Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, June 24, 2024
Please specify the group
Home > Featured > ‘மெய்யெனில் மெய், பொய்யெனில் பொய்’ – கண்டதும் கேட்டதும் (1)

‘மெய்யெனில் மெய், பொய்யெனில் பொய்’ – கண்டதும் கேட்டதும் (1)

print
செய்தித் தாள்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட வார, மாத இதழ்களையும் படித்து நம்மை அப்டேட்டாக வைத்துக்கொள்ள என்றுமே நாம் தவறியதில்லை. அப்படி படிக்கும்போது, “அட… நல்லாயிருக்கே இது!” என்று நமக்கு தோன்றிய சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டியே இந்த பகுதியை துவக்கியுள்ளோம்.

நம் தளத்திற்கு மன ஆறுதலும் ஒரு வித REMEDY தேடியும் தான் பலர் வருகிறார்கள். இது போன்ற பதிவுகள் அவர்களுக்கு ஒரு மாறுதலை கொடுக்கும். ஒரேடியாக சீரியஸான பதிவுகளை அளிப்பதில் நமக்கும் விருப்பமில்லை. நவரசமும் இருந்தால் தான் வாழ்க்கை ருசிக்கும். காரணமின்றி காரியங்கள் இல்லை. So, வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அனுபவிக்கவேண்டும். எனவே லைட்டான, நொறுக்குத் தீனி போன்ற இந்த பகுதியை துவக்குகிறோம். சில சிரிக்க வைக்கும், சில சிந்திக்க வைக்கும், சில வழி காட்டும், சில வலி போக்கும்! அறுசுவைகளும் இதில் உண்டு. இந்த நொறுக்குத் தீனி உங்கள் உடலுக்கு கேடு விளைவிக்காது என்பது தான் இதில் விசேஷம்.

ENJOY!!

=====================================================================

Paddy field

1)  SOLD OUT!

கரும்பு நட்டேன்
விற்கவில்லை.

கம்பு நட்டேன்
விற்கவில்லை.

நெல் நட்டேன்
விற்கவில்லை.

கல் நட்டேன்
விற்றுவிட்டது.

– பேராசிரியர் அப்துல் காதர்  @ குங்குமம்

Adhithya

2) சூரிய நமஸ்காரம் என்னும் அருமருந்து!

“இன்றைய இளைய தலைமுறையினர் ஆரோக்கியமாக இருக்க ஒழுங்காய் சூரிய நமஸ்காரம் செய்தாலே போதும். அதிகாலை நேரத்தில் எழுவதோடு, சூரிய நமஸ்காரம் போன்ற முழு உடலுக்கும் மூச்சுக்கும் மனதிற்கும் ஆரோக்கியம் தரும் பயிற்சிகளும் சேர்ந்துவிட்டால், வாழ்க்கையில் பல வளங்களும் சேரும். அர்த்தமாய் நேரங்கள் செலவாகும். எதிர்காலத்தில் வருவதாய் இருக்கும் நோய்கள் திசைமாறிப்போகும்.”

– திரு.சுப்ரமணிய சாஸ்திரிகள் @ குங்குமம்

K-Kamaraj3) தலைவன் என்றால் யார்?

ஒரு முறை திருவாரூருக்கு காமராஜர் வந்த போது ஒரு தொண்டர், சாலையோரத்திலிருந்த மின்கம்பத்தில் ஏறி நின்று, “பெருந்தலைவர் காமராஜர் வாழ்க வாழ்க” என்று கோஷம் போட்டார்.

அதை கண்ட காமாராஜர், “ஏய்.. கிறுக்கா… நான் வாழ்வேன். நீ போய்டுவே… முதல்ல கீழே இறங்குன்னேன்!” என்றார்.

– ஜி.ராஜா, விருதுநகர் @ குமுதம்

4) செவ்வாய் தோஷமா? சென்னிமலைக்கு உடனே புறப்படுங்க!

“ஜாதகத்தில் எத்தனை கடினமான செவ்வாய் தோஷங்கள் இருப்பினும், அவற்றிற்கு சக்தி வாய்ந்த பரிகாரத் தலங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. செவ்வாய் தோஷ பரிகார நிவர்த்திக்கென்றே வீர்யம் நிறைந்த மந்திரப் பிரதிஷ்டைகள் செய்யப்பட்டுள்ள யந்திரங்கள், ரகஸியமான இடத்தில் கருவறைக்கு கீழே ஆழத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

Chennimalai 1

அவற்றில் தன்னிகரற்று விளங்கும் மிகப் புராதன திருத்தலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் ஆன்மிக சுடர்விட்டு திகழும் ஸ்ரீ முருகப் பெருமான் எழுந்தருளி, தன் அளவற்ற கருணையினால், அனைத்து செவ்வாய் தோஷங்கள் மட்டுமின்றி கேதுவினால் ஏற்படும் தோஷங்களையும் நொடியில் போக்கிடும் சென்னிமலை கோவிலாகும்.

தமிழகத்தின் திலகமென திகழும் சென்னிமலை அழகனின் திருக்கோவில் 3000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பிரார்த்தனை தலமாகும்.”

– ‘பரிகாரத் தலங்களும் அவற்றின் சூட்சுமங்களும்’ தொடரில் திரு.ஏ.எம்.ராஜகோபாலன் அவர்கள் @ குமுதம்

Maha Periyava

5) பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து…

அஹோபில மடம் ஜீயர் ஒரு முறை காஞ்சி மஹா ஸ்வாமிகள் தங்கிய ஊரில் சாதுர்மாஸ்ய விரதம் இருந்தார். ஸ்வாமிகளை பார்க்க அவருக்கு ரொம்ப ஆசை. ஆனால் சம்பிரதாயம் இடம் கொடுக்கவில்லை. மனம் வருந்தினார். ஸ்வாமிகள் ஞான திருஷ்டியினால் இதை தெரிந்துகொண்டு, மறுநாள், தன் சிஷ்யர்களை கூப்பிட்டு ஜீயர் தங்கியிருக்கும் மடம் வழியாக ஸ்நானத்திற்கு செல்ல ஏற்பாடு செய்தார். ஜீயர் ஸ்வாமிகள் இதை அறிந்து, சந்தோஷத்துடன் வெளியே கிளம்பிப் போக, தற்செயலாக நிகழ்ந்தது போல, இருவரும் சந்தித்துக் கொண்டனர்.  (ஒரு அத்வைத சந்நியாசியை, தேடிச் சென்று சந்திப்பது என்பது வைணவத் துறவிகளின் சம்பிரதாயம் அல்ல!)

– ஆர்.ஜவந்தினாதன், சென்னை-83 @ ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’

NEEDHIVENBA

6) மெய்யும் பொய்யும்

மந்திரமும் தேவும் மருந்தும் குருவருளும்
தந்திரமும் ஞானம் தரும்முறையும் – யந்திரமும்
மெய்யெனில் மெய்யாய் விளங்குமே; மேதினியில்
பொய்யெனில் பொய்யாகிப் போம். – நீதிவெண்பா

பொருள் : இவ்வுலகில் மந்திரம், தெய்வம், மருந்து, குருவின் அருள், தந்திரம், ஞானத்தை பெறும் முறை, மந்திரத்துக்கு துணையான யந்திரம் ஆகியவற்றை மெய்யென்று நம்பி முறையாக பயன்படுத்தினால் அவை மெய்யாகி நல்ல பலனை கொடுக்கும். ஆனால் நம்பாமல் பொய்யென்று விலக்கினால் அவை பொய்த்துப் போய் எந்த பலனையும் கொடா.

7) நேர்மையின் நிழல்

“இன்றைய அரசியல்வாதிகளைக் காணும்போது அது நம்பும்படியாக இல்லை. ஆனால் சமீபத்திய அனுபவம் ஒன்று அந்த எண்ணத்தை  மாற்றிக்கொள்ள வைத்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர், ஏற்பட்ட விலையேற்ற அறிவிப்புக்கு பிறகு பதுக்கலால் பெட்ரோலுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னையில் கள்ள மார்கெட்டில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.180/- வரை வசூலிக்கப்பட்ட நேரம் அது. அந்த சமயத்தில் நான் அவசரமாக சென்னையில் இருந்து இருந்து திருச்சிக்கு காரில் பயணித்தேன். நெடுஞ்சாலையில் பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இல்லை என்று கை விரித்தார்கள். ஆனால் கேன்களில் பெட்ரோல் வெளியே போவதை பல இடங்களில் காண முடிந்தது. கடைசியாக ஒரு பெட்ரோல் பங்க்கில் கை விரிக்காமல் பெட்ரோல் நிரப்பி உரிய விலையை வசூலித்தார்கள். ‘இந்த தருணத்தை பயன்படுத்தி மற்றவர்கள் கொள்ளை லாபம் பார்க்கும்போது, நீங்கள் மட்டும் எப்படி?” என்று ஆச்சரியத்துடன் அதன் ஊழியர்களிடம் கேட்டேன்.

Kakkan

“எல்லாம் எங்க முதலாளியோட நேர்மை தான் காரணம்; அவுங்க தாத்தாவிடமிருந்து கத்துகிட்டார்” என்றவரிடம் முதலாளி பற்றி விசாரித்தேன். “காலம் சென்ற, முன்னாள் அமைச்சர் கக்கனின் பேரன் தான் என்னுடைய முதலாளி”; என்றார். 1957 முதல் 1967 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து பொதுப் பணித்துறை மற்றும் போலீஸ் துறை அமைச்சராக செயல்பட்ட கக்கன் அவர்கள் நேர்மையின் அடையாளம். தன் பதவிகளை பயன்படுத்தி சொத்து சேர்க்காத அவர், தன் நேர்மையையும் நாணயத்தையும் தன் சந்ததிகளிடம் விட்டுச் சென்றிருப்பதை நினைத்து, ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்.”

– எஸ்.ராமன், சென்னை – 17 @ ஆனந்த விகடன்

Nadigavel8) அப்பன் பேர் தெரியாத பையன்!

நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு உலகமெங்கும் மனைவியர், ஊரெங்கும் பிள்ளைகள் என்று மிகைப்படுத்திச் சொல்வார்கள்.

அதையொட்டிய நிகழ்ச்சி ஒன்று:

ராதா காரில் போய்க்கொண்டிருக்க ஒரு சிறுவன் சட்டென குறுக்கே வர திடீர் பிரேக் போட்டுக் காரை நிறுத்திய டிரைவர், “பாத்து வரக்கூடாது..? அப்பன் பேர் தெரியாத பையன்..” என திட்ட, ராதா சொன்னாராம் – “பாத்து திட்டுப்பா.. என் மகனா இருக்கப் போறான்…!”

Classic Dancer9) படித்ததில் பிடித்தது

பெண்கள் தான் காதலை முதலில் சொல்கிறார்கள். கண்களை படிக்கும் திறன் ஆண்களுக்கு இருப்பதில்லை! vignasuresh @ twitter.com

=====================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா??
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

[END]

10 thoughts on “‘மெய்யெனில் மெய், பொய்யெனில் பொய்’ – கண்டதும் கேட்டதும் (1)

 1. வணக்கம்…….நம் தளத்தில் புதுவரவான கண்டதும் கேட்டதும் பகுதிக்கு எங்களின் வாழ்த்துக்கள் மற்றும் வரவேற்புகள்……..

 2. நமது தளத்தில் இந்த பதிவு ..சூப்பரோ சூப்பர் என்று தான் சொல்ல வேண்டும். பல்சுவை தகவல்கள் அடங்கிய பதிவு..இது போன்ற பதிவுகளை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம்.

  நன்றி அண்ணா..

 3. சுந்தர்ஜி
  WORDERFUL
  ஒரே தளத்தின் கீழ் பல புத்தகங்கள்.

 4. வித்தியாசமான, சுவையான வரவேற்கத்தக்க பதிவு.

  திங்கள் காலை ஸ்பெஷல் போல week end ஸ்பெஷலாக தொடரலாம்.

 5. வணக்கம் சுந்தர்.அருமையான பல் சுவை பதிவு .தயவு செய்து தொடருங்கள்.நன்றாக இருந்தது படிக்க. விவசாயத்தின் அவல நிலையை இதைவிட சுருக்கமாக கூறமுடியாது. மகாபெரியவாவின் படம் அழகு.குருவே சரணம்.நன்றி அழகாக தொகுக்கப்பட்ட பதிவுக்கு.

 6. Sir, the article was so nice… கோடையில் பருகிய இளநீர் போல…
  இபோ தான் முதன் முதல உங்க வெப் சைட் பார்த்தேன்.
  உண்மை யில் மிகவும் மகிழ்ச்சி தருகிறது.. மிக்க நன்றி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *