Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, December 8, 2024
Please specify the group
Home > Featured > ”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!

”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!

print
கா பெரியவாளைப் பற்றி நம் தளத்தில் அளித்து சில வாரங்கள் ஆகிறது. காரணம் அனைவருக்கும் மிகப் பெரிய விருந்து ஒன்று தயாராகி வருகிறது. அதற்குள் பலர், ‘ஏன் பெரியவாளை பற்றி அளிப்பதில்லை? ரமணரைப் பற்றிய பதிவுகள் அருமை. இருப்பினும் மஹா பெரியவாளைப் பற்றியும் அளித்தால் எங்களுக்கு டபுள் ட்ரீட் கிடைக்குமே…!’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

குருவாரம் அன்று தான் குருவைப் பற்றி பதிவு அளிக்கவேண்டும் என்பதில்லையே. எனவே இன்று ஒரு அற்புதமான சம்பவத்தை பதிவாக அளிக்கிறோம்.

‘ஆச்சார அனுஷ்டாங்களை விட மனிதநேயமே பெரியது’ என்று ஸ்ரீ பெரியவாள் உணர்த்திய அற்புதமான சம்பவம் இது. மேலும் தேவாரம், திருவாசகம், திருக்குறள் மீது அவருக்கிருந்த பற்று பற்றியும் அற்புதமான தகவல் கிடைத்திருப்பதால் உண்மையில் நமக்கு டபுள் ட்ரீட் தான்.

Maha Periyava Old

”வா, சங்கரா, இப்படி வந்து உட்கார்”!

(டி.எஸ். கோதண்ட ராம சர்மா | ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ | தட்டச்சு : ரைட்மந்த்ரா.காம்)

சிவகங்கை சீமையைச் சேர்ந்த திருவாடானை ‘வன்தொண்டர்’ சங்கர அய்யர் சொன்னது.

புதுக்கோட்டையில் ஆறாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிச் சூட்டினால் அவருடைய கண்கள் பாதிக்கப்பட்டன. முதுமலையில் தலை மறைவாக இரண்டு வருஷம் இருந்தார். இரண்டு கண்களும் முழுவதும் குருடாய் விட்டன. சொல்ல முடியாத துக்கத்துடன் தேவகோட்டை ஜமீந்தார் என்று பிரசித்திப் பெற்ற கொடைவள்ளலான நாட்டுக்கோட்டை செட்டியாருடன் 1950ல் முதல் முதலாக ஸ்ரீபெரியவாள் ”சங்கரா, நீ தொண்டு செய்வதற்காகவே உன்னைக் கடவுள் இப்படி சோதனைக்குட்படுத்தி இருக்கிறார். ஒரு குறைவும் வராது. தொண்டு செய்து கொண்டே இரு” என்று ஆசீர்வாதம் செய்த உடனேயே பல வருடங்களாக அனுபவித்த துக்கம் இருந்த இடம் தெரியாமல் மனது இலேசாகி விட்டது.

பிறகு, தமிழை நன்றாகக் கற்று சைவ, வைணவ நூல்களை, முழுவதும் மனப்பாடம் செய்யும் அளவிற்கு தேர்ச்சி பெற்று, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். அருணகிரிநாதரின் கந்தரனுபூதி இவருக்கு பிரியமான நூல். இவருடைய சொந்தக்காரப் பெண் ஒருத்தி தானாக முன் வந்து விவாஹம் செய்து கொண்டாள். சங்கர அய்யர் ஊர் ஊராகச் சென்று பையன்கள், பெண்களுடன் பஜனை செய்வது வழக்கம். நாடகமும் நடத்துவார். குழந்தைகளுக்குப் பரீஷை வைத்து பரிசுகள் கொடுப்பார். இதில் கிருஸ்தவ, முஸ்லிம் மாணவர்கள் கூட சேருவதுண்டு.

இவர் செய்யும் தமிழ்ச் சேவையை பாராட்டி, கிருபானந்தவாரியார் இவருக்கு ”வன்தொண்டர்” என்ற பட்டம் சூட்டினார். ஸ்ரீ பெரியவாளை தரிசனம் செய்யும் போதெல்லாம் தேவாரம், திருவாசகம், திருக்குறள், முதலியவைகளைப் பற்றித்தான் பேச்சு. ஸ்ரீ பெரியவாளைப் பற்றிக் கூறினாலே கண்ணீர் பெருகும். ‘அவர்களைப் போல் தமிழறிந்தவர்கள் வேறு யார் உளர்?’ என்ற வியப்பு.

==========================================================

Don’t miss Maha Periyava’s miracle @ Kanchi Lingappan street

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு

==========================================================

இப்பொழுது அவருக்கு வயது எழுபத்தாறு. அவருடைய எழுபது வயதில், இப்போது முன்னேற்றமடைந்த கண் சிகிச்சையினால் கண்பார்வை திரும்பக் கிடைக்கும் என்று நண்பர்கள் விளக்கிய போது அவர் ஸ்ரீ பெரியவாள் அனுக்ரஹத்தினால் கண் தெரியாமலேயே சந்தோஷமாயிருக்கிறேன். இனிமேல் கண் பார்வை பெற்று என்ன ஆக வேண்டியிருக்கிறது?” என்று மறுத்து விட்டார்.

1958ம் வருஷம் ஸ்ரீ பெரியவாள் சென்னை சமஸ்கிருத கலாசாலையில் முகாமிட்டிருந்த போது விடியற்காலையில் விஸ்வரூப தரிசனத்திற்காக தேவகோட்டை ஜமீந்தாருடன் சென்றிருந்தார். அப்பொழுதுதெல்லாம் பெரியவாள் காலை வேளையில் காஷ்ட மௌனமாக இருப்பது வழக்கம். ஆனால் இவர்கள் இருவரும் வந்ததும் பெரியவாள் ”வா, சங்கரா, இப்படி வந்து உட்கார்” என்று சொன்னதும் எல்லோருக்கும் ஆச்சர்யம்.

சாயங்காலம் தீப நமஸ்காரம் ஆன பின்பு ஸ்ரீபெரியவாள், ”இன்று காலையில் மௌனத்தை விட்டு விட்டுப் பேசியது எல்லோருக்கும் ஆச்சர்யம். ஆனால் ஒருவருக்கும் காரணம் தெரியவில்லை. “நீங்கள் எல்லோரும் விடியற்காலையில் என்னைக் கண்டு சந்தோஷப்படுகிறீர்கள். ஆனால் கண் தெரியாத சங்கரனுக்கு எப்படி சந்தோசம் ஏற்படும்? அதனால்தான் என் குரலைக் கேட்டாவது சந்தோஷப்படட்டும் என்று பேசினேன்” என்றார்கள். ¶¶

==========================================================

Also check our earlier articles on Ramana Maharishi

அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!

காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர்ந்திட உதவிடுங்கள்…!

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check our earlier articles on Maha Periyava…

தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு

திகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’!

ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே – மஹா பெரியவா லீலாம்ருதம்!

மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)

அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!

நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

==========================================================

[END]

4 thoughts on “”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!

  1. அதுதான் “இந்த சங்கரர்”.

    குருவே சரணம்!

    ஓம் காஞ்சிவசாய வித்மஹே
    சாந்தரூபய தீமஹி
    தன்னோ சந்தரசேகரேந்ர ப்ரசோதயாத்!

    மஹா பெரியவா சரணம்!

  2. கருணா ப்ரவாஹ தெய்வம் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடி சரணம்
    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !!!

  3. மகா பெரியவரைப் பற்றி படிப்பதென்றால் அதுவே ஒரு பதிகம் போலத் தான்.

    கண் பார்வையற்ற சங்கரன் அவர்களுக்காக தனது விரதத்தை பற்றிக் கூட கவலைபப்டாமல் அவருக்காக அதை மாற்றிக்கொண்ட விதம் மகான்களுக்கே உரிய உத்தம குணம்.

    பெரியவர் இப்படி என்றால், மகா ஸ்வாமிகள் தந்த ஞானக்கண் இருக்க, ஊனக்கண் எனக்கு எதற்கு என்று கண்களுக்கு நவீன சிகிச்சை மேற்கொள்ள மறுத்த சங்கரன் நம் மனதில் உறைந்துவிட்டார். பார்வையற்ற ஒருவர் இப்படி சொல்கிறார் என்றால் அவர் மனம் எந்தளவு பக்குவப்பட்டிருக்கும் எந்தளவு அவர் பெரியவா மேல் பக்தி கொண்டிருந்திருப்பார். நினைக்க நினைக்க சிலிரிப்பாக உள்ளது.

    மஹா பெரியவருக்கு தேவாரம் திருவாசகம் திருக்குறள் இருக்கும் ஈடுபாடு பற்றிய அறிந்துகொள்ளும்போது இன்னும் நெகிழ்ச்சியாக உள்ளது.

    பெரியவா திருவடி சரணம்

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *