Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > உயிர்கள் அனைத்திலும் உறைபவன் அவனன்றோ… Rightmantra Prayer Club

உயிர்கள் அனைத்திலும் உறைபவன் அவனன்றோ… Rightmantra Prayer Club

print
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் திருச்சிராப்பள்ளி நகரத்தில் பாயும் காவிரியின் வடதிசையாய் விளங்குவது திருமங்கலம் என்னும் கிராமம். லால்குடி ரயில் நிலையத்திலிருந்து, பூவாலுர் வழியே வடமேற்க்கில், சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த திருத்தலம். இவ்வூரில் உலகநாயகி உடனமர் சாம வேதீஸ்வர பெருமானின் சிறப்பு மிகு ஆலயம் அமைந்துள்ளது. இறைவனை வேதத்தின் பெயரால் அழைப்பதே இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். பரசுராமர் சிவபெருமானை இங்குதான் வழிப்பட்டு பரசு என்ற ஆயுதத்தைப் பெற்றார்.

ஆனாய நாயனார் இத்தலத்தில் ஆயர் குலத்தில் அவதரித்தார். ஏராளமான பசு மந்தைகள் இவரிடம் இருந்தன. ஆ என்றால் பசு என்று பொருள்படும். பசுக்களை மேய்க்கும் தொழிலை கொண்ட இவர், ஆனாயர் என்ற பெயர் பெற்றார். இவர் சிவனைத் தனது முழுமுதற்கடவுளாக கொண்டிருந்தார். இறைவனை வணங்குவதற்கு பல வழிகள் உண்டு. இங்கு தமது குழல் இசையால் இறைவனை கவர்ந்த ஆனாய நாயனார் பற்றி அறிவோம். தினம் ஈசனை வணங்கி திருநீறு இட்டு, தன்னுடைய குலத் தொழிலான மாடுகளை மேய்க்க செல்வார். அப்போது வகை வகையாக மாடுகளை பிரித்து மேய விட்டுவிட்டு புல்லாங்குழல் வாசிப்பார். இசையில் ஓம் நமச்சிவாய எனும் திருநாமம் கமலும்.

Enaaya Nayanar

பசுக்கூட்டத்துடன் சென்று அவை மேயும் பொழுது இவர் குழல் ஊதுவார். ஒருநாள் திருநீறு அணிந்துகொண்டு பசுக்களுடன் முல்லை நிலத்திற்கு சென்றார். அப்பொழுது கார் காலம். மலர்கள் பூத்து நறுமணம் வீசுகின்றது. அங்கு மாலை தொடுத்தது போன்ற பூங்கொத்துக்களும், புரிசடை போல் தொங்கும் கனிகளும் நிறைந்த ஒரு கொன்றையினைக் கண்டார். அது மனத்துள்ளே எப்பொழுதும் கண்டுகொண்டிருந்த கொன்றை மாலை சூடிய சிவபெருமானைப் போல அவருக்குத் தோன்றிற்று. எடுக்கின்றார் குழலை, ஐந்தெழுத்து மந்திரத்தை நமச்சிவாய என்று குழலோசையில் தருகின்றார். அந்த தெய்வீக இசை அந்த பிரதேசம் எங்கும் எதிரொலிக்கின்றது.

குழலோசையைக் கேட்டு பசுக்கள் அருகில் வந்து நிற்கின்றன. இளம் கன்றுகள் தாய்மடியில் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அப்படியே நிற்கின்றன. ஆங்கே காணப்பட்ட எருதுகளும், மான் போன்ற விலங்குகளும் அப்படியே அசையாமல் நிற்கின்றன. ஆடுகின்ற மயில்கள் அப்படியே ஆடாமல் நிற்கின்றன. காற்று நிற்க்கின்றது. மலர்கள் அசையாமல் நிற்கின்றன. நமச்சிவாய நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் மண்ணிலும் விண்ணிலும் ஒலிக்கின்றது. பூந்தேனும் அமுதமும் கலந்து வடிப்பது போல எல்லா உயிர்களுக்குள்ளும் அவரது இசை புகுந்து உருக்கிற்று. ஆனாயர் இசைத்த குழலிசையானது, வையத்தை மட்டுமல்லாமல் வானத்தையும் தன் வசமாக்கிற்று.

ரிஷிகள் முதலான தேவர்களே அங்கே வந்துவிட்டனர் எனும்போது முத்தமிழின் முதல்வன், இசையே வடிவானவன் வராமல் இருப்பாரா. சிவபெருமான் ரிஷப வாகனத்தின்மேல் உமையுடன் எழுந்தருளி ஆனாய நாயனருக்கு காட்சி தந்தனர். “பக்தா… உன் குழல் இசையை கேட்டு இன்புற்றேன். என்றும் இந்த இசையின்பத்தை எனக்குத் தரவேண்டும்” என்று இறைவன் கேட்க, உடனே குழலை வாசித்துக்கொண்டே தேவர்கள் பூமாரி பொழிய இறைவனோடு இரண்டறக் கலந்தார் ஆனாய நாயனார்.

ஆனாய நாயனார் வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மைகள் இரண்டு.

ஒன்று : இறைவன் இசையே வடிவானவன், அவனை இசையின் மூலம் சுலபமாக கவர்ந்திழுக்க முடியும்.

இரண்டு : உயிர்களை அனைத்திலும் இறைவனை காண்பது இறைவனின் மெய்யடியார்களின் தனிப்பெருங்குணம்.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் திருப்பள்ளியெழுச்சியும் பள்ளியறைப் பாடலையும் பாடும் திரு.ஏழுமலை அவர்கள்.

திரு.ஏழுமலை அவர்களை பற்றியும் அவர் ஆற்றி வரும் அருந்தொண்டைப் பற்றியும் நம் தளத்தில் ஏற்கனவே விரிவான பதிவு வெளிவந்துள்ளது. (‘என்னை தாலாட்ட வருவாரோ?’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்!)

இதனிடையே திரு.ஏழுமலை அவர்களிடம் சென்ற வாரம் பேசும்போது, வேதபுரீஸ்வரருக்கு தினமும் நடக்கும் பள்ளியறை பூஜையை பார்க்க வருகை பார்க்க வருகை தரவேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.

Thiru ezhumalai

மார்கழி  மாதத்தின் புண்ணியத்தில் இறைவன் எழும் பள்ளியெழுச்சியை பார்த்தாகிவிட்டது. ஏழுமலை அவர்களின் புண்ணியத்தில் இறைவன் துயில் கொள்ளும் பள்ளியறை பூஜையையும் பார்த்துவிடுவோமே என்று ஒரு நாள் இரவு 8.30 அளவில் திருவேற்காடு சென்றிருந்தோம்.

இறைவனின் பள்ளியறை பூஜையை அருகே இருந்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

பூஜையின் போது இறைவனின் திருவடிக்கு தூப தீபங்கள் காட்டி பல்லக்கில் எழுந்தருளச் செய்து அதற்கு சாமரம் வீசியபடி அதை சுமந்து பிரகாரத்தை வலம் வந்து பள்ளியறை முன்பாக வைப்பர். பின்னர் அம்பாளின் சன்னதியில் இருந்து ஒரு பூவும் ஒரு திருவிளக்கும் கொண்டுவரப்பட்டு (இது தான் அம்பாள்) சுவாமிக்கு அருகே வைக்கப்படும்.

பஞ்சமுக தீபாராதனை  காட்டப்பட்டு, சாம்பிராணி உள்ளிட்ட தூப தீபங்கள் போடப்பட்டு, திருவடியை பள்ளியறையில் அலங்கரிக்கப்பட்ட ஒரு மேடையில் வைப்பார்கள்.

பின்னர் இறைவனுக்கும் இறைவிக்கும் பால் பழங்கள் படைக்கப்பட்டு நிவேதனம்  செய்யப்படும். கூடவே மிளகு  சாதமும் நைவேத்தியம் செய்வார்கள்.

பின்னர் நால்வர் பாடிய தேவார பதிகங்கள் பாடிவிட்டு இறுதியில் ‘திருப்பொன்ஊசல்’ பாடுவார்கள்.

Palliyarai pooja

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்
போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

என்று பாடலிசைக்க, விசிறி ஆட்டம் கண்டு, பின் ஊஞ்சல் ஆடி அன்னையும் ஐயனும் அருள்பாலித்து நடையை சாற்றுவர்!

பின்னர் காலபைரவைரிடம் பூஜை நடைபெறும். கோவில் சாவியை அவரிடம் ஒப்படைப்பதாக ஐதீகம்.

இது முடிந்து திருக்கோவில் கதவு சாத்தப்பட்ட பிறகு பக்தர்களுக்கு நைவேத்திய பிரசாதம் தரப்பட்டது. பாலும், மிளகு சாதமும், புளிசாதமும் தரப்பட்டது.

இவற்றில் திரு.ஏழுமலை தன் சார்பாக தினமும் ஏதேனும் ஒரு வகை (1 கிலோ)  சித்ராண்ணம் செய்து (தயிர் சாதம், புளிசாதம், எலுமிச்சை சாதம் இப்படி) கொண்டு  வருகிறார். கோவிலின் மடப்பள்ளி சார்பாக தயார் செய்யப்படும் மிளகு சாதத்துடன் கூடவே இவர் கொண்டு வரும் சாதமும் படைக்கப்படுகிறது. நீண்ட காலமாக இந்த தொண்டை திரு.ஏழுமலை அவர்கள் செய்து வருகிறார் என்று  தெரிந்தது. ஒரு பக்கம் இறைவனைப் பாடுவது. மறுபக்கம் அவனுக்கு தினமும் சொந்த செலவில் திருவமுதும் படைப்பது என மிகப் பெரிய தொண்டை செய்து வருகிறார். எத்தனை பெரிய சேவை.

இதைக் கூட திரு.ஏழுமலை அவர்கள் நம்மிடம்  சொல்லவில்லை.அவர் வரும்போது கையில் ஒரு தூக்கை கொண்டு  வந்தார். அதைப் பார்த்துவிட்டு நாம் என்ன ஏது என்று விசாரித்தபோது கிடைத்த தகவல் இது.

ஒரு நாள் நம் தளம் சார்பாக இதை செய்யவேண்டும் என்றும் செலவை நாம் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருக்கிறோம்.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். திரு. ஏழுமலைக்கு நம் மனமார்ந்த நன்றி.

==================================================================

வாசகர்கள் & நண்பர்கள் கவனத்திற்கு :

1) என்னுடைய அலைபேசி பழுதடைந்துள்ளது. எனவே பல தொடர்புகள் விடுபட்டுள்ளன. புதிய மொபைலை வாங்கிய பிறகு தான் பெயர்களை சேமிக்க முடியும். எனவே பேசுவது யார் என்று கேட்டால் தவறாக  நினைக்க வேண்டாம். அலைபேசியில் தொடர்புகொள்ள இயலவில்லை எனில் எனக்கு E-mail & SMS இரண்டுமே அனுப்பவும். என்னிடம் ஏதாவது அவசரமாக பேசவேண்டும் தெரிவிக்கவேண்டும் என்றால் உங்கள் அலைபேசி எண்ணை குறிப்பிட்டு SMS & E-MAIL இரண்டும் அனுப்பவும். ஏதாவது ஒன்றை பார்த்துவிடுவேன். நானே உங்களை தொடர்புகொள்வேன்.

Sundar | www.rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : simplesundar@gmail.com

2) பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பி இங்கு பிரசுரமாகாதவர்கள் மீண்டும் தங்கள் மின்னஞ்சலை நமக்கு அனுப்பவும். நமக்கு வரும் மின்னஞ்சல்களை அதன் சப்ஜெக்ட்டை பொறுத்து ARCHIVE செய்துவிடுவோம். சில நேரங்களில் அவ்வாறு செய்ய மறந்துவிடும் போது தேடியெடுப்பது சிரமமாக உள்ளது. எனவே அடிக்கடி நினைவூட்டல் மின்னஞ்சல்களை அனுப்பவும்.

3) நமது பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை அனுப்பி இரண்டு கோரிக்கைகள் மகத்தான முறையில் நிறைவேறியிருக்கின்றன. மேலும் ‘வேல்மாறல்’ அதன் அற்புதத்தை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. இது தொடர்பான பதிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும்.

==================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

Need for Santhana Prapthi!

Dear Sir and Rightmantra family members,

I am working in a private company as an Admin Manager. I am married and my husband is also working in IT. I live with family in Chennai.

We have been married for four years now. The only thing missing from our happy married life is a child. I have tried many medical treatments. But everything failed. The doctors say I don’t have a problem as such neither does my husband. But we are not sure why it is not happening for us. I am not interested in getting conceived by unnatural measures. I am very sure that Maha Periyava is watching me from somewhere blessing and I am sure he will make this happen for me.

I humbly request you and Rightmantra Prayer Club members to pray for me.

– Don’t want to disclose the name

==================================================================

Want health and harmony in family!

Dear Sir,

I have been reading your website for the past six months. Your each and every word and sentence is very meaningful and it is useful for me. Prayer Club, Monday Morning special, Temple Visit really all are excellent.

My parents are living in a village in Vellore district.

My mother had back surgery in 2010 and also she has diabetic, now she has fibroids in the uterus, surgery has to be done

My sister has to get a good life and settle down soon. My dad did many Pariharam and Poojas for her.

I did not get job till now. Need a good and peaceful job.

my dad has some problems in property with his brothers.

Pleas pray for our entire family.

My Mother’s name is : Manimekalai Murugan   Father’s name is : Murugan

– Your ardent reader

==================================================================

பொது பிரார்த்தனை

ஓதுவார்களின் பரிதாப நிலை மாறி அவர்கள் வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும்!

திருத்தலங்களைப் பாடல் பெற்ற தலங்கள் என்று கூறுகிறோம். ஆனால், அப் பாடலாகிய தமிழிசைக்கு உரிய பண்ணிசை பாட ஓதுவாமூர்த்திகள் இல்லை. அவர்களுக்கு தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையினரால் எவ்விதப் பலன்களும் கிடைக்கவில்லை.

திருவிழாக் காலங்களில் திருக்கோயில்களில் தமிழ்ப் பண்ணிசை பாட வாய்ப்பளிக்க வேண்டும். அறநிலையத்துறையில் உள்ள சில அதிகாரிகளின் தவறான செயல்பாடுகளால் திருமுறைகளின் அருமை, பெருமை அறியாமல் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஓதுவாமூர்த்திகளே கோயில்களை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.

Panniru Thirumurai _

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் போன்ற அதிக வருவாய் உள்ள கோயில்களில்கூட ஓதுவாமூர்த்திகள் இல்லாத நிலை தொடர்கிறது.

சென்னை, கடலூர், சேலம், விழுப்புரம் உள்பட 16 இடங்களில் உள்ள அரசு இசைப் பள்ளிகளில் தேவார இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, அரசு பல லட்சம் செலவு செய்கிறது. ஆனால், மாணவர்கள் தேவார இசைப் பயிற்சிக்கு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

நிலைமை இப்படியிருக்க, ஒவ்வொரு கோயில்களுக்கும் தகுந்தவாறு தமிழ்ப் பண்ணிசை ஓதுவார்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்கள் ஓய்வுபெற்றால் மாதம் ரூ.750 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அதுவும், ஒரே கோயிலில் 20 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே இந்த ஓய்வூதியம். அவர்களில், பலருக்கும் ஓய்வூதியம் கிடைப்பதில்லை.

அனைவரும் மண்ணில் நன்கு வாழ்வதற்காக தமிழ்ப் பண்ணிசை பாடியவர்களின் நிலை வேதனையாக உள்ளது. இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் ஓதுவாமூர்த்திகளே இல்லாத நிலை ஏற்படும். இது தமிழுக்கு நேரும் இழுக்கல்லவா? இந்நிலை வருவதற்கு முன் அரசு கண் விழிக்க வேண்டும்.

ஓதுவாமூர்த்திகள் இல்லாத திருக்கோயில்களில் ஓதுவார்களைக் கட்டாயமாக நியமனம் செய்ய வேண்டும். காலநிலை கருதி போதிய ஊதியம் வழங்க வேண்டும்.

தமிழ், தமிழ் என கூக்குரலிட்டால் போதாது. கோயில்களில் தமிழில் வழிபாடு நிகழ்த்த ஓதுவாமூர்த்திகள் வேண்டாமா? இதற்கு உரிய நடவடிக்கை இல்லாவிட்டால், பிறகு சம்ஸ்கிருதம் தானே கோலோச்சும். இதை நாம் உணர வேண்டாமா?

Panniru Thirumurai

தமிழுக்காகத் தொடர்ந்து வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஓதுவாமூர்த்திகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்கள் ஓய்வுபெற்ற பின் ரூ.3 ஆயிரமாவது ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

இதுவே நமது பொதுப் பிரார்த்தனை.

(ஒதுவா மூர்த்திகளின் நிலை தொடர்பாக நமது குமுறல்களை ஏற்கனவே ஒரு பதிவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. Check : இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!)

==================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநம் வாசகியர் இருவருக்கும் சந்தான பிராப்தியும், சகல சௌபாக்கியங்களுடன் கூடிய குடும்ப ஒற்றுமையும் ஸித்திக்க எல்லாம் வல்ல நம் குருவையும் உமையொரு பாகனாம் இறைவனையும் வேண்டுவோம். மேலும் திருகோவில்களில் தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளையும் பிரபந்தங்களையும் பாடும் ஓதுவார்களின் குறைகள் களையப்பட்டு அவர்கள் வாழ்வில் சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஏற்றம் பெறவேண்டும். மேலும் மேலும் பலர் இந்த புனிதப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். இதுவே பொது பிரார்த்தனை. இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.ஏழுமலை, இறைவனின் அருளால் எல்லா வித வளங்களும் நலன்களும் பெற்று தன் அருந்தொண்டை தொடர இறைவனை வேண்டுவோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜனவரி 4, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=============================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : போரூர் இராமநாதீஸ்வரர் கோவிலில் தவில் வித்வானாக இருக்கும் திரு.தண்டபாணி அவர்கள்.

8 thoughts on “உயிர்கள் அனைத்திலும் உறைபவன் அவனன்றோ… Rightmantra Prayer Club

  1. ஆஹா… ஆஹா அற்புதமான திருத்தளம்
    வாசிக்க வாசிக்க மனம் லேசாகிறது
    சிவபெருமானின் அருளே அருள்..

  2. ஓதுவார் மூர்த்திகளைப் பற்றி மிகச் சிறப்பாக கூறியுள்ளீர்கள், நீங்கள் கூறியுள்ளது முழுவதும் உண்மையே, ஈரோடு நகரில் உள்ள இரண்டு கோயில்களீலும் ஓதுவார்கள் இல்லை. அவர்களைச் சரியாக நடத்தாதக் காரணத்தால் வெளியேறி விடுகிறார்கள் என்று அறிந்தேன். இசைப்பள்ளிகளில் தேவாரம் படித்த மாணவர்களை ஓதுவார்களாக நியமித்தால், இசைப்பள்ளியில் தேவாரம் கற்றுக்கொள்ளவும் மாணவர்கள் அதிகம் வருவார்கள். அரசு இயந்திரம் ஆவண செய்யுமா எனத் தெரியவில்லை. நமது பிரார்த்தனையை மகாப்பெரியவா அவர்களின் திருவடியில் செலுத்துவோம். குழந்தைச் செல்வத்திற்காக ஏங்கும் சகோதரிகளின் மனவேதனை தீரவேண்டும். எல்லாம்வல்ல எம்பெருமான் அருள் புரியவேண்டும்.

  3. Dear Mr.Sundar,
    Wishing you and all the readers a very happy healthy n prosperous New Year 2015.
    Not a day passes without checking your site!
    Please continue your seva.
    May God guide you n bless u in all your endeavours.
    With prayers n wishes,

    Ranjini
    Chennai

  4. குழந்தை பாக்கியம் கிட்ட ;ஒரு அமாவாசை நன்னாளில் அதிகாலை வேளையில் சீர்காழி அருகில் உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் சென்று அங்கு உள்ள அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களில் நீராடி அதன் பின்பு மூலவர் சுவேதாரண்யேசுவரர் ,அம்பாள் பிரமவித்யாம்பிகை மற்றும் பிள்ளை இடுக்கி அம்மன் வழிபாடு[அபிசேகம் /அர்ச்சனை தம்பதியர் பெயரில் செய்வது உசிதம் ] செய்து ,அந்தந்த சன்னதிகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடவும் .பின்பு அங்கிருந்து அருகில் உள்ள மயிலாடுதுறை வந்தடைந்து அதன் அருகில் உள்ள திருவாவடுதுறை ஒப்பிலாமுலை அம்மை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபாடு செய்து ,அங்கு தனி சன்னதியில் உள்ள புத்திர தியாகேசரை அர்ச்சித்து வழிபடவும் .அருகில்தான் திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது .அங்கு சென்று திருவாவடுதுறை ஆதீனம் குருமஹா சந்நிதானத்திடம் ஆசி வாங்கி வருவது கூடுதல் சிறப்பு.பின்பு திருவாவடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் சென்று ,அங்கு வெளி பிரகாரத்தில் தனி சன்னதியில் உள்ள புத்திர காமேஸ்வரர் அபிசேகம் ,அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபடவும்[இங்கு பங்குனி மாதம் அமாவாசை அன்று தீர்த்தவாரி நடை பெறும்.அப்போது அங்கு உள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி ,திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர்,அம்பாள் மற்றும் புத்திர காமேஸ்வரரை வழிபட்டால் “மலடியும் குழந்தை பெறுவாள் “என்கிறது தலபுராணம் ]..எனவே ,திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாதம் அமாவாசையில் வழிபடுதல் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் பெற்று தரும்]….பின்பு அன்று மாலையில் திருக்கருகாவூர் [சுவாமிமலை அருகில்] மாதவிவனேச்வர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் திருக்கோயில் சென்று நெய்யால் படி மெழுகி,அர்ச்சித்து ,அங்கு கர்ப்பரட்சாம்பிகை அம்மன் சன்னதியில் தரப்படும் நெய்யை வாங்கி வந்து தம்பதியர் இருவரும் தினமும் இரவில் கண்டிப்பாக 48 நாட்கள் உண்டு வரவும் .பெண்கள் மாதவிலக்கு நாட்களில் உண்ண வேண்டாம்..கண்டிப்பாக 48 நாட்கள் உண்டு வரவும் .ஒருவருக்கு குழந்தை பாக்கியம் தடை பட ,அவரது முன் ஜென்ம வினைகளே காரணம் .எனவே மேற்கூறிய திருக்கோயில்கள் வழிபாடு செய்யும் முன் ,ஒருமுறை திருவிடைமருதூர் பிரகத்சுந்தரகுஜாம்பாள்[பெருநல மாமுலை அம்மை] மகாலிங்க சுவாமி திருக்கோயில் சென்று ,பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌ பரிகாரம் செய்து கொள்ளுங்கள் [இங்கு பிரம்மஹத்தி தோஷம் பரிகாரம் தினமும் காலை 8 மணி , 9 மணி ,மற்றும் காலை 10 மணிக்கு மட்டுமே நடைபெறுகிறது]….பின்வரும் பதிகம்களை தொடர்ந்து எப்போதும் படித்து வாருங்கள் …ஈசன் அருளால் விரைவில் கரு தங்கி ,தாய்மை உரு அடைவீர்கள் என்பது உறுதி .

    திருச்சிற்றம்பலம்

    கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
    பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
    பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
    வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.

    பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
    வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
    வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
    தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.

    மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதிஇரவி
    எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
    பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
    விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

    விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
    மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
    தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
    கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.

    வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
    மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
    மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
    ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.

    தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
    ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
    பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
    வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

    சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
    அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
    மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
    முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

    பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
    உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
    கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
    விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

    கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
    ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
    வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்(று)
    உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.

    போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
    பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
    வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்டானென்
    றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.

    தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
    விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
    பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
    மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.[சம்பந்தர்]

    ”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””” “திருவிளையாடல் புராணம்” நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற பதினொன்றாவது படலம்,”உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்”அப்படலத்தை தினமும் காலை ,மாலை பாராயணம் செய்து வரவும் .மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் இது .””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””’
    பாம்பன் சுவாமிகளின் “வேற்குழவி வேட்கை”தினமும் இரு வேளையும் படித்து வரவும் .

    1. பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிட நன்
    மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
    கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
    நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே

    2. சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன் குழைகள்
    மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
    ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
    கூவை வெறுத்த கண்க ளிச்சை கொள்ளு கின்றனவே

    3. பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
    சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
    தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
    கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே

    4. பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
    கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
    என்னார் வந்தீர நல்க வாராயோ
    உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே

    5. எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
    கண்யே செங்குழவீ யென்றன் கண்க ணாடழகே
    தண்ணே றும்வதன முத்தந் தாரா யோபிறிது
    நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ

    6. முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
    வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
    சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
    வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ

    7. ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
    வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
    மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்து கொள்ள
    மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ

    8. பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
    இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
    அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
    துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ

    9. கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
    கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
    பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
    தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே

    10.மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
    காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
    ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
    வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ

    [இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்தி பிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தி யாம்; சந்ததி விருத்தியாம்.
    – ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்]…….

  5. ஆனாய நாயனார் திருவடிகள் போற்றி….திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில் ஏழுமலை அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி….

  6. இனிய காலை வணக்கம்

    இறைவனை தனது குழல் இசை மூலம் மயங்கவைத்த ஆனாய நாயனார் பற்றி தெரிந்து கொண்டேன். இசைக்கு மயங்காதவர் இவ்வுலகில் எவரும் உண்டோ? தனது இசையின் மூலம் இறைவனிடம் இரண்டறக் கலந்து விட்ட ஆனாய நாயனார் எவ்வளவு பெரிய பாக்கியம் செய்து இருக்கிறார். படிக்கும் பொழுது மெய் சிலிர்கிறது.

    இந்த வார பிராத்தனைக்கு தலைமை ஏற்கும் திரு ஏ ழுமலை அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்/ இறைவனுக்கு தாலாட்டு பாடும் திரு ஏ ழுமலைக்காக சரியான மிகவும் பொருத்தமான கதையை பதிவு செய்து இருக்கிறீர்கள்/

    தாங்கள் குறிப்பிட்ட சீரார் பவளங்கால் பாடல் மாணிக்க வாசகர் உத்தர கோச மங்கையில் அருளிய 16 வது திருவாசக பதிகம். அடிக்கடி இந்த பாடலை நான் பாடுவதுண்டு.

    இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம். ஓதுவாரின் நிலை முன்னேற வேண்டும்.

    பள்ளி அறை பூஜையை பற்றி மிகவும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். நாங்கள் வடபழனி முருகன் கோவிலில் பள்ளி அறை பூஜையை பார்த்திருக்கிறோம். மிகவும் அருமையாக இருக்கும். நான் இந்த பதிவை படிக்கும் பொழுது என் மனம் வடபழனி முருகனிடத்தில் சென்று விட்டது. முடிந்தால் தாங்கள் வடபழனி முருகன் கோவில் பள்ளியறை பூஜை யை சென்று பார்க்கவும்.

    எல்லோரும் மகா பெரியவா அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும். .

    லோகா சமஸ்தா சுகினோ பவந்து

    நன்றி
    உமா வெங்கட்

  7. இதற்கு முன்பு பிரார்த்தனை சமர்பித்திருந்த இருவரின் பிரார்த்தனை நிறைவேறியது மிக்க மகிழ்ச்சி.

    விரைவில் விபரங்களை பகிருங்கள்.

    ஒவ்வொரு பிரார்த்தனை கிளபுக்கு தலைமை ஏற்பவர்களை ரத்தினங்களை தேடித் தேடி எடுப்பது போல தேடி எடுக்கிறீர்கள்.

    இந்த வாரம் யார் தலைமை ஏற்கப்போகிறார்கள் என்பதே மிக பெரிய சஸ்பென்சாக இருக்கிறது.

    இந்த வாரம் தலைமை ஏற்கும் ஏழுமலை அவர்கள் செய்து வருவது நிச்சயம் பெரிய தொண்டு தான்.

    கோவில்களில் தேவாரம் ஓதும்போது, இறைவன் அதை மெய்மறந்து கேட்ப்பானாம். அது சமயம் யார் என்ன கேட்டாலும் கிடைத்துவிடும் என்று என் சித்தி ஒரு முறை கூறியிருக்கிறார்.

    பிரார்த்தனை சமர்பித்திருக்கும் சகோதரிகளின் கோரிக்கைகள் யாவும் நிறைவேறி அவர்கள் மனையில் மங்களம் பொங்கட்டும். இருவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    மகா பெரியவா சரணம்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  8. பிரார்த்தனை சமர்பித்திருக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தாங்கள் தயவு செய்து “வேல் மாறல்” மஹா மந்திரத்தை பாராயணம் செய்ய ஆரம்பிக்குமாறு கேட்டு கொள்கிறேன். உங்களிடம் “வேல் மாறல்” புத்தகம் இல்லை என்றால், உடனே சுந்தரை தொடர்பு கொள்ளுங்கள், அல்லது கீழே உள்ள முகவரிக்கு தொடர்பு கொண்டு பெற்று கொள்ளுங்கள்.

    செயலாளர், வேல்மாறல் மன்றம், பொங்கி மஹா சரஸ், என் : 8/21, பொங்கி மடாலயம் தெரு, நங்கநல்லூர், சென்னை – 600061. தொலைபேசி : 044-43156781 என்கிற முகவரிக்கு ரூ.100/- மணியார்டர் அனுப்பி தபாலில் யந்திரத்துடன் கூடிய ‘வேல்மாறல்’ நூலை பெற்றுக்கொள்ளலாம். (தபால் செலவுடன் சேர்த்து).

    முருகனின் அருளால், உங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும் என்பது திண்ணம்.

    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *