‘இடரினும் தளரினும்’ பதிகம் எப்படி தேவையான நேரத்தில் தேவையான பணத்தை நமக்கு பெற்று தருகிறது, எப்படி நமது பொருளாதார பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது என்பது பற்றி ஏற்கனவே தளத்தில் பல பதிவுகள் அளித்திருக்கிறோம்.
தூத்துக்குடியை சேர்ந்த ஒருவருக்கு மகள் திருமணத்திற்கு தேவைப்பட்ட மூன்று லட்ச ரூபாய் முதல் முதல் லாக் அவுட் செய்துவிட்ட நிறுவனத்திலிருந்து வரவேண்டிய செட்டில்மெண்ட் தொகை உடனே கிடைத்தது வரை இந்த பதிகம் நிகழ்த்திய பல சம்பவங்களை பார்த்திருக்கிறோம்.
நமது வாசகர்களில் ஒருவர் வைத்தீஸ்வரன். டெல்லியில் வசிக்கும் இவர் தான் வேலை பார்த்த நிறுவனத்தில் பல மாதங்களாக சம்பளமே தரவில்லை என்றும் வேறு வேலை தேடிக்கொண்டிருப்பதாகவும் தனக்கு நல்ல வேலை கிடைக்க பிரார்த்தனை செய்யுமாறு கோரிக்கை அனுப்பியிருந்தார். நாமும், அவர் பெயரை எறும்பீஸ்வரருக்கு நடைபெற்ற விசேஷ அர்ச்சனை + அபிஷேகத்தில் சேர்த்து அவர் பெயரையும் பிரார்த்தனை பதிவில் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். (“வருவான்டி தருவான்டி மலையாண்டி!” Rightmantra Prayer Club)
இடையே ஒரு நாள், பேசும்போது, பொருளாதார பிரச்சனைகள் உடனடியாக முடிவுக்கு வர, இடரினும் தளரினும் பதிகத்தை படிக்குமாறு அவரிடம் அறிவுறுத்தினோம். தளத்தில் அது தொடர்பாக வெளியான பதிவுகளை தவறாமல் படிக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
இதற்கிடையே, இன்று காலை நமக்கு வைத்தீஸ்வரன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். தான் சொல்ல நினைத்த கருத்துக்களை பேப்பரில் எழுதி அதை மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.
ரைட்மந்த்ரா சுந்தர் அவர்களுக்கு,
வைத்தீஸ்வரன் எழுதும் மடல். சில வாரங்களுக்கு முன் வேலை வாய்ப்பு மற்றும் வேளையில் உள்ள இடர்களுக்காக பிரார்த்தனை கிளப்பில் எனது பிரார்த்தனையும் இடம்பெற்றது. அன்று முதல் சில பதிகங்களை படிக்க முயற்சி செய்தேன். விரக்தியால் முடியவில்லை. இருப்பினும் நேற்று முதல் முறையாக ‘இடரினும் தளரினும்’ பதிகத்தை ஒரே ஒரு முறை படித்தேன். நேற்று மாலை எனது SALARY ACCOUNT ல் சம்பள உயர்வுடன் சம்பளம் ஐந்து மாதங்களுக்கு பிறகு CREDIT ஆனது.
இந்த பதிகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ரைட்மந்த்ரா வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோளாக வறுமை நீங்கி வளமுடன் வாழ இந்த பதிகம் சிறந்த வழிமுறையாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.
அன்புடன்
C.வைத்தீஸ்வரன்
எவ்வளவு பெரிய அதிசயம்!!! இருக்காதா பின்னே… ஞானக்குழந்தை பாடிய பதிகமல்லவா? (நாளை திருஞானசம்பந்தர் குரு பூஜை!)
இதே போல, வேறு ஒரு வாசகர் “எனது பிசினஸை நான் விரிவுபடுத்தவேண்டும். அதற்கு முதல் (WORKING CAPITAL) தேவைப்படுகிறது, என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று சில வாரங்களுக்கு முன்னர் நம்மிடம் தனது பிரச்னையை கூறியிருந்தார். ஏற்கனவே பல்முனைத் தாக்குதல்களில் சிக்கி தவிக்கும் அவருக்கு, இந்த பிரச்சனை மேலும் துன்பத்தை அதிகப்படுத்தி வந்தது. இந்த ‘இடரினும் தளரினும்’ பதிகத்தை பற்றி அவரிடம் எடுத்துக் கூறி, தினசரி படித்து வாருங்கள். நல்லதே நடக்கும் என்று கூறினோம்.
அதற்கு அடுத்து அவர் நம்மை தொடர்புகொள்ளும்போதெல்லாம், “பதிகத்தை தவறாமல் படித்து வருகிறீர்களா?” என்று கேட்பது நம் வழக்கம். அவரும், “தினமும் படிக்கிறேன் சார்…. ஆனா நோ யூஸ்!” என்றார்.
“நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து படித்து வாருங்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் சிறுக சிறுக சேர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாள் பிய்த்துக்கொண்டு கொட்டும்” என்றோம்.
அவரும் படித்துக்கொண்டு வருகிறார். ஆனால் பேசும்போதெல்லாம் “பதிகம் படித்து வருகிறேன்…. ஆனாலும் என் முதலுக்கு தேவையான பணம் கிடைக்கவில்லை” என்று நம்மிடம் தனது ஏமாற்றத்தை தெரிவிக்கிறார்.
நாம் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறோம். கடவுள் நாம் என்ன கேட்கிறோமோ அதை தரமாட்டார். ஆனால் நமக்கு என்ன தேவையோ அதை நிச்சயம் தருவார்.
அவருக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் நாம் சொல்வது இதைத் தான். ‘இடரினும் தளரினும்’ பதிகம், மூலம் வரக்கூடிய செல்வம், குற்றமற்ற வினையற்ற செல்வமாக என்றும் இருக்கும். அந்த பணத்தை கொண்டு செய்யும் நீங்கள் செய்யும் எதுவும் நன்கு விருத்தி அடையும். அப்படி ஒரு அமைப்பு இருந்தால் தான் அது உடனடி பலனை தரும். இல்லையேல் அது சற்று கால அவகாசம் எடுத்துக் கொள்ளும்.
அவரை பொருத்தவரை அவர் கூறும் பிஸ்னஸில் இப்போது அவர் பணத்தை முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழல் இல்லாமல் இருக்கலாம். அல்லது லாபகரமான ஒன்றாக இல்லாமல் போகலாம். ஆகையால் தான் பணம் வர மறுக்கிறது.
லட்சணக்கணக்கில் முதலீடு செய்து அதன் ரிசல்ட் வேறு மாதிரி வந்தால் அவரால் அதை தாங்க முடியுமா? எனவே, பதிகம் பணத்தை ஈர்த்து அவரிடம் தராமல் தன்னிடம் வைத்துக்கொண்டிருக்கிறது. உரிய காலமும் சூழலும் அவருக்கு கனியும்போது நிச்சயம் கொடுக்கும் தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பது உறுதி.
எதையும் இறைவனிடம் பிடிவாதமாக கேட்கும் முன்னர், அது நமக்கு நன்மையைத் தான் தருமா என்று ஒரு கணம் யோசித்துக்கொள்ளுங்கள். விடை உங்களுக்கு தெரியாவிட்டால் சாய்ஸை அவனிடம் விட்டுவிடுங்கள். அவன் பார்த்துக்கொள்வான்.
கல்லூரி, வாகனம், வீடு என பல விஷயங்களுக்கு தேவையான பணத்தை வேண்டி அந்த பதிகத்தை படிப்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்!
எல்லாம் சரி… உங்க கதை எப்படி என்று தானே கேட்கிறீர்கள்?
தினமும் அலுவலகம் வந்து சுவாமிக்கு விளக்கேற்றியவுடன் இந்த பதிகத்தை படித்துவிட்டு தான் பணிகளையே துவக்குவது நம் வழக்கம். அதனால் தான் தனி அலுவலகம் துவக்கி ஒரு மாதம் கூட தாக்கு பிடிக்கமுடியுமா என்று கருதிய நிலையில், ஈசனின் கருணையினாலும் உங்கள் ஆதரவினாலும் நான்கு மாதங்கள் நிறைவு செய்துவிட்டோம். இதைவிட வேறு என்ன வேண்டும்?
=====================================================================
* இன்று மாலை 5.00 மணியளவில் சென்னை சைதையில் உள்ள திருவள்ளுவர் குருகுலத்தில் உள்ள மாணவர்களுக்கு தளம் சார்பாக ஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும், ‘ஞானக்குழந்தை’ பக்தி திரைப்படம் திரையிட்டு காட்டப்படவிருக்கிறது.
தீயவை மாள, பிணிகள் அகல, எதிர்கால சந்ததியினர் சிறக்க, தளம் சார்பாக ஒரு தடுப்பூசி!
=====================================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
====================================================================
Also check similar articles and true incidents :
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!
வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்
நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!
மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!
பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!
ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!
வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை – சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வு!!
====================================================================
[END]
மிகவும் மகிழ்ச்சியான பதிவு.
கடவுளை நம்பினோர் கை விடப்படார்
நன்றி
உமா வெங்கட்
உண்மை தான் சார். நானும் இந்த பதிகத்தை படித்து வருகிறேன்.நான் மிகசிறிய முதலீட்டில் ஆரம்பித்த தொழில் முதல் மாதத்திலேயே 68% நஷ்டம் அடைந்தது.ஆனால் இந்த பதிகத்தை படிக்க ஆரம்பித்த பிறகு 2 வது மாதத்த்தில் ஒரு 23% recover ஆனது.நம்பிக்கையுடன் தொடர்ந்து படித்து வருகிறேன். இந்த பதிகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!.
GS .அகிலா
பதிகத்தை படித்து பலனை உடனடியாக எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு, தங்கள் விளக்கம் அற்புதம்.
பதிகத்தின் மேல் நம்பிக்கை வைத்து இடைவிடாமல் படித்து வந்தால், நினைத்தது கைகூடுவது நிச்சயம்.
அதேபோல் “வேல்மாரல்” இடைவிடாமல் தினந்தோறும் படித்துவந்தால் இடைஞ்சல்கள் அகலுவது திண்ணம்.
பதிகங்களை அடையாளம் காட்டிய நமது ஆசிரியர்க்கு மாபெரும் நன்றி.
வணக்கம் திரு. சுந்தர்
நான் Africa வில் 2 வருட ஒப்பந்தத்தில் வேலைக்கு வந்தேன். ஆனால் ஒரு வருடத்தில் எனது ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டார்கள்.அடுத்த மாதம் தமிழ்நாட்டுக்கு வருகிறேன்.நான் தினந்தோறும் சிவ புராணம் படிப்பது வழக்கம்.நீங்கள் சொன்ன இடரினும் என்னும் பதிகம் நான் நெடில் தேடினேன்.என் அதிர்ஷ்டம் அது என் சிவ புராணம் புத்தகத்தில் இருந்தது.கடந்த ஒரு 10 நாட்களாக காலை, மாலை விடாமல் படித்து வருகிறேன்.(சைவமாக).
நான் ஊருக்கு வந்த பிறகு நல்ல வேலை அல்லது சிறு தொழில் செய்ய வேண்டும் என்று வேண்டி மிகுந்த நம்பிக்கையுடன் படித்து வருகிறேன். இந்த பதிகத்தை பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி.
நான் இங்கு வருவதற்கு முன்பு சிவ தீக்ஷை பெற்று இருக்கிறேன்.அதனால் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
ஈசனின் அருள் எனக்கு கண்டிப்பாக கிடைக்கும். ஓம் சிவோஹம் .
அன்புடன்
பாலு
காங்கோ ஆப்ரிக்கா
மிக்க மகிழ்ச்சி.
சிவாய நம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் இல்லை ஒரு நாளும்!
அருமையான நிகழ்வு.
நானும் பல பதிகங்களை படிப்பதால்,இடரினும் தளரினும் பதிகத்தை என் அம்மாவிடம் படிக்க சொன்னேன்.
படித்த முதல் நாளே என் அப்பாவிற்கு வர வேண்டிய பணம் 7,000
வந்து விட்டது.
அம்மா தினமும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
100% நல்லதை மட்டுமே கடவுள் நமக்கு தருவார்.
அவரை விட நமது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் நன்றாக புரிந்து கொள்ள கூடியவர்கள் யாரும் இல்லை.
ஆகவே மனம் தளராது, தீவிர நம்பிக்கையோடு பிராத்தனை செய்தால், நமக்கு சரியான நேரத்தில், சரியானதைத் தந்து நம்மை சந்தோஷப் படுத்துவார்.
அவனருளாலே அவன் தாள் வணங்கி
நித்யகல்யாணி
நன்றி
வாழ்க வளமுடன்
கடவுள் நாம் கேட்பதை கொடுப்பதில்லை
நமக்கு என்ன தேவையோ அதை அவசியம் கொடுப்பார் – நிதர்சனமான உண்மை
நம்பிக்கையோடு பிரார்த்திப்போம்
பலன் வந்து சேரும் வரை பொறுமை காப்போம்
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன் !!!
வணக்கம் சுந்தர். பல பதிகங்கள் ,மந்த்ரங்கள், நீதிகதைகள் மூலம் பல பேர் வாழ்வில் ஓளி விளக்கு ஏற்றி வருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.ஏன் பணம் உடனே வர மாட்டேன் என்பதற்கு நீங்கள் கூறிய விளக்கம் அருமை. இந்த நல்ல பனி தொடர ஈசன் அருளட்டும் .நன்றி.
பலன் தரும் பதிகங்கள் வரிசையில் “இடரினும் தளரினும் ” பதிகம் பற்றி முந்தைய பதிவுகளில்
படித்தாலும், இது போன்ற உண்மை சம்பவங்களே பதிகங்களின் மகத்துவத்தை உணர்த்தும்.
எனக்கும் சில சந்தேகம் இருந்தது..ஆனால் தங்களின் விளக்கத்திற்கு பின்பு தான், பதிகங்களின் அருமை புரிகின்றது.
சரியாக சொன்னீர்கள்- இறைவன் நாம் விரும்பியதை விட,நமக்கு தேவையானதை மட்டுமே தருவார் என்று..
திரு. வைதீஸ்வரன் ஐயா அவர்களின் கடிதம் – நம் தள அன்பர்களுக்கு இன்னும் உற்சாகமூட்டும். பதிகம் பாடும் நாம், இடையறாது..மேலும் மேலும் பாடுவோம்..
பதிகம்களோடு இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது, இறைவன் மேல்,மேலும் சிறிது உரிமை பிறக்கிறது..
இன்றைய திருஞானசம்பந்தர் குரு பூஜை நாளிலே..
இறைவனிடம் உரிமையோடு, நமக்கு தேவையானதை, பதிகன்களோடு பாடி, இறை இன்பம் பெறுவோமாக..!
நால்வர்களில் முதல் குருவான ‘திருஞானசம்பந்தர் ‘ குரு பூஜை …நாளும் கோளும் நாயகனுக்கு இல்லை என்ற பதிகம் தந்த குருவுக்கு இந்த பொன்நாளில் குரு பூஜை, அடியேன் வணங்குகிறேன்… சிவாய நம நமச்சிவாய…
தென்னாடுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
நன்றி அண்ணா…
உங்களோடு சில விடயங்களுக்காக தொடர்பு கொள்ள விரும்புகின்றோம் தங்களுக்கு ஏற்றதொரு நேரம் எமக்கும் கூடிவருமாயின் மிக்க மகிழ்வெய்துவோம்யாம் எமது இ.மெய்லுக்கு விபரங்கள் தெரிவிக்கவும்
உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். நன்றி.