Home > 2015 > November

ஆச்சார அனுஷ்டானம், பக்தி – எது பிரதானம் ? – திருமால் திருவிளையாடல் (4)

ஜகந்நாதர் பல திருவிளையாடல்கள் புரிந்து வரும் பூரியின் வரலாற்றில் கருமா பாய் என்கிற பெண்ணுக்கு ஒரு தனியிடம் இடம் உண்டு. இவரது காலம் (1615-1691) என்று கூறப்படுகிறது. மராட்டியத்தை பூர்வீகமாக கொண்டவர் கருமா பாய். பூரி ஜகந்நாதரை தரிசிக்க யாத்திரை வந்தவள் அவரை பிரிய மனமின்றி பூரியிலேயே தங்கிவிட்டாள். விதிவசத்தால் தனது கணவனை காலனுக்கு பறிகொடுத்துவிட ஆதரிக்க எவருமின்றி நடை பிணமாய் வாழ்ந்து வந்தாள். ஜகந்நாத ஷேத்திரத்துக்கு வந்திருந்த பக்தர்கள் சிலர்

Read More

மாமழை போதும்… கருணை மழை வேண்டும் கந்தா! Rightmantra Prayer Club

1964 ம் வருட துவக்கம். ஸ்ரீமடம் சார்பாக நடைபெறும் தர்மகாரியங்கள் மற்றும் அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு நிறைய பேர் அரிசி மூட்டை அனுப்பி வந்தார்கள். அப்படி  அளிப்பவர்களை மூட்டைகளை காஞ்சிக்கு அனுப்பாமல் ராமேஸ்வரத்திலுள்ள ஸ்ரீமடத்துக்கு அனுப்பும்படி பெரியவா கட்டளையிட்டு வந்தார்கள். மகா பெரியவாவின் செயல் பலருக்கு விசித்திரமாக இருந்தது. குறிப்பாக ஸ்ரீ மடத்தில் இருந்தவர்களுக்கு. ஒரு கட்டத்தில் ராமேஸ்வரத்தில் அரிசி மூட்டைகளை வைக்க இடமில்லாமல் போனது. எதற்காக இப்படி அங்கே ஏகமாக ஸ்டாக்

Read More

வேண்டத்தக்கது அறிவோனும் வேண்டமுழுவதும் தருபவனும் – அன்னாபிஷேக அனுபவம் – 2

கடந்த மாத இறுதியில் நடைபெற்ற அன்னாபிஷேக தரிசன அனுபவங்கள் பற்றிய பதிவு இது. சிவதரிசனம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் அன்னாபிஷேக தரிசனம் என்பது அரிதினும் அரிய ஒரு பேறு. சிவ அபச்சாரம் செய்த தட்சன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்ட பாவத்தினாலும், சிவ நிந்தனையை காதால் கேட்ட பாவத்தினாலும் தேவர்கள் அனைவரும் சூரபன்மனிடம் சிக்கி சிறைபட்டு அவனுக்கு மீன் முதலானவற்றை சுமந்து பல விதமான ஏவல்கள் செய்து துன்பத்தில் உழன்றுகொண்டிருந்தனர். இந்நிலையில்

Read More

புண்ணியத்துக்கு பதில் பாவத்தை மூட்டை கட்டுவதா? அன்னாபிஷேக அனுபவம் – 1

சிவ வழிபாட்டை பொருத்தவரை மிகச் சிறிய தொண்டு கூட மலையளவு புண்ணியம் தரும். அதே  நேரம், மிகச் சிறிய தவறான விஷயம் கூட மலையளவு பாவத்தை குவித்துவிடும். புண்ணியம் சேர்க்க செய்யும் ஒரு எளிய சேவையில் பாவத்தையும் சேர்த்து மூட்டைக் கட்டிக்கொள்வது நம் மக்களுக்கு கைவந்த கலை. எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அன்னாபிஷேகத்திற்கு அரிசி தருகிறேன் பேர்வழி என்று பாவத்தை மூட்டைக் கட்டிகொள்பவர்கள் மாற வேண்டி இந்தப் பதிவை அளிக்கிறோம். நமது

Read More

நெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)

ஆங்கிலத் தேதிப்படி இன்று அடியேன் பிறந்த நாள். பெற்றோர் காலில் விழுந்து ஆசிபெற்றுவிட்டு ஏதேனும் தொன்மையான ஆலயம் சென்று இறைவனை தரிசித்துவிட்டு அலுவலகம் சென்று இன்றைய பணிகளை கவனிப்பது மட்டும் தான் இன்று நமது அதிகபட்ச நடவடிக்கை. தமிழ் மாதத்தில் வரக்கூடிய நமது பிறந்த நட்சத்திரம் அன்று தான் பிறந்தநாளை கொண்டாடுவது நமது வழக்கம். நட்சத்திரப்படி வரும் பிறந்த நாள் தான் சரியான ஒன்று. மேலும் நமது பாரம்பரியங்களில் ஒன்று. ஆங்கிலத்

Read More

‘கார்த்திகை தீபத்தை எப்படி கொண்டாடவேண்டும்?’ வழி(ஒளி)காட்டும் மகா பெரியவா!

நாளை 25/11/2015 புதன்கிழமை... கார்த்திகை தீபத் திருநாள். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று நாம் குன்றத்தூர் சென்று ஜோதி தரிசனம் செய்து, புகைப்படங்களுடன் விரிவான அப்டேட் அளிப்பது நீங்கள் அறிந்ததே. இந்த ஆண்டு ஜோதி தரிசனத்திற்கும் முருகனருளால் நாளை செல்லவிருக்கிறோம். நமது ஜோதி தரிசன அனுபவம் பற்றிய பதிவு விசேஷ புகைப்படங்களுடன் பின்னர் அளிக்கப்படும். தற்சமயம் வேறொரு முக்கிய பதிவை தயாரித்து வருவதால் தீபத்தை பற்றி விசேஷ பதிவை அளிக்க

Read More

நவீன அறிவியலை வென்ற ‘பழைய பஞ்சாங்கம்’!

சென்ற வாரம் சென்னையை புயல் ஒரு புரட்டு புரட்டிவிட்டுச் சென்ற நிலையில், அதன் பாதிப்பிலிருந்தே மக்கள் மீளாத நேரத்தில் தற்போது மீண்டும் புயல் ஒன்று மிரட்டிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நீரே வடியாத சூழ்நிலையில் சமீபத்திய மழையால் மக்கள் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகியிருக்கின்றனர். நேற்று மாலை பலத்த மழை பெய்தபடியால், சாலையில் வெள்ள நேர் பெருக்கெடுத்து ஓட, வாகனங்கள் நகர முடியாமல் அலுவலகம் முடிந்து வீடு திரும்ப

Read More

ஏட்டுச் சுரைக்காய் பசிக்கு உதவும்!

சென்ற வாரம் அளிக்கப்பட்ட நமது தளத்தின் கூட்டுப் பிரார்த்தனை கிளப் பதிவில், வாசகர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளுடன் பொதுப் பிரார்த்தனையாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் நலம்பெறவும் பிரார்த்தனை கோரிக்கை அளித்திருந்தோம். இந்நிலையில் விரைவில் அளிக்கப்படவுள்ள இந்த வார பிரார்த்தனை கிளப் பதிவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை வாழ் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனையை சமர்பிக்கவுள்ளோம். இதற்கிடையே மேற்கு மாம்பலம் காசி-விஸ்வநாதர் கோவிலில் கந்தசஷ்டியின் போது அங்குள்ள மூத்த பசு ஒன்று

Read More

‘எல்லாம் இருந்தும் எதுவுமில்லை..!’ MUST READ

சென்னையை புரட்டிப்போட்டுள்ள மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை இன்னும் சீரடையவில்லை. தாம்பரம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, கொரட்டூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல புறநகர் பகுதிகளில் பல வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியிருக்கின்றன. ஆசை, ஆசையாய் கடன்பட்டு கஷ்டப்பட்டு பாடுபட்டு வாங்கிய வீடு, கார், பைக், டி.வி, பிரிஜ், வாஷிங் மெஷின், இப்படி பல சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று மேற்கூறிய இடங்களில் மக்கள் வீட்டைவிட்டு

Read More

‘வாழ்க்கைத் துணை’ (LIFE PARTNER) என்றால் என்ன?

இந்தக் கதையை படித்துவிட்டு முடிவில் உங்களில் ஒருவர் கைதட்டினால் கூட நமக்கு வெற்றி தான். மிக மிக பொறுமையாக கதையை படித்து அர்த்தத்தை உள்வாங்கிக்கொள்ளவும். சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி! மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியாளும் அரசன் அவன். அவன் மகள் பட்டத்து இளவரசி திருமணம் செய்துகொள்வதில் நாட்டமில்லாமல் இருந்தாள். தனது குலகுருவின் ஆலோசனையை அடுத்து பல ஆலய திருப்பணிகளை செய்தான் அரசன். இதையடுத்து அரச

Read More

கோ பூஜையும் வேத சம்ரட்சணமும்!

நமது தளத்தின் தீபாவளி கொண்டாட்டங்கள் வரிசையில் நான்காவது பதிவு இது. வேதங்களே தர்மத்தின் ஆதாரம். வேத சம்ரட்சணம் இல்லேயேல் தர்மம் இல்லை. வேதங்கள் இறைவனின் மூச்சுக் காற்று. அதற்கு மொழிபேதம் கற்பித்து புறக்கணிப்பது அறிவீனம். தீந்தமிழில் தேவாரம் பாடிய மூவர் கூட வேதங்களை பழித்ததில்லை. புறக்கணித்ததுமில்லை. எனவே வேதம் தழைக்க உதவுவது நம் அனைவரது பொறுப்புக்களுள் ஒன்றாக ஆகிறது. நமது தளத்தை பொருத்தவரை தீபாவளியை அர்த்தமுள்ள ஆத்மார்த்தமான வகையில் கடந்த சில ஆண்டுகளாக

Read More

வழியாற் காண மெய்யாய் விளங்கும் கந்தசஷ்டி கவசம்!

மழையினால் அலுவலகம் வீடு இரண்டு இடங்களிலுமே பழுதடைந்துள்ள பிராட்பேண்ட் இணைப்புக்கள் இன்னும் சரியாகவில்லை. இன்று கந்தசஷ்டி என்பதால் நிச்சயம் ஏதேனும் பதிவளிக்க விரும்பி கிடைத்த சந்தர்ப்பத்தில் இந்த பதிவை அளிக்கிறோம். இது மீள் பதிவு தான். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு நம் தளத்தில் அளித்தது. எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று தெரியாது. இன்றிரவு முதல் அனைத்தும் சரியாகிவிடும் என்று கருதுகிறோம். அதன் பின்னர் ஓரளவு முடிந்து தயாராகவுள்ள பதிவுகள்

Read More

குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்…!

வாசகர்களுக்கு வணக்கம். தீபாவளி விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்களும் அலுவலகத்திற்கு நீண்ட விடுப்பு எடுத்திருந்தவர்களும் இன்று நிச்சயம் வந்திருப்பீர்கள். தீபாவளி பரபரப்பிலும் கூட நம் தளம் இடைவிடாமல் இயங்கி பல பதிவுகளை அளித்திருப்பதை பார்த்திருப்பீர்கள். சென்ற வாரம் அளிக்கப்பட்ட பதிவுகள் அனைத்தையும் தவறாமல் பார்க்கவும். ஒவ்வொரு பதிவும் அன்பும் அக்கறையம் கொண்டு உங்களுக்காக தயாரிக்கப்பட்டவை. நமது தீபாவளி முன்னெப்போதையும் விட அருமையாக ஆத்மார்த்தமாக கழிந்தது. தீபாவளியன்று குன்றத்தூரில் திருமுறை விநாயகருக்கு

Read More

‘அறுமுகனை துதிப்பதால் கிடைக்கக்கூடிய ஆறு பேறுகள்’ – Rightmantra Prayer Club

முருகனின் திருவவதார நிகழ்வு படிக்க படிக்க ஆனந்தம் அளிப்பது. அதி அற்புதமானது. ஆறு விதமான பேறுகளை தரவல்லது. கந்தசஷ்டி துவங்கி நடைபெற்று வருவதையொட்டி கார்த்திகேயனின் திருவவதாரத்தை இந்த பதிவில் பார்ப்போம்! சிவ-பார்வதி கல்யாணம் நடந்து பல நாட்களாகி விட்டன. குமரன் அவதாரம் நிகழவில்லை. சூரபன்மனின் கொடுமை தாங்கமுடியாமல் சென்றுகொண்டிருந்தது. தேவர்கள் சிவபெருமானின் பாதம் பணிந்தனர். தேவர்களின் பால் இரக்கங்கொண்டு சிவபெருமான்,"தேவர்களே! இனியும் துன்புறாதீர்கள்; புதல்வனைத் தருவோம்" என்று அருளிச் செய்து, ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம்,

Read More