Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, July 13, 2024
Please specify the group
Home > Featured > சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ள அருணிமா சின்ஹா வாழ்க்கை கூறும் பாடம்!

சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ள அருணிமா சின்ஹா வாழ்க்கை கூறும் பாடம்!

print
வாழ்க்கையில் பல சமயம் ‘இத்தோடு முடிந்தது… இனி என்ன இருக்கிறது?” என்று நாம் கருதும் சந்தர்ப்பங்களில் தான் இறைவன் இன்னொரு பிரம்மாண்டமான கதவை திறந்து வைக்கிறான். இந்த சூட்சுமத்தை புரிந்துகொண்டவர்கள் சாதனையாளர்களாக மாறுகிறார்கள். புரிந்துகொள்ள மறுப்பவர்கள் விதியென்னும் வெள்ளத்தில் வீழ்ந்து மடிகிறார்கள்.

அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கும் பலர் விடாமுயற்சியினாலும் தன்னம்பிக்கையினாலும் சாதனையாளர்களாக மாறி நம் கண் முன்னே மாபெரும் உதாரணங்களாக நடமாடுகின்ற அதே நேரம், எல்லாம் இருந்தும் ‘எனக்கு எதுவுமில்லை; வாழ பிடிக்கவில்லை’ என்று புலம்புகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் அனைவரும் இந்த பதிவில் வரும் இந்த சாதனைச் சிகரத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். தங்களுடைய வசதி வாய்ப்புக்கள் மற்றும் இதர ஆசிகளை நினைத்துபார்க்கவேண்டும்.

மேலும், கடவுள் பக்தி என்றால் என்ன? அது எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதை கன்னத்தில் அறைந்து நமக்கு காட்டியிருக்கிறார் இந்த பதிவின் நாயகி.

நமது முந்தைய செயல்களால் நாம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கும் துன்பத்திற்கு கூட இறைவனையே காலம் முழுதும் குறைகூறிக்கொண்டு முடங்கிக் கிடப்பவர்கள் மத்தியில், விதிவசத்தால் ஒரு காலை இழந்த நிலையிலும் மனவுறுதியுடன் செயலாற்றி சாதனை படைத்து இறைவனின் பெயரை எங்கு உச்சரிக்கவேண்டுமோ எந்த சூழலில் உச்சரிக்கவேண்டுமோ அந்த சூழலில் மறக்காது உச்சரித்து, பக்தி என்றால் என்ன என்று காட்டியிருக்கிறார் இந்த சகோதரி. இவரை கண்டு வெட்கப்படுவதை தவிர வேறு வழியில்லை எமக்கு….

அம்மா…. உங்கள் பக்திக்கு கால் தூசி நாம் ஈடாகமாட்டோம் என்பது மட்டும் புரிகிறது.

இவரது வாழ்க்கை நமக்கு தரும் பாடங்களை நாம் அலட்சியப்படுத்தவே கூடாது. ஏனெனில் இவர்களை போன்றவர்களின் வாழ்க்கையில் விளையாடி தான் இறைவன் நமக்கு பாடங்களை போதிக்கிறான். அதை நாம் உதாசீனப்படுத்தலாமா?

சரி… அப்படி என்ன நேர்ந்துவிட்டது இவருக்கு?

அப்படி என்ன சாதனை படைத்துவிட்டார் இந்த இளம்பெண்?

கடந்த, 2011ம் ஆண்டு, ஏப்ரல், 12ம் தேதி, உத்தர பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து, டில்லி செல்லும், “பத்மாவதி எக்ஸ்பிரஸ்’ ரயிலில், பயணம் செய்தார், தேசிய அளவில் வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற, அருணிமா சின்கா, 25.

அப்போது அவர் இருந்த பெட்டிக்குள் நுழைந்த கொள்ளையர்கள், பயணிகளைத் தாக்கி, பணம், நகையைப் பறித்தனர். இதைப் பார்த்த அருணிமா, கொள்ளையர்களை விரட்டினார். எனினும், அதிக எண்ணிக்கையில் இருந்த கொள்ளையர்களை, அவரால் விரட்ட முடியவில்லை. அவர்களிடம் சிக்கிய அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கிய கொள்ளையர்கள், ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசினர். அடுத்த தண்டவாளத்தில் போய் விழுந்த அந்தப் பெண் மீது, ரயில் ஏறியது. இறந்தே விட்டார் என, பலரும் எதிர்பார்த்த நிலையில், வலது காலை மட்டும் இழந்தார்.

புதுடெல்லியில் அகில இந்திய விஞ்ஞான மருத்துவ கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணிமாவுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சகம் மிகப் பெரிய மனதுடன் ரூ.25,000/- நஷ்ட ஈடு (?!) அறிவித்தது. தொகை சிறியதாக இருக்கிறது என்று பல்வேறு மட்டங்களில் இதற்கு பலத்த எதிர்ப்பும் கண்டனமும் எழுந்ததை தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் தலையிட்டு அதை ரூ.2,00,000/- லட்சமாக உயர்த்தி வழங்கினார்.

இதற்கிடையே…. ரயிலில் கொள்ளை சம்பவமே நடைபெறவில்லை என்றும் அருணிமா டிக்கட் இல்லாமல் பிரயாணம் செய்தார் என்றும் டிக்கெட் பரிசோதகர் வந்தவுடன், அவமானத்தால் ட்ரெயினில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார் என்றும் ரயில்வே போலீசாரும் உ.பி. போலீசாரும் கதையை புனைந்தனர். ஆனால் இன்றுவரை தாம் பயணம் செய்த டிக்கெட்டை பத்திரமாக வைத்திருப்பதாக கூறுகிறார் அருணிமா. ஏற்கனவே கால்களை இழந்திருந்த அருணிமாவுக்கு இந்த வீண்பழி மேலும் வலியை தந்தது. இருப்பினும் தன் மீது பழி சுமத்தியவர்களை தாம் மன்னித்துவிட்டதாகவும் அது குறித்து தாம் மேலும் பேசவிரும்பவில்லை என்றும் கூறும் அருணிமா தற்போது எவரும் செய்ய முடியாத சாதனை ஒன்றை செய்து நாட்டிற்கே பெருமை தேடி தந்திருக்கிறார் என்பது தெரியுமா?

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் டென்சிங்கும் எட்மண்ட் ஹில்லாரியும் எவரெஸ்ட் மீது ஏறியதிலிருந்து ஆயிரக்கணக்கனவர்கள் இதுவரை எவரெஸ்ட் மீது ஏறிவிட்டார்கள். ஆனால் எவரெஸ்ட்டில் கால் பதித்த முதல் பெண் மாற்றுத் திறனாளி இவர் தான். அதுவும் செயற்கை காலை பொருத்திக்கொண்டு எவரெஸ்ட் ஏறிய முதல் பெண் இவர் தான்.

ஒரு மிகப் பெரிய போராட்டத்தின் கதை!!

ரயில்வே  தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டு ஒரு காலை இழந்து இன்று எவரெஸ்ட் சிகரத்தில் அருணிமா ஏறியிருக்கும் இந்த நிகழ்வு ஒரு மிகப் பெரிய போராட்டத்தின் கதையாகும்.

இரண்டாண்டுகளுக்கு முன்பாக தனக்கு நேர்ந்த கொடுமையால் மனரீதியாக உடைந்து போய், ஒரு காலை இழந்து மற்றொரு கால் பாதிக்கப்பட்டு குற்றுயிராய் கிடந்த தாம் இன்று இப்படி ஒரு சாதனையை நிகழ்த்துவோம் என்று முதலில் நம்பவில்லை என்று கூறுகிறார் அருணிமா.

நான் டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான கழக மருத்துவமனையில் நான்கு மாதங்களுக்கு மேல் சிகிச்சை பெற்றுவந்தேன்.  டி.வி.பார்ப்பதும் என் விதி குறித்து அழுது கண்ணீர் வடிப்பதுமே என் பொழுதுபோக்காக இருந்தது. என்னை பார்க்க வருபவர்கள் எல்லாரும் என்னை பார்த்து பரிதாபப்படுவதை நான் விரும்பவில்லை. நிச்சயம் நாம் ஏதாவது சாதித்து காட்ட வேண்டும். அப்போது தான் இந்த பச்சாதாப பார்வை முடிவுக்கு வரும் என்று தோன்றியது. மேலும் என்னைப் பார்த்து எவரும் ‘helpless girl’ என்று கூறுவதை நான் விரும்பவில்லை. எனவே தான் உலகிலேயே கடினமான செயல் ஒன்றை செய்யவேண்டும் என்று தீர்மானித்தேன்.

[box size=”large” style=”rounded” border=”full”]நான் டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான கழக மருத்துவமனையில் நான்கு மாதங்களுக்கு மேல் சிகிச்சை பெற்றுவந்தேன்.  டி.வி.பார்ப்பதும் என் விதி குறித்து அழுது கண்ணீர் வடிப்பதுமே என் பொழுதுபோக்காக இருந்தது. என்னை பார்க்க வருபவர்கள் எல்லாரும் என்னை பார்த்து பரிதாபப்படுவதை நான் விரும்பவில்லை.[/box]

ஒரு நாள் தொலைக்காட்சி பார்க்கும்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது குறித்த டாக்குமெண்டரி ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதில் மலையேறுபவர்கள் குறிப்பிட்ட மூன்று அணுகுமுறைகளை மேற்கொள்வதை பார்க்க நேர்ந்தது. அப்போது தான் நாமும் மலையேறி சிகரத்தை தொடவேண்டும் என்று முடிவு செய்தேன்.

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன் என்று கூறும் அருணிமா, “புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மீண்டு வந்து கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியும் என்கிற போது நானும் ஏன் இதே போல சாதிக்கக்கூடாது என்று முடிவு செய்தேன்…” என்கிறார்.

பச்சேந்திரி பால் என்பவர் தலைமையில் பல மாதங்கள் மலையேறும் பயிற்சி மேற்கொண்டார்  அருணிமாஎன்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியாளர் பச்சேந்திரி பாலை சந்தித்தபோது, மலையேறுவது குறித்த இவரது தீர்மானத்தையும் மனவுறுதியையும் கண்ட அவர், “நீ மன ரீதியாக ஏற்கனவே சிகரத்தை தொட்டுவிட்டாய். இனி உலகிற்கு அதை காட்ட வேண்டியது தான் பாக்கி” என்று கூறினாராம்.

மலையேறும் அனுபவம் பற்றி அருணிமா குறிப்பிடும்போது, “ஒவ்வொரு அடியும் அங்கு ஆபத்து நிறைந்தது. ஒரு காலை இழந்தவள் என்பதால் மற்றவர்களை போலல்லாமல் நான் பல சிரமங்களை சந்திக்க நேர்ந்தது. பல நேரங்களில் நான் கால்களில் வைத்திருந்த ஜெல் விலகி இரத்தக்கசிவு ஏற்பட்டது. ஆனாலும் நான் கையுறைகளையோ அல்லது காலுரைகலையோ கழற்றவில்லை. காரணம் FROST BITES எனப்படும் உறைதலால் ஏற்படும் காயம் என்னை பதம் பார்த்துவிடும். (FROST BITE – சேற்றுப் புண் போல மலையேறுபவர்களை தாக்கும் ஒரு வித நோய்).

[box size=”large” style=”rounded” border=”full”]ஒவ்வொரு அடியும் அங்கு ஆபத்து நிறைந்தது. ஒரு காலை இழந்தவள் என்பதால் மற்றவர்களை போலல்லாமல் நான் பல சிரமங்களை சந்திக்க நேர்ந்தது. பல நேரங்களில் நான் கால்களில் வைத்திருந்த ஜெல் விலகி இரத்தக்கசிவு ஏற்பட்டது. [/box]

ஒவ்வொரு முறையும் இரத்தக்கசிவு ஏற்படும்போதெல்லாம் சற்று ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஏறத் துவங்குவேன்.

மேலும் அந்த குளிர்ந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு இருக்க (Acclimatised) பழகிக்கொண்டேன். இல்லையெனில் தலைவலி வந்துவிடும்.

ஒருகட்டத்தில் எனது சிலிண்டரில் இருந்த ஆக்சிஜென் மிகவும் குறைந்துவிட்டது. உடன் வந்தவர்கள் நான் மேற்கொண்டு தொடர்வது ஆபத்து என்றார்கள். ஆனாலும் நான் என் முயற்சியை கைவிட விரும்பவில்லை. எல்லாவிதமான இன்னல்களையும் தடைகளையும் கடந்து இமயத்தின் மீதேறி சிகரத்தையும் தொட்டு மறுபடியும் கீழே மலையிறங்கி வந்தேன். மலையேறுவது எத்தனை ஆபத்தோ அதே ஆபத்து மலையிறங்குவதும் கூட. சற்று பிசகினால் உயிருக்கே ஆபத்து.”

எவரெஸ்ட் சிகரத்தில் கால்களை பதித்த அந்த தருணம் (மே 21, 10.55 AM) தொண்டையே கட்டிக்கொள்ளும் அளவுக்கு அருணிமா உற்சாக கூக்குரல் எழுப்பினார். “சிகரத்தில் கால் பதித்த அந்த தருணம் நான் என்னை மறந்துவிட்டேன். எனது உற்சாக கூக்குரலை மொத்த தேசமும் கேட்கவேண்டும் என்று எனக்கு தோன்றியது…” என்கிறார் அருணிமா.

இன்னும் 15 நிமிடங்களில் நானம் எவரெஸ்ட்டை அடைந்துவிடுவோம் என்று அவரது கைட் சொன்னவுடன், அருணிமா இரண்டு மினி சூலாயுதங்களையும், சிவ சாலீசா (சிவபெருமான் குறித்த ஸ்தோத்திரங்கள்) நூலையும், சுவாமி விவேக்காந்தரின் படம் ஒன்றையும் கையில் எடுத்துக்கொண்டார். சிகரத்தை அடைந்தது அவற்றை துணியில் சுற்றி பனியில் அவற்றை பதித்தார். சிவ ஸ்தோத்திரங்களை சொன்னார்.

“என் தெய்வம் சிவபெருமானுக்கு அவருடைய இருப்பிடத்தில் நான் உள்ளன்போடு செய்த மிக சிறிய மரியாதை அது. தடைகளை கடந்து நான் வெற்றிக்கொடி நாட்டுவதற்கு சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் தான் எனக்கு வாழ்நாள் முழுவதும் வழிகாட்டியாக இருந்தது!!” என்கிறார் அருணிமா.


[box size=”large” style=”rounded” border=”full”]”என் தெய்வம் சிவபெருமானுக்கு அவருடைய இருப்பிடத்தில் நான் உள்ளன்போடு செய்த மிக சிறிய மரியாதை அது. தடைகளை கடந்து நான் வெற்றிக்கொடி நாட்டுவதற்கு சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் தான் எனக்கு வாழ்நாள் முழுவதும் வழிகாட்டியாக இருந்தது!!” என்கிறார் அருணிமா.[/box]

ஒற்றைக் காலுடன் தன்னை உலகின் மிக உயரமான சிகரத்தை ஏற வைத்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். அதற்குப் பிறகு, உலகப் புகழ் பெற்ற அருணிமாவுக்கு, பணம், புகழ் குவியத் துவங்கியுள்ளது. கிடைத்த பணத்தைக் கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு, விளையாட்டுப் பயிற்சி பள்ளி துவக்க உள்ளார்.

கீழே இறங்கியவுடன் நான் முதலில் சந்தித்தது எனது பயிற்சியாளர் பச்சேந்திரி பாலைத் தான். “அவருக்கு என் மீதிருந்த நம்பிக்கை காரணமாகத் தான் நான் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது. நாங்கள் இருவரும் அழுதே விட்டோம்” என்று கூறும்போது அருணிமாவின் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது.
அருணிமாவின் இந்த சாதனை குறித்து அவரது பயிற்சியாளர் என்ன கூறுகிறார் என்றால் : “அருணிமா எவரெஸ்ட்டை தொட்ட அந்த தருணம் நமது நாட்டிற்கே பெருமையான ஒன்றாகும். அருணிமாவின் மனோதிடமும் ஆன்மபலமும் வியக்கவைப்பது. கற்பனைக்கு அப்பாற்ப்பட்டது. எல்லாவித இன்னல்களையும் கடந்து அவர் செய்திருக்கும் இந்த சாதனை நிச்சயம் உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை தரக்கூடியது.”

அருணிமாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் எம்.சி.மிஸ்ரா என்ன கூறுகிறார் என்றால் : “அவள் மலையேற விரும்புகிறாள் அதற்காக முயற்சிக்கிறாள் என்று எனக்கு தெரியும். ஆனால் அவள் அதை சாதித்துக்காட்டிய பின்னர் எனக்கு ஏற்பட்ட வியப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையே இல்லை.”

இவரது மலையேற்றத்திற்கு உதவிய டாடா குழுமத்தின் மலேய்ற்ற பிரிவி பயறிசி மையத்தின் அதிகாரி, திரு.சுனில் பாஸ்கரன் கூறியதாவது…. “அருணிமாவுக்கு இருந்த COURAGE, GRIT, DETERMINATION & DEDICATION தான் இதற்கு காரணம். இந்த சாதனையின் மூலம் சரித்திரத்தில் தன் பெயரை பொன்னெழுத்துக்களால் பதித்துவிட்ட அருணிமாவிடம் இருந்து நம் இளைஞர்களும்  மாணவர்களும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும். சோதனைகளை சாதனைகளாக மாற்றிய இவரது வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம்” என்றார். உண்மை தான்.

இவர் சாதனை பற்றி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள் இவருக்கு எரிச்சலை தந்தன. இருப்பினும் அவற்றுக்கு அவர் பதிலளிக்க தயங்கவில்லை. தனது வாதத்தை மிக அழகாக நயமாக எடுத்து வைக்கும் பக்குவம் அவரிடம் உள்ளது.

ஒரு நிருபர் இவரிடம் “சென்ற வாரம் ஜப்பானை சேர்ந்த ஒரு 80 வயது முதியவர் ஒரு கூடத் தான் எவரெஸ்ட் மீது ஏறினார். நீங்கள் இந்த சிறு வயதில் ஏறியது என்ன பிரமாதம்?” என்று கேட்க…

முதலில் அந்த கேள்விக்கு கோபப்பட்ட அருணிமா பின்னர்,”80 வயது முதியவர் ஒருவர் எவரெஸ்ட்மீது ஏறுகிறார் என்றால் அதற்க்கு காரணம் அவருக்கு இருந்த மனவுறுதி. இந்த சாதனை குறித்து அவருக்கு இருந்த ஒருமுக சிந்தனையும், உடல் நிலையம் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தன. எவரெஸ்ட் போன்ற உயரமான சிகரங்களை ஏறுவதற்கு ஒரு அசாத்திய மனவுறுதியுடன் இருக்கவேண்டும். அவருக்கு அது இருந்தது. எனவே சாத்தியமானது. மலையேறுவது சுலபம் என்று எவராவது நினைத்தால் அடிவாரத்தில் உள்ள பயிற்சி கூடத்திற்கு ஒரு முறை சென்று வாருங்கள். உங்களுக்கே புரியும் அது எவ்வளவு கடினமான ஒரு பணி என்பது!!” என்றார்.

அந்த நிருபர் அதற்க்கு பிறகு பேசவேண்டுமே….. ம்….ஹூம்..

பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது… அசௌகரியமான கேள்விகளையும் சுலபமாக எதிர்கொள்ளக்கூடிய பக்குவத்திற்கு வந்துவிட்டார் அருணிமா. அவருடைய பர்சனல் வாழ்க்கை பற்றி கேள்வி கேட்டபோது அவர் அதற்க்கு அளித்த பதிலே சான்று. “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு நான் பதில் கூறவேண்டியதில்லை என்று கருதுகிறேன்” என்றார்.

தொடர்ந்து சில வாரங்கள் கழித்து நடந்த ஒரு விழாவில், எந்த உ.பி. போலீஸ் இவரது மீது பழிசுமத்தியதோ அதே உ.பி. அரசு, முதல்வர் அகிலேஷ் தலைமையில் இவருக்கு பாராட்டு விழா நடத்தி ரூ.25 லட்சம் பரிசும் வழங்கியது.

“அருணிமா நம் மாநிலத்திற்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை நாட்டிற்கே பெருமை தேடி தந்துள்ளார். மற்றவர்கள் இவரை பார்த்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்” என்று அந்த விழாவில் குறிப்பிட்டார் முதல்வர் அகிலேஷ்.

இது தாண்டா சாதனை!!!!

அருணிமா சின்ஹாவின் தற்போதைய லட்சியம் என்ன தெரியுமா?

“விபத்திற்கு பிறகு எனக்கு கிடைத்த ஊக்கத் தொகை மற்றும் பரிசுத் தொகை ஆகியவற்றை கொண்டு கொஞ்சம் நிலம் வாங்கியுள்ளேன். அதில் மாற்றுத் திறநாளிகளுக்கு என்று ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்றை கட்டவிருக்கிறேன்.” அதற்க்கு கிட்டத்தட்ட 12 கோடிகள் வரை செலவாகும் என்று தெரிகிறது.

“மாற்றுத் திறநாளிகள் பலருக்கு என் வாழ்க்கை சாதிப்பதற்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் அருணிமா.

அதில் என்ன சந்தேகம்?

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். (குறள் 623)

பொருள் : துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.

இவருடைய இணையதள முகவரி : http://arunimasinha.com/
பேஸ்புக் முகவரி : http://www.facebook.com/pages/Arunima-Sinha/126429214222356
டுவிட்டர் முகவரி : https://twitter.com/sinha_arunima

இதை நீங்கள் படிக்கும் இந்நேரம் அருணிமா சின்ஹாவுக்கு நான் வாழ்த்து சொல்லியிருப்பேன். நன்றியும் சொல்லியிருப்பேன்.

பல விஷயங்களை புரியவைத்ததற்கு!

(Reference : Dinamalar.com, timesofindia.indiatimes.com, khelnama.com, telegraphindia.com, thehindu.com, mid-day.com, hindustantimes)

12 thoughts on “சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ள அருணிமா சின்ஹா வாழ்க்கை கூறும் பாடம்!

 1. அருணிமாவிடம் இருந்து நம் இளைஞர்களும் மாணவர்களும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்.
  சிவபெருமானுக்கு அவருடைய இருப்பிடத்தில் சிவ நாமம் ஜெபிப்பது எத்துனை பாக்கியம் .

  இவர் மாற்று திறனாளி அல்ல .

  நம் எல்லோர் “மனதையும் மாற்றும் திறனாளி ”

  சுந்தர் ஜி .
  தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் பல ……

  ==============================================================

 2. Congrats to the Woman of Immense mental courage and steeliness. I will learn and execute these immortal characterisitics to stand up a high frequency Achiever.
  Thank You Mr.Sundar for your self-styled inspiration . 🙂 🙂

 3. துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார் –

  சூப்பர் சுந்தர் சார்

 4. உங்களைப்போலவே நானும் எனது வாழ்த்தையும் நன்றியையும் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி வெற்றி கண்ட நமது சகோதரி அருணிமா அவர்களுக்கு தெரிவித்து விட்டேன்.

  இத்தகைய சூழலில் எனக்கு திரு. பா. விஜய் அவர்களின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது.

  “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
  வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
  ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
  இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
  நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
  லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
  மனமே ஓ மனமே நீ மாறிவிடு
  மலையோ அது பனியோ நீ மோதி விடு

  உள்ளம் என்றும் எப்போதும்
  உடைந்து போகக் கூடாது
  என்ன இந்த வாழ்கையென்றே
  எண்ணம் தோன்றக் கூடாது
  எந்த மனிதன் நெஞ்சுக்குள்
  காயம் இல்லை சொல்லுங்கள்
  காலப்போக்கில் காயமெல்லாம்
  மாறிப்போகும் மாயங்கள்

  உளி தாங்கும் கற்கள் தானே
  மண்மீது சிலையாகும்
  வலி தாங்கும் உள்ளம் தானே
  நிலையான சுகம் காணும்
  யாருக்கில்லை போராட்டம்
  கண்ணில் என்ன நீரோட்டம்
  ஓரு கனவு கண்டால்
  அதை தினம் முயன்றால்
  ஓரு நாளில் நிஜமாகும்”

  கனவு கண்டு அதில் வெற்றியும் பெற்று விட்ட இந்த பெண் சிங்கத்திடமிருந்து நாம் அனைவரும் பாடம் கற்று கொள்ள வேண்டும்.

  மு. சுந்தரபாண்டி
  வேலூர்

 5. சாதனை என்றால் இதுதான் சாதனை. அருணிமாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் எம்.சி.மிஸ்ரா, அவருக்கு மலையேற பயிற்சி அளித்த பச்சேந்திரி பால் மற்றும் டாட்டா குழுமத்தின் அதிகாரி சுனில் பாஸ்கரன் ஆகியோருக்கு என்னுடைய நன்றி. கடின உழைப்பு, விடா முயற்சி, அசைக்க முடியாத மனவுறுதி, கடவுள் நம்பிக்கை இவற்றிற்கு இனிமேல் நாம் அருணிமாவை உதாரணமாக காட்டலாம். முதலில் மனதை கலங்க வைத்து, பின் நெகிழவைத்து, பின்னர் மனதுக்கு தெம்பும் உறுதியும் கொடுத்த ஒரு அருமையான பதிவுக்கு நெஞ்சார்ந்த நன்றி சுந்தர்.

 6. சகோதரி அருணிமாவின் மன உறுதி , விடா முயற்சி , தெய்வ பக்தி ஆகியவற்றை நினைக்கையில் உள்ளம் சிலிர்க்கிறது !!!

  இந்த கலியுகத்தில் பல பொய்யர்கள், பழிச்சொல் கூறுபவர்கள், பிறரின் துயரில் இன்பம் காணும் அற்ப பிறவிகளுக்கு சாட்டையடி கொடுப்பதைப்போல் “நான் இருக்கிறேன்” யாருக்கு எப்போது என்ன கொடுப்பது என எனக்கு தெரியும் என்பதை இவ்வுலகுக்கு புரியவைத்த அந்த பரம்பொருளை என்ன சொல்லி வியப்பது !!!

  சோதனையை சாதனையாக்கி அதன் பலனை எல்லோரும் பெற்று பயன் பெரும் வண்ணம் சகோதரி அருணிமா எடுத்துகொண்டிருக்கும் முயற்சி எந்த வித தடைகளும் இன்றி எல்லாம் செவ்வனே முடிந்து அவரது கனவும் லட்சியமும் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை மனமுருக வேண்டி வணங்குவோம் !!!

  வாழ்க வளமுடன் !!!

 7. வார்த்தைகளை தேடுகிறேன் பாராட்ட. அருநிமாவின் பயிற்சியாளர் ஒரு சிறந்த மனிதர். ஊக்குவித்து , சாதிக்க வைக்கும் மனிதர்கள் தேவதைகள். அவருக்கும் சேர்த்து
  ஒரு பெரிய சல்யூட்

 8. Awesome stuff ..mind blowing achievement!!
  This is what is called overcoming obstacles literally, Ms Arunima has not just overcome obstacles but de-throned them.
  Her mentor-Mr Bachindri Pal is a mjor reason for her achievement. No one would have had the confidence in her but HE did—no wonder Coaches make STAR’S at their will..however talented one might be, without proper guidance one cant achieve their goals.

  Next Ms Arunima—her disciplined approach towards the goal is worth mentioning. She could have easily wept her whole life and looked for sympathy BUT here was A WOMEN WHO DECIDED TO CHANGE HER DESTINY. “she wanted to prove a point-first to herself and next to all her detractors..and SHE has done it to perfection.”

  To climb mountains is a GIGANTIC TASK- people with two legs will think thousand times to climb the MOUNT EVEREST, but HERE IS Ms ARUNIMA whose done it even after she lost one of her legs..HER ACHIEVEMENT proves that SHE IS NOT HANDICAPPED BUT ITS RATHER THOSE INDIVIDUALS WHO LACK SELF-CONFIDENCE.!!

  And HER WAY OF PAYING TRIBUTE TO ALMIGHTY—just amazing, as said in the article it has given all of them who fight for religions a tight slap on their face,The ALMIGHTY would have been pleased by her effort than any other offering or puja done by anyone—because HERE is a offering overcoming all the obstacles.

  SWAMI VIVEKANANDA-HE LIVES FOREVER..no one else could have inspired like this!!

  And TIME changes everything—the people who insulted her , are now praising her..there can be nothing better than making those who speak ill of you, PRAISE YOU..

  Consider myself fortunate to have Read this article..Thanks to RIGHTMANTRA and even more to Ms Arunima who has kindled the SPIRIT OF NEVER SAY DIE ATTITUDE IN A MILLIONS OF PEOPLE ACROSS THE WORLD..

  HATS OFF MAM FOR UR ENORMOUS EFFORT—
  One thing –even if U had not have reached ur goals , WHAT U DID iS GREAT—BECAUSE U PUT IN THE EFFORTS—U HAVE THOUGHT US TO FIGHT !!
  Victory is secondary to efforts!!In ur case victory is the ICING ON THE CAKE!!

  Regards
  R.HariHaraSudan.
  “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

 9. தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வறுத்த கூலி தரும் என்பதற்கு அருணிமா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் ..

 10. கடவுள் ஒருவருக்கு தாங்க முடியாத துன்பம் தருகிறார் என்றால் அது கூடவே மிக பெரிய தன்னம்பிக்கையும் தருகிறார் ,இதோ இன்னொரு மிக சிறந்த உதாரணம் அருணிமா சின்ஹா அவர்கள் ,இன்னும் பல சாதனை புரிய வாழ்த்துக்கள்

 11. இதை பார்க்கும் போது …என் மனதில் ஒரு குற்ற உணர்வு …ஒன்றுமே இல்லாத சிறு சிறு விசயத்திற்கு ஆண்டவனை குறை கூறுகிறோம்
  ஆண்டவன் நம் மீது எவளவு கருணை கொண்டுள்ளான்
  என்று மனது உருகுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *