Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > வசமாகும் நின் கருணை பெறும் பேறு தினம் வேண்டும்!

வசமாகும் நின் கருணை பெறும் பேறு தினம் வேண்டும்!

print
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நம் தளத்தின் கூட்டுப் பிரார்த்தனைக்கான கோரிக்கைகள் வந்து குவிந்துள்ளன. பிரார்த்தனை மீது அனைவருக்கும் உள்ள நம்பிக்கையையே இது காட்டுகிறது. உங்கள் நம்பிக்கை எதுவும் வீண் போகாது. இறைவனிடம் நாம் செய்யும் நியாயமான பிரார்த்தனைகள், வைக்கும் உண்மையான கோரிக்கைகள் பலன் தராமல் போகவே போகாது.

நம்பிக்கை. நம்பிக்கை. நம்பிக்கை. அசைக்க முடியாத நம்பிக்கை. இதுவே நம் உயிர்மூச்சு.

அடுத்து மகா பெரியவா அவர்கள் ஒரு முறை கூறியது போல, நமக்கு வந்த துன்பமே பெரிதென்று எண்ணி சோம்பியிருத்தல் கூடவே கூடாது. நாம் ஏற்கனவே ஒரு பிரார்த்தனை பதிவில் கூறியிருந்தபடி நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் பிறரின் கண்ணீரை துடைக்க முற்படுவோம். இறைவன் நம் கண்ணீரை தானாக துடைப்பான். இது தான் இந்த பிரார்த்தனை கிளப்பின் மையக்கருத்தே.

இந்த வாரம் முன்னுரிமை மற்றும் அவசரம் கருதி கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. எஞ்சிய கோரிக்கைகள் அடுத்த வாரம் இடம்பெறும்.

கோரிக்கைகளை சமர்பித்தவர்கள் உங்கள் கோரிக்கைகளை இறைவனிடம் சமர்பித்துவிட்டு மற்றவர்களுக்காக தொடர்ந்து இந்த பிரார்த்தனைகளில் பங்கேற்று வாருங்கள். நல்லதே நடக்கும்!!

சுபமஸ்து!

யாசகம் பெற வந்து பெறாமல் சென்ற முனிவர்!

பண்டைய நாளில் பாரத புண்ணிய பூமியில் இருந்த ஓர் அரசன் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றான். போனவிடத்தில் காட்டில் தனிமையில் தவம் புரியும் ஒரு மகா முனிவரைச் சந்தித்தான். அவர் மிகப் பெரிய மகான் என்பதை உணர்ந்த மன்னன், அவரைத் தம் நாட்டிற்கு வரவேண்டுமென இறைஞ்சினான். முதலில் மறுத்த முனிவர் மன்னனின் வற்புறுத்தலால் சம்மதித்து அவனுடன் நாட்டுக்கு வந்தார்.

அரசனின் அரண்மனையில் தங்கிய முனிவரிடம் மன்னன் ‘சற்றுப் பொறுங்கள், இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு வந்துவிடுகிறேன்’ என்று சொல்லி உட்கார்ந்து பிரார்த்தனை செய்தான். மன்னன் இறைவனிடம் தனக்கு ஏராளமான செல்வத்தையும், பரந்து விரிந்த நாடும், உடல் ஆரோக்கியமும், குழந்தைப் பேறும் தந்தருள வேண்டும் என்று மனமுருக பிரார்த்தித்தான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த முனிவர் எழுந்து வெளியேறத் தொடங்கினார். மன்னன் திடுக்கிட்டு முனிவரிடம் சென்று சுவாமி தாங்கள் என்னிடமிருந்து எதையும் பெறாமல் போகிறீர்களே என்றான். அதற்கு அந்த முனிவர் சொன்னார், “நான் பிச்சைக்காரர்களிடம் யாசகம் பெறுவதில்லை” என்று.

“தாங்கள் என்ன சொல்கிறீர்கள் சுவாமி?” என்றான் அரசன்.

முனிவர் மீண்டும் சொன்னார், “இத்தனை நேரம் நீ இறைவனிடம் என்னவெல்லாமோ வேண்டும் என்று கேட்டு பிரார்த்தனை செய்தாயல்லவா? அப்படி உனக்கு வேண்டியவற்றை அவரிடம் யாசிக்கும் நீ, எனக்கு என்ன கொடுக்கப் போகிறாய்? முதலில் உன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள், பிறகு என் போன்றவர்களுக்கு தானம் அளிக்கலாம்” என்றார்.

(நன்றி : vivekanandam150.com)

கடவுளிடம் என்ன தான் சார் நான் கேட்பது ? பிரார்த்தனையப்போ பேசாம நிக்கிறது தான் பெஸ்ட் போல?

இதற்கான பதிலை பல மாதங்களுக்கு முன்பே ஒரு பதிவாக அளித்திருந்தோம். தற்போது அளித்தால் அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் என்பதால் மீண்டும் அளிக்கிறோம்.

தினசரி பிரார்த்தனை!

நெஞ்சு நிறை அஞ்சாமை நித்தம் நீ தர வேண்டும்!

நிமிர் நடையும் நேர் பார்வையும் குறைவின்றி பெற வேண்டும்!!

வஞ்சகரை நேர் காணா வழியமைத்து உதவ வேண்டும்!

வாக்கென்றும் பிறழாத நா காக்க வரம் வேண்டும்!!

சோர்விலா மனமென்றும் நீ அருளும் நிலை வேண்டும்!

ஓய்வில்லா உடலுக்கு நீ உரமாய் மாறவேண்டும்!!

நோய் இல்லா வாழ்வு அமைய நின் கருணை விழி வேண்டும்!

தீமை ஏதும் செய்திடாத திட சித்தம் பெற வேண்டும்!!

பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

உறவுக்குள் ஒளிபகையே உருவாகா நிலை வேண்டும்!!

தருகின்ற வளம் என்றும் தடையின்றி வர வேண்டும்!

தான் என்ற அகம்பாவம் தலை காட்டாது அமைய வேண்டும்!!

விசுவாசம் உதிரத்தில் ஊடிழையாய் ஓடவேண்டும்!

வீண் பெருமை சிறிதேனும் ஒட்டிடாத மனம் வேண்டும்!!

வசமாகும் நின் கருணை பெறும் பேறு தினம் வேண்டும்!

வாய்க்கின்ற வாய்பெல்லாம் நினதருளால் நிறைய வேண்டும்!!

உண்மை என்னும் மலராலே அர்ச்சிக்கும் நிலை வேண்டும்!

எண்ணுகின்ற நினைவெல்லாம் உனக்கிசைவாய் அமைய வேண்டும்!!

என் மனத்தே நீ என்றும் நின்று நிலை பெற வேண்டும்!

நின் தளமாய் என்னுடலும் என்றென்றும் ஆக வேண்டும்!!

– இப்போது புரிந்திருக்குமே பிரார்த்தனை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று…!

Rightmantra Daily Prayer

நமது பிரார்த்தனை என்றும் எப்போதும் இதுவாக இருக்கட்டும். இதை மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். நமது தளம் சார்பாக பிரார்த்தனைகளில் பங்கேற்கும் போதும் இதை அர்த்தம் உணர்ந்து மனப்பூர்வமாக சொன்னாலே போதும்.

ஒவ்வொரு முறையும் கோவில்களுக்கு சென்று வரும்போதும்… நம்மிடம் ஒரு திருப்தியின்மை ஏற்படுவதுண்டு. நமது பிரார்த்தனையை இறைவன் கேட்டிருப்பானா? நாம் வந்தது அவனுக்கு தெரிந்திருக்குமா? தரிசனத்தில் ஏதேனும் குறை வைத்துவிட்டோமா?

மேற்கூறிய பிரார்த்தனையை மனப்பாடம் செய்து அதை மனபூர்வமாக சொல்லிப் பாருங்கள். அலைபாயும் மனதிற்கு ஒரு பரிபூரண அமைதி கிட்டும். கோவிலுக்கு சென்றுவிட்டு வந்த அந்த மெய்யான அனுபவம் கிட்டும். இறைவனிடம் தைரியமாக குற்ற உணர்ச்சி இன்றி நமக்கு தேவையானதை கேட்க கூடியவற்றை கேட்ட திருப்தியும் கிட்டும்.

சரி இந்த வார கூட்டு பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

=================================================================

முருகா உன் அருள் வேண்டும்மழலை பிறக்க வேண்டும்!!

என் பெயர் மு. சுந்தரபாண்டி

கடந்த ஒரு வாரமாக நான் உங்கள் Rightmantra தளத்தின் வாசகன். என்னுடைய சொந்த ஊர் மதுரை மாவட்டம் விரகனூர். தற்பொழுது வேலை நிமித்தமாக வேலூரில் என் மனைவியுடன் வசிக்கிறேன். எனக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எனக்கு மட்டும் அல்ல என் உடன் பிறந்த 2 மூத்த சகோதரர்களுக்கும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. எங்களுக்கு குல தெய்வம் வேறு ஒரு சாமியாக இருந்தாலும் எங்களோட தாத்தா  காலத்தில் இருந்தே நாங்கள் குல தெய்வமாக மதித்து வழிபடுவது முருகபெருமான் தான். திருப்பரங்குன்றத்தில் எங்கள் குடும்பத்திற்கென்று ஒரு அன்னதான சத்திரம் உள்ளது. அதில் முருகன் பெயரில் நாங்கள் இன்று வரை அன்னதானம் செய்து வருகிறோம். இருப்பினும் அந்த முருகனின் கடைக்கண் பார்வை எங்கள் மீது இன்னும் படவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களுடைய தளத்தின் வாசகன் என்ற முறையிலும் மற்றும் கூட்டு பிரார்த்தனை மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக எங்களுடைய பிரச்சனையை உங்களிடம் சமர்பிக்கிறேன்.

எனக்காகவும் என் சகோதரர்களுக்காகவும் நமது பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்திக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

அன்புடன் வேண்டும்,
உங்கள் வாசகன்,
மு.சுந்தரபாண்டி.

=================================================================

புத்திரன் வாழ்வு சிறக்கவேண்டும் எங்கள் மனம் குளிர வேண்டும்

என் மகன் 28 வயதாகும் அசோக் நாகராஜ்.

நல்ல கம்பெனி ல் BPO பணி ஆற்றிகொண்டிருந்தான். ஏதோ காரணமாக வேலையை விட்டு விட்டான் .இப்போது 5-6 மாதங்களாக வேலை இல்லாமல்  இருக்கிறான் . தேவையான் முயற்சிகளும் எடுக்க விரும்பாமல் மனது ஒடிந்து பொய் இருக்கிறான் .marriage பண்ண வேண்டிய வயதில் வேலையும் இல்லாமல் இருப்பது ரொம்ப கஷ்டமாக  இறுக்கிறது . படிப்பு  10th பிறகு B .com corres ல் பண்ணி  இருக்கிறான் .இவன் பொருட்டு  என் மனைவி ரொம்ப கவலைப்பட்டு மன நிம்மதி மற்றும் உடல் சீர்கேடு அடைந்து  வருகிறாள். என்னாலும்  முடியவில்லை .

நெறைய தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்து வருகிறோம்.

தாங்கள் தயவு கூர்ந்து இந்த என் மகன் அசோக் நாகராஜ் உடனே  வேலை பெற்று கல்யாணம் செய்து கொண்டு எங்களை கவலை படாமல் இருக்க ஆவன பிரார்த்தனைகளை செய்து உதவுமாறு கை கூப்பி சிரம் தாழ்த்தி வேண்டி கேட்டுகொள்கிறேன் .

காரியம் கைகூடியதும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை உடனே  தெரிவிக்கிறேன்

நன்றி
கே. எஸ். சுந்தரம்
Bangalore

=================================================================

மன அமைதியும் மனம் போல வாழ்வும்!

என் தோழி செல்வி.ரேகா தன் நெருங்கிய உறவினர் ஒருவரின் திடீர் மறைவால் மிகவும் சோகத்தில் உள்ளார்கள். மேலும் அவர் பல்வேறு இன்னல்களால்  கடும் மன உளைச்சலில் பாதிக்கபட்டு உள்ளார்கள்.

அவர்கள் அந்த இழப்பை தாங்கி மீண்டு வரவும் அவருடைய காலம்சென்ற உறவினரின் ஆத்மா சாந்தியடையவும் அவருடைய பிரச்னைகள் யாவும் சூரியனை கண்ட பனி போல நீங்கி மனம் அமைதி அடைந்து அவர்கள் மனம் போல நல்வாழ்வு அமையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
பரிமளம் மணிமாறன்.

=================================================================

திரு.சுந்தரபாண்டி அவர்களின் வீட்டில் மழலைச் சத்தம் விரைவில் கேட்கவும், அவரது சகோதரர்கள் வீட்டிலும் சந்தான பாக்கியம் ஏற்படவும், திரு.கே.எஸ். சுந்தரம் அவர்களின் மகன் சிரஞ்சீவி திரு.அசோக் நாகராஜ் அவர்கள் பெற்றோர் மகிழும் ஒரு பிள்ளையாக மாறவும், திருமதி.பரிமளம் அவர்களின் தோழி செல்வி.ரேகாவின் பிரச்னைகள் யாவும் தீரவும் அவரது மறைந்த உறவினரின் ஆன்மா சாந்தியடையவும்  இறைவனை வேண்டுவோம்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : ஜூன் 30, 2013 ஞாயிறு

நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

– See more at: http://rightmantra.com/?p=5251#sthash.V5sXCwBx.dpuf

10 thoughts on “வசமாகும் நின் கருணை பெறும் பேறு தினம் வேண்டும்!

  1. மிகவும் மிகவும் நன்றி.தாங்கள் முயர்ச்சிகளுக்கு கடவுள்
    ஆதரவு எப்பொழுதும் உண்டு

    i

  2. என்னை போன்ற சிலருக்கு அருமையான பதிவு சார்……

    மிக்க நன்றி சார்…

  3. சந்தோசம். கடவுள் வசமானால் அனைத்தும் நம் வசமாகும். எனவே இறைவனது வசமாக கூட்டு பிரார்த்தனையில் பங்கு கொள்வோம். அனைத்து பிரார்தனயும் கைகூட வேண்டுவோமாக.

    நன்றி
    ப.சங்கரநாராயணன்

  4. மிக்க நன்றி சுந்தர் அண்ணா. எனது கோரிக்கையை ஏற்று இந்த வார கூட்டு பிரார்த்தனையில் எங்களுக்காக பிரார்த்தனை செய்யும் அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.

    “நமக்கு வந்த துன்பமே பெரிதென்று எண்ணி சோம்பியிருத்தல் கூடவே கூடாது. நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் பிறரின் கண்ணீரை துடைக்க முற்படுவோம். இறைவன் நம் கண்ணீரை தானாக துடைப்பான். ” முற்றிலும் உண்மையான கூற்று.

    திரு.கே.எஸ். சுந்தரம் அவர்களின் மகன் திரு.அசோக் நாகராஜ் அவர்கள் நல்ல உத்தியோகம் கிடைத்து வளமான வாழ்வு வாழவும், செல்வி.ரேகாவின் பிரச்னைகள் யாவும் தீரவும் அவரது மறைந்த உறவினரின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுவோம்.

    நன்றி,
    மு. சுந்தரபாண்டி.

  5. பதிவு படித்தபின் மனம் ஒரு நிலைபெற்றது.
    மிகவும் நன்றி சார்.
    இப்போது புரிந்தது பிரார்த்தனை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று.
    இன்று அறிவிக்கப்பட்டுள்ள அனைவரது எண்ணங்கள் நிறைவடைய அனைவரும் பிரார்த்திப்போம்

  6. இந்த வார கூட்டு பிராத்தனைக்கு சொல்லி உள்ளவர்கள் அனைவரின் வேண்டுதலும் நிறைவேற ஆண்டவனை பிராத்திக்கிறேன்

  7. கூட்டு பிரார்த்தனை என்றும் வீண் போவதில்லை. நம் தளம் சார்பாக பிரார்த்தனை செய்து திரு சிவராமகிருஷ்ணன் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் மென்மேலும் குணமடைந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்காக பிரார்த்தனை செய்த நம் தள வாசகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

    ( மற்றும்)

    திரு.சுந்தரபாண்டி அவர்களின் வீட்டில் மழலைச் சத்தம் விரைவில் கேட்கவும், அவரது சகோதரர்கள் வீட்டிலும் சந்தான பாக்கியம் ஏற்படவும், திரு.கே.எஸ். சுந்தரம் அவர்களின் மகன் சிரஞ்சீவி திரு.அசோக் நாகராஜ் அவர்கள் பெற்றோர் மகிழும் ஒரு பிள்ளையாக மாறவும், திருமதி.பரிமளம் அவர்களின் தோழி செல்வி.ரேகாவின் பிரச்னைகள் யாவும் தீரவும் அவரது மறைந்த உறவினரின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்தனை செய்து அவர் அவர் கஷ்டங்கள் நீங்கி வளமான வாழ்வு பெற பிரார்தனை செய்வோம்.

    NANDRI

  8. பிரார்தனை எப்படி இருக்க வேண்டும்,என்பதை மிக அழகாக சொல்லியுல்லீர்கல் நன்ரி.

    திரு.சுந்தரபாண்டி அவர்களின் வீட்டில் மழலைச் சத்தம் விரைவில் கேட்கவும், அவரது சகோதரர்கள் வீட்டிலும் சந்தான பாக்கியம் ஏற்படவும், திரு.கே.எஸ். சுந்தரம் அவர்களின் மகன் சிரஞ்சீவி திரு.அசோக் நாகராஜ் அவர்கள் பெற்றோர் மகிழும் ஒரு பிள்ளையாக மாறவும், திருமதி.பரிமளம் அவர்களின் தோழி செல்வி.ரேகாவின் பிரச்னைகள் யாவும் தீரவும் அவரது மறைந்த உறவினரின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுவோம்.

  9. பிரார்த்தனை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இப்போது புரிந்து கொண்டேன்.பிரார்தனை வரிகள் தொகுப்பு அருமை .

    இன்று அறிவிக்கப்பட்டுள்ள அனைவரது எண்ணங்கள் நிறைவடைய அனைவரும் பிரார்த்திப்போம்.

    -மனோகர்

  10. பிரார்த்தனைகள் நிறைவேறி எல்லோர் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெருகிடவும் , மனநிம்மதி நிறைதிடவும் , நீள் ஆரோக்கியம் என்றென்றும் நிலைத்திடவும் அந்த பரம்பொருள் அருள் புரிந்திட வேண்டிடுவோம் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *