ஒரு நாள் சந்தைக்கு செல்லும் வழியில், ஒரு கோவிலில் ஒரு மகான் பக்தி பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். இறைவனின் பெருமைகளை பற்றி கூறி, “பக்தி செய்வதோடு நின்றுவிடாது தான தர்மங்களும் அடியவர்களுக்கு தொண்டும் செய்துவரவேண்டும் அப்போது தான் சுவர்க்கத்தை அடையமுடியும். ஒருவேளை மீண்டும் பூமியில் பிறந்தாலும் நல்ல குடியில் பிறந்து சுக போக வாழ்க்கை வாழ முடியும்” என்றார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த சோமனுக்கு தூக்கிவாரிப் போட்டது. “நாம் இதுவரை அந்த மகான் சொன்னது எதையும் செய்ததில்லையே? நாம் எப்படி சுவர்க்கத்தை அடைவது? அப்படி பிறந்தாலும் எப்படி நல்ல குடியில் பிறப்பது?” என்று சிந்திக்கலானான்.
நேரே அவரிடம் போய், “ஸ்வாமி… நான் பக்கத்து கிராமத்திலிருந்து வருகிறேன். இளநீர் விற்று பிழைக்கிறேன். நீங்கள் சொல்வதை நானும் கேட்டுக்கொண்டிருந்தேன். இதுவரை நான் தான தர்மங்கள் எதுவும் செய்யாமலே காலம் கடத்திவிட்டேன். எனக்கு சுவர்க்கம் கிடைக்குமா? ஒருவேளை அடுத்த பிறவி இருந்தால் நல்ல குடியில் பிறப்பேனா?’ என்று கேட்டான்.
"
அதற்கு ஞானி சிரித்துக்கொண்டே…. “மகனே இப்போது கூட உனக்கு வழியிருக்கிறது. தினமும் யாராவது ஒரு ஏழைக்கு ஒரு இளநீரை தானமாக கொடுத்து வா… அடுத்த பிறவியில் நீ மிகப் பெரிய அரசனாக பிறக்க வாய்ப்புண்டு” என்றார்.
இவனும் அது முதல் தினசரி ஒரு இளநீரை தானம் கொடுத்து வந்தான். இதன் பயனாக அடுத்த பிறவியில் ஒரு அரச குடும்பத்தில் பிறந்தான். முற்பிறவியில் ஞானி சொன்னது நினைவுக்கு வந்தது.
‘சென்ற பிறவியில் இளநீர் தானம் கொடுத்ததால் இப்பிறவியில் மன்னனாக பிறந்துவிட்டோம். இந்த பிறவியிலும் இளநீர் தானமாக கொடுத்தால் சுவர்க்கத்தை அடையலாம்’ என்று நினைத்தவன், இங்கும் தினசரி ஒரு இளநீர் தானமாக கொடுத்து வந்தான்.
காலங்கள் உருண்டோடி முதுமை அடைந்து மரணமடைந்தவன் சுவர்க்கத்தை அடைவதற்கு பதிலாக மீண்டும் அதே இளநீர் விற்கும் வணிகனாகவே பிறந்தான். என்ன ஒரு முன்னேற்றம் என்றால் ஊனம் எதுவும் இன்றி பிறந்தான்.
முற்பிறவிகளின் ஞாபகம் அவனுக்கு இருந்தது. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த ஞானி சொன்னபடி நாம் இளநீர் விற்கும்போது இளநீர் தானமாக கொடுத்தோம். மன்னனாக பிறந்தோம். அதை தவறாமல் அடுத்த பிறவியிலும் செய்தோம். ஆனால் சுவர்க்கத்தை அடைவதற்கு பதிலாக மீண்டும் இதே தொழிலை செய்யும்படி பிறந்துவிட்டோமே….? இது என்ன அநியாயம்… என்று யோசித்து தனது சந்தேகத்தை தற்போது கண்ட ஒரு மகானிடம் சென்று கேட்டான்.
இந்த மகான் சிரித்துக்கொண்டே, “நீ ஒரு ஏழையாக இளநீர் விற்று பிழைக்கும்போது உன்னை தினசரி ஒரு இளநீர் தானம் செய்யச் சொன்னார். நீ அதன் பலனாக மன்னனாக பிறந்தாய். ஆனால் மன்னனாக பிறந்தும் கூட உன் அந்தஸ்த்திற்கும் செல்வத்திற்கும் ஏற்றபடி தானம் செய்யாமல் அதே இளநீரை தானம் செய்தாய். நீ ஏழையாய் இருக்கும்போது உன் சக்திக்கு இளநீர் ஏற்றதாய் இருந்தது. மன்னனான பிறகு அதைவிட உயர்ந்த தானத்தையல்லவா நீ செய்திருக்கவேண்டும்? அப்போதும் சாதாரண இளநீரையே தானம் செய்துவிட்டு உயர்ந்த பலனை எதிர்பார்த்தால் எப்படி கிடைக்கும்? இருப்பினும் தானம் என்பது உயர்ந்த விஷயம் என்பதால் இதே குலத்தில் நீ பிறக்க நேர்ந்தாலும் அங்கஹீனத்துடன் பிறக்காமல் ஆரோக்கியமாக பிறந்தாய்” என்றார்.
“என் கண்களை திறந்துவிட்டீர்கள் சுவாமி” என்று கூறி அவரை வணங்கி விடைபெற்றுச் சென்றான்.
ஞானி அவன் கண்களை மட்டுமா திறந்தார்? நம் கண்களையுமல்லவா!
அவரவர் தகுதிக்கும் சக்திக்கும் ஏற்ப தான தர்மங்களை செய்துவரவேண்டும். அப்போது தான் தானத்திற்குரிய பலன் கிடைக்கும்.
சிலர் பல ஆண்டுகளாக ஒரே மாதிரி தர்ம காரியங்களை தான் செய்து வருவார்கள். இத்தனை ஆண்டுகளில் விலைவாசி எவ்வளவு உயர்ந்திருக்கும்? அவரவவர் தகுதியும் எவ்வளவு உயர்ந்திருக்கும்? அதையெல்லாம் யோசித்து தான தர்மங்களின் மதிப்பை அதிகரிக்கவேண்டும். இல்லையெனில் மேற்கூறிய இளநீர் விற்பவன் கதை தான்.
"தான தர்மத்தில் முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. சரியான பயனாளியை அடையாளம் கண்டு செய்வது. தற்போதைய காலகட்டங்களில் அது அத்தனை சுலபமல்ல. ஏனெனில் இது இராமாயண மகாபாரத காலமோ நாயன்மார்கள் காலமோ அல்ல. முற்றிவிட்ட கலியுகம்.
சத்ய யுகத்தில் தர்மம் நாலுகாலில் நடந்தது, திரேதா யுகத்தில் மூன்று காலில் நடந்தது, துவாபர யுகத்தில் இரண்டு காலில் நடந்தது. ஆனால் கலியுகத்தில் தர்மம் ஒரு காலில் தான் நடக்கிறது. அதுவும் தற்போது நொண்டி நொண்டி நடக்கிறது. எனவே எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
உங்களிடம் பணமிருக்கிறது. உதவும் எண்ணமும் இருக்கிறது என்று தெரிந்தால் எப்படியாவது உங்களை ஏய்த்துப் பறிக்க திட்டம் போடும் கூட்டம் இங்கு மிக அதிகம்.
எனவே தான தர்மங்கள் செய்யும் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
சரி… இப்படி பயமுறுத்தினால் எப்படி? எப்படித் தான் தானம் செய்வது? யாருக்கு செய்வது ? என்ன செய்வது? என்று நீங்கள் ஒருவேளை கேட்டீர்கள் என்றால் அதற்கு விரிவான விடை அடுத்தப் பதிவில்.
இன்று முதல் நமது ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் ஒரு டிப்ஸ் வழங்கப்படும். இது உங்களுக்கு பலவிதங்களில் உதவியாக இருக்கும்.
================================================================
நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 1
நெய் மணம் – சர்வ மங்களம்!
வீட்டில் அடிக்கடி வெண்ணையை காய்ச்சி நெய் மணம் வீசும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். இது லக்ஷ்மி கடாஷத்தை கொடுக்கும். கிரகத்தில் உள்ள துர்தேவதைகளை, தோஷங்களை விரட்டும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
கடையிலிருந்து நெய்யாக வாங்கி வந்து வீட்டில் பயன்படுத்துவதற்கு பதிலாக நல்ல வெண்ணையாக (COW BUTTER) வாங்கி வந்து வீட்டில் அதைக் காய்ச்சி நெய்யை நாமே தயாரிக்கவேண்டும். காய்ச்சி இறக்கிய பிறகு வாசனைக்கு முருங்கை இலை போடலாம். முருங்கை இலை கிடைக்கவில்லை என்றால் கெட்டி தயிர் சிறிது, அல்லது வெந்தயம் கொஞ்சம் போடலாம். நெய் வாசனையுடன் கெடாமல் இருக்கும்.
இப்போதெல்லாம் பல வீடுகளில் ஞாயிற்றுக் கிழமை அன்று அசைவ உணவுகளின் நெடி தான் வீசுகிறது. ஒரு மாறுதலுக்கு சுத்த சைவமாகி அன்று பசு வெண்ணெய் வாங்கி வந்து நெய் காய்ச்சி பாருங்களேன்! (வெள்ளிக்கிழமை அன்று நெய் காய்ச்சக்கூடாது. மற்ற நாட்கள் ஓ.கே.!)
* சென்னை போன்ற நகரங்களில் ஒரிஜினல் பசு வெண்ணை கிடைப்பது கஷ்டம். எனவே அசல் பசும்பால் வாங்கி, தயிராக்கி வெண்ணை கடைந்து நெய் காய்ச்சுவது சிறந்தது.
மாதம் இருமுறை இவ்வாறு செய்யுங்கள். தினசரி உணவில் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்த்துக்கொள்ளலாம். ஒரு ஸ்பூன் நெய் எந்த கெடுதலும் செய்யாது.
டிப்ஸ் தொடரும்…
================================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
================================================================
Also check similar articles….
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?
================================================================
[END]
வணக்கம் சுந்தர்.நல்ல வித்தியாசமான பதிவுக்கு நன்றி.வெள்ளிகிழமை ஏன் நெய் காயச்ச கூடாது.அன்று லக்ஷ்மிக்கு உகந்த தினம் தானே.நன்றி
பால், தயிர், வெண்ணெய் இதெல்லாம் மகாலக்ஷ்மியின் அம்சம். அதனால் தான் வெள்ளிக்கிழமையன்று காய்ச்சக்கூடாது என்று சொல்வார்கள். சரியான காரணம் கூறத் தெரியவில்லை.
Your new Tips section is brilliant!
Cheers, Vinod.
தானம் செய்ய வேண்டும் என்ற அவசியத்தை ஒரு இளநீர் வியாபாரி மூலம் அழகாக பதிவு செய்து இருக்கிறீர்கள். நம்மால் முடிந்த அளவுக்கு தான தர்மங்கள் செய்து புண்ணியத்தை சம்பாதித்து கொள்ள வேண்டும்.
நல வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் அருமை….. தொடரவும் வெண்ணை காய்சசுவதன் மகத்துவம் அருமை
வாழ்க வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
இது வரை நான் கடையில் நெய்யாகவே வாங்கி வருகின்றேன். இனிமேல் வெண்ணை வாங்கி நெய் தயார் செய்கிறேன். இதில் கூட இவ்வளவு விஷயம் இருப்பது தங்கள் பதிவை பார்த்த பின்தான் தெரிய வருகின்றது. மிக்க நன்றி.
இளநீர் தான கதை மிக அருமை.
தானம் பற்றிய கதை அருமை.
நாம் தற்போது இருக்கும் நிலை புரிந்து தானம் செய்ய வேண்டும் என்பதை மிக அழகாக ஒரு சிறிய கதை மூலம் தெளிவாக அறிந்து கொண்டோம் நன்றி
நெய் பற்றிய குறிப்பு பல பேருக்கு உதவும்.
இன்றைய பதியு இளநீரும் நெய்யும் போல நல்ல மணமாக உள்ளது
Sundar ji,
Ilaneer kadhai ilaneer madhiri sweeetaaaaa irundhadhu.
Tks for the ghee tips also.
Ranjini.
மிக அருமையான கதை. தேடி தேடி நம் வாசகர்களுக்காக கதை சொல்லும் பாங்கு அருமை. சில விஷயங்கள் புரிய வைக்க இது போன்ற கதைகளால் தான் முடியும். வெள்ளி, செவ்வாய் வெண்ணை காய்ச்சுதல், துளசி தளம் பறித்தால் ஆகியவை செய்ய கூடாது., அது போல், சந்தியா வேளையில் வெண்ணை கைசுவதும் தவிர்க்க பட வேண்டும்.
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழளால் அபிராமி கடைக்கண்களே…..
அபிராமி அந்தாதி.
ராஜ்குமார்
சுந்தர் சார் வணக்கம்
மிகவும் அழகான பதிவு
நன்றி
சுந்தர் சார்,
மிகவும் அருமையான கதை. மிகவும் உபயோகமான பாடம் நாங்களும் கற்றுகொண்டோம். எங்கள் வீட்டிலும் ரொம்ப வருஷமாக
நெய் காய்சுகிறோம்.(by default).ஏனெனில் நெய்யாக வாங்குவது பிடிக்காது.எங்களை அறியாமலேயே நல்லது செய்து இருக்கிறோம்.
Thanks for the useful information.
usha (Mysore)
சமுதாய பண்பாட்டுக்கு படம் எடுக்கவில்லையன்றாலும் பரவாயில்லை. சமுதாய சீர்கேடு காரணங்களை முதன்மைபடுத்தி படம் எடுக்காமல் இருந்தாலே போதும்.
இன்றைய நடிகர்கள், பணத்தை மட்டும் பிரதானமாக கொள்ளாமல், சமுதாய நோக்குடன் கூடிய ஒரு சில குறிக்கோள்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். செய்வார்களா.
நெய் டிப்ஸ் சூப்பர்.
வெண்ணையுடன் சிறுதளவு முருங்ககிரை சேர்த்து காய்ச்சி,நெய்யை வடிகட்டியபின் வாணலியில் உள்ள முருங்ககிரையில் சாதம் பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். அதன் சுவையே தனி.
வணக்கம்………தான தர்மங்கள் செய்தல் பற்றியும் அதன் வலிமையைப் பற்றியும் எளிமையாய்ப் புரிய வைக்கும் பதிவு………. நன்றிகள் பல………. டிப்ஸ் பகுதிக்கு எங்கள் வரவேற்புகள் …………