Home > 2013 > May

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!

தான் செல்லும் சாலை வழியே யானைக்கூட்டம் ஒன்றை பார்க்கிறான் ஒருவன். யானைகளை பார்த்து அச்சப்பட்ட வேளையில், அவற்றின் கால்கள் மிக மெல்லிய ஒரு சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததை கவனிக்கிறான். எந்நேரமும் அவை அந்த சங்கிலியை சுலபமாக அறுத்துக்கொண்டு  ஓடமுடியும் என்று அவனுக்கு தோன்றியது. அருகே அதன் பாகனும் நின்றுகொண்டிருப்பதை பார்த்ததும் அவன் அச்சம் ஓரளவு நீங்கியது. பாகனிடம் "இப்படி ஒரு மெலிசான சங்கிலியில் யானைகளை காட்டியிருக்கீங்களே... அதுக திடீர்னு அறுத்துகிட்டு ஓடினா என்னாகிறது?"

Read More

கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!

பசுவைப் போற்றியவர்கள், பராமரித்தவர்கள், காப்பாற்றியவர்கள் அடைந்த நன்மைகளுக்கு நம் புராணங்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஒரு நல்ல மனிதனாகப் பிறப்பதற்கு ஓர் உயிர் எத்தனை புண்ணியம் செய்ய வேண்டுமோ, அதே அளவு புண்ணியம் பசுவாகப் பிறப்பதற்கும் செய்ய வேண்டும் என்று புராணங்கள் உரைக்கின்றன. பசு இருக்கும் இடத்தில் அன்னம், அழகு, ஐஸ்வர்யம், ஆரோக்கியம் அனைத்தும் வந்து சேர்ந்து விடும். சாணம் மெழுகிய நிலம், சாணிநீர் தெளித்த முற்றம், சாணப்பரிமணமான விபூதிப் புழக்கம்,

Read More

குருப்பெயர்ச்சி – சிறப்பு தகவல்கள் !

நவக்கிரகங்களில் பூர்ண சுபகிரகமான குரு, இன்று இரவு 9.03க்கு ரிஷபராசியிலிருந்து மிதுனத்திற்குப் பெயர்ச்சியாகிறார். ஓராண்டு காலம் ஒரு ராசியில் தங்கும் இவர், 2014 ஜுன்12 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கிறார். "குரு பார்க்க கோடி நன்மை' என்பது ஜோதிட பழமொழி. குருவின் பார்வையால் தான் ஒரு மனிதன் வாழ்வில் திருமணம், குழந்தைப்பேறு, பணவரவு, கல்வியறிவு, சமூக கவுரவம் போன்றவை சிறப்பாக அமையும். குரு இருக்கும் இடத்தை விட, அவரது பார்வைக்கு பலம் அதிகம்.

Read More

“ஒன்றென்றிரு.. தெய்வம் உண்டென்றிரு…” – ஏழிசை வேந்தர் திரு.டி.எம்.எஸ். அவர்களுடன் ஒரு பிரத்யேக சந்திப்பு!

சென்ற வருடம் ஒரு நாள் டி.எம்.எஸ். அவர்கள் நடித்த ‘பட்டினத்தார்’ மற்றும் ‘அருணகிரிநாதர்’ படத்தை வீட்டில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு என்பதைவிட பாக்கியம் என்று தான் சொல்லவேண்டும். குறிப்பாக ‘பட்டினத்தார்’ படத்தை பார்த்ததிலிருந்து  டி.எம்.எஸ். அவர்களை பார்க்கவேண்டும், அவரிடம் ஆசி பெறவேண்டும் என்ற உணர்வு என்னுள் பலமாக எழ ஆரம்பித்துவிட்டது. ('பட்டினத்தார்' படத்தை பல வருடங்களுக்கு முன்பு தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன்.) இந்த முதுபெரும் கலைஞரை, இறை அடியாரை (90 வயது!) அவர்

Read More

இசைச் சக்கரவர்த்தி திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் இறுதிப் பயணம்

டி.எம்.எஸ். என்று அன்புடன் அழைக்கப்படும் திரு. டி.எம்.சௌந்தர்ராஜன், தமிழ்த் திரையுலகம் கண்டெடுத்த மாணிக்கங்களில் ஒருவர். தேனினும் இனிய குரலில் பல்லாயிரக்கணக்கான திரைப்பட பாடல்களை, பக்தி பாடல்களை பாடியிருக்கும் ஒரு இசைச் சுரங்கம். கடவுள் மறுப்பு திரையுலகிலும் தமிழ் நாட்டிலும் தலை தூக்கிய காலகட்டங்களில், நெற்றி நிறைய விபூதியோடும், பளீச் குங்குமத்தோடும் வலம் வந்த  டி.எம்.எஸ். அவர்களை பார்ப்பதே கண்களுக்கும் இதயத்துக்கும் இதம் தருகிற உன்னதமான ஒரு விஷயமாகும். மேலும் டி.எம்.எஸ்.

Read More

இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? – ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

ஸ்ரீ குருவாயூரப்பனின் மகிமைகளை எடுத்துரைக்கும் ‘ஸ்ரீமத் நாராயணீயம்’ பாடிய நாராயண பட்டதிரியை நாம் அறிவோம். நாராயண பட்டதிரியுடன் ஸ்ரீ குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் மிகவும் சுவையானது, ரசிக்கத்தக்கது. தம் முன் தோன்றிய ஸ்ரீகுருவாயூரப்பனிடம், பகவானே… நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனம் என்ன?” என்று பட்டதிரி கேட்கிறார். நெய்ப் பாயசம்” – இது குருவாயூரப்பன். ஒருவேளை நெய்ப் பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால், நான் என்ன செய்வது?” ‘‘அவலும் வெல்லமும் போதுமே!” ‘‘சரி பகவானே… அவலும்

Read More

மனநல பாதிப்பு மற்றும் மனக்கோளாற்றை நீக்கும் ‘திருமுருகாற்றுப்படை’ என்னும் அருமருந்து!

இன்று வைகாசி விசாகம். முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும்.  விசாகம் ஆறு  நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். முருகப் பெருமானுக்கு உகந்த நாள் வைகாசி விசாகம். வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் 'வைசாக' மாதம் என்றிருந்து பின்னாளில்  'வைகாசி' என்றானது. இந்த மாத பவுர்ணமி நாளை 'வைகாசி விசாகம்' என்று குறிப்பிடுகிறோம்.

Read More

கந்தசஷ்டி கவசம் மொபைல் ரிங்டோன் நிகழ்த்திய அதிசயம் – உண்மை சம்பவம் !

பக்தர்களும் அடியவர்களும் மனமுருகி வேண்டும்போது ஏதாவது ஒரு வடிவில் நிச்சயம் இறைவன் அருள்பாலிக்கிறான். 'தேவானாம் மானுஷ் ரூபாம்' என்று சொல்வார்கள். அதாவது ஆண்டவன் பெரும்பாலும் மனிதர்கள் ரூபத்தில் தான் வருவான் என்பது இதன் பொருள். ஆனால் ஆதியந்தம் இல்லாத பரம்பொருளுக்கு மனிதர்கள் ரூபத்தில் தான் வரவேண்டும் என்பது கட்டாயமில்லையே... இதோ இசையின் வடிவில் வந்து அவன் அருள்பாலித்த அற்புதத்தை படியுங்கள்.....! நண்பர் ஒருவரின் ஃபேஸ்புக்கில் இருந்து இதை எடுத்து தந்திருக்கிறேன். நல்ல ரிங்டோன்

Read More

பேப்பர் போடும் பையன் to கோல்கட்டா ஐ.ஐ.எம். — ஒரு லட்சிய மனிதரின் சாதனை பயணம்!

எத்தனையோ சிரமத்திற்கு இடையே - அவமானங்களுக்கு இடையே - பெற்றோர்கள் கடனை வாங்கி, நிலபுலன்களை விற்று தங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறார்கள். தான் தான் விரும்பிய படிப்பை படிக்கவில்லை... தன் குழந்தையாவது ஆசைப்பட்டதை படிக்கட்டும் என்று தன் மாங்கல்யத்தை கூட கழற்றி கொடுத்த தாய்மார்களை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை சிரமத்திற்கு இடையே தங்களை படிக்கவைக்கும் அந்த ஏழை பெற்றோரின் கனவை நனவாக்கும் விதம் ஒவ்வொரு பிள்ளையும்  நடந்து கொள்கிறார்களா? என்பது ஆராயவேண்டிய

Read More

இறைவனின் தரிசனம் கிடைக்குமென்றால் எத்தனை ஆண்டுகள் உங்களால் காத்திருக்க முடியும்?

இரண்டு பெரிய சிவபக்தர்கள் சிவனருள் வேண்டி ஒரு பெரிய மரத்தின் கீழ் அடிக்கடி தியானத்தில் ஈடுபட்டு வந்தனர். ஒரு நாள் அவ்வழியே ஒரு ரிஷி செல்வதை கண்டனர். மிகப் பெரிய தவசீலரான அவர் கயிலைக்கு சிவபெருமானை தரிசிக்க  செல்கிறார் என்று தெரிந்து கொள்கின்றனர். அவரின் கால்களில் வீழ்ந்து நமஸ்கரித்து, "முனி சிரேஷ்டரே எங்களுக்காக நீங்கள் ஒரு உபகாரம் செய்யவேண்டும்" என்று அவரிடம் விண்ணப்பித்துக்கொண்டனர். "நாங்கள் இருவரும் பல ஆண்டுகளாக சிவபெருமானை நோக்கி தியானம்

Read More

இவங்க பக்கம் நீங்க திரும்பினா… ஆண்டவன் தானா உங்க பக்கம் திரும்புவான்!

பிரேமவாசம் - ஆதரவற்ற, ஊனமுற்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஸ்கூல் யூனிபார்ம் (முதல் கட்டம்) வாங்கித் தந்து அவர்கள் முன்னிலையில் நமது பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனையை செய்தது பற்றிய பதிவு இது. பிரேமவாசத்தில் எழுந்திருக்கவே முடியாத மனநிலை பாதிக்கப்பட்ட ஊனமுற்ற குழந்தைகள் முதல் ஆதரவற்ற சராசரி குழந்தைள் வரை பலர் பராமரிக்கப்படுகின்றனர். குடும்ப சூழ்நிலை காரணமாகவும், பெற்றோருக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாகவும் வேறு பல காரணங்களுக்காகவும்

Read More

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

"நீ கஷ்டத்திலிருக்கும் போது ஆண்டவனை கூப்பிட்டால் அவன் உடனே  இறங்கி வந்து என்ன வேண்டும் உனக்கு என்று கேட்பான்- நீ தகுதியுடையவனாய் இருந்தால்!" - இப்படி ஒரு மேற்கோள் ஆன்மீகத்தில் வழக்கில் உண்டு. உண்மையினும் உண்மை இந்த மேற்கோள். நம்பமுடியவில்லையா? சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் நடைபெற்ற சிலிர்ப்பூட்டும் உண்மை சம்பவம் ஒன்றை கீழே படியுங்கள். இதை ஏற்கனவே படித்தவர்கள் கேள்விப்பட்டவர்கள் கூட மீண்டும் ஒரு முறை படிக்கலாம். மனதில் நம்பிக்கையும் சந்தோஷமும்

Read More

அறியாமை இருளை அகற்றிய ஞான சூரியன் ஜகத் குரு ஆதிசங்கரர் ஜெயந்தி சிறப்பு பதிவு!

இன்று ஜகத் குரு ஆதிசங்கரரின் அவதாரத் திருநாள். சங்கர ஜெயந்தி. சங்கரரின் அவதாரம் மிக மிக அத்தியாவசியமான ஒரு காலகட்டத்தில் நம் நாட்டில் நிகழ்ந்தது. ஹிந்துக்கள் தங்களுக்குள்ளேயே பேதங்களை வளர்த்து, ஒருவருக்கொருவர் விரோதித்துக்கொண்டு, வேத நெறிகளிலிருந்து விலகி புதுப் புது தெய்வங்களை கண்டுபிடித்து அவற்றை கொண்டாடி வந்த காலகட்டம். எங்கும் அமைதியின்மையும் வன்முறையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. யாகங்களின் பெயரில் பல இடங்களில் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டு வந்தது. மக்கள் அஞ்ஞானத்தில் உழன்றனர். ஆதிசங்கரர்

Read More

கனவு காணுங்கள், சற்று பெரியதாகவே! பேஸ்புக் மார்க் ஜூகெர் பெர்க்கின் வெற்றி சொல்லும் பாடங்கள்!

சுமார் 150 கோடி பயனீட்டாளர்களை கொண்டு இன்று உலகையே ஆண்டு கொண்டிருக்கும் சமூக வலைத் தளமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூகெர் பெர்க்கின் பிறந்த நாள் இன்று. பேஸ்புக்கின் பயன்பாடு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அத்துணை பேரும் இதனை பயன்படுத்துகின்றனர். ஒரு நாளைக்கு பேஸ்புக்கின் வழியாக படங்கள் மட்டும் 250 மில்லியன் (1 மில்லியன் = 10 லட்சம்) ஏற்றப்படுகிறது தெரியுமா? பேஸ்புக் ஒரு

Read More