பத்மகரம் என்னும் நகரில் ஒழுக்கம் நிரம்பிய அந்தணர் ஒருவர் வசித்து வந்தார். புத்தி சாதுர்யம் நிரம்பிய அவருக்கு ஐந்து புத்திரர்கள். அவர்களும் தந்தைக்கு நிகரான அறிவையும் புத்தி சாதுரியத்தையும் பெற்றிருந்தார்கள்.
அவர்களில், கடைசி மகன் சாந்திகன். ஒரு நாள் அக்கம் பக்கத்து சிறுவர்களுடன் வீதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது ருத்ராக்ஷம் ஒன்றை கண்டெடுத்தான். அதை ஏதோ பெரிய பொக்கிஷம் என்று கருதியவன், சிறுவர்களுக்கே உரிய குதூகலத்துடன் அதை ஒரு நூலில் கட்டி தனது கழுத்தில் கட்டிக்கொண்டான்.
புத்தி சாதுர்யம் மிகுந்தவனாக சாந்திகன் இருந்தபோதும், தன் பெற்றோர் மற்றும் சகோதர்கள் பேச்சை கேட்க்காமல் தன்னிஷ்டம் போல நடந்துவந்தான். அவன் வீட்டில் யாவரும் தினந்தோறும் உஞ்சவ்ருத்திக்கு சென்று. கிடைத்ததை உண்டு வாழ்ந்துவரலானார்கள். இவனோ விளையாட்டு புத்தியிலேயே காலத்தை கழித்தான். பெற்றோரும் சகோதரர்களும் உண்டு விட்டு எஞ்சியிருக்கும் உணவை இவனுக்கு தருவார்கள். அதை இவன் உண்டு வாழ்ந்துவந்தான். மற்றபடி இவன் முயற்சியால் இவன் எதையும் பெற்றதில்லை. இப்படியே பல நாட்கள் சென்றது. காலம் மாறியது. ஆனால் இவன் மட்டும் மாறவில்லை. இவன் தன் கழுத்தில் கட்டிக்கொண்ட ருத்ராக்ஷமும் மாறவில்லை.
இந்நிலையில், மனபோன போக்கில் திரிந்தபடி, மற்றவர்களுக்கும் பாரமாய் இருந்து வெறுமனே காலத்தை கழித்து வந்ததால், இவன் சகோதரர்கள் இவனை வெறுக்க ஆரம்பித்தார்கள்.
இந்நிலையில், கொங்கு நாட்டை (கேரளம்) சேர்ந்த அரசன் ஒருவர் காளியை உபாசித்து வருபவன். ஒவ்வொரு ஆண்டும் காளிக்கு அவன் அந்தணன் ஒருவனை நரபலி கொடுப்பது வழக்கம். இதற்காக யாரையும் அவர் பலவந்தமாக கடத்தி வந்து நரபலி கொடுப்பதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புதலை பெற்றே நரபலி கொடுத்து வந்தான்.
அந்த ஆண்டும் நரபலி கொடுக்கவேண்டி வந்தது. ஆனால் நரபலிக்கு யாரும் கிடைக்கவில்லை. கோடி கொடுத்தாலும் தலையை இழந்து என்ன பயன்? யாருக்குத் தான் உயிர்வாழ ஆசை இருக்காது? எனவே ஒருவரும் முன்வரவில்லை.
எனவே அவன் தன் வீரர்களிடம் பொன்னும் பொருளும் நவமணிகளும் நிரம்பக் கொடுத்து, நாலாபுறமும் பலிக்கு தகுந்த ஒருவரை கண்டுபிடித்து அழைத்துவரும்படி ஆட்களை அனுப்பினான். அவர்களும் பலம் இடங்களில் தேடித் திரிந்து, அந்தணர் வீடுகளுக்கெல்லாம் சென்று, உடல் ஊனமோ குறையோ இல்லாத அந்தணனை தேடி வந்தார்கள். ஆனால் ஒரு பயனும் இல்லை. அவர்களால் யாரையும் விலைக்கு வாங்கமுடியவில்லை.
இந்நிலையில் சாந்திகனின் வீட்டுக்கும் அவர்கள் வந்தார்கள். நரபலிக்கு அந்தணர் ஒருவர் தேவை என்றும், அதற்காக எவ்வளவு பொன் வேண்டுமானலும் தருவதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே சாந்திகனின் நடத்தையால் அவன் மீது மிகவும் காட்டமாக இருந்த அவன் சகோதரர்களும் பெற்றோர்களும், இவனால் இப்படி ஒரு பயனாவது ஏற்பட்டதே என்று அவர்களிடம் பொன்னையும் பொருளையும் வாங்கிக்கொண்டு, சாந்திகனை அனுப்பிவிட்டனர்.
சாந்திகனோ எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அவனைப் பொறுத்தவரை எல்லாமே அவனுக்கு ஒரு விளையாட்டு தான். எனவே பயந்து நடுங்காமல், முரண்டு பிடிக்காமல் அவர்களுடன் அவன் சிரித்தபடி சென்றான். அங்கு அரண்மனை புரோகிதரின் வீட்டில் தங்கினான்.
பலிகொடுக்கும் நாளும் வந்தது. புரோகிதரின் அறிவுரைப்படி, நீராடி, புதிய வஸ்திரங்கள் அணிந்து, சந்தனம், சாவாது மற்றும் இன்னபிற வாசனை திரவியங்கள் பூசிக்கொண்டு அரண்மனை சென்றான். அரசனும் அவர்களுடன் சேர்ந்து அனைவரும் காளிக்கோவிலுக்கு சென்றார்கள்.
இவனை ஒரு ஆசனத்தில் அமரவைத்துவிட்டு, காளி தேவிக்கு பூஜைகள் துவங்கியது. தூப தீப ஆராதனைகள் செய்து, பல வித அன்னங்களை, பழ வகைகளை, மாமிச வகைகளை நைவேத்தியம் செய்து வணங்கினான்.
பின்னர் சாந்திகனை காளியின் சன்னதி முன்பு நிறுத்திவிட்டு தானும் அருகில் நின்றுகொண்டான்.
இந்நிலையில் சன்னதியில் அமர்ந்திருந்த காளி ருத்ராக்ஷம் அணிந்த சிறுவன் ஒருவன் தன்னிடம் பலிக்கொடுக்க கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருப்பதை கண்டு பதறி தன் இருக்கையைவிட்டு எழுந்து வந்தாள். வரும்போதே சாந்திகனை மனதுக்குள்ளேயே துதித்தபடி வந்தாள்.
பின் மிகவும் உக்கிரம் அடைந்து, சாந்திகனை பலியிடத் துணிந்த அந்த புரோகிதனை தன் சூலத்தால் தலையை துண்டித்து கொன்றுவிட்டு அவனுடைய உதிரத்தை பருகினாள். இதை பார்த்த அரசனுக்கு மூச்சே நின்றுவிட்டது. காளி அடுத்து தன்னைத் தான் வதம் செய்யப்போகிறாள் என்று கருதி, அஞ்சி நடுங்கியபடி சாந்திகன் பின்னே ஒளிந்துகொண்டான்.
காளி சாந்திகனை நோக்கி, “உத்தம அந்தணனே, ருத்ராக்ஷம் அணிந்திருக்கும் நீ உனக்கு வேண்டிய வரங்களை கேட்பாயாக. நான் தர சித்தமாயிருக்கிறேன்” என்றாள்.
சாந்திகன் ஒரு கணம் நிதானித்தவனாய், “தாயே… காளிதேவி, என் மீது வாஞ்சை கொண்டு எனக்கு வரம் அளிக்க வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. நான் கேட்கக்கூடிய வரம் ஒன்றே ஒன்று தான். இந்த அரசர், இனி தங்களை திருப்தி படுத்தும் நோக்கத்துடன் ஆண்டு தோறும் அளிக்கும் நரபலியை இனி அளிக்கக்கூடாது. இத்தோடு இந்த வழக்கம் இந்த நாட்டில் ஒழிக்கப்படவேண்டும். மேலும் இவ்வரசர் மீது தாங்கள் கருணை கொண்டு அவரை ஒன்றும் செய்யாமல் அவர் வேண்டும் வரங்களை அளிக்கவேண்டும்” என்றான்.
காளிதேவியும் அப்படியே ஆகட்டும் என்று கூறி அரசன் கேட்ட வரங்களை எல்லாம் தந்தாள்.
பின்னர் அரசனை நோக்கி, “மன்னா, புனிதமான ருத்ராக்ஷத்தை அணிந்திருக்கும் இந்த சிறுவனை நீ என்றும் பூஜித்து வரவேண்டும். இவன் நாவினின்று வரும் வார்த்தைகளை சாட்சாத் ருத்ரமூர்த்தியே சொல்வதாக கருதி பாவிக்கவேண்டும். உன்னுடைய மகளையும் இவனுக்கு ஊரறிய விமரிசையாக திருமணம் செய்து தரவேண்டும். இவற்றை தவறாமல் செய்து வருவாயேயானால் உன் எண்ணங்கள் யாவும் ஈடேறி சர்வ மங்களம் உண்டாகும். இவனை எனக்கு பலியிட அழைத்து வந்த புரோகிதனை உங்கள் எதிரிலேயே கொன்றுவிட்டேன். அவனுடைய குடும்பத்தினரையும் அழித்துவிட்டேன். இவனை தினந்தோறும் திட்டிக்கொண்டும் கரித்துக்கொட்டிகொண்டும் இருந்த இவன் பெற்றோர்கள் உடன்பிரந்தோர்கள் நோய்முத்லானவைகளால் பீடிக்கப்பட்டு வீட்டையும் உடமைகளையும் இழந்து அலைந்து திரிந்து வருகிறார்கள். ருத்ராக்ஷம் அணிந்தவனை நிந்தித்ததால் வந்த வினை இது. சிவாம்சமான ருட்ரக்ஷ்த்தை அணிந்தவர்களை யார் யாரெல்லாம் உபசரித்து பூஜித்து வருகிறார்களோ அவர்கள் பூவுலகிலேயே தேவர்களை போன்று வாழ்வார்கள்.” என்றால்.
“தாங்கள் உத்தரவுப்படியே நடந்துகொள்கிறேன் தாயே” என்று கூறிய மன்னன், காளிதேவிக்கு வாக்களித்தபடி தனது பேரழகு வாய்ந்த மகளை அவனுக்கு மணமுடித்துக்கொடுத்து அவர்கள் தங்க பலவசதிகள் நிரம்பிய அரண்மனை ஒன்றையும் நிர்மாணித்துக்கொடுத்தான். தன் புது மருமகனுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து பூஜித்து வந்தான்.
நடந்த அனைத்துக்கும் தான் ருத்ராக்ஷம் அணிந்ததே காரணம் என்று உணர்ந்த சந்திகன், அதன் பின்னர் ருத்ராக்ஷ மாலைகளை எடுத்து அங்கம் முழுதும் அணிந்துகொண்டு இனிய இல்லறம் நடத்தி வரலானான்.
தங்கள் மகன் சாந்திகன் இவ்வாறு ராஜ வாழ்வு வாழ்ந்து வருவதை கேள்விப்பட்ட அவன் பெற்றோரும் உடன்பிறந்தோரும் அவனை நாடி அவன் இருப்பிடத்திற்கே வந்துவிட்டனர். அவர்கள் உடல்முழுதும் நோயின் தாக்கத்தினால் அழுகி, பலவாறு துன்புற்றுக்கொண்டிருந்தனர். அவர்களை சாந்திகன், வெறுத்து ஒதுக்காமல், புறந்தள்ளாமல், அவர்களை அன்போடு வரவேற்று வாசனை தைலத்தில் நீராடச் செய்து அவர்களுக்கு புத்தாடைகள் கொடுத்து அதை உடுத்துமாறு செய்து, மேலும் அவர்கள் அணிந்துகொள்ள ருத்ராக்ஷ மாலைகளையும் தந்தான்.
அந்த ருத்ராக்ஷத்தின் மகிமையால் அவர்கள் உடலில் இருந்த குஷ்டம் முதலான நோய்கள் மறைந்து அவர்கள் மேனி புத்தொளி பெற்றது. சாந்திகனோடு தங்கியிருந்து அனைத்து விதமான உபசாரங்களையும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வரலானார்கள். தங்கள் இறுதிக்காலம் வந்ததும், பூதவுடல் நீத்து சிவகணங்களால் கயிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பேரின்ப பெருவாழ்வு வாழ்ந்து வந்தார்கள்.
தான் எடுத்து அணிவது ருத்ராக்ஷம் என்பதே தெரியாமல் அதை எடுத்து அணிந்துகொண்டமைக்கே சாந்திகனுக்கு இத்தகைய பலன்கள் என்றால், ருத்ராக்ஷத்தின் மகத்துவத்தை எண்ணி அதை அணிவோருக்கு ஏற்படக்கூடிய பலன்களை சொல்லவேண்டுமா?
சிவபெருமானின் சிறந்த ஆபரணமும் இகபர சுகங்களையும் மோட்சத்தையும் தரவல்லதான ருத்ராக்ஷத்தை எவனொருவன் அணிந்துகொண்டிருக்கிறானோ அவன் பாபங்கள் அனைத்திலிருந்தும் விடுப்பட்டு மேலான புண்ணியங்களை அடைவான் என்பதில் சிறிது சந்தேகமில்லை. அவனுடிய புண்ணியத்தின் அளவை அந்த சிவக்குமார்கலான சுப்ரமணியனும் கணபதியும் தான் கூறமுடியுமே தவிர வேறு யாராலும் கூற முடியாது.
ருத்ராக்ஷத்தின் மகிமையை கேட்பவர்கள், படிப்பவர்கள், யாராக இருந்தாலும் அது அவர்கள் பாபங்களை போக்கக்கூடியது. ஒருவன் யாராக இருந்தாலும் சரி, எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி, ருத்ராக்ஷத்தை அணிந்த மாத்திரத்தில் சகலவிதமான தீவினைகளில் இருந்தும் அவன் விடுபட்டுவிடுவான். எனவே தான் அதற்கு ‘திவ்ய ஆபரணம்’ என்று ஒரு பெயர் இருக்கிறது.
ருத்ராக்ஷத்தின் பெருமை ஏதோ ஒரு கதையோடு முடிவதல்ல. இன்னும் பல உண்டு. இடையிடையே அவற்றை பார்ப்போம். ருத்ராக்ஷம் தரிப்பது தொடர்பான சந்தேகங்கள் உங்களுக்கு எழலாம். தொடரின் போக்கில் அது நிவர்த்தியாகிவிடும் என்று நம்புகிறோம்.
* சமீபத்தில் நம்மை தொடர்புகொண்ட ஒரு வாசகர் ருத்ராக்ஷம் அணிவது குறித்த தம் சந்தேகத்தை கேட்டார். அவர் தாரளமாக அணியலாம். அவருக்கு இந்த கேள்வி பதில் உபயோகமாக இருக்கும்.
ருத்ராஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?
இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் – பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராஷம் அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராஷம் அணிய வேண்டும். ருத்ராஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம். ருத்ராஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும். ருத்ராஷத்தை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!
– திருநாவுக்கரசர்
=======================================================
ருத்ராக்ஷத்தின் பெருமை மிக அதிகம். ருத்ராக்ஷத்தைச் சிவபெருமானுடைய அடையாளமாகப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். ருத்ரனுடைய நேத்திரம் அது. அதைத் தமிழில் ‘திருக்கண்மணி’ என்று சொல்லுவார்கள். மற்ற விருக்ஷங்களுடைய விதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த ருத்ராக்ஷத்திற்கு உண்டு. இயற்கையில் துளையோடு உண்டாவது ருத்ராக்ஷம் ஒன்றுதான். இந்த ருத்ராக்ஷம் பாரத தேசத்தில் நேபாளத்தில் இருக்கிறது.
– ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
=======================================================
சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…
கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)
திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)
வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)
பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)
தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)
கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)
==========================================================
Rightmantra needs your help….
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check கர்மா Vs கடவுள் earlier episodes…
கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)
கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)
விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)
கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)
நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)
ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)
கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)
==========================================================
Similar articles…
சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?
ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!
கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!
‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!
பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?
சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!
தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!
பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?
நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?
கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?
==========================================================
[END]
நன்றி சுந்தர்ஜி! ருத்ராட்சத்தின் மகிமை அறிய உதவியது உங்கள் பதிவு .இதன் தொடர்ச்சியாக சிவ ருத்ராட்சத்தில், வெவேறு எண்ணிக்கைகளில் உள்ள முகங்களின் பலன்கள் மற்றொரு பதிவில் கொடுத்தால் நலமாக இருக்கும்.சிவனே போற்றி ! போற்றி
மிக அருமையான கதை ! படிக்க படிக்க நெஞ்சின் பாரம் குறைவது போல் உணர்ந்தோம்! மேலும் ருத்ராஷம் பற்றிய விளக்கம் அறிய ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்!! அதிலும் பெண்கள் எந்த வகையில் எந்த முகத்தை உடைய ருத்ராட்ஷம் அணியலாம் எனவும் குறிப்பிடுமாறுக் கேட்டுக்கொள்கிறோம்!! நன்றி ஓம் நமசிவாயா !