Home > 2016 > April

ட்ரீ பேங்க் முல்லைவனம் – பசுமைக்கு பாடுபடும் ஒரு ஒன்மேன் ஆர்மி!

அக்னி நட்சத்திரம் துவங்க இன்னும் சில தினங்களே இருக்கும் சூழ்நிலையில் இப்போதே அனல் தகிக்கிறது. "வெயில்... வெயில்..." என்று பரிதவித்து நிழலைத் தேடி ஓடும் மக்கள், ஒரு மரமாவது நம் பங்கிற்கு நட்டிருக்கிறோமா என்று சிந்திப்பதில்லை. இந்த சூழலில் தான் மரங்களின் முக்கியத்துவம் வெயிலில் வாடும் அனைவருக்கும் உறைக்க ஆரம்பித்திருக்கிறது. நாளை மே 1, பசுமைக் காவலர், 'மரங்களின் தந்தை' நண்பர் முல்லைவனம் அவர்களின் பிறந்த நாள். அதையொட்டி இன்று காலை விருகம்பாக்கத்தில்

Read More

வேங்கடசுப்பையர் கனவில் தோன்றிய கிழவனும் கிழவியும் ! MUST READ

ஏப்ரல் 28 - இன்று தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் நினைவு நாள்! நாம் ஏற்கனவே முந்தைய பதிவு ஒன்றில் கூறியிருக்கிறோம் மகா பெரியவாவின் 'தெய்வத்தின் குரல்' நூலையும் மேலும் சில திருமுறைகளையும் ஒன்றாக படிப்பது போல இருக்கிறது உ.வே.சா. அவர்களின் 'என் சரித்திரம்'. இதை ஏதோ வாழ்க்கை வரலாற்று நூல் என்று எண்ணிவிடவேண்டாம். வாழ்வியல் வழிகாட்டி இந்நூல். இந்த நூல் வீட்டில் இருப்பதே விசேஷம் தான். அந்தளவு மங்கள விஷயங்கள் அடங்கியிருக்கும்

Read More

வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)

இது வள்ளிமலையில் சென்ற ஆண்டு நாம் கலந்துகொண்ட கிரிவலம் மற்றும் படி உற்சவம் பற்றிய பதிவு. ஏற்கனவே இரண்டு அத்தியாயங்கள் இது தொடர்பாக அளித்திருக்கிறோம். அன்னை வள்ளி அவதரித்த இடம் வள்ளிமலை. மலையடிவாரத்திலும் மலை மீதும் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இது திருப்புகழ் பாடப்பெற்ற தலம். முருகன் பாதம் தோய்ந்த இடம். அந்த ஒரு சிறப்பே போதுமே இந்த மலையின் புனிதத்துவத்தை சொல்ல...! வள்ளிமலை ஒரு அற்புதமான பதி. பல மகத்துவங்களை

Read More

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

சிவபுண்ணியக் கதைகள் தொடர் நம் தளத்தில் மாபெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. தற்போது நமது பொறுப்பு அதிகரித்துவிட்டது போன்றதொரு உணர்வு. சாதாரணமாக நாம் ஒவ்வொரு பதிவையும் ஒரு தவம் போலக் கருதி தான் தயார் செய்வோம். அப்படியிருக்கையில் 'சிவபுண்ணியம்' பற்றிய தொடர் என்றால் நாம் எடுக்கும் சிரத்தையை கேட்கவேண்டுமா? அவனருளாலே அவன் தாள் வணங்கி! இந்த கதை சற்று வித்தியாசமானது. சிவபுண்ணியம் அதை செய்பவருக்குத் தான் சென்று சேரும் என்றில்லை. அவர்களை சார்ந்தவர்களுக்கும்

Read More

கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)

கர்மா Vs கடவுள் தொடரில் மிக மிக முக்கியமான அத்தியாயம் இது. இந்த கதை (நிகழ்வு) உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் இதில் உள்ள சூட்சுமம், பின் ஒளிந்திருக்கும் தாத்பரியம் தெரிந்திருக்காது என்று நம்புகிறோம்! எனவே கவனத்துடன் கருத்தூன்றி படிக்கவும்!! 'கர்மா என்பது மாற்றக்கூடியதே... ஜென்ம ஜென்மாக தொடரும் வல்வினையானாலும் அதை நிச்சயம் நமது அணுகுமுறையாலும், நடவடிக்கைகளாலும் மாற்றிக்கொள்ள முடியும்' என்பதை ஆணித்தரமாக உணர்த்துவதே இந்த தொடரின் நோக்கம். சரித்திரத்தில் விதி மாற்றி

Read More

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

சிவபுண்ணியமும் கர்மாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கர்மாவை கரைக்கவும் உடைக்கவும் வல்லது சிவபுண்ணியமே என்பதை சென்ற பதிவில் பார்த்தோம். முதலில் 'சிவபுண்ணியம்' என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள அது குறித்த முழுமையான புரிதல் தேவை. கடுகளவு சிவபுண்ணியம் கூட மலையளவு பாவத்தை உடைத்து தூள் தூளாக்கிவிடும். அதே நேரம், கடுகளவு சிவநிந்தனை கூட மலையளவு புண்ணியத்தை தகர்த்து நரகில் தள்ளிவிடும். எனவே இது குறித்த முழு புரிதல் வேண்டும். அப்போது தான் அளவற்ற

Read More

தோல்வியிலும் வென்ற ஒரு உண்மை வீரன் நமக்கு போதிக்கும் பாடம்!

லாரன்ஸ் லெமியக்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். மெடலே வாங்காத ஒலிம்பிக் ஹீரோக்களில் ஒருவர். ஆனாலும் அவரது செயற்கரிய செயலால் அவரது பெயர் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்டது. ஒலிம்பிக் போன்ற போட்டிகள் நடத்தப்படுவதன் அர்த்தத்தை பரிபூரணமாக்குபவர் இவரைப் போன்றவர்கள் தான். அப்படி என்ன செய்துவிட்டார் லாரன்ஸ் லெமியக்ஸ்? கனடாவை சேர்ந்த ஒரு படகோட்டி லாரன்ஸ் லெமியக்ஸ் (SAILOR). நினைவு தெரிந்த நாள் முதல் ஒலிம்பிக்கில் படகோட்டும் போட்டியில் கலந்து கொண்டு தனது நாட்டுக்காக தங்க மெடலைப்

Read More

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

நமது 'கர்மா Vs கடவுள்' தொடரில் மிக மிக முக்கியமான அத்தியாயம் இது. 'ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நமது விதிப்படி தான் அனைத்தும் நடக்கிறது. அதை மாற்ற முடியாது' என்கிற கருத்து பலரை ஆட்டிப்படைக்கிறது. ஆனால் 'அதை மாற்ற முடியும். இந்த மண்ணில் யாவரும் நல்ல வண்ணம் வாழலாம், எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை' என்று உணர்த்துவதே இந்த தொடரின் நோக்கம். ஆனால் இது மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் முயற்சியல்ல. உங்கள்

Read More

திருக்குறிப்புத் தொண்டரை ஆட்கொண்ட முக்தீஸ்வரர் தரிசனம் – Rightmantra Prayer Club

பக்தி இலக்கிய வரலாற்றில் மிகப் பெரும் புரட்சி செய்த நூல் சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் எனப்படும் 'பெரியபுராணம்'. காரணம், இறைவனின் அருளைப் பெற ஒருவர் தான் செய்யும் தொழிலை எல்லாம் விட்டுவிட்டு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்கிற கருத்தை உடைத்து நொறுக்கி - இல்லறத்தில் ஈடுபட்டபடியே ஒருவர் தொண்டு செய்து இறையருளை பெறமுடியும் - என்பதை உணர்த்திய வாழ்வியல் வழிகாட்டி பெரியபுராணம். இந்த 63 நாயன்மார்களும் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ஆம்

Read More

ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு!

இன்று சித்ரா பௌர்ணமி. மிகவும் விசேஷம். அதுவும் திருவண்ணாமலையில் மிக மிக விசேஷம். எனவே இன்றைய குருவார சிறப்பு பதிவில், அருணாச்சலம் மற்றும் கிரி பிரதட்சிணம் தொடர்பான சில ரமண மகிமைகளை பார்ப்போம். கூடவே, தியானம் பற்றியும் யாரை குருவாக ஏற்றுகொள்வது என்பது பற்றியும் பகவான் ramanar தெளிவுபடுத்தியிருக்கும் சில முத்துக்களையும் பார்ப்(ரசிப்)போம். இவை மேலோட்டமாக படித்துவிட்டு செல்லக்கூடிய விஷயங்கள் அல்ல. ரமணரைப் பற்றிய பதிவுகளை அவசியம் திரும்ப திரும்ப படிக்க வேண்டியவை. பார்ப்பதற்கு சாதரணமாக

Read More

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

'செந்தமிழ் அரசு' ஐயா திரு.கி.சிவக்குமார் அவர்களின் 'பெரிய புராணம்' விரிவுரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் கோடம்பாக்கம் சாமியார் மடத்தில் நடைபெற்று வருகிறது. அதில் சில வாரங்கள் கலந்துகொள்ளும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. மற்ற சைவ நூல்களிலிருந்து பெரிய புராணம் எந்தவகையில் சிறப்பு பெற்று விளங்குகிறது என்று திரு.சிவக்குமார் அவர்கள் கூறிய தகவல் சிலிர்க்க வைத்தது. ஒவ்வொரு பாடலாக அவர் அவர் பொருள் விளக்கி விரிவுரை கூறுவதை நாளெல்லாம் அமர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

Read More

கழுதையை கட்டி வைத்த கயிறு நம்மை கட்டலாமோ?

அந்த சலவைத் தொழிலாளியிடம் ஐந்து கழுதைகள் இருந்தன. பொதி சுமக்க இரண்டு கழுதைகளே போதும் என்கிற நிலையில் மற்ற கழுதைகளை பராமரிக்க முடியாத காரணத்தால் அவற்றை விற்பதற்கு சந்தைக்கு ஓட்டிக்கொண்டு சென்றான். செல்லும் வழியில் ஒரு ஆற்றைக் கண்டவன் அதில் நீராடிவிட்டு சற்று இளைப்பாற நினைத்தான். அருகே இருக்கும் மரம் ஒன்றில் கழுதைகளை கட்டிப் போட்டுவிட்டு ஆற்றுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தான். ஆனால் இரண்டு கழுதைகளை கட்ட மட்டுமே அவனிடம்

Read More

”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!

மகா பெரியவாளைப் பற்றி நம் தளத்தில் அளித்து சில வாரங்கள் ஆகிறது. காரணம் அனைவருக்கும் மிகப் பெரிய விருந்து ஒன்று தயாராகி வருகிறது. அதற்குள் பலர், 'ஏன் பெரியவாளை பற்றி அளிப்பதில்லை? ரமணரைப் பற்றிய பதிவுகள் அருமை. இருப்பினும் மஹா பெரியவாளைப் பற்றியும் அளித்தால் எங்களுக்கு டபுள் ட்ரீட் கிடைக்குமே...!' என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். குருவாரம் அன்று தான் குருவைப் பற்றி பதிவு அளிக்கவேண்டும் என்பதில்லையே. எனவே இன்று ஒரு அற்புதமான

Read More

எதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது?

இறைவனின் படைப்பில் நாம் அவசியம் புரிந்துகொள்ளவேண்டிய ஆனால் புரிந்துகொள்ள மறுக்கும் அம்சம் - TIME என்று சொல்லக்கூடிய நேரம் தான். கடிகாரத்தை வைத்தோ, சூரிய சந்திரனை வைத்தோ உணரக்கூடியது அல்ல 'நேரம்' என்பது. 'நேரம்' என்பது இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட ஒன்று. இன்று பலர் தாங்கள் செய்யக் கூடிய செய்ய வேண்டிய பொன்னான விஷயங்களை / கடமைகளை செய்யத் தவறுகிறமைக்கு சொல்லும் விஷயம் : "எனக்கு நேரமேயில்லை!" என்பது தான். "இன்னைக்கு ரொம்ப

Read More