இப்போதெல்லாம் ஹேண்ட்வாஷ் பிரபலமாகிவிட்டது. சாப்பிடுவதற்கு முன் அவற்றை கொண்டு கையை அலம்பிக்கொண்டால், நோய்நொடிகள் அண்டாது என்று கூறுகிறார்கள். மைன்ட் வாஷ் என்ற ஒன்று இருக்கிறது தெரியுமா? மனதை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கும் ‘சிவாய நம’ என்னும் பஞ்சாட்சரம் தான் அது. அதை எப்போதுமே நம் மனதில் இருத்திவிட்டால், பாவங்கள் நம்மை அண்டவே அண்டாமல் அது நம்மை காக்கும்.
அதனால் தான் ஞானசம்பந்தப் பெருமான், எப்போதுமே சிவபெருமானை நினைத்தபடி இருக்கவேண்டும் என்று கூறுகிறார்.
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே
இந்த சிவபுண்ணியக் கதைகள் சிவ மஹாபுராணத்திலும் கந்தபுராணத்திலும், தேவி பாகவதத்திலும் நிறைய உண்டு. இவை பல ரிஷிகளால் பலருக்கு சொல்லப்பட்டவை. இந்த கதைகளை மேம்போக்காக படிக்காமல், இதன் கருத்தை உணர்ந்துகொள்ளுதல் அவசியம். அறியாமல் செய்யும் சிவபுண்ணியத்திற்கே இப்படி ஒரு மகத்துவம் கிட்டுகிறது என்றால், காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி அவனை துதிப்பவர்கள் அடையக்கூடிய நன்மையை பட்டியலிடமுடியுமா என்று படிக்கும் / கேட்கும் அனைவருக்கும் உணர்த்துவதுதான் இக்கதைகளின் நோக்கம்.
வாருங்கள் சிவபுண்ணியத்தில் மூழ்கி எழுவோம்! பாபங்களை தொலைப்போம்!!
சிவாய நம!!!
பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம்!
சௌராஷ்டிர நாட்டில் (இன்றைய குஜராத்தின் தெற்கு பகுதி) கனகபுரம் என்கிற பட்டணம் ஒன்று இருந்தது. அங்கே திருட்டையே தொழிலாக கொண்ட திருடன் ஒருவன் வசித்து வந்தான். ஒரு நாள் அரண்மனை புரோகிதரின் வீட்டில் புகுந்து கொள்ளையடித்துவிட்டு தப்பியோடுகையில், ஒரு அந்தணர் அவனை பார்த்துவிட்டார். “திருடன்… திருடன்…” என்று அவர் பெரிதாக கூச்சலிட, கோபம் கொண்ட திருடன் அந்த அந்தனை அதே இடத்தில கத்தியால் குத்தி கொன்றுவிட்டான். சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு விரைந்தோடிவந்த ரோந்துக் காவலர்கள் அவனை கையும்களவுமாக பிடித்து அரசன் முன் கொண்டு போய் நிறுத்தினார்.
“என்ன தைரியம் இருந்தல அரண்மனை புரோகிதர் வீட்டிலேயே கொள்ளையடிப்பாய்? கொள்ளையடித்ததோடு ஒரு பிராமணரையும் கொன்றிருக்கிறாய்… உன் முடிவு மற்ற திருடர்களுக்கு பாடமாக இருக்கட்டும்” என்று கூறியவன், அத்திருடனை கொண்டு சென்று முதலைக்கு உயிரோடு உணவாக வீசும்படி ஆணையிட்டான்.
அவர்களும் அவன் கைகால்களை கட்டி ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள குளத்திலுள்ள முதலையை நோக்கி வீசியெறிந்தார்கள்.
திருடனை நோக்கி பாய்ந்து வந்த முதலை, அவனை கொன்று தின்னாமல், அவனை சுமந்து வந்து கரையில் கிடத்திவிட்டு சென்றது. அனைவரும் அதைக் கண்டு வியப்படைந்தார்கள்.
உடனே அரசனிடம் சென்று தகவலை தெரிவித்தார்கள். அரசன், அவனை சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டான். ஆனால், அவன் மீது கத்தி பட்ட அடுத்த வினாடி அது வலுவிழந்து உடைந்து தூள்தூளாகிப் போனது. வேறு விதமான ஆயுதங்களினாலும் கூட அவனை ஒன்றும் செய்யமுடியவில்லை.
இவன் ஏதோ மந்திர தந்திர வித்தைகளை தெரிந்துவைத்திருப்பான் போல என்ற முடிவுக்கு வந்தான் அரசன்.
ஆனால், சம்பந்தப்பட்ட திருடனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. “நாம் ஏன் இன்னும் சாகாமல் இருக்கிறோம்” என்று வியப்படைந்தான்.
அவனை பாதுகாப்பாக சிறையில் அடைக்கும்படியும் அவனை தண்டிக்க மாற்று வழிகளை ஆராய்வதாகவும் கூறிய அரசன் குழப்பத்துடனே அரண்மனைக்கு திரும்பினான்.
அங்கே பதிவிரதையான தன் மனைவியிடம் இருந்த பேசும் கிளியை பார்த்தான். அது முக்காலமும் உணர்ந்த கிளி. தேவேந்திரனின் மனைவி இந்திராணி, இவன் மனைவிக்கு பரிசாக அளித்தது.
அதனிடம் கேட்டால் ஒருவேளை விடை கிடைக்கக்கூடும் என்று கருதி, அந்த அதிசய கிளியிடம் “நான் ஒரு திருடனை, கொலைகாரனை கையும் களவுமாக பிடித்துவிட்டேன். அவனை தண்டிக்க எத்தனையோ வழிகளில் முயற்சித்தும் என்னால் முடியவில்லை. அது ஏன்? உனக்கு காரணம் தெரியுமா… அதை சொல்லமுடியுமா??” என்று கேட்டான்.
இவன் விஷ்கம்பன் என்ற ஒரு வியாபாரிக்கு மகனாக பிறந்தவன். சித்ரபானு என்பது இவன் பெயர். வியாபாரத்தில் நாட்டமின்றி, விலை மாதர்களிடம் சென்று தந்தையின் சொத்துக்களை அழிப்பதிலேயே இவன் குறியாக இருந்தான். இந்த துர்நடத்தை காரணமாக இவன் செல்வங்கள் அனைத்து ஒரு கட்டத்தில் வற்றிப்போய்விட்டன. அதன் பிறகு வழிப்பறி, களவு இவற்றையே தொழிலாக கொண்டு இவன் ஊதாரித்தனம் செய்து வாழ்ந்து வந்தான். இவன் கொள்ளையிட ஒரு வீட்டை கண்ணி வைத்தால் அந்த வீட்டை கொளுத்திவிடுவான். பின்னர் கொள்ளையிடுவான். பின்னர் அந்த செல்வங்களை கொண்டு இஷ்டத்துக்கு செலவு செய்து தான் விரும்பும் பர ஸ்திரீகளிடம் சென்று வருவான்.
========================================================
For earlier episodes…
கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)
விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)
கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)
நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)
ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)
========================================================
இவனால் பல பசுக்களும், மக்களும், அந்தணர்களும் தீயில் வெந்து மடிந்திருக்கிறார்கள்.
இவன் ஒரு முறை புஜங்கபுரம் என்னும் நகரை கொள்ளையடித்து அங்கிருந்த பசுக்கூட்டத்தையும் கவர்ந்து ஓட்டிக்கொண்டு சென்றான். அப்போது, ஒரு கர்ப்பிணி பசுவுக்கு காலில் ஆணி குத்தி காயம் ஏற்பட்டுவிட்டது. அதனால் ஒரு கட்டத்திற்கு மேல் நடக்க முடியவில்லை. இவன் பலவந்தமாக அதை அடித்து விரட்ட முயற்சிக்க, அது பள்ளத்தில் வீழ்ந்து உருண்டு, அருகே இருந்த அஸ்வேஸ்வர சுவாமி கோவிலின் வாசலில் போய்விழுந்தது. இனிமேல் இந்த பசுவால் நமக்கு பிரயோஜனமில்லை என்று கருதிய இவன், “இனி இந்த பசு, இங்கே ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு பயன்படும் வகையில் இங்கேயே இருக்கட்டும்” என்று மனதிற்குள் முடிவு செய்தான். மனப்பூர்வமாக பசுவை இவன் அங்கு விட்டுவிட்டு தன் வழியே சென்றுவிட்டான்.
இவனால் ஆலயத்தில் விடப்பட்ட பசுவை அங்குள்ளவர்கள் காப்பாற்றி, அதற்கு வைத்தியம் செய்து, அது கோவிலுக்கு சொந்தமானது என்பதை உணர்த்த அதற்கு சூல முத்திரையும் இட்டு, அது கன்று ஈன்றவுடன் அதன் பாலை கறந்து அது முதல் அந்தப் பாலைத்தான் இன்றுவரை அந்த சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகிறார்கள்.
ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்ய தொடர்ந்து பசும்பால் கிடைக்கச் செய்யும் ஒரு மகத்தான சிவபுண்ணியத்தை இவன் செய்திருக்கிறபடியால், உன் தண்டனைகள் இவனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. சிவபுண்ணியம் என்பது அந்தளவு மகத்தான ஒன்றாகும். இனி இந்த புண்ணியாத்மாவை நீங்கள் ஒன்றும் செய்யாமல், இவனை வழிபடவேண்டும். இவனுக்கு விலங்குகள், பூதப்பிரேத பிசாசுகள், சர்ப்பங்கள், ராக்ஷர்கள் இவை எவற்றாலும் பயமில்லை. ஆபத்துமில்லை.
இவன் காலம் இயற்கையாக முடிந்தவுடன் அப்பசுவின் ரோமம் ஒன்றுக்கு ஒரு ஆயிரம் பிரம்ம கல்ப காலம் சிவலோகத்தில் இருப்பான். முடிவில் மோட்சத்தை அடைவான்.” என்று கூறி முடித்தது கிளி.
அரசனும் அந்த திருடனை பணிந்து அவனை விடுதலை செய்து, அவனுக்கு ஏராளமான பொன்னையும் பொருளையும் பரிசாக கொடுத்து அவனை வணங்கி அனுப்பிவைத்தான்.
நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயின ராயி னுருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே
– திருஞானசம்பந்தர் (மூன்றாம் திருமுறை)
பாடல் விளக்கம் : ஏழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும் திருவைந்தெழுத்தைப் பக்தியோடு உச்சரிப்பார்களேயானால், உருத்திர கணத்தாரோடு சேர்ந்து வசிக்கும் பேற்றினைப் பெறுவர். அடியவர்கள் கேட்ட வரமெல்லாம் தரும் சிவபெருமானின் திருநாமமும் திருவைந்தெழுத்தே ஆகும் .
….. சிவபுண்ணியக் கதைகள் தொடரும்
==========================================================
ஒரு நிமிஷம் ப்ளீஸ்…
சுந்தரகாண்டம், குருசரித்திரம், வேல்மாறல் போன்ற புத்தகங்கள் வேண்டுவோர் கவனத்திற்கு…
வாழ்க்கையில் போராடிக்கொண்டிருப்பவர்கள் பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்கள், INSTANT REMEDY தேவைப்படுகிறவர்களுக்கு ஒரு உடனடி ஆறுதல், DIVINE INTERVENTION அளிக்க வேண்டியே, நமது வாசகர்களுக்கு சுந்தரகாண்டம், வேல்மாறல், குருசரித்திரம் போன்ற நூல்களை அவர்கள் கேட்கும்போது அனுப்பிவருகிறோம். சிலர் இதற்குண்டாகும் செலவை தந்துவிடுகிறார்கள். சிலர் மறந்துவிடுகிறார்கள்.
இதை ஒரு சேவையாக கருதித்தான் செய்து வருகிறோம். மற்றபடி புத்தகங்களை வாங்கி விற்கும் வேலையை நாம் செய்யவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டுகிறோம்.
சிலர் நமக்கு மின்னஞ்சல் அனுப்பும்போது “Please send me Velmaaral, Gurucharithiram books 3 copies to this address” என்று குறிப்பிட்டு விலாசத்தை மட்டும் தெரிவித்து ஒற்றை வரியில் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள்.
இது சரியா?
புத்தகம் வேண்டுவோர் முதலில் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். தளத்தை எத்தனை காலமாக படித்துவருகிறார்கள், இந்த தளம் பற்றி எவ்வாறு தெரியும் போன்ற விபரங்கள் அவசியம் தேவை.
மேலும் புத்தகத்திற்கு உண்டான பணத்தை + கூரியர் செலவை சம்பந்தப்பட்டவர்கள் எப்படி அனுப்ப இயலும் என்று நமக்கு தெரிவிப்பது அவசியம். (MONEY ORDER அல்லது ONLINE TRANSFER தான் சிறந்தது. செக் புக் வைத்திருப்பவர்கள் காசோலை அனுப்பலாம்.) எந்தப் புத்தகமாக இருந்தாலும் நாம் அதை அனுப்பி அவர்கள் கைகளில் கிடைத்த பிறகு நமக்கு பணம் அனுப்பினால் போதும்.
ஆனால், வங்கிக் கிளையில் கவுண்டரில் பணம் கட்டுவதை தவிர்க்கவும். 3RD PARTY CASH DEPOSIT செய்யும்போது, CASH DEPOSIT CHARGE என்ற ஒன்று எல்லா வங்கிகளிலும் விதிக்கிறார்கள். (தனியார் வங்கிகளில் இந்த கட்டணம் அதிகம்). நீங்கள் நம் கணக்கில் ரூ.500/- கேஷ் டெப்பாசிட் செய்தால் சுமார் ரூ.150/- வரை பிடித்துக்கொள்கிறார்கள். இதனால் நமக்கு நஷ்டம் தான். எனவே MONEY ORDER அல்லது ONLINE TRANSFER தான் சிறந்தது.
சுந்தரகாண்டம் நூல்களை பொறுத்தவரை அந்நூல் இலவசமாகத் தான் அனுப்பிவருகிறோம். ஆனால், இலவசமாக எது கொடுத்தாலும் அதன் மதிப்பு புரியாது என்பதால் அந்த நூலுக்குண்டான தொகையை பெற்று அத்தொகையை அந்தந்த மாதத்தின் கோ-சம்ரட்சணத்தில் சேர்த்துவிடுவது நமது வழக்கம்..
மீண்டும் நினைவூட்டுகிறோம். புத்தகங்களை அனுப்புவது சேவை நோக்கில் தான். “பணம் அனுப்புகிறோம். புத்தகம் வாங்கி அனுப்பட்டுமே” என்கிற சிந்தனை வேண்டாம். நேரில் சென்று வாங்கினால் தான் அதில் உள்ள நடைமுறை சிரமங்கள் புரியும்.
அதே போன்று பிரார்த்தனை கோரிக்கையாகட்டும் அல்லது இது போன்ற நூல் தேவைக்கான மின்னஞ்சலாகட்டும், உங்கள் அலைபேசி எண் அவசியம் குறிப்பிடப்படவேண்டும். அலைபேசி எண் இல்லாமல் வரும் எந்த மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது!
நம் பணிக்கு துணைநின்று சேவை சிறக்க உதவுங்கள்!
– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
M : 9840169215 | E : editor@rightmantra.com
==========================================================
தெய்வத்தின் குரல்!
தெரிந்தும் தெரியாமலும் ஜன்மாந்தரங்களாகப் பண்ணியுள்ள பாபத்தைப் போக்கிக் கொள்ள…!
மற்ற மதஸ்தர்களில் சிலர், “உங்கள் மதத்தில் பாபத்தைப் பரிஹரிக்க வழி இல்லை. எங்களிடம் இருக்கிறது. கொஞ்சம் தீர்த்தம் தெளிக்கிறோம். பாபமெல்லாம் போய்விடும். ஆகையால் எங்களிடம் வாருங்கள்”என்கிறார்கள்.
நம் மதத்தில் பாப பரிஹாரத்துக்கு வழி சொல்லாதது மாதிரி இவர்கள் கூப்பிடுகிறார்கள். நமக்கும் ஒன்றும் மத விஷயம் தெரியாததால் இங்கேயிருந்து அங்கே போகிறவர்களும் இருக்கிறார்கள். கர்மாநுஷ்டானம், தர்மாநுஷ்டானம் ப்ரபத்தி, ஞான ஸாதனை எல்லாவற்றையும்விடப் பரம ஸுலபமாக, நாம் தெரிந்தும் தெரியாமலும் ஜன்மாந்தரங்களாகப் பண்ணியுள்ள பாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கே பாகவதம் வழி சொல்லிவிட்டது. சிவ நாமோச்சாரணம்தான் அது.
அதனால் இனிமேல் “உங்கள் பாபத்தைக் கழுவி விடுகிறோம்”என்று நம்மைக் கூப்பிடுபவர்களிடம் “எங்களிடம் பாப பரிஹாரத்துக்கு இருக்கிறது போன்ற ஸுலபமான உபாயம் யாரிடமுமே இல்லை. அதனால் முதலில் நீங்கள் எங்களைக் கூப்பிடும் பாபத்தைப் பரிஹாரம் பண்ணிக்கொண்டுவிட்டு அப்புறம் வாருங்கள்”என்று சொல்லுவோம்!
– ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா
==========================================================
A REMINDER TO ALL …. உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Donate us. Support us. Your contribution really makes a big difference.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
For full details : We need your support and financial assistance. Click here!
==========================================================
Also check :
தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)
கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)
சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?
ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!
கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!
‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!
பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?
சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!
தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!
பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?
நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?
கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?
==========================================================
[END]
மிக அற்புதமான பதிவு! படத்தில் காமதேனு பசுவைப்போலவே ஒரு பசு, அதிலும் சிவ சிவ என்ற நாமத்தின் அருகில் இருப்பது பதிவினை மேலும் மெருகூட்டுகிறது !
சிவ நாம மகிமை பற்றி ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா அவர்களின் உரை படிக்கும் அடியார்களுக்கு மேலும் சிவ புண்ணியத்தை சேர்க்கிறது ! தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் (இறைவா ) பெரியவா போற்றி ! போற்றி !
We are all indebted to you for providing us Siva punniyam by reading this article. The articulation shows the level of shrradhai that you take to write this.
Mahaperiyaval thiruvadi charanam
சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் .
மிக சிறப்பான பதிவு .சிவ நாமத்தின் சிறப்பை ஸ்ரீ மகா பெரியவா மிக அழகாக சொல்லியிருக்கிறார் .
தினமும் சிவ மந்திரத்தை ஓதி அனைவரும் பயன் பெறுவோம். ஐந்து முறை தினம் ஓதி பஞ்சாட்சரம் பெற்று ஆறுதலாய் வாழ்வோம் .
“சிவாயம் என்போர்க்கு அபாயம் இல்லை ”
“சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
சிவ சிவ என்றிட தீவினை மாலும்
சிவ சிவ என்றிட தேவருமாவர்
சிவ சிவ என்ன சிவ கதி தானே”! திருமூலர்