Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > அச்சத்தில் தவித்த கரிக்குருவிக்கு அபயமளித்த சர்வேஸ்வரன் – Rightmantra Prayer Club

அச்சத்தில் தவித்த கரிக்குருவிக்கு அபயமளித்த சர்வேஸ்வரன் – Rightmantra Prayer Club

print
டந்த சில வாரங்கள் மட்டும் திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், வயலூர், திருப்பராய்த்துறை, பொன்மலை என பல தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாம் செல்லும்போது பிரார்த்தனை கோரிக்கைகள் மற்றும் பிரார்த்தனையாளர்களின் பெயர், ராசி, நட்சத்திர விபரங்களை பிரிண்ட்-அவுட் கொண்டு சென்றபடியால் கடந்த நான்கு வாரங்களும் பிரார்த்தனைக் கோரிக்கைகளை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் மேற்கூறிய ஆலயங்களில் சுவாமி பாதத்தில் அந்த கோரிக்கைகளை வைத்து அர்ச்சனை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

குமாரவயலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், திருச்சி
குமாரவயலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், திருச்சி

நாம் கேட்டுகொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான். பிரார்த்தனை சமர்பித்ததோடு உங்கள் வேலை முடிந்தது என்று நினைக்காமல் இந்த வாராந்திர கூட்டுப் பிரார்த்தனையில் தொடர்ந்து பங்கேற்று அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து வாருங்கள். இந்த பிரார்த்தனை மன்றத்தின் தாத்பரியமே பிறருக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்பது தான்.

dsc00689-22
வயலூரில் முருகன் திருப்பாதத்தில் சமர்பிக்கப்பட்ட நமது பிரார்த்தனை கிளப் கோரிக்கைகள் !

இந்த பதிவில் அளிக்கப்பட்டுள்ள பிரார்த்தனை இரண்டு வாரங்களுக்கு இருக்கும். அடுத்த பிரார்த்தனைப் பதிவு 06/10/2016 வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படும்.

மதுரையை மையமாக வைத்து சோமசுந்தரக் கடவுள் நிகழ்த்தியப் லீலைகளை பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணமாக பாடினார். சிவபெருமானின் திரிநேத்ரங்களில் (முக்கண்கள்) வலக்கண் பெரியபுராணம், இடக்கண் திருவிளையாடல் புராணம், நெற்றிக்கண் கந்தபுராணம் என்று கூறுவதுண்டு.

அவற்றில் திருவிளையாடல் புராணத்துக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. இறைவன் மனிதர்களோட கலந்து உறவாடி, குருவி, பன்றி, நாரை முதலான உயிரினங்களுக்கு கூட அருள்புரிந்த புராணம் இதுதான்.

அத்தகைய பெருமையுடைய திருவிளையாடல் புராணத்தில் கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம் என்று ஒன்று உண்டு. இன்றைய பிரார்த்தனையாளர்கள் சிலரின் கோரிக்கையின் தீவிரத் தன்மையையும் சூழ்நிலையையும் மனதில்கொண்டு இந்த படலத்தை இங்கு பதிவாக அளிக்கிறோம்.

இதைப் படிக்கும் யாவரும், அவர்கள் உற்றார் உறவினர்கள், தாய் தந்தை என அனைவரும் நோய் மற்றும் ஆபத்துக்களில் இருந்து நீங்கி சுகம் பெறுவார் என்பது திண்ணம். இறுதியில் அளிக்கப்பட்டுள்ள மிருத்தியுஞ்சய மந்திரம் மற்றும் அதன் காணொளியை தவறவிடவேண்டாம்.

எதிரிகள் தொல்லையால் தவித்த கரிக்குருவிக்கு அபயமளித்த ஈஸ்வரன்!

ராஜ ராஜ பாண்டியன் இந்திர பதவியைப் பெற்ற பிறகு, அவனுடைய குமாரன் சுகுண பாண்டியன் உயிர்களின் துன்பம் நீக்கி, நாட்டை நன்னெறியில் ஆண்டு வந்தான்.

அக்காலத்தில் வலிமை மிக்க ஒருவன், முற்பிறப்பில் தான தருமங்கள் செய்து, சிறிது பாவமும் செய்த காரணத்தால், இப்பிறவியில் கரிக்குருவியாக வந்து பிறந்தான். அக்கரிக்குருவிக்குக் காக்கை ஆகிய வேறு பறவைகள் எதிரியாகித் துன்பம் கொடுத்ததால், துன்பம் பொறுக்காமல், காட்டுக்குச் சென்று, மரக்கிளை ஒன்றின் மீது வெட்கத்துடன் அமர்ந்திருந்தது.

அச்சமயம், அம்மரக்கிளையில் தங்குவதற்காக, விபூதியும், உருத்திராட்சமும் அணிந்திருந்த தீர்த்த யாத்திரை செய்து வரும் சிவபக்தர் ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் மற்றவர்களைப் பார்த்து, ”எல்லோருக்கும் நல்ல பலனைத் தரும் ஸ்தலம் மதுரை, தீர்த்தம் பொற்றாமரைக்குளம், மூர்த்தி எம்பெருமான், இம் மூன்று வித சிறப்புகளையும் ஒரே இடத்தில் கொண்ட காரணத்தால் மதுரைக்கு இணையான ஸ்தலம் வேறு இல்லை.

karikkuruvi

தம்மை வணங்கி வழிபடும் அடியவர்களுக்கு எளியவரான எம்பெருமான், வேண்டிய வரங்களை இப்பிறவியிலேயே அருளுவார். ஆகையால் சிறந்த மூர்த்தி எம்பெருமானே ஆவார்” என்று உபதேசம் செய்து கொண்டிருந்தார்.

சோர்ந்து கிடந்த கரிக்குருவிக்கு, சிவபக்தர் போதித்ததைக் கேட்டதும் ஞானம் பிறந்தது. ”இப்பிறவியை ஒழிக்க வேண்டுமானால், நான் இந்தச் சிவபக்தர் கூறியபடி செய்ய வேண்டும்” என்று உறுதி கொண்ட கரிக்குருவி காட்டை விட்டுப் பறந்து சென்று மதுரையை அடைந்தது.

================================================

Also check : சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

================================================

பொற்றாமரையில் நீராடி,சோமசுந்தரப் பெருமானைப் பிரதட்சிணம் செய்த கரிக்குருவி, மூன்று நாட்கள் மனமார்ந்த பக்தியுடன் மானசீக பூஜை செய்தது மீனாட்சியம்மையார், சோமசுந்தரப் பெருமானை நோக்கி, ”தேவரீர்! கரிக்குருவி எதற்காக வழிபாடு செய்கிறது. அது இங்கு வந்த காரணம் என்ன?” என்று கேட்டார். எம்பெருமானும் கரிக்குருவியின் வரலாற்றை முறையாகக் கூறியருளினார். பிறகு கரிக்குருவியின் மேல் திருவருள் நோக்கம் பாவித்து, மிருத்தியுஞ்சய மந்திரத்தை உபதேசம் செய்தருளினார்.

மிருத்தியுஞ்சய மந்திரத்தை கேட்டவுடன் கரிக்குருவியின் பிறவித்துன்பம் நீங்கியது. அதனுடைய சிற்றறிவு நீங்கிப் பேரறிவு சித்தியாகிவிட்டது. எம்பெருமானின் திருவடிகளை மனதில் தியானம் செய்து கொண்டு, ”எம்பெருமானே! அடியவனை ஆளவும் வேண்டுமோ? அடியவர்களைத் தேடிச் சென்று அருள் செய்வதே எம்பெருமானின் தன்மை போலும்! அடியேன் முற்பிறப்பில் செய்த தருமத்தால் தான் இப்பிறவியில் தேவரீரின் வாயிலாக மந்திரோபதேசம் பெற்றேன். மறுபிறவியில், சிவபக்தி பெறவும் இது காரணமாயிற்று. ஆயினும் அடியேனுக்கு ஒரு குறை ஓன்று உள்ளது ஐயனே! கொடிய பறவைகள் எளியவனைத் துன்புறுத்துவதால், என் நிலையை எல்லோரும் பார்த்துச் சிரிக்கும் படி ஆயிற்று.” என்று வேண்டிக் கொண்டது.

அதைக் கேட்ட சோமசுந்தரப் பெருமான், ”அந்த கொடிய பறவைகளுக்கெல்லாம நீ வலியான் ஆகக் கடவாய்.” என்று மொழிந்தருளினார். கரிக்குருவி மீண்டும் ஒரு வரம் கேட்டது. ”வலியான் என்ற பெயர் எனக்கு மட்டுமில்லாமல் என் இனத்தவர்களுக்கெல்லாம் ஆக வேண்டும்” என்று கேட்டது. எம்பெருமானும் அவ்வாறே ஆகுக” என்று அருள் புரிந்தார். பிறகு திரியம்பகம் என்னும் அவ்வேத மந்திரத்தைத் தெய்வம், ரிஷி, சந்தம் ஆகியவற்றுடன் உதாத்தம், அனுதாத்தம், சோரிதம் ஆகிய மூன்று வித ஓசையுடன் தெரிவித்தருளினார்.

ஈசுவரன் அருளிய மந்திரத்தைக் கரிக்குருவி இடைவிடாமல் பயின்று வந்தது. அதனுடைய இனப் பறவைகளும் ஈசுவரன் அருள் வலிமையால் பறவைகளுக்கெல்லாம் வலிமை பெற்றனவாகி, வலியான் என்ற காரணப் பெயர் பெற்று சிறப்புடன் வாழ்ந்தன.

பிறகு கரிக்குருவி எம்பெருமான் திருவடி நிழலையடைந்தது!

“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே!
சுகந்திம் புஷ்டி வர்த்தனம்!
உர்வாரு கமில பந்தனான்
ம்ருத்தியோர் மூஷிய மாம்ருதாத்!”
– மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்

உங்கள் வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலோ இந்த மந்திரத்தை நூற்றெட்டு முறை ஜபிக்கவும். அற்புதம் நிச்சயம்.

இந்த மந்திரம் காயத்ரி மந்திரத்துக்கு இணையான சக்தி மிக்கது. ஏன் அதனினும் மேலானது.

உச்சரிப்பை நீங்கள் புரிந்துகொள்ள மந்திரத்தின் காணொளியை இணைத்துள்ளோம். இதை ஓடவிட்டு ஒரு முறை கேட்டுப்பாருங்கள். மனம் அத்தனை லேசடையும். நம்பிக்கை பிறக்கும்.

மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம் – அற்புதமான காணொளி – Mahamrityunjay Mantra Youtube

================================================

நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு 

பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.

1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.

2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.

3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்!

4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.

5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.

6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.

7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.

ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன?

நீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று அரிய சிவதொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

==========================================================

ஒரு முக்கியமான விஷயம்!

பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. கோவிலில் அர்ச்சனை செய்யவே இந்த விபரங்கள் கேட்கப்படுகிறது!)

கோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

நன்றி!

– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
M : 9840169215  |  E : editor@rightmantra.com

==========================================================

நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : திரு.குமார் அவர்கள்.

கூவம் எனப்படும் திருவிற்கோலம் திருக்கோவில் ஐதீக முறையிலான பூஜை தொடர்ந்து பின்பற்றப்படும் ஒரு கோவில். இங்கிருக்கும் மூலவர் தீண்டாத் திருமேனி. சிவாச்சாரியார்கள் சுவாமியை தீண்டாமல் தான் பூஜை செய்வார்கள்.

இங்கு சுவாமிக்கு சாத்தப்படும் மாலை கூட பிரத்யேகமாக ஆலயத்தில் தான் கட்டப்படும். சுவாமிக்கு வெளியிலிருந்து கொண்டு வரும் பூவை ஏற்கமாட்டார்கள்.

kumar-thiruvirkolam-2

இங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் தினமும் உச்சி கால பூஜையின்போது பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கான பால், கூவத்திற்கு பத்து கி.மீ. தொலைவில் உள்ள பிஞ்சிவாக்கம் என்கிற கிராமத்தில் இருந்து (கடம்பத்தூர் அருகே) தினமும் கொண்டுவரப்படுகிறது.

அதில் என்ன விஷேஷம் என்கிறீர்களா?

இந்தப் படத்தில் காணப்படும் குமார் அவர்கள் தான் பிஞ்சிவாக்கத்திலிருந்து திரிபுராந்தக சுவாமிக்கு உச்சிகால பூஜைக்கு பத்து கி.மீ. தூரம் சைக்கிளை மிதித்து பால் கொண்டு வருகிறார். சுமார் ஆயிரம் வருடங்களாக இவரது தலைமுறையினர் தான் பசும்பால் கொண்டுவருகிறார்களாம். எப்பேற்ப்பட்ட பாக்கியம்!!

ஆரம்ப காலங்களில் காவடியில் இந்த பாலை சுமந்து நடந்து வருவார்களாம். இப்போது சைக்கிளில் பத்து கி.மீ. தூரம் குமார் அவர்கள் இதன்பொருட்டு தினமும் வருகிறார். பன்னெடுங்கலாக மாறாமல் இந்த சம்பிரதாயம் நடைபெற்றுவருகிறது.

kumar-thiruvirkolam-copyநாம் இதற்கு முன்பு இரண்டு மூன்று முறை திருபுராந்தகரை தரிசிக்க சென்றபோதும் திரு.குமார் அவர்களை சந்தித்திருக்கிறோம். நம்மால் இயன்ற சிறு உதவியை அவருக்கு செய்திருக்கிறோம். ஆனால் அவர் ஆற்றி வரும் சேவைக்கு சபை மரியாதை செய்வது தான் முறை எனவே நமது சம்பீத்திய உழவாரப்பணியின் போது திரு.குமார் அவர்களது சேவையைப் பற்றி சபையில் எடுத்துக்கூறி பலத்தை கைத்தட்டல்களுக்கிடையே அவரை கௌரவித்தோம்.

தனது சேவைக்கு இப்படி ஒரு வரவேற்பை, மரியாதையை அவர் எதிர்பார்க்கவில்லை. நெகிழ்ச்சியில் கண்கள் பனித்தன.

இந்த வார பிரார்த்தனைக்கு திரு.குமார் அவர்கள் தான் தலைமை ஏற்கிறார். விரைவில் அவரை திருவிற்கோலம் சென்று சந்தித்து பிரார்த்தனை கோரிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளோம்.

சிவாய நம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருகாலும் இல்லை!

இது தொடர்பான ஆலய தரிசன பதிவுக்கு : திரிபுர தகனமும், கூவம் திரிபுராந்தகர் திருக்கோவில் சிறப்பும்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்:

இந்த வாரம் பிரார்த்தனை சமர்பித்திருக்கும் கோரிக்கைகள் ஒவ்வொன்றும் கண்கலங்கவைப்பன. முதல் கோரிக்கை சமர்பித்திருக்கும் வாசகர் திரு.ராமலிங்கம், மின்னஞ்சல் அனுப்பியதோடு சில வாரங்களுக்கு முன்னர் நம்மை சந்திக்க விரும்பி நேரம் கேட்டு நம் அலுவலகத்திற்கே வந்து நம்மை சந்தித்தார். ஒரே மகள். அவளுக்கு இப்படி ஒரு பிரச்சனை. எந்த தந்தையால் தாங்கமுடியும்? இருப்பினும் நம்பிக்கையோடிருக்கிறார். அவர் சூழ்நிலையில் வேறு யாராவது இருந்தால் இப்படி நடமாடுவார்களா என்பதே சந்தேகம் தான். நம்பிக்கை தானே வாழ்க்கை. மகளுக்கு நிச்சயம் பரிபூரண குணம் ஏற்பட்டு அவள் வாழ்க்கையில் ஒளி ஏற்படும் என்று தெம்பூட்டியிருக்கிறோம். வேல்மாறலை விடாமல் படித்து வருகிறார். நம் தளத்தை பற்றி கேள்விப்பட்ட நாள் முதல், தொடர்ந்து தினசரி விடாமல் படித்து வருகிறார் என்பதை அவரிடம் பேசும்போது தெரிந்துகொண்டோம். நம் தளம் நடக்கும் விதம் பற்றி அறிந்துகொண்டதாகவும் தளத்திற்கும் ஏதாவது செய்யவிரும்புவதாகவும் கூறி சொன்னபடி மறக்காமல் செய்தார். நாம் தற்போது இருக்கும் நிலைக்கு இது போன்ற சிறு சிறு உதவிகள் மிகப் பெரிய விஷயம். “உங்கள் பிரார்த்தனை குறித்த நேரத்தில் வெளியாகும். அது ஒரு தெய்வ சங்கல்பம். எனவே பொறுமையாக இருக்கவும். பிரார்த்தனை பதிவு அளித்தவுடன் தகவல் தெரிவிக்கிறேன். அதுவரை நம் தளத்தில் வெளியிடப்படும் பிரார்த்தனை பதிவுகளை படித்து மற்றவர்களுக்காக பிரார்த்தித்து வரவும்” என்று கேட்டுக்கொண்டோம். இதோ திரிபுரசுந்தரிக்கு, அந்த திரிபுரசுந்தரியே வைத்தியம் பார்க்கப்போகிறாள். (அவர் மகள் பெயர் திரிபுரசுந்தரி!)

சத்தியமாக இந்த பிரார்த்தனை பதிவை எழுத ஆரம்பிக்க உட்கார்ந்த நேரம் வரை எந்த கோரிக்கைகள் இதில் இடம்பெறும் என நமக்கு தெரியாது. ஆண்டவன் சித்தம்.

அடுத்த கோரிக்கையை சமர்பித்திருக்கும் வாசகி நம் தளத்தின் மிகப் பெரிய பக்தை என்றே சொல்லலாம். நமது நலம்விரும்பி. நமக்காக பிரார்த்தித்து வரும் நல்லுள்ளங்களுள் ஒருவர். அவரிடமிருந்து மேற்படி மின்னஞ்சல் வந்தவுடனேயே அடுத்த நாளே கிளம்பிச் சென்று LAKSHA மருத்துவமனையில் அவரது தந்தையை பார்த்து மகா பெரியவரின் படம் ஒன்றை கொடுத்து, அவர் காதில் விழும்படி திருநீற்றுப் பதிகம் பாடி, பெரியவரின் அதிஷ்டான அபிஷேக விபூதி கொஞ்சமும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி அவரை மிகவும் பாதித்திருக்கிறது. அவரது பிள்ளைகள் உடனிருந்து பார்த்துகொள்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் பாலைவனம் கடந்து வந்தவர்கள் என்பதால் பாதங்களை கொஞ்சம் ஆறவிடும்படி இறைவனிடம் மன்றாடி கேட்டுகொள்கிறேன். அக்குடும்பத்திற்கு சோதனைகள் விரைவில் விலகி, அருளும் இன்பமும் பெருகும் என்பது உறுதி.

அடுத்த கோரிக்கை, குடும்ப பாரத்தை தலைமேல் சுமக்கும் ஒரு சகோதரியின் கோரிக்கை. இவர் நம் தளத்திற்கு புதியவர் என்று கருதுகிறோம். உடனிருந்து இன்ப துன்பங்களை பகிர்ந்துகொள்ளவேண்டிய கணவரே கைவிட்டுவிட்ட நிலையில் இவர் என்ன செய்வார்? அவருடைய பிரச்சனைகள் தீர அவருக்கு இறைவன் நல்லதொரு வழியை காட்டவேண்டும்.

கடைசி கோரிக்கை, அக்காளின் குழந்தைக்காக தம்பி அனுப்பியிருப்பது. இவரும் தளத்திற்கு புதியவர் போல தெரிகிறது. ஒரு குழந்தையை பெற்று வளர்த்து நோய்நொடியின்றி நல்ல முறையில்  ஆளாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. நமது சக்திக்கும் கட்டுப்பாட்டுக்கும் மீறிய பல விஷயங்கள் அதில் உண்டு. இந்த குழந்தைக்கு ஏற்பட்டுள்ள உபாதைகள் நீங்கி, நலமோடு வளர பிரார்த்திப்போம்.

இங்கே பிரார்த்தனை சமர்பித்துள்ள பிரார்த்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பிரார்த்தனை இடம் பெற்ற இந்த பிரார்த்தனையோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு வாரமும் நீங்கள் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று ஒரு பத்து நிமிடம் (பிரதி ஞாயிறு 5.30 PM – 6.௦௦ PM வரை உங்களுக்கு எந்த பத்து நிமிடம் சௌகரியமோ அந்தப் பத்து நிமிடம்) மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்கள கோரிக்கைகள் தானே நிறைவேறும்.

பொதுப் பிரார்த்தனை… உள்ளம் உருக்கும் ஒன்று. அந்த சிறுமிக்காக நாம் அவசியம் பிரார்த்திக்கவேண்டும்.

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

1) Daughter to become alright and get rid of all problems!

Sir,

I came to know about your website last week. I would like to submit my daughter’s case for ‘group prayer’.

My daughter Thiripura Sundari while pursuing her 3rd year of the 3 year Polytechnic Diploma Course in SRM Polytechnic, Potheri (2000-2001). She along with her friend Kanimozhi met with Train accident on 28th July 2000 at Potheri Railway Station. Her friend Kanimozhi collapsed almost on the spot. My daughter though survived the sever accident without any major orthopaedic problem in the body, because of the sever head injury, even after several years of treatment she is not able to walk independently. She is moving within the house with the help of ‘Walker’

The inability of daughter to walk independently during her prime age (Date of Birth : 29.12.1982) added additional problems of aggression, depression, etc. Because of this my family consisting of my wife and my son, apart from my daughter is almost undergoing painful life for the last FIFTEEN YEARS. Apart from this we strongly believe that there is some evil force in my daughter, which is virtually preventing her to cooperate for many of the treatments.

May I request you to kindly place my daughter’s case for group prayer for her full recovery and also for her marriage at the earliest.

P.V Ramalinggam
Porur, Chennai 600 125

2) Appa met with accident – pray for his quick ailment!

Vanakkam sir,

i am dhinakari. sir please pray for my father.

He met an accident last monday [12/09/16] at Ccheri near vellore. bus hit him when he was riding bike. he had fracture of his left hand and left leg and police took him to Walaja Govt Hospital and informed to my family. Then he was brougt to Chennnai and admitted to Annamalai hospital in mambalam.

For first 3 days he was ok after that he developed vomitting and became unconcious. They shifted to laksha hospital in mylapore and now he is in icu. His electrolytes are very low and they are giving treatment. he is conscious but talking irrelavantly. Please sir help for him to become normal with your prayer club. he cant walk upto 6 weeks because of fracture.

my brother and sister are staying with him. i am faraway and i am helpless in this regard.

Please help me sir

– Dhinakari,
Ireland

3) God is my only saviour now… Please pray for me!

Dear Sir,

My name is *******. Presently i am suffering from lot of issues. I lost my job. No income for the past 6 months. No support from anyone. Having problem with my husband who is not at all supporting me for my money issue. Having debts and no any source to repay it. Applied to many jobs, business efforts and tried for loan but failed in all my efforts. I am in greater need of money to pay for daughters education who is in final year of graduation. No hope and no way. Kindly pray for my situation to get solved. Please keep in prayer sir.

Thanking you
With regards
– Don’t want to disclose my name and identity.

4) அக்காவின் குழந்தைக்கு உடற்பிணிகள் தீர்ந்து நலம் பெருகவேண்டும்!

ஐயா,

எனது அக்கா மகன் குழந்தை லித்தீஷ், தற்போது ஒன்றறை வயது ஆகிறது. ஆனால்
இன்னும் தலை நிற்கவில்லை. கை, கால் சரியான உணர்வு இல்லை. எங்கள் சொந்த ஊர் சங்ககிரி. குழந்தை கூடிய விரைவில் பேசவும், நடக்கவும் பிரார்த்தனை செய்ய பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
சதீஸ் குமார்.

* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.

** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.

==========================================================

பொதுப் பிரார்த்தனை!

உயிர்த் தியாக செய்த நம் வீரர்கள் – நம் ராணுவம் எடுக்கும் பதில் நடவடிக்கை வெற்றியடையவேண்டும்!

நாமெல்லாம் இங்கு நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் எல்லையில் நம்மை காக்கும் ராணுவ  வீரர்கள் தான்.

நமது ராணுவ வீரர்களின் முகாம்களுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி நமது வீரர்களை கொல்வது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் காஷீமிரில் உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நமது வீரர்கள் 20 பேரை பறிகொடுத்துள்ளோம்.

uri-martyrs

காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 20 வீரர்கள் பலியாகினர். மேலும், 19 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உரி நகரம் அமைந்துள்ளது. இங்கு ராணுவ வீரர்களின் தலைமையகம் உள்ளது. இதில் ராணுவ வீரர்களின் முகாமும் உள்ளது. டோக்ரா படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் நேற்று அதிகாலை முகாமில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவிய தீவிரவாதிகள் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் மீது திடீரென வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். அதிகாலை நேரம் என்பதால், வீரர்களுக்கு முதலில் நடப்பது என்னவென்று தெரியவில்லை. பின்னர் அபாய சங்கொலி கேட்டு அனைவரும் எழுந்து தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் 19 பேர் பலத்த காயமடைந்தனர். ராணுவ வீரர்கள் எதிர்தாக்குதல் நடத்தியதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். உடனடியாக அப்பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் எந்த வழியிலும் தப்பிச் சென்றுவிடாமல் தடுக்க ஹெலிகாப்டர்கள் மூலமும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, உரி முகாமில் காயமடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். உரி சம்பவம் ராணுவ வீரர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டவைகளிலேயே மிக மோசமான தாக்குதல் சம்பவம் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சலாமாபாத் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

1474427345_uri-attack

உரி தாக்குதல் பற்றி மக்கள் காரசாரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். உரிய பதிலடிக்கு இந்தியா தயாராகிவருகிறது.

இனி இது போன்றதொரு தாக்குதல் நிகழாமல் இருக்கவும், பலியான வீரர்களின் ஆன்மா இறைவனடி சேரவும், அவர்தம் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் இந்திய ராணுவம் மேற்கொள்ளும் பதில் நடவடிக்கை நமக்கு வெற்றியை தேடித்தரவும், இதன் மூலம் தீவிரவாதத்தின் ஆணிவேர் பிடுங்கி எறியப்படவும் பிரார்த்திப்போம்.

நமது வீரர்களின் நலனே நமது நலன். இதுவே இந்த வார பொது பிரார்த்தனை!

==========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

விபத்து, உடற்பிணி, கடன், வறுமை தொடர்பான பிரச்சனைகளால் தங்கள் அன்புக்குரியவர்கள் பாதிக்கப்பட்டு அவர்களுக்காக இங்கு பிரார்த்தனை சமர்பித்திருப்பவர்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுவோம்.

அல்லும் பகலும் பசி, தூக்கம் தொலைத்து எல்லையில் நமது நாட்டை பகைவர்களிடமிருந்து காக்கும் நமது வீரர்களின் நலனுக்கும், சமீபத்திய தாக்குதலில் பலியான வீரர்களின் ஆன்மா இறைவனிட சேரவும், அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினர் அமைதி பெறவும் பிரார்த்திப்போம். நமது ராணுவம் எடுக்கும் பதில் நடவடிக்கை வெற்றி அடையவேண்டும். தீவிரவாதம் கருவறுக்கப்படவேண்டும்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.குமார் அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : செப்டம்பர் 25 & அக்டோபர் 2, 2016  ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

==========================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

==========================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

==========================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

==========================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : வயலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பிரதான அர்ச்சகர்களுள் ஒருவரான திரு.கார்த்திகேயன் குருக்கள் அவர்கள்.  

சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற, திரு.ராஜா குருக்கள் மிகச் சிறப்பான முறையில் பிரார்த்தனையாளர்களின் பெயர்களில் சோளீஸ்வரருக்கு அர்ச்சனை செய்தார். முதல்கட்ட பிரார்த்தனை பதிவை பார்த்து மேலும் பலர் நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு கோரிக்கை சமர்பித்ததால் அவற்றையும் சேர்த்து புதிய பிரார்த்தனை பதிவை அளித்தோம். இந்த நான்கு வாரமும் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் சுமார் 5.00 pm மணிக்கு திரு.ராஜா குருக்களுக்கு ஃபோன் செய்து பிரார்த்தனையை நினைவூட்டினோம். அவரும் மறக்காது செய்தார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

dsc00656

நரம்பு தொடர்பான பிரார்த்தனை கோரிக்கை சமர்பித்தவர்கள் அத்தோடு நின்றுவிடாமல், நமது பிரார்த்தனை கிளப்பில் பங்கேற்று அவசியம் பிறருக்காக பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதும் திண்ணம். அப்போது மறக்காமல் சோளீஸ்வரரை தரிசித்து நன்றி தெரிவிக்கவேண்டும்.

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும், நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!

==========================================================

[END]

One thought on “அச்சத்தில் தவித்த கரிக்குருவிக்கு அபயமளித்த சர்வேஸ்வரன் – Rightmantra Prayer Club

 1. வணக்கம்
  குருவருளாலும் திருவருளாலும் பிரார்த்தனை சமர்ப்பித்துள்ள அனைவரின் குறைகளும் நீங்கி அவர்கள் சகல நலங்களையும வளங்களையும் பெற இறைனை அருள்வார்

  நம் நாட்டிற்காக தம் இன்னுயிரை ஈந்த நம் ராணுவ வீரர்களின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில்
  இளைப்பாறட்டும்

  திரிபுராந்தகருக்குப் பல தலைமுறைகளாய்த்
  தாெண்டு செய்து வரும் திரு குமார் அவர்களுக்கு நம் வணக்கங்கள்

  நன்றி
  தாமரை வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *