Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

print
கா பெரியவா தொடர்புடைய இரண்டு ஆத்மானுபவங்கள் இந்த பதிவில் தரப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று தொடர்புடையது. மகா பெரியவாவின் கடாக்ஷத்திற்கு உள்ள மதிப்பை இந்த இரண்டு சம்பவங்களும் உணர்த்துகின்றன.

மகா பெரியவாவின் படம் உங்கள் வீட்டில் இருக்கிறதா? அப்போது மகா பெரியவரே பிரத்யட்சமாக அங்கு இருக்கிறார் என்று அர்த்தம். அவர் நம்மை பார்த்துக்கொண்டிருக்க, நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை பக்தர் ஒருவர் உணர்த்தியிருக்கிறார். படியுங்கள்..!

பதிவில் குறிப்பிட்டுள்ள பழக்கம் உங்களில் எவருக்கேனும் இருக்குமானால், அவர் பெயரில் பாரத்தைபோட்டுவிட்டு அதை இன்றே நிறுத்திவிடுங்கள். புண்ணியம் என்னும் பாத்திரத்தில் உள்ள பெரும் ஓட்டை ஒன்றை அடைத்ததற்கு அது ஒப்பாகும்.

Maha Periyava Photo

=================================================================

பக்தி… பக்தி… இது தான்!

சிவ வழிப்பாட்டு குடும்பம். ஆனால், சைவ உணவு மட்டும் தான் என்ற கட்டுப்பாடு இல்லை. பண்டிகை காலங்களில் அசைவ உணவும் உண்டு.

மகனுக்கு கல்யாணம் ஆயிற்று. ஏராளமான பரிசுப் பொருட்கள் வந்தன.

விருந்து – மறு விருந்து என ஏக தடபுடல்.

பெண்ணைக் கொடுத்த சம்பந்தி குடும்பத்தினருக்கு விருந்து ஒரு நாள்.

சைவச் சமையல்!

சம்பந்திக்கு கொஞ்சம் திடுக்கிட்டது. அவருடைய வீட்டில் அவ்வப்போது அசைவம் உண்டு. பெண்ணும் அப்படியே வளர்ந்தவள். இந்த வீட்டில் அசைவமே இல்லையென்றால் பெண் ஏங்கிப் போய்விடுவாளே… கல்யாணத்துக்கு முன் பேசிய பேச்சுக்களில் இங்கே அசைவம் உண்டு என்ற மாதிரி தானே பேச்சு வந்தது….

“என்ன சம்மந்தி சாப்பாட்டுல ஸ்பெஷல் ஐட்டமே இல்லையே…” என்று கேட்டேவிட்டார்.

சம்மந்தி பதில் சொன்னார். “முன்னேயெல்லாம் நீங்க கேட்கிற ஐட்டம் இருந்தது. இப்போ கல்யாணத்துல ஒரு சிநேகிதர், காஞ்சி பெரியவா படம் அழகா பிரேம் போட்டு ப்ரெசென்ட் பண்ணிட்டார். அதோ மாட்டியிருக்கேன் பாருங்க. அவங்க பார்த்துக் கொண்டிருக்கும்போது நாம எப்படிங்க அதெல்லாம் சாப்பிடுறது? அதனாலே நிறுத்திட்டேன்…”

பக்தி… பக்தி… இது தான்!

சுவாமிகள் படமாக இல்லை. பிரத்யட்சமாக பார்த்துகொண்டிருக்கிறார்கள்…

கண்ணப்பன்கள் இன்றைக்கும் இருந்துகொண்டு தானிருக்கிறார்கள்.

=================================================================

Kanchi Maha Periyava 2

அமிர்த தாரையில் நனைந்தது போல….!

கும்பகோணம் ஸ்ரீமடத்தில் பெரிய யாகம் (ஹோமம்) நடந்தது. காலை எட்டு மணிக்கு ஆரம்பம். பிற்பகல் நான்கு மணிக்கு பூர்த்தி.

காலையில் ஆரம்பத்தின்போது வந்து உட்காரும் பக்தர்களில் ஒருவர் கூட நடுவிலே எழுந்து செல்லவில்லை. பசி – தாகம் நினைவே இல்லை. கைகால்களைக் கூட நெளிக்கவில்லை. அசைக்கவில்லை.

இது எப்படி சாத்தியமாயிற்று?

மகா பெரியவாள் அவ்வப்போது வெளியே வந்து கூட்டத்தின் மீது கடாக்ஷத்தை வீசுவார்கள். அமிர்த தாரையில் நனைந்தது போல இருக்கும்!

மாலை நான்கு மணிக்கு, ‘ஹோமம் ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டது? வீட்டிற்கு போயாகவேண்டியிருக்கிறதே?’ என்ற வருத்தம் தான் தோன்றியதே தவிர, எவருக்கும் அலுப்பே ஏற்படவில்லை.

மதுரை மீனாட்சியின் பார்வை, பெரியவாளுக்கு அந்த பார்வையில் CALMஆட்சி (காமாக்ஷி)யும் தென்படுவாள்!

நன்றி : ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ |’வானதி பதிப்பகம்’

தட்டச்சு : www.rightmantra.com

=================================================================

சுதர்சன ஹோமத்தில் பங்கு பெற ஒரு அரிய வாய்ப்பு!

சென்னை சிங்கபெருமாள்கோவில் டு ஸ்ரீபெரும்புதூர் சாலையில், சிங்கபெருமாள் கோவில் ஸ்டேஷனிலிருந்து சுமார் ஐந்து கி. மீ.தொலைவில் அமைந்துள்ள ஔஷதகிரி எனப்படும் ஆப்பூர் நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வரும் சனிக்கிழமை நவம்பர் 15 காலை 8.00-8.30 மணியளவில் மகா சுதர்சன ஹோமம் நடைபெறவுள்ளது. நண்பர் கார்த்திக் என்பவரின் ஏற்பாட்டின் பேரில் இது நடைபெறுகிறது.

Aappoor Nithyakalaya Perumal Kovil 2

சுமார் 500 படிகளை கொண்ட இந்த மலைக்கோவிலைப் பற்றி நாம் ஏற்கனவே விரிவான பதிவு புகைப்படங்களுடன் அளித்துள்ளோம். இங்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு நம் தளம் சார்பாக உழவாரப்பணியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அகத்திய மகரிஷி தவம் செய்த மலை இது

ஹோமத்தில் யாரேனும் கலந்துகொள்ள விரும்பினால் தாராளமாக கலந்துகொள்ளலாம். கட்டணம் எதுவுமில்லை. நீங்கள் கலந்துகொண்டு உங்கள் பெயரிலும் உங்கள் குடும்பத்தினர் பெயரிலும் தாராளமாக சங்கல்பம் செய்துகொள்ளலாம். ஹோமத்தின் நிறைவில் பிரசாதம் உண்டு. (மதிய உணவு).

ஹோமத்திற்கு நீங்கள் ஏதேனும் பொருட்கள் வாங்கிச் செல்ல விரும்பினால், சுத்தமான பசு நெய் & இளநீர் (நன்கு சீவப்பட்ட) இரண்டு வாங்கிச் செல்லவும்.

Aappoor Nithyakalaya Perumal Kovil

மலையிலும் மலைக்கு செல்லும் வழியிலும் அனுமனின் வழித்தோன்றல்கள் இருக்கும் என்பதால், இளநீர் உட்பட எந்த பொருட்களையும் அப்படியே எடுத்துச் செல்லவேண்டாம். அவை உங்களிடம் இருந்து பிடுங்கிச் சென்றுவிடும். ஜிப் வைத்த – தோளில் மாட்டும் – பையில் இளநீரை மறைத்து எடுத்துச் செல்லவும். அப்போது தான் அவை ஹோமத்திற்கு பயன்படும். இல்லையேல், வானரங்களிடம் அவற்றை பறிகொடுக்க நேரிடும். உங்கள் பையில் உணவுப் பொருட்கள் இருப்பதை தெரியாமல் எடுத்துச் செல்லவும்.

வானரங்களுக்கு தனியாக பிஸ்கட் பாக்கெட்டுகள் (சுமார் 20  பாக்கெட்டுகள்) வாங்கிச் செல்லலாம். அதையும் ஜிப் வைத்த பையில் வைத்து மூடி எடுத்துச் சென்று மேலே உள்ள குரங்குகளிடம் அளிக்கலாம். (மேலே ஒரு பெரிய கூட்டுக்குடும்பமே இருக்கிறது!) வழியில் பையை திறக்க வேண்டாம். ஆபத்து.

இந்தக் கோவிலின் சிறப்பு, அமைவிடம், செல்வது எப்படி பற்றிய விரிவான தகவல்களுக்கு கீழே அளிக்கப்பட்டுள்ள பதிவின் முகவரியை  பார்க்கவும்.

புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!

திரு.கார்த்திக் அவர்களின் தொடர்பு எண் :94458 04515

=================================================================

Also check from our archives…

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

=================================================================

‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் புதிய தகவல்களுடன் தயாராகி வருகிறது. அடுத்த வாரம் முதல் நிச்சயம் தொடர்ந்து  இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

================================================================
Also check :

Articles about Sri Ragavendhra Swamigal in Rightmantra.com

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

=================================================================

[END]

9 thoughts on “இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

  1. மகா பெரியவா சரணம்

    இறை அருள் இருந்தால் சுதர்சன ஹோமத்தில் பங்கு பெறுகிறோம்

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்

    நன்றி
    உமா

  2. சுந்தர் சார் வணக்கம்

    ஒவ்வரு நொடியும் நம்மை கண் காணித்து கொண்டுத்த இருப்பார் தூய்மையன பக்தி சார்

    நன்றி

  3. வாழ்க வளமுடன்

    மனமிருந்தால் மார்கமுண்டு , மகா பெரியவா படம் இருந்தாலே மோட்சம் உண்டு போலும்

  4. ஹர ஹர சங்கர!! ஜெய ஜெய சங்கர!!

    மகா சுதர்சன ஹோமம் பற்றிய தகவலுக்கு நன்றி.

    ஓம் நம சிவாய

  5. மகாபெரியவா அவர்களின் கடாட்சம் நேரிடையாக பெறும், பெரும் பாக்கியம் கிடைக்கவில்லையாயினும் அவரது படங்களின் மூலம் நாமும் பெற்றுக்கொவோம். பகிர்வுக்கு நன்றி

  6. குருவின் கடாக்ஷத்திற்கு ஈடு இணை ஏது?

    எங்கள் வீட்டில் அனைவரும் சைவம் உணவுப் பழக்கம் உடையவர்கள் தான் என்பதை மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

    குருவின் படம் வீட்டில் இருப்பதால் அசைவத்தை நிறுத்தி சைவத்தை மேற்கொண்ட பக்தரின் செயல் பாராட்டுக்குரியது.

    பெரியவா அவர்கள் பார்த்தது அமிர்த தாரையில் நனைந்தது போல இருந்தது என்று குரிப்பிடப்பட்டிருபப்து நல்ல உவமானம்.

    சென்னை வரும்போது ஆப்பூர் கோவிலையும் தரிசிக்கவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். நித்யகல்யாணப்பெருமாள் அருள்புரியவேண்டும்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *