Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > தொப்பைக்கு இனி குட்பை! MUST READ!!

தொப்பைக்கு இனி குட்பை! MUST READ!!

print
ங்களில் எத்தனை பேர் கடைசியாக கோவிலுக்கு சென்றபோது இறைவனிடம், “எனக்கும் என் குடும்பத்தினருக்கும் நோயற்ற வாழ்வு வேண்டும்!” என்று கேட்டிருப்பீர்கள்?

ஒருவர் தன் வாழ்வில் பெறக்கூடிய இன்றியமையாத செல்வம், ஆரோக்கியம் ஒன்று தான். எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’.

ஆகவே தான் நமது தளத்தின் தினசரி பிரார்த்தனையில், “நோய் இல்லா வாழ்வு அமைய நின் கருணை விழி வேண்டும்!” என்கிற வரிகள் இடம்பெற்றிருக்கும்.

Health quote

உடல்நலத்தை பேணவேண்டும் என்பதிலும் ஆரோக்கியத்தை கட்டிக்காக்கவேண்டும் என்பதிலும் நமக்கு எப்போதுமே விருப்பமும் ஆர்வமும் உண்டு. நம் தளத்திற்கு வரும் வாசகர்களும் உடல்நலத்துடன், நோயற்ற ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழவேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு தான் உடல்நலத்திற்கென்றே ஒரு தனிப்பகுதியை தளத்தில் வைத்திருக்கிறோம். (http://rightmantra.com/?cat=24)

‘காட்டுப்பூ’ என்கிற சஞ்சிகையில் நாம் படித்த கீழ்காணும் கட்டுரையை படியுங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு இதைவிட பெரிய உபகாரத்தை நீங்கள் செய்துவிடமுடியாது.

கட்டுரை உங்கள் கண்களை நிச்சயம் திறக்கும்.

=================================================================

தொப்பையா? குப்பையா?

6 பேக் வயிறுக்கு ஆண்களிடம் போட்டி, ஃப்ளாட்டான வயிறுக்கு பெண்களிடம் ஏகப்பட்ட டிமான்ட்… ஒரு காலத்தில் முக அழகை பராமரிக்க என்று ஊரையே கலக்கிக் கொண்டிருந்த விளம்பரங்கள் போய் இன்று உங்கள் வயிற்றை அழகாக காண்பிக்க என்று விளம்பரங்கள் தாறுமாறாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நீங்களும் அதில் ஒருவரா, இல்லையென்றாலும் இதைப் படிக்க தவறாதீர்கள்…

தொப்பையா? குப்பையா? பதில் உள்ளே…

நம் விநாயகத்திற்கு வயது 36. தனியார் கம்பெனியில் உட்கார்ந்த இடத்தில் சொகுசு வேலை, இவர் பெயர் இராசியோ என்னவோ, இவரது ‘கொழுக் மொழுக்’ தொப்பை காண்பவருக்கு கட்டாயம் விநாயகப் பெருமானை ஞாபகப்படுத்திவிடும். “விநாயகா! லட்டு தின்ன ஆசையா? என்றாலே, நாவூறும் ஸ்வீட் பிரியர், நொறுக்குத் தீனி கொறிப்பதில் கணக்கு வழக்கு இல்லை; இவரது உடல் மண்ணுக்காம், உயிரோ KFC சிக்கனுக்காம்!”

healthylifestyle copy“நாளைலேர்ந்து கண்டிப்பா… வாக்கிங்!”னு சபதமெடுப்பதும், பின்னர் மறுநாள் எழுப்பும் 6 மணி அலாரத்தை, 15 முறை ஸ்னூஸ் செய்து, மனைவியின் நல்ல வார்த்தை அர்ச்சனைக்கு பிறகு 9 மணிக்கு பரபரவென ஆபீஸ் கிளம்புவார். முதல் மாடியிலேயே ஆஃபீஸ் இருந்தாலும் “சொய்ய்ங்கு”னு லிஃப்ட் ஏறும் உழைப்பாளி!

நேற்று அவருக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்தாலும் நெஞ்சு படபடப்பாலும், பதறியடித்து டாக்டரிடம் சென்றவருக்கோ கிடைத்தது, ஆயுள் தண்டனை! ஆம்! “வெரி ஸாரி விநாயக் சார்! 320 மில்லிகிராம்ஸ், ஹை கொலஸ்ட்ரால், ஃபாஸ்டிங் சுகர் கூட 218 மில்லிகிராம்ஸ். வேற வழியே இல்ல… லைஃப் லாங் மெடிசன்ஸ் எடுத்தே ஆகனும், இனியும் வாயைக் கட்டி, உடம்பை குறைக்கலேனா, ஹார்ட்டுக்கு நல்லதில்ல” என்ற டாக்டர், புரியாத மருந்து பெயர்களால் ஒரு பக்கக் கட்டுரையை முடித்தார்.

ஆம், என் சக சராசரி குடிமகன்களே! தொப்பை (Central obesity) வெறும் அழகுப் பிரச்சனை மட்டுமல்ல, உங்கள் ஈரக்குலையின் தேவையற்ற கொழுப்பு, உங்கள் இதயத்துக்கே உலை வைக்கலாம்.

தொப்பை ஏன்?

உடலும் ஒரு இயந்திரம்தான். இயந்திரம் இயங்க எரிபொருள் தேவை. உடல் இயங்க, உணவு எரிவதால் (செரிமானம்) உண்டாகும் ‘கலோரிகள்’ தேவை. உடலின் தேவையைவிட, அதிக அளவு உணவின் மூலம் கிடைக்கும் கலோரிகள், உடலில் கொழுப்பாய் சேமிக்கப்படுகின்றன. இது ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு தொடை மற்றும் கூபகப் பகுதியிலும் (பின்புறம்) சேர்கின்றன. இது பின்னாளில் உணவு கிடைக்காத நிலையில் கொழுப்பை எரித்து பயன்படுத்திக்கொள்ள உடல் எடுத்துக்கொள்ளும் தற்காப்பு அம்சமே.

ஆனால் இன்றோ விளம்பர/வியாபார சக்திகளால் தறிகெட்டு போய்விட்ட உணவு பழக்கங்களும், நலிந்து போய்விட்ட உடல் உழைப்பும் சேர்ந்து நவீன இந்தியர்களை, தொந்தியர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. அதுவும், மரபணு வழியிலேயே மற்ற எந்நாட்டினரையும் விட, நம் நாட்டவர்க்கே தொப்பை ஏற்படும் வாய்ப்பு (Tendency) அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

MedicalComplicationsofObesity copy

தேவை இல்லாதவற்றை ஒரு வகையில், குப்பைதான் எனக் கொண்டோமேயானால் தொப்பையும் ஒரு குப்பைதானே? குப்பையைக்கூட ஒதுக்கிவிட்டு நடக்கலாம். ஆனால் தொப்பையைத் தனியாய் கழட்டி வைக்க முடியுமா என்ன?

இந்த தொப்பை (குப்பை) தொட்டியால் நம்மை அண்டும் குப்பைகளில் சில: சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் (மாரடைப்பு முதல் திடீர் மரணம் வரை), முறையற்ற மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல், உளவியல் ரீதியான தாழ்வு மனப்பான்மை, மனச்சோர்வு. இதற்காக ஒருவர் வாழ்நாள் முழுவதும் செலவிடும் தொகையால் தனிமனித மற்றும் நாட்டின் வருமான இழப்பும் உண்டு.

obesity 1தீர்வென்ன?

சமூக அணுகுமுறை!

உடற்பருமனை ஒரு தனி நபர் உடல் சார்ந்த நோயாய் மட்டும் காண இயலாது. ஏனெனில் இன்று உலக அளவில் 3ல் 2 மரணங்கள் தொற்று அற்ற நோய்களான (Non-communicable disease) சர்க்கரை நோய், இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோயால் ஏற்படுகின்றன. இவையனைத்திற்கும் உடற்பருமன் ஓர் முக்கிய காரணியாய் உள்ளது.

நம் தேசத்தில் ஒரு பாதி மக்களுக்கு உணவுக்கு வழியில்லை; அதனால் பிரச்சனை. மறுபாதிக்கு உணவு இருந்தும், அதில் எதை, எப்படி, எவ்வளவு எடுக்க வேண்டும் என்கிற கேள்விகளுக்கு சரியான விடையில்லாததால்தான் பிரச்சனை.

இந்நிலைக்கு அதிமுக்கிய காரணம், சத்தமில்லாமல் நம்மை வளைத்துவிட்ட சர்வதேச உணவுச் சந்தையும், அந்த வர்த்தகத்தின் கோரப்பசியும்தான். கேழ்வரகு கஞ்சியும், பாசிப்பயறு சுண்டலும் சாப்பிட்டு திடகாத்திரமாய் வளர்ந்த நம் குழந்தைகள், இன்று ஐங்க் (குப்பை) உணவு (Junk food) எனப்படும் சிப்ஸ், பேக்கரி பொருள், கோலா பானம், நூடுல்சுக்கு அடிமையாக்கப்பட்டு, உருளைக்கிழங்கு போல் உருண்டு திரண்டு திராணியற்று வளர்கிறார்கள்.

“பசிக்கு மட்டுமே உண்டோம்! பண்டிகையின் போது மட்டுமே வெள்ளை அரிசி! அசைவம் அளவாய் வைத்தோம்! விரதங்கள் மேற்கொண்டோம்! ஐங்க் வகையறாக்கள் என்னவென்றே அறியாதிருந்தோம்! கூடி உழைத்தோம்! நம் பிள்ளைகள் ஓடியும், ஆடியும், பாடியும் விளையாடினர்!” இவை அனைத்தையும் நாம் வேகமாய் இழப்பதால்தான் தொற்று அற்ற நோய்களின் (Non-communicable and Lifestyle Diseases) பாரம் தாங்க முடியாததாகிறது.

இந்தியாவில், 6ல் 1 ஆணும், 5ல் 1 பெண்ணும் குண்டாய் உள்ளனர். வளரும் குழந்தைகளில் 17% பேர் அதிக எடை கொண்டவர்கள். ஆக உடற்பருமனை வெறும் நோயாய் பாராமல், நம் கலாச்சார சிதைவின் ஒரு வெளிப்பாடாய் பார்த்து, நம் மண்ணின் வாழ்வியல் முறைகளைக் காத்து கடைபிடித்தலே நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும்.

(கட்டுரை முற்றும்)

=================================================================

என்ன படித்துமுடித்துவிட்டீர்களா?

இந்த கட்டுரையை வெளியிட இவருக்கு முதல்ல தகுதி இருக்கான்னு தானே உங்களுக்கு தோன்றுகிறது?

இருக்குங்க. நிறையவே. கொஞ்சம் பொறுங்க சொல்றோம்.

DSCN6808 2
செப்டம்பர் 14 அன்று கோவையில் அன்னை ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்களின் இல்லத்தில் எடுத்தது.

ஒவ்வொருவரும் அவர்களது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைத் தான்  கொண்டிருக்கவேண்டும். இதை ஆங்கிலத்தில் IDEAL WEIGHT என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு உங்கள் உயரம் 165 செ.மீ. என்று வைத்துகொள்வோம். அதில் நூறை கழித்துவிடுங்கள். பாக்கி வரும் 65 தான் உங்கள் எடையாக இருக்கவேண்டும். அதாவது 165 செ.மீ. உயரம் என்றால் அவர்களுக்கு உடல் எடை 65 கிலோ தான் இருக்கவேண்டும். அதற்கு மேல் இருப்பது ஆபத்தை நோக்கி செல்லும் பயணமாகும்.

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மூச்சிரைத்தல், அடிக்கடி தலை சுற்றுவது, தூக்கமின்மை, சோர்வு, மூட்டுவலி, சர்க்கரை நோய், இதய நோய், பி.பி இவை அனைத்தும் வரும்.

காரணம் தெரியுமா?

உடல் எடை அதன் IDEAL WEIGHTஐ விட அதிகமாகும்போது, இரத்தத்தை பம்ப் செய்யும் நமது இதயத்திற்கு கூடுதல் ஸ்ட்ரெயின் ஏற்படுகிறது. 65 கிலோ எடையிருக்கவேண்டிய உடல் 85 கிலோவாக இருக்கும்போது நமது உடலெங்கும் இரத்தத்தை கொண்டு செல்ல, இதயம் அதிகம்  சிரமப்படுகிறது. எனவே தான் உடல் பருமனாக இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உடனே தங்கள் எடையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கவேண்டும்.

செப்டம்பர் 26 தேதி தொடங்கி இன்று நவம்பர் 12 வரை வரக்கூடிய நாற்பது சொச்ச நாட்களில் நாம் நம் உடல் எடையை சுமார் 8.5 கிலோ  குறைத்திருக்கிறோம். தொப்பைக்கெல்லாம் நாம் குட்பை சொல்லி பத்து நாளாச்சு. IDEAL WEIGHT என்று சொல்லக்கூடிய உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இன்னும் ஒரு மாதத்தில் நமக்கு வந்துவிடும். (நமது பர்சனல் முகநூலில் நமது சமீபத்திய புகைப்படங்களை பார்ப்பவர்கள் அனைவரும் இது பற்றியே கேட்கிறார்கள்!)

‘SEDENTARY LIFESTYLE’ எனப்படும் கட்டுபாடற்ற வாழ்க்கைமுறைக்கு குட்பை சொல்லி ‘HEALTHY LIFESTYLE’ என்னும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நாம் மாறி பல நாட்களாகிவிட்டது.

Rightmantra Sundar copy
நவம்பர் 6, அன்னாபிஷேகதன்று காரணீஸ்வரர் கோவிலில் தலைவருடன் எடுத்தது.

(இந்த தளத்தில் எம்முடைய தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதில்லை என்ற கொள்கை வைத்திருக்கிறோம். எனவே இந்த புகைப்படத்தை நீண்ட தயக்கத்திற்கு பின்னரே வெளியிடுகிறோம். ஆரோக்கியத்தை நோக்கி நாம் முதல் அடியை எடுத்தபிறகு தான் உங்களுக்கும் சொல்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த புகைப்படம் வெளியிடப்பட்டது. அதுவும் நம் வாசகர்கள் சிலரிடம் ஆலோசனை பெற்ற பின்பு! தவறாக இருந்தால் வாசகர்கள் மன்னிக்கவும்!!)

எம்மைச் சுற்றிலும் சரி, நம் வாசகர்களும் சரி…. பக்தியிலும், நற்பண்புகளிலும் மட்டுமல்ல, ஆரோக்கியத்திலும் சிறந்தவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்பியே இந்த பதிவை அளிக்கிறோம்.

எப்படி இது சாத்தியப்பட்டது?

பொதுவாகவே நமக்கு தன்னம்பிக்கை அதிகம் என்று உங்களுக்கு தெரியும். கட்டுபாடற்ற வாழ்க்கைமுறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் நம் உடல் எடை கூடி, நமது தன்னம்பிக்கையை அது குலைக்க ஆரம்பித்தது. அதை முளையிலேயே கிள்ளி எரிந்து, புறக்கணித்தவர்களை பெருமூச்சு விடவைக்க விரும்பி நம்மை, நமது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டோம். உடல் எடை குறைப்பு என்பது நம் கட்டுக்குள் உள்ள ஒரு விஷயம். அதை நாம் கட்டுப்படுத்திவிட்டோம். மற்றதை பற்றி நமக்கு எந்த கவலையுமில்லை.

(இந்த ஞானத்தைக் கூட எனக்கு வழங்கியது நம் தலைவர் தான்!)

நமது உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டு பின்னர் தான் இந்த பதிவை நம் தளத்தில் வெளியிடவேண்டும் என்று கருதி இப்போது வெளியிடுகிறோம்.

ஒரு விஷயத்தை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். உங்களில் பலரைப் போல நமக்கு நேரம் என்பது மிக மிக அரிதான விஷயம். நாமே 40 நாட்களில் 8.5 கிலோ குறைத்துவிட்டோம் என்றால் உங்களால் முடியாதா என்ன ?

போனது போகட்டும். IT IS ALWAYS BETTER LATE THAN NEVER.

இந்த கணம், உங்கள் உடல் எடையை இனி கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று  நம்புங்கள், ‘நிச்சயம் உடல் எடையை குறைப்பேன்’ என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் எடையை குறைப்பது சுலபம்.

நமது உடல் எடைக்குறைப்பின் இரகசியம் அறிய விரும்புகிறவர்கள் டிசம்பர் 14 அன்று நடக்கூடிய நமது ஆண்டுவிழாவில் தெரிந்துகொள்ளலாம். நாம் கூறும் தகவல் அனைவருக்கும் பயனுள்ளதாய்  இருக்கும்.

(“என்னால் அவ்வளவு நாள் காத்திருக்க முடியாது உடனே சொல்லவேண்டும்!” என்று யாராவது விரும்பினீர்கள் என்றால் நம்மை மாலை 7 மணிக்கு மேல் அலைபேசியில் தொடர்புகொள்ளவும்! நன்றி!!)

சுந்தர்,
ஆசிரியர்,
www.rightmantra.com

=================================================================

[END]

18 thoughts on “தொப்பைக்கு இனி குட்பை! MUST READ!!

  1. இந்த பதிவு மிக்கும் ஆரோகியமான பதிவு. நாங்களும் எங்களை ஆரோகிய மாக வைத்துக் கொள்ள நினைக்கிறேன். ஆண்டுவிழா அன்று தங்கள் உடல் எடையை குறைத்து பற்றி கூறவும்

    நன்றி
    உமா

  2. இந்த கட்டுரையை ஏற்கனவே காட்டுப்பூ இதழில் படித்திருந்தாலும் நமது தளத்தில் படிக்கும் போது கிடைக்கும் நிறைவே தனி.

    கோவையில் செப்டம்பர் 14 அன்று ஜெகதீஷ் அவர்களின் இல்லத்தில் உங்களை பார்த்ததற்கும், இன்று பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்….!
    உங்கள் எடைக்குறைப்பின் ரகசியத்தை நானும் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். டிசம்பர் 14 சந்திப்போம்.

    ரைட்மந்த்ரா வாசகர்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புவது மகிழ்ச்சி.

  3. Hi Sundarji,

    It’s really great to see you – before and after your weightloss. Using your photos in an article and that too in the website you run, really not a thing to be bothered about.

    Most of the people who’re running the sites – updating their photos like anything. And comparing with them, you and our site are always different.
    **
    Coming to the difference, when I came for the Role model visit to Pudukottai with you, at first time I didn’t notice you well. but after a few minutes, I looked you and noticed the difference. All your – chin, shoulder, total weight had been reduced drastically.
    **
    And indeed, I’m privileged to know first of about your ‘weightloss secret’ 🙂

    I was really shocked to know the core reason how well this obesity affects – when you explained with related to heart and how it’s work has been getting affected because of this.

    **
    And my dear friends and RM readers,
    Sundarji doesn’t even take more than 15 minutes a day for this much weight reduction.
    **
    And I’m sure, while meeting you for our function on Dec 14th, you will have reduced your weight even further.
    **
    **Chitti**.

  4. எங்கள் நலனில் அக்கறை கொண்டு தாங்கள் அளித்திருக்கும் பதிவிற்கு நன்றிகள்…………..வாழ்த்துக்கள்…………

  5. சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்

    செஞ்சிட்டு சொன்ன விதம் அருமை …

  6. DEAR SRI SUNDAR,

    THIS IS VERY IMPORTENT MESSAGE I AM ALSO WANTED TO REDUCE MY WEIGHT I AM EAGERLY WAITING TO HEAR FROM YOU

    BASKARAN.

  7. “அட்வைஸ் எல்லாம் மற்றவர்களுக்கே” என்பதை உடைத்து எறிந்து விட்டீர்கள் நண்பரே.

    செந்தில் ராஜன்

  8. இன்று நவம்பர் 14 உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம்.

    அருமையான கட்டுரை. நமது உணவுப்பழக்கம் பெரும்பாலும் இப்படித் தான் இருக்கிறது. சரியான நேரத்தில் கிடைத்த எச்சரிக்கை.

    உடல் எடை கட்டுக்குள் இருந்தாலே பாதி நோய்கள் நம்மை அண்டாது.

    உங்கள் உடல் எடையை குறைத்துவிட்டு பின்னர் இந்த பதிவை நீங்கள் வெளியிட்டது உங்கள் டச். பதிவை மதிப்பை அது எங்கோ உயரத்திற்கு கொண்டுசென்றுவிட்டது.

    வாழ்த்துக்கள்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  9. சுந்தர்ஜி
    சூப்பர், சூப்பர், சூப்பர்.
    facebook -ல இந்த போட்டோ பார்த்துட்டு சுந்தர் சார் மெலிந்துவிட்டது போல தெரிகிறதே என்று சந்திரனிடம் கேட்டேன்.
    அவன் நம்ம சாரா? என்று பதில் சொன்னான். நான் சொன்னேன் என்று அவன் தலையில் ஒரு கொட்டு வையுங்களேன் ப்ளீஸ்.

  10. மிக மிக பயனுள்ள பதிவு…

    பின்பற்றியபின் அந்த செய்தியைச் சொல்லும் நேர்மை நன்று…
    ரகசியங்களை முன்னரே சொன்னால் ஆண்டு விழாவிற்குள் உங்களை போல மாற முயற்சிப்போம்.. 🙂

    நிச்சயம் உடல் எடையை குறைப்பேன் என்ற உறுதி எடுத்தாகிவிட்டது..

  11. இட் ஐஸ் நைஸ் டு ஹெஅர் தட் யு ஹவ் லோச்ட் வெயிட் ஒப்பி அபௌட் 8.5 கஃசு. ஆல்சோ, நைஸ் டு ஹெஅர் தட் யு ஹவ் கம் போர்வர்து டு ஹெல்ப் தி பப்ளிக் by making them aware ஒப்பி தி importance ஒப்பி ரேட்டுசிங் தி வெயிட் அண்ட் மைந்தனின் தி வெயிட் அக்கோர்டிங் டு தெயர் ஹெயிட் இந்த சென்டிமேட்டர்ஸ். இட் வில்ல பெ நைஸ் ஐபி யு கேன் கிவ் உச டீடெயில்ஸ் ஒப்பி ஹொவ் டு ரோட்ஸ் தி வெயிட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *