வானிலை ஆய்வு மையம் இது பற்றி நேற்று முன் தினம் தான் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சென்ற ஆண்டு அச்சிடப்பட்ட ஒரு பஞ்சாங்கத்தில் இது பற்றி ஒரு குறிப்பு காணப்படுவதாகவும் அதன்படி சென்னையை 22 ஆம் தேதி புயல் தாக்கும் என்றும் முகநூலில் ஒரு பதிவை இரண்டு வாரத்துக்கு முன்பே பார்த்தோம். (சில மகானுபாவர்கள இதில் அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸாவையும் துணைக்கு அழைத்துக்கொண்டனர். நாஸா இதை கூறவில்லை. நாஸா நம் நாட்டு வானிலையில் எல்லாம் கவனம் செலுத்தாது!)
பஞ்சாங்கத்தின் உள் தாள் மட்டுமே அந்த பதிவில் இணைக்கப்பட்டிருந்தது. மேலே “சுத்த வாக்கிய சுபமுஹூர்த்த பஞ்சாங்கம்” என்று காணப்பட்டது. பதிவிட்டவர் அட்டையை ஸ்கேன் செய்து வெளியிடவில்லை. ஆனால் அது மடத்து வாக்கிய பஞ்சாங்கம் என்று கூறியிருந்தார்.
நம் தளத்தில் அது பற்றி பதிவளிக்க விரும்பினோம். ஆனால் எதையும் உறுதிப் படுத்திக்கொள்ளவேண்டும் இல்லையா?
எனவே முதலில் அப்படி ஒரு பஞ்சாங்கம் இருக்கிறதா, இருந்தால் அதில் இது போல தகவல் கூறப்பட்டுள்ளதா என்று பார்த்து பின்னர் தளத்தில் பதிவிடலாம் என்று கருதினோம். எனவே உள்ள பல கடைகளுக்கு சென்று மேற்படி பஞ்சாங்கம் இருக்கிறதா என்று கேட்டோம். இந்த பஞ்சாங்கம் எங்கும் கிடைக்கவில்லை. பல கடைகளில் நடப்பு பஞ்சாங்கம் (2015-2016) ஸ்டாக் தீர்ந்து புதிய பஞ்சாங்கமே விற்பனைக்கு வந்துவிட்டது. ஓரிரண்டு கடைகளில் கிடைத்த பஞ்சாங்கமும் இதனுடன் ஒத்துப் போகவில்லை.
அன்று மதியம் நண்பர் வெங்கட்டிடம் எதேச்சையாக பேசிக்கொண்டிருந்தபோது பழைய பஞ்சாங்கத்துக்கு நாம் அலைந்த விபரத்தை சொன்னோம்.
“அட… நானும் ஃபேஸ்புக்ல பார்த்தேன் சுந்தர். அது என்கிட்டே இருக்கு. அது ஆற்காடு சுத்த வாக்கிய பஞ்சாங்கம்” என்றார்.
பால் பத்தடி தள்ளி இருந்தாலே பாயுற பூனை… சொம்புக்குள்ளே விட்டா சும்மாயிருக்குமா? பாவம்…அடுத்த சில நிமிடங்களில் அந்த பக்கங்களை வெங்கட் நமக்கு ஸ்கேன் செய்து அனுப்ப நேர்ந்தது!
பக்கங்களை இணைத்திருக்கிறோம். பாருங்கள்.
இந்த வார மழை மட்டுமல்ல, சென்ற வார மழையும் சரியாக கணிக்கப்பட்டிருந்தது. (அந்நிய முதலீடு நாட்டில் குவியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல பிரதமர் இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அந்நிய முதலீட்டை திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.)
வானிலை ஆய்வு மையமே கூட கணிக்க தவறிய ஒரு விஷயத்தை நம் முன்னோர்கள் எப்படி துல்லியமாக கணித்தார்கள்? அவர்களின் சாஸ்திர அறிவு அத்தனை கூர்மையானது. ஜோதிடமே ஒரு விஞ்ஞானம் தான்.
(இதில் நாஸா எப்படி உள்ளே வந்தது என்று தெரியவில்லை. நாஸாவின் தளத்தை நாமும் சென்று பார்த்தோம். அப்படி முன்னறிவிப்பெல்லாம் அவர்கள் வெளியிடவில்லை. எங்கே மழை பஞ்சாங்கத்தில் கூறியது போல பொழிந்து நமது சாஸ்திரங்கள் மக்களின் நம்பிக்கையை பெற்றுவிடுமோ என்ற அச்சத்தில் யாரோ வேண்டுமென்றே இதில் நாஸாவை இழுத்துவிட்டிருக்கவேண்டும்!)
மேற்படி பஞ்சாங்கத்தில் சென்ற வாரமும் இந்த வாரமும் சென்னையை புயல் தாக்கும் என்கிற விபரத்தை போட்டிருப்பதை பாருங்கள். இந்த வாரம் சற்று ஹைலைட் செய்தே போட்டிருக்கிறார்கள். அது பற்றி தளத்தில் பதிவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் நேரமின்மை காரணமாக முடியவில்லை.
அதற்குள் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டிருந்தபடி சென்னையை 22, 23 புயல் புரட்டிப்போட்டுவிட்டது. நேற்றைய மழையை சென்னை மக்கள் இதுவரை கண்டிருக்கமாட்டார்கள். மதியம் வரை வெயிலடித்துக்கொண்டிருந்தது. திடீரென்று அதற்கு பிறகு பெய்ய ஆரம்பித்த மழை கொஞ்சம் கொஞ்சமாக வலுத்து இரவு வரை பெய்து சென்னையை கலங்கடித்துவிட்டது.
நேற்று முன்தினம் ஞாயிறும் கூட மழை தான். வாசகர் ஒருவரின் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாலை நீலாங்கரை செல்லவேண்டியிருந்தது. வழியிலேயே மழை பிடிபிடியென பிடித்துகொண்டது. போரூர் சேது ஷேத்ரம் அருகே செல்லும்போது மழை சுழற்றியடித்தது. நேரம் அப்போது 5.15 pm. சரியாக 5.30 pm என்பது நமது பிரார்த்தனை நேரம் என்பதால் அங்கேயே நமது பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையை முடித்துக்கொண்டோம். சில நிமிடங்கள காத்திருந்த பிறகு மழை லேசாக விட அதற்கு பிறகு புறப்பட்டு சென்றோம். (மியாட் அருகே உள்ளே ஆறு, எப்போதுமே வறண்டு தான் காணப்படும். ஆனால், அதில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பாருங்கள்.) மழை அடிக்கடி பயமுறுத்திக்கொண்டிருந்தாலும் நண்பர் இல்ல நிகழ்ச்சி இறைவனருளால் நல்லபடியாக நடந்து முடிந்தது சந்தோஷம்.
பஞ்சாங்க விஷயத்திற்கு வருவோம்…
பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம். நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூர்ய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே இந்த பஞ்சாங்கம். வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய பஞ்ச அங்கங்களே பஞ்சாங்கம் என்று பெயர் ஏற்பட காரணமானது.
பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பெளர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.
மேற்கூறிய இரண்டில் வாக்கிய பஞ்சாங்கமே துல்லியமானதாகும்.
சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம். ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் ரிஷிகள் அருளி செய்த ஸ்லோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும்.
தமிழகத்தில் மட்டுமே இரண்டு பஞ்சாங்க முறைகளும் பின்பற்றப்படுகிறது. மற்ற மாநிலங்களில் திருக்கணித பஞ்சாங்கமே பின்பற்றப்படுகிறது.
இனிமே ‘பழைய பஞ்சாங்கம்’னு யாரையும் சொல்லாதீங்க. நவீன சாட்டிலைட் தொழில்நுட்ப அறிவியலே அதுக்கு முன்னால நிற்க முடியலியே…!
=========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
==========================================================
Also check :
உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?
நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?
பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?
அவசியம் தரிசிக்க வேண்டிய 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!
==========================================================
[END]
சுந்தர் சார், பஞ்சாங்கம் பற்றிய பதிவு படித்தது ரொம்ப சந்தோஷம். (நமது முன்னோர்களின் ஞானத்திற்கு ஈடு இணை இல்லை.) நீங்கள், அதுவும் ஒரு விஷயத்தை எல்லா விதத்திலும் உறுதி செய்து பின்னர் பதிவளிப்பது என்பது மிக உயரிய விஷயம். அதை நீங்கள் ஒவ்வொரு பதிவிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள். நாங்களும் வாக்கிய பஞ்சாங்க பக்கங்களை தேடினோம். கிடைக்கவில்லை என்றதும் விட்டுவிட்டோம்.
தங்களின் தொண்டு மேன்மேலும் சிறக்க வாழ்க வளர்க என வாழ்த்துகிறேன்
சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தை தேடி கண்டு பிடித்து , பதிவு செய்யும் தகவல் உண்மையானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் , இந்த பதிவை ஆதாரத்துடன் பதிவு செய்த விதம் அருமையோ அருமை….
28ம் தேதி மிகவும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதை ஆதாரத்துடன் உணர்த்தி விட்டீர்கள் . நேற்று பேய் மழையில் மாட்டிக் கொண்டு ஒரு வழியாக இரவு 11 மணிக்கு வீடு போய் சேர்ந்தது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.
இந்த பதிவு வருவதற்கு உதவி செய்த திரு வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
வாழ்க.. வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
வணக்கம் சுந்தர்
நவீன அறிவியல்லவிட நம்ம அறிவியல் எப்போவமே மேல் தான் சார்
நன்றி
பஞ்சாங்கத்தை பற்றிய தகவல்கள் மிகவும் உபயோகமாக இருந்தது
பல சந்தேகங்களுக்கும் விடை கிடைத்தது
மிக்க நன்றி
பழசு பழசு தான், புதுசு புதுசு தான் சார். அதுவும் உங்களுக்கு சரி என்று பட்டால் தான் எதையும் தெரிவிப்பதால் நாங்களும் நல்ல நல்ல விபரங்களை அறியமுடிகிறது .
வளரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
தங்களின்
சோ. ரைவ்ச்சந்திரன்
கைகா
PleasE give more info on electrical leak?
இப்படி எல்லாம் இருக்குமா ஆச்சரியப்பட வைத்த நல்ல தகவல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடம் நன்றி