருள் எல்லாருக்கும் கிடைக்கட்டும்.
– சுந்தர்
படங்களும் பதிவும் அருமை.வேலனின் அருள் பெற்ற நிகழ்ச்சியைப் படித்தபொழுது மனதில் நெகிழ்ச்சி ஏற்பட்டது. நன்றி.
முருகா சரணம் வெற்றிவேல் முருகன்னுக்கு அரோகரா நல்ல பதிப்பை பகிர்தம்மைக்கு நன்றி.
சுந்தர் அண்ணா
“வேல் மாறல் ” பதிவுகள் அனைத்தும் படித்தேன். மிகவும் இனிய அனுபவம். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
முருகா சரணம்.
மிக்க நன்றி அண்ணா .
என்னக்கு எப்படி சொல்வதென்றே தெரியல
மிக்க நன்றி,
முருகா