Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

print
சிவபெருமானின் பெருமைகளை பாடும் திருமுறைகளின் பெருமை அளவிடற்கரியது. விதியையே மாற்ற வல்லது. திருமுறைகளை பற்றிய அறிவும் ஞானமும் உங்களுக்கு இருக்கிறது என்றாலே உங்களால் விதியையே மாற்ற முடியும் என்று தான் அர்த்தம். இதில் திருஞானசம்பந்தர் பாடிய இசைப்பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று திருமுறைகளும் திருநாவுக்கரசர் பாடியவை. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பாடல்கள் ஏழாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. திருஞானசம்பந்தர் பாடியவற்றை திருக்கடைக்காப்பு என்றும், திருநாவுக்கரசர் பாடல்களை தேவாரம் என்றும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல்களைத் ‘திருப்பாட்டு’ என்றும் கூறுவர்.

Sirgazhi 4

மேற்கூறிய திருமுகைகளில் இல்லாத தீர்வே கிடையாது. மனிதவாழ்க்கையில் மனிதன் வினைப்பயனால் அனுபவிக்கக்கூடிய நோய், வறுமை, புத்திர பேறின்மை உள்ளிட்ட அத்தனை துன்பங்களுக்கும் இந்த திருமுறைகளில் தீர்வு சொல்லப்பட்டுள்ளது. அதவும் சம்பந்தரின் திருக்கடைக்காப்பில் பல இடங்களில் அந்தந்த பதிகங்களின் பயன்கள் இறுதியில் விவரிக்கப்பட்டிருக்கும். மேலும் பல இடங்களில் ‘ஆணை நமதே’ என்று இறைவனை பதிகத்தின் பலனுக்கு சாட்சியாக இழுத்துவிட்டுவிட்டு போய்விடுவார் ஆளுடையப்பிள்ளை. (என்ன கருணை நம் மீது அந்தக் குழந்தைக்கு!)

ஆக… இப்படி அருமருந்தாக திகழ்ந்து வரும் பதிகங்களை தினசரி ஓதுதல் அவசியம். குளிப்பது எப்படி தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கிறதோ அதே போல, சில நிமிடங்கள் செலவிட்டு இந்த பதிகங்களை ஓதுவதும் நமது அன்றாட நடவடிக்கையாக இருக்கவேண்டும்.

ஆனால், அங்கு தான் பிரச்சனையே… இத்தனை பதிகங்கள் இருக்கிறதே… இதில் எதை படிப்பது என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். ஆளுடையப்பிள்ளை அதற்கும் ஒரு அருமையான தீர்வை சொல்லியிருக்கிறார்.

Sirgazhi 1

திருஞானசம்பந்தர் அவர்களின் தந்தையார் சிவபாதவிருதயர் தமது பூஜை காலத்தில் நாள்தோறும் தனது மகன் எழுதிய அனைத்து பதிகங்களையும் ஓதும் நியமமுடையவராய் இருந்தார். ஆனால் நாளுக்கு நாள் ஆளுடையப்பிள்ளை கோவில் கோவிலாக சென்று பதிகங்கள் பாடிவந்தமையால் ஓதவேண்டிய பதிகங்கள் அதிகரித்துக்கொண்டே வந்தன. எனவே தனது மகனிடம், “அனைத்து பதிகங்களையும் ஓதுவதற்கு சிரமமாக உள்ளது சம்பந்தா” என்று வருத்தத்துடன் கூறினார். தனது தந்தைக்காக ”திருவெழுக் கூற்றிருக்கை என்ற ஒரு பதிகத்தை திருவாய் மலர்ந்தருளினார். . ”இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும் ” என்று கூறினார். இந்த பதிகம் அனைத்து பேறுகளையும் ஒருங்கே அளிக்கும் அற்புத பதிகமாகும்.

இவ்வுண்மையை சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தில்,

செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்க ளான்மொழி மாற்றும்
வந்தசொற் சீர்மா லைமாற்று வழிமொழி எல்லா மடக்குச்
சந்த இயமகம் ஏகபாதம் தமிழிருக்குக் குறள் சாத்தி
எந்தைக் கெழுகூற் றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு. (276)

நாலடி மேல்வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்
சால்பினிற் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக
மூலஇலக்கிய மாக எல்லாப் பொருள் களும் முற்ற
ஞாலத் துயர்காழி யாரைப் பாடினார் ஞானசம் பந்தர். (277)

என்று அருளிச் செய்திருப்பதில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

இப்பதிகத்தை நாள்தோறும் இடைவிடாமல் மன உறுதியுடன் (உறைப்புடன்) பாராயணம் செய்து வருபவர்களுக்கு மறுபிறப்பு ஏற்படுவதில்லை என்றும், இவ்வுலகில் பெற வேண்டிய அனைத்தையும் பெற்று சிவனுலகு எய்துவர் என்றும் இதன்பயன் கூறப்படுகிறது. இப்பதிகத்தை சிவபெருமானை முன்னிலைப்படுத்தியும், இறைவனின் எண்ணற்ற ஆற்றல்களைச் சிறப்பித்தும் பாடியுள்ளார் சம்பந்தர். சீர்காழி திருத்தலத்தின் பன்னிரு திருப்பெயர்களும் இப்பதிகத்தினுள் இடம் பெற்றிருப்பதுதான் இதன் தனிச்சிறப்பு.

Sirgazhi 3
சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள திருஞானசம்பந்தர் சன்னதி!

எழுகூற்றிருக்கை

ஓருரு வாயினை மானாங் காரத்
தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்
ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை
இருவரோ டொருவ னாகி நின்றனை

ஓரா னீழ லொண்கழ லிரண்டும்
முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி
காட்டினை நாட்ட மூன்றாகக் கோட்டினை
இருநதி யரவமோ டொருமதி சூடினை
ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம்

நாற்கான் மான்மறி யைந்தலை யரவம்
ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்
திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை
ஒருதனு விருகால் வளைய வாங்கி
முப்புரத் தோடு நானில மஞ்சக்

கொன்று தலத்துற வவுணரை யறுத்தனை
ஐம்புல னாலா மந்தக் கரணம்
முக்குண மிருவளி யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ
டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து

நான்மறை யோதி யைவகை வேள்வி
அமைத்தா றங்க முதலெழுத் தோதி
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை

இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை
பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த
தோணிபுரத் துறைந்தனை தொலையா விருநிதி
வாய்ந்த பூந்தரா யேய்ந்தனை

வரபுர மொன்றுணர் சிரபுரத் துறைந்தனை
ஒருமலை யெடுத்த விருதிற லரக்கன்
விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோ னான்முக னறியாப்
பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை

ஐயுறு மமணரு மறுவகைத் தேரரும்
ஊழியு முணராக் காழி யமர்ந்தனை
எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமு மைந்தமர் கல்வியும்
மறைமுத னான்கும்

மூன்று காலமுந் தோன்ற நின்றனை
இருமையி னொருமையு மொருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணிய னறியும்

அனைய தன்மையை யாதலி னின்னை
நினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே.

To download the above padhigam as pdf please click the following link :

http://rightmantra.com/wp-content/uploads/2015/06/Ezhukootrirukkai.pdf

=====================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

====================================================================

Also check similar articles and true incidents :

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

எது நிஜமான பக்தி?

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!

வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

====================================================================

[END]

 

8 thoughts on “இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

  1. இந்த பதிகம் எனக்கு மிகவும் பிடித்த, பரிச்சயமான பதிவு .

    இந்த பதிகத்தை நான் 1995 ம் ஆண்டிலிருந்து படித்து வருகிறேன் . என் இனிய அலுவலக தோழியான திருமதி லக்ஷ்மி அவர்கள் இந்த பதிகத்தின் அருமை பெருமைகளை சொல்லி என்ன படிக்கச் சொன்னார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அன்றிலிருந்து இன்று வரை இந்த பதிகம் என்னால் தினமும் ஓதப்படுகிறது. நானும் எனது நண்பர்களுக்கு இந்த பதிகத்தை பற்றி கூறி இருக்கிறேன். இந்த பதிகம் எனக்கு மனப்பாடமாக தெரியும்.

    நம் தளம் மூலமாக இந்த பதிகத்தை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது . எல்லோரும் இந்த பதிகத்தை படித்து இன்புற வேண்டும்.

    கோவில் குளத்தையும், கோபுரத்தையும் பார்க்கும் பொழுது 12 வயதில் அந்த கோவிலுக்கு சென்ற ஞாபகம் வருகிறது.

    ஞானக் குழந்தையின் தந்தையால் நமக்கு இந்த பாடல் கிடைத்தது.

    இன்று தங்கள் தள தீவிர வாசகி திருமதி பரிமளத்திற்கு இன்று இனிய பிறந்த நாள் . அவர்களுக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துகளும்… வணக்கங்களும்

    திருச்சிற்றம்பலம்

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  2. வணக்கம்……..திருமுறைகளையும் நால்வர் பெருமக்களையும் நினைத்தாலே மனதில் ஒரு இனம்புரியா மகிழ்ச்சி, நிறைவு ஏற்படுகிறது………எந்த பதிகத்தைப் படிப்பது என்ற சந்தேகம் நமக்கு உண்டு……. எழுகூற்றிருக்கை பதிகத்தை அனைவரும் பலன் பெறும் வகையில் அளித்தமைக்கு நன்றி………

  3. வணக்கம் சுந்தர். இந்த பதிகம் என்னிடம் கூட இருக்கிறது.ஆனால் இதுவரை படித்து இல்லை அழகான படம்.திருபதி கோவிலில் சுப்ரபாதம் வைப்பது போல ,தேவார பாடல்களை சிவன் கோவிலில் ஓத செய்தால் எல்லோரும் மிக்க பயன் அடைந்து இருப்பார்கள்.பிரபலம் ஆகி இருக்கும்.கையில் உள்ள பொருளின் அருமை தெரிவதில்லை என்பது உண்மைதான் .நன்றி.

  4. டியர் சுந்தர்,

    தாங்கள் இப்பதிவில் அளித்துள்ள இந்த சிறந்த பதிகத்தை உடனடியாக பதிவிறக்கம் செய்து விட்டேன். மிக்க நன்றி.

    ஓம் நம சிவாய !

  5. நன்றி சுந்தர். இதற்கு உரை கிடைத்தால் நல்லது.

  6. அருமயான பதிகம். நன்றி! நன்றி!

    நான் பதிவிறக்கம் செய்துவிட்டேன்.

    Thank you Sundar!

  7. அருமையான பதிவு. பரிமளம் மேடமிர்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

  8. இந்த பதிவின் ஆடியோ கிடைக்கும் இடம் விபரம் தெரியபடுத்தவும்

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *