வறண்ட பிள்ளையாரை (வறண்ட பிள்ளையார் – நீண்ட நாட்கள் பூஜை காணாத பிள்ளையார்) தேடி புறப்பட்ட நம் பயணத்தின் பிள்ளையார் சுழியாக முதலில் இவருக்கு தான் அபிஷேக ஆராதனைகள் செய்ய திட்டமிட்டோம். இவர் வறண்ட பிள்ளையார் அல்ல. இவருக்கு தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. இருப்பினும் இவரிடம் உள்ள தனிச்சிறப்பு காரணமாக அதாவது அச்சில் ஏறிய முதல் திருமுறை இவரிடம் இருப்பதால் திருமுறை விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்ய தீர்மானித்தோம்.
இந்த கோவிலை நிர்வகித்து வரும் திரு.பிரபாகர மூர்த்தி குடும்பத்தினரை நமக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதால், தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே அவர்களுக்கு போன் செய்து தீபாவளி சிறப்பு அபிஷேகம் பற்றிய நமது திட்டத்தை கூறியவுடன் அவர்கள் குடும்பத்தில் கடைசி மகன் திரு.திருசிற்றம்பலம் தான் வந்திருந்து பூஜைகள் செய்வதாக உறுதியளித்தார். (இவரும் இவரது சகோதரி கணவரும் தான் திருமுறை விநாயகருக்கு பூஜை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
தளத்தில் இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டு, திருமுறை விநாயகருக்கு நடைபெறவிருக்கும் தீபாவளி சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்க விரும்பினால், வாசகர்கள் / நண்பர்கள் அவரவர் தலா ஒரு அபிஷேக பொருளை கொண்டு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம். நண்பர்களும் அதன்படி அவரவர் தங்களால் இயன்ற பொருளை கொண்டு வருவதாக உறுதியளித்தனர். நம்மால் பசும்பால் ஏற்பாடு செய்யமுடியும் என்பதால் பால் மட்டும் நாம் பொறுப்பேற்றுக்கொண்டோம்.
அனைத்து ஏற்பாடுகளும் மளமளவென நடந்துகொண்டிருந்த நிலையில், சரியாக தீபாவளிக்கு முந்தைய தினம் சென்னையில் மழை பெய்ய ஆரம்பித்தது. உள்ளுக்குள் ஒரு வித பதட்டம் தொற்றிகொண்டது. நல்லபடியாக அபிஷேகம் நடந்து முடியவேண்டுமே. மகளிர் வாசகர்கள் பலர் மறுநாள் அபிஷேகத்திற்கு வரவிருப்பதால் பதட்டம் தீவிரமானது. இந்த சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்த பெரும்பாலானோர், ‘மழை இல்லை என்றால் நிச்சயம் வந்துவிடுவதாக’ கூறினர்.
தீபாவளியன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. “எப்போது வேண்டுமானாலும் பொத்துக்கொண்டு ஊற்றுவேன்” என்று மிரட்டுவது போலிருந்தது. “அப்பா கணேசா… நல்லபடியா இந்த அபிஷேகத்தை நடத்திக்கொடுக்கணும்!” என்று ஆனைமுகன் மேல் பாரத்தை போட்டுவிட்டு பணிகளை கவனிக்கலானோம்.
தீபாவளியன்று காலை நண்பர்கள் ஒருவர்பின் ஒருவராக குன்றத்தூர் வந்து சேர்ந்தனர்.
ஏற்கனவே செய்த ஏற்பாட்டின்படி அபிஷேகப் பொடி ஒருவர், பழங்கள் ஒருவர், தேன் ஒருவர், எலுமிச்சம்பழம் ஒருவர், இளநீர் ஒருவர் என ஆளாளுக்கு ஒவ்வொரு பொருளை கொண்டு வர, நமது பணி கொஞ்சம் சுலபமானது.
பூஜை துவங்குவதற்கு முன்பு பசு ஒன்று கண்களில் பட, நைவேத்தியத்துக்கு வைத்திருந்த வாழைப் பழங்களில் கொஞ்சம் எடுத்து கோமாதாவுக்கு கார்த்திக் அவர்கள் மூலம் கொடுத்த பின்னர் தான் பூர்வாங்க பூஜையே துவங்கியது. ஆகா, கணபதி பூஜை கோ-சம்ரட்சணத்துடன் துவங்கியது. இந்த பூஜையின் பவித்திரத்துக்கு இதைவிட வேறு சான்று இருக்க முடியாது.
பூஜைக்கு திருச்சிற்றம்பலம் அவர்களுடன் அவரது சகோதரி கணவர் திரு.சுரேஷ் பாலாஜி அவர்களும் வந்திருந்தார். இவரும் திருமுறை விநாயகருக்கு நித்திய பூஜைகள் செய்பவர் தான். மைத்துனர் திருச்சிற்றம்பலம் பணி நிமித்தமாக எங்காவது வெளியூர் செல்லும்போது விக்னேஸ்வரர் பூஜையை இவர் பார்த்துக்கொள்வார். ஆக, பிள்ளையார் இங்கு எந்த குறையுமின்றி இருக்கிறார்.
முதலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தொடங்கியது. பழங்களை நறுக்க வேண்டும் என்றபோது, அதற்கு அங்கே இடமில்லை. இரண்டு நபர்கள் நிற்கும் அளவிற்கு தான் அங்கு இடமுண்டு. உடனே கார்த்திக் சற்றுக் கூட யோசிக்காமல் கீழே அமர்ந்து பழத்தை நறுக்க ஆரம்பித்தார்.
=========================================================
Also check…
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்!
நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!
சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?
=========================================================
கார்த்திக் நண்பர் பாபாராம் அவர்கள் மூலம் அறிமுகமானவர். நமது தளத்தின் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொண்டு உடலுழைப்பை எந்தவித எதிர்பார்ப்புமின்றி அளித்து வருபவர். தன் வயதான தாயுடன் அனகாபுத்தூரில் வசித்து வருகிறார். கடும் உழைப்பாளி. தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். நாள், கிழமை விசேஷங்களின்போது கோவில்களுக்கு பூஜைக்கு செல்வது மற்றும் ஹோமங்களுக்கு செல்வதும் உண்டு.
பத்தாண்டுகளுக்கு முன்னரே கார்த்திக்கின் தந்தை திரு.வைத்தியநாத ஐயர் புற்றுநோயால் இறந்துவிட்டார். திரு.வைத்தியநாத ஐயர் தேனம்பாக்கதில் உள்ள ஸ்ரீ மடத்தின் பாடசாலையில் மேனஜராக பணியாற்றியிருக்கிறார் (மஹா பெரியவாவுக்கு பிறகு) என்கிற விபரமே நமக்கு பின்னர் தான் தெரியும். கார்த்திக்கின் தாய் வழி தாத்தாவின் சகோதரர் திரு.ராமமூர்த்தி என்பவர் காஞ்சி ஸ்ரீமடத்தில் அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக பெரியவாவுக்கு தொண்டாற்றியிருக்கிறார்.
கார்த்திக்கு இணையம், வாட்ஸ் ஆப் இதெல்லாம் பார்க்க வழியில்லை. நமது நிகழ்ச்சிகள் குறித்து எஸ்.எம்.எஸ். மற்றும் அலைபேசியில் தகவல் தெரிவித்து வருகிறோம். ஒரு வேளை குருக்கள் தொண்டுக்காக ஏதேனும் கோவிலுக்கு செல்ல நேர்ந்தால் அன்று அவரால் வரமுடியாது. மற்றபடி எந்த வித தயக்கமோ எதிர்பார்ப்போ இன்றி, எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் வருவார். வந்துகொண்டிருக்கிறார்.
கார்த்திக் தரையில் அமர்ந்து மிக அழகாக பழங்கள் நறுக்கி நாட்டுச் சர்க்கரை, தேன் ஆகியவற்றை போட்டு பஞ்சாமிர்தம் தயார் செய்துவிட்டார்.
மகளிர் அணியினர் வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து கோலமிட்டனர்.
தொடர்ந்து பிள்ளையாருக்கு திருமஞ்சனம் செய்த பிறகு அபிஷேகம் துவங்கியது. தண்ணீர், எண்ணெய், கதம்பப் பொடி, பால், இளநீர், பஞ்சாமிர்தம் தேன், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் திருமுறை, பிள்ளையார் மற்றும் சுவாமி மூவருக்கும் நாம் கொண்டு சென்ற வஸ்திரம் சாத்தி (இந்த வஸ்திரம் நம்மிடம் வந்தது தனிக்கதை. அதை வேறொரு பதிவில் சொல்கிறோம்!) அலங்காரம் செய்து, பின்னர் நிவேதனம் செய்து தீபாராதனை காட்டினார்கள்.
முன்னதாக வந்திருந்த அனைவரது பெயர்களுக்கும் சங்கல்பம் செய்யப்பட்டது. நம் நமது பெயருக்கும் நம் வாசகர்கள் பெயருக்கும் அந்த வார பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையாளர்களுக்கும் சங்கல்பம் செய்தோம். ஒவ்வொருவர் பெயருக்கும் பொறுமையாக சங்கல்பம் செய்யப்பட்டது.
பிள்ளையார் நிவேதனத்துக்கு பிரசாதத்தை (சர்க்கரை பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல்) திருமதி.உமா வெங்கட் அவர்கள் தயாரித்து கொண்டுவந்திருந்தார். பிரமாதமான சுவையுடன் இருந்த பிரசாதத்தை அது சமயம் அங்கே வந்த பொதுமக்கள் சிலருக்கும் பசுக்களுக்கும் கொடுத்தோம். முன்பின் தெரியாத இரண்டு இளைஞர்கள் வாங்கி சாப்பிடும்போதும் தான் எங்கள் மனம் நிறைந்தது.
பூஜை நடைபெற்றுக்கொண்டிருந்த போது பல்வேறு விநாயகர் ஸ்லோகங்களை எடுத்துச் சென்றிருந்த நூலை வைத்து படித்தோம். வாசகியரும் படித்தார்கள். இறுதியில் விக்னேஸ்வர அஷ்டோத்திர நாமாவளிகளை நாம் சொல்லச் சொல்ல அர்ச்சனை நடைபெற்றது.
திருவேற்காட்டிலிருந்து திருமதி.தாமரை வெங்கட் தனது குடும்பத்துடன் வந்திருந்தார்கள். அவரது குழந்தைகள் வேணு கிருஷ்ணனும், கெளரி நந்தினியும் சூழ்நிலையை கலகலப்பாக வைத்துக்கொண்டிருந்தார்கள். (குழந்தைகள் இல்லாத எந்த வழிபாடும் முழுமை பெறுவதில்லை!)
முகலிவாக்கத்தை சேர்ந்த திரு.வெங்கட் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். மற்றும் திரு.விஸ்வநாதன், திருமதி.ரமா ஷங்கர், திருமதி.பரிமளம், குட்டி சந்திரன் ஆகியோரும் வந்திருந்து கைங்கரியத்தை சிறப்பான முறையில் நடத்தித் தந்தனர்.
பிள்ளையாருக்கு நடைபெற்ற இந்த தீபாவளி சிறப்பு அபிஷேகத்தை பொருத்தவரை நண்பர்கள் அனைவரும் அவர்களால் இயன்ற பணிகளை மனமுவந்து செய்தனர். அனைவருக்கும் ஆனைமுகன் அருள் உரித்தாகுக!
அதுவரை மப்பும் மந்தாரமுமாக இருந்த வானம், பூஜை நிறைவடைந்து தீபாராதனை காண்பித்தவுடன் பொத்துக்கொண்டு ஊற்றத் துவங்கியது!
ஓரானைக் கன்றை உமையாள் திருமகனை
போரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்தி தரும் சித்தி தருந்தான்
==========================================================
முக்கிய அறிவிப்பு…!
வறண்ட பிள்ளையாரை தேடும் பணி நமது பல்வேறு பணிகளின் இடையே நடைபெற்று வருகிறது. மொத்தம் 108 வறண்ட பிள்ளையார்களை கண்டுபிடித்து அங்கு பூஜை, நைவேத்தியம் தினசரி ஏற்பாடு செய்ய இறையருளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வறண்ட பிள்ளையாரை தத்தெடுத்து நித்திய பூஜைகளுக்கு ஸ்பான்சர் செய்யும் வாய்ப்பானது நமது பல்வேறு பணிகளில் பக்கபலமாய் இருந்து வருபவர்களுக்கே செல்லவேண்டும் என்று விரும்புகிறோம். காரணம்… இந்த தளம் நடப்பது அவர்களால் தான்! புண்ணியம் சேர்க்க மட்டுமே நம்மிடம் வர நினைப்பவர்கள் தயவு செய்து மன்னிக்கவேண்டும்!!
ஒரு கோவிலுக்கு தோராயமாக மாதம் ரூ.500/- ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ரூ.500/- ஐ பிரதி மாதம் அளிக்கவிருப்பவர்களுக்கு தலா ஒரு கோவில் ஒதுக்கப்படும். (கோவிலுக்கு வந்து பூஜை செய்யும் அர்ச்சகருடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தி தரப்படும்).
அதே சமயம் ரூ.500/- கொடுக்க இயலாத ஆனால் நமது பணிகளில் பக்கபலமாய் இருப்பவர்களுக்கும் (ஏற்கனவே நமக்கு ‘விருப்ப சந்தா’ செலுத்தி வருபவர்கள் /உழவாரப்பணிக் குழு உறுப்பினர்கள்) இந்த மகத்தான கைங்கரியத்தின் பலன் சென்று சேரவேண்டும் என்பதால் அத்தகையோர் மூன்று அல்லது நான்கு பேர் சேர்ந்து ஒரு கோவிலுக்கான நித்திய பூஜை செலவை ஏற்கச் செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்படி செய்வதன் மூலம் ஒருவருக்கு ரூ.100/ அல்லது ரூ.125/- மட்டுமே ஆகும். இதன் மூலம் அவர்களுக்கு நிதிச்சுமை ஓரளவு குறையும். பூஜையும் தங்குதடையின்றி நடைபெறும்.
==========================================================
புத்தாண்டு ஆலய தரிசனத்திற்கு வர விரும்புகிறவர்கள் அவசியம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். (வேன் கட்டணம் ரூ.250/-).
விபரங்களுக்கு : வாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு!!
==========================================================
Similar articles….
தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)
வாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு!!
வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!
குன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!
அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056. IFSC Code : UTIB0001182
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
==========================================================
Also check :
மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)
ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)
நெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)
தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)
==========================================================
வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
==========================================================
Also check…
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?
==========================================================
[END]
வறண்ட பிள்ளையாரை தேடும் பணி உமது பல்வேறு பணிகளின் இடையே நடைபெற்று வருகிறது. மொத்தம் 108 வறண்ட பிள்ளையார்களை கண்டுபிடித்து அங்கு பூஜை, நைவேத்தியம் தினசரி ஏற்பாடு செய்ய(தங்களின் நல்ல மனதினால் ) இறையருளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தங்களின் நல்ல சிந்தனையால் ஏற்பட்ட இந்த மாதிரியான நல்ல காரியங்கள் செய்ய மனம் நாடும் என்பதை தங்களின்
அம்பிகை வளர்த்த அறங்கள்’ என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன்பு ‘மனித குலம் செய்யவேண்டிய 32 வகை அறங்கள்’ குறித்து ஒரு பதிவை படித்தோம் .அவை இரத்தின சுருக்கமாக இருந்தது.. அதில் தாங்கள் ஒருமுறை பல்லாவரம் சென்றிருந்தபோது, ‘ஸ்ரீ பூர்ண மஹா மேரு டிரஸ்ட்’ என்னும் ஆதரவற்ற முதியோர் இல்லம் ஒன்றை பார்க்க நேர்ந்தது.என்றும் அந்த முதியோர் இல்லத்தின் வாசலில் ‘மனித குலம் செய்யவேண்டிய 32 அறங்கள்’ குறித்து ஒரு மிகப் பெரிய பேனரை வைத்திருந்தார்கள். அதை படித்தபோது நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, என்றும்
இவை அனைத்தும் நம் அம்பிகை தனது பல்வேறு அவதாரங்களில் வளர்த்த அறங்களே. ஆகையால் தான் அவளுக்கு ‘தர்மசம்வர்த்தினி’ என்கிற பெயர் உண்டாயிற்று. ‘தர்மசம்வர்த்தினி’ = அறம் வளர்த்த நாயகி. என்றும் குறிப்பிட்டீர்கள்//
அறங்களை படிக்கும்போதே இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறதே… அவற்றை செய்தால் இன்னும் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்?
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல (குறள் 39)
இவற்றில் பல அறங்கள் செய்ய மிகப் பெரிய பொருளாதார வசதி தேவையில்லை. பரபரப்பான உங்கள் வாழ்க்கையில் சில மணித்துளிகளும், இதயத்தின் ஓரத்தில் கொஞ்சம் ஈரமும், ஏழைகளுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணமுமே போதுமானது. இங்கேதான் நீங்கள்; நிற்கீர்கள் சார்//..
திருக்குறளில் பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் அறம் செய்து வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். (குறள் 228)
எப்பேர்பட்ட அறங்கள்/.. எப்படியோ உங்களுக்கு மட்டுமே இப்படி கிடைப்பதால் விகு விரைவில் அது எங்களுக்கும் கிடைத்துவிடுகிறது….
இந்த காலத்தில் நல்ல சிந்தனை கொண்ட நல்ல உள்ளங்களுக்கு ருபாய். 500/- என்பது ஒரு விசயமே இல்லை சார். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.. உங்களால் வறண்ட பிள்ளையார் கோவில்களுக்கு 2016 நல்ல வருடம் சார். .
ரொம்ப ரொம்ப சந்தோசம் சார்.
தங்களின்
சோ. ரவிச்சந்திரன்
கர்நாடகா
Dear SundarJi,
This is great news and great service. Thanks for thinking on this and doing it.
Really appreciate your efforts..
Rgds,
Ramesh