Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, December 8, 2024
Please specify the group
Home > Featured > திகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’!

திகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’!

print
வாசக அன்பர்களுக்கும் ரைட்மந்த்ரா குடும்பத்தினருக்கும் வணக்கம்.

சரியாக சென்ற டிசம்பர் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையின் கறுப்பு நாளன்று அடைமழை பெய்ய ஆரம்பித்த நேரம், அலுவலகத்துக்கு புறப்பட்டவன் மழை ஓயட்டும் அதன் பிறகு கிளம்பலாம் என்று அப்படியே வீட்டில் அமர்ந்துவிட்டோம். நேரத்தை வீணாக்கவேண்டாம் என்று கணினியில் அமர்ந்து பதிவுகளை தயார் செய்துகொண்டிருந்தோம். அதுவரை போக்குக்காட்டிவிட்டு பின்னர் 10.00 மணியளவில் வலுக்கத் துவங்கிய மழை 11.00 am, 12.00 pm, 1.00 pm என தாண்டியும் நிற்கவில்லை.

Res

நமது வீடு இருப்பது ஐயப்பன்தாங்கலில். அலுவலகமோ மேற்கு மாம்பலம். சாதாரண நாட்களிலேயே நாம் செல்லும் வழியில் (via போரூர், விருகை, ஆவிச்சி, கே.கே.நகர், உதயம், போஸ்டல் காலனி) ஒரு சிறு தூறல் விழுந்தால் கூட மழைநீர் வெள்ளமென தேங்கி போக்குவரத்தை முடக்கிப்போட்டுவிடும். மூன்று மணிநேரம் தொடர்ந்து பெய்துகொண்டிருக்கும் மழைக்கு நிச்சயம் நாம் நமது பைக்கில் போக முடியாது. நீந்தித் தான் போகவேண்டும். பேசாமல் பைக்கை வீட்டில் விட்டுவிட்டு, பஸ்ஸில் போய்விடலாம் என்று முடிவு செய்தோம்.

அப்பா, தங்கையின் வீட்டிற்கு சென்றிருந்தபடியால் இந்த நிலையில் நாம் அம்மாவை தனியாக விட்டுவிட்டு அலுவலகம் செல்வது சரியல்ல என்று புரிந்தது. மழை கொஞ்சமாவது நிற்காதா என்கிற நப்பாசையில் வீட்டிலேயே அமர்ந்துவிட்டோம்.

மழை விட்டபாடில்லை. சாலைகளில் ஆறாக ஓட ஆரம்பித்தது வெள்ள நீர். அடுத்த சில நிமிடங்களில் ‘டமார்ர்’ என்று சத்தம் கேட்க, மின் இணைப்பு துண்டித்துப்போனது. (பின்னர் தான் தெரிந்தது எங்கள் பகுதியில் டிரான்ஸ்பார்மர் வெடித்தது என்பது).

ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று மட்டும் உள் மனம் சொல்லியது. யூ.பி.எஸ். சத்தம் உடனே ‘பீப்…பீப்’ என அலற ஆரம்பித்தது. நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது.

யூ.பி.எஸ். ஆஃப் ஆவதற்குள் இக்கட்டான தருணங்களில் ‘கோளறு பதிகம்’ படிக்க வேண்டும் என்று பெரியவா கூறியது பற்றிய பதிவை தயாரித்து தளத்தில் அளித்துவிடலாம் பலருக்கு உதவியாக இருக்கும், என்று முடிவு செய்து பதிவை தயாரித்துக்கொண்டிருக்கும்போதே கணினி தனது மூச்சை நிறுத்தியது.

ஒரு வித திகிலுடன் நேரம் கடந்து சென்றுகொண்டிருந்தது. வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுடன் நிலவரம் குறித்து நமது கவலையை பகிர்ந்துகொண்டோம். கோளறு பதிகம் பற்றி பேச்சு எழ, என் மின்னஞ்சலில் நான் தயார் செய்து வைத்து வைத்திருந்த முழுமை பெறாத பதிவில் ‘கோளறு பதிகத்தை’ மட்டும் எடுத்து அதை நண்பர்களுக்கு அளித்து அதை படிக்கும்படியும் ஒரு தீங்கும் வாராது என்று கூறினோம்.

அதற்குள் மதியம் 2.00 ஐ நெருங்கிவிட, லன்ச் பாக்ஸில் இருந்த மதிய உணவை வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டோம்.

மாலை 6.30 அளவில் நெட்வொர்க் கட்டாகி வெளியுலகில் இருந்த தொடர்புகள் அனைத்தும் விடுபட்டு போனது.

சற்று நேரத்திற்க்கெல்லாம் நன்கு இருட்டிவிட, இதற்கு முன்பு ஒரு முறை மின் தடையின்போது பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்த பெரிய சைஸ் (பாதிக்கு மேல் தீர்ந்து போன) மெழுகுவர்த்தியை தேடோ தேடென்று வீடு முழுக்க தேடினோம். (காலம் மிகப் பெரிய ஆசான்!) நீண்ட போராட்டத்திற்கு பிறகு எங்கோ ஏதோ ஒரு ஷெல்பின் மூலையில் கவனிப்பாரற்று கிடந்த அந்த மெழுகுவர்த்தியை கண்டுபிடித்த போது அது தூசியில் கிடந்தது என்று கூட பார்க்காமல் அதற்கு முத்தமிட்டோம்.

காலை தொடங்கிய மழை நான்-ஸ்டாப்பாக மழை பெய்துகொண்டிருந்தபடியால், வாசலில் பெருக்கெடுத்து ஓடிய நீரின் லெவல் ஏறிக்கொண்டே வந்தது. இன்னும் ஓரிரு மணிநேரம் மழை பெய்தால் வீட்டுக்குள் நீர் வந்துவிடும் என்று புரிந்தது. (சென்ற மழைக்கே நிரம்பி வழிந்த போரூர் ஏரி வேறு மனதில் தோன்றி பயமுறுத்திக் கொண்டிருந்தது!) எங்கள் பகுதியிலேயே எங்கள் தெரு சற்று மேடான ஒன்று. எங்கள் தெருவிலேயே இந்த நிலை என்றால் நகரின் மற்ற பகுதிகளில் எப்படி இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிந்தது.

காலை அலுவலகம் புறப்படும் நேரம்
காலை அலுவலகம் புறப்படும் நேரம்

உடனே புத்தகங்கள் உள்ளிட்ட நீரில் வீணாகக் கூடிய அனைத்து பொருட்களையும் எடுத்து கட்டில் உட்பட உயரமான இடங்களில் பத்திரப்படுத்தினோம்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ‘வேல் மாறல்’ மற்றும் கோளறு பதிகத்தை படித்தோம். மனம் ஒன்றவில்லை. “இரவு தண்ணீர் வீட்டுக்குள் வந்துவிடுமோ?” என்று ஒரு வித பீதியுடனேயே ஒவ்வொரு நொடியும் கழிந்தது.

இரவு டிபன் என்ன செய்வது? வீட்டில் கரண்ட் இல்லை. இருப்பதோ ஒரே ஒரு மெழுகுவர்த்தி. அந்த நேரத்தில் சுலபமாக செய்யக்கூடியது உப்புமா ஒன்று தான். வெறுத்து ஒதுக்கும் உப்புமா (அம்மா செய்த) அன்று தேவாமிர்தமாக இருந்தது.

அம்மாவை கட்டிலில் தூங்கச் சொல்லிவிட்டு, நாம் ஈசி சேரில் படுத்துக்கொண்டோம். இரவு அடிக்கடி எழுந்து திகிலுடன் தண்ணீரின் லெவலை பார்த்துக்கொண்டே இருந்தோம்.

மதியம் சுமார் 1.00 மணியளவில்...
மதியம் சுமார் 1.00 மணியளவில்… (படியின் உயரம் முதல் படத்தை பார்த்தால் புரியும்)
மறுநாள் காலை எடுத்த படம் – முதல் படி வரை வந்த தண்ணீர் லெவல் பின்னர் இறங்கியிருப்பது தெரிகிறதா?

ஒரு கட்டத்தில் நடப்பது நடக்கட்டும் என்று கண்ணயர்ந்துவிட காலை எழுந்து பார்த்தபோது அந்த அதிசயத்தை பார்த்தோம். தண்ணீர் முதல் படிவரை தொட்டு பின்னர் தானாக வடிந்து போயிருந்தது. இரவு முழுக்க நான் ஸ்டாப்பாக மழை பெய்த நிலையில், இது எப்படி சாத்தியமாயிற்று?

இரவு முழுதும் மழை தொடர்ந்த நிலையில் தண்ணீர் உள்ளே வராவிட்டாலும் லெவல் இறங்கியது எப்படி? எங்கள் வீட்டு கேட்டுக்கு முன்னர் மட்டும் தண்ணீர் தேங்கியிருக்க, சாலை முழுக்க தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய தடமின்றி வறண்டு போயிருந்தது.

நிச்சயம் அது ‘கோளறு பதிகம்’ நிகழ்த்திய அற்புதம் தான் என்று நாம் நம்புகிறோம்.

புதன்கிழமை காலை, மெயின் ரோடு வந்தபோது சென்னையே வெள்ளத்திற்கு கபளீகரம் ஆனது தெரியவந்தது. பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் அலைந்துகொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது.

அடுத்த நான்கு நாட்கள் கற்காலத்தில் தான் இருந்தோம் என்று சொல்லவேண்டும். இருப்பினும் பரபரப்பான ஓட்டத்திற்கு ஒரு பிரேக் கொடுத்து என் தாயாருடன் நாட்களை கழிக்க நேர்ந்ததில் ஒரு வித மனநிறைவு!

(* இந்த காலகட்டங்களில் தட்டுப்பாடின்றி கிடைத்தே ஒரே பொருள் ‘சாராயம்’ தான். 90% டாஸ்மாக் கடைகள் ஜெனரேட்டர் வசதியுடன் தவறாமல் இயங்கின!)

tasmac

பைக்கில் PETROL இருப்பு குறைவாக இருந்ததால் VOLUNTARY SERVICE செய்ய எங்காவது செல்லலாம் என்றால் அதற்கும் வழியில்லாமல் போனது. நெட்வொர்க் இல்லாததால் நண்பர்களை வேறு தொடர்பு கொள்ளமுடியவில்லை. பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயங்கியது.

இதற்கிடையே வேறு ஒரு கவலை எழுந்தது. அப்பா இரண்டு நாட்கள் முன்னர் தங்கையின் வீட்டிற்கு சென்றவர் அங்கேயே மாட்டிக்கொண்டுவிட்டார். (எங்கள் வீட்டுக்கு சில கி.மீ. தொலைவில் ஐயப்பன்தாங்கல் உட்புறத்தில் அவள் தனது குடும்பத்தினரோடு ஒரு அப்பார்ட்மெண்டில் வசிக்கிறாள்). நெட்வொர்க் முழுவதுமாக விடுபட்டுபோனதால் அங்கு நிலவரம் எதுவும் தெரியவில்லை. அவர்கள் வீட்டுக்கு செல்லும் வழியில், முந்தைய மழைக்கே இடுப்பளவு தண்ணீர் இருந்தது. தற்போது கேட்க வேண்டுமா என்ன? (புகைப்படம் முந்தைய மழையில் எடுத்தது!)

Iyyappanthangal
தங்கை வீட்டுக்கு செல்லும் வழி

தங்கையுடன் மைத்துனரும் குழந்தையும் கூடவே அப்பாவும் இருப்பதால் அவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்ன என்கிற விபரங்கள் எதையும் அறிய முடியவில்லை. அப்பார்ட்மெண்ட் என்பதால் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வார்கள் என்று மனதை திடப்படுத்திக்கொண்டோம்.

எதற்கும் அலுவலகம் சென்று ஒரு எட்டு பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று கருதி பைக்கை எடுத்தோம்.

போரூர் ஏரி அருகே ஒரே கூட்டம். போரூர் ஏரி உடைந்து (அல்லது உடைக்கப்பட்டு) சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. போரூர் சந்திப்பு முழுக்க வெள்ளக்காடாக காட்சியளித்தது.

Porur junction

Porur lake

Porur lake 3Porur floodsPorur Jalakandeswararபோரூர் ஏரியின் கரையோரம் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் அருளால் தான் போரூர் மற்றும் காரம்பாக்கம் பெரிய அழிவில் இருந்து தப்பியது என்று சொல்லலாம். ஜலத்திற்கே கண்டம் வைத்த ஈஸ்வரன் என்பதாலோ என்னவோ மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவேண்டிய போரூர் ஏரி நிரம்பி வழிந்து சாலையை தொடுவதோடு நிறுத்திக்கொண்டது.

Virugambakkam

வளசரவாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் வழியே அலுவலகம் சென்றபோது, ஒரு கட்டத்தில் பைக் கிட்ட தட்ட மூழ்கியே விட்டது. ஒரு கட்டிடத்தின் வாசலில் பைக்கை பாதுக்காப்பாக விட்டுவிட்டு தண்ணீரில் ஊர்ந்து அலுவலகம் சென்றால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் மேற்கு மாம்பலம் வெறிச் என்று இருந்தது. பல கட்டிடங்கள் வெள்ளத்தில் தத்தளித்துகொண்டிருந்து. 99% கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எங்கும் மின்சாரம் இல்லை.

west mambalam

west mambalam 2west mambalam 7அலுவலகம் இயங்கும் காம்ப்ளக்ஸில் தரைத்தளத்தில் முட்டியளவு தண்ணீர் இருந்தது. தரைத்தளத்தில் இருந்த அலுவலகங்கள் அனைத்திலும் நீர் புகுந்துவிட்டது தெரியவந்தது.

இங்கு நம் அலுவலகத்திற்கு ஆண்டு துவக்கத்தில் இடம் பார்த்தபோது, தரைத் தளத்தில் இடம் கிடைக்கவில்லை என்று இறைவனை கோபித்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.

இரண்டாம் தளத்தில் உள்ள அலுவலகம் சென்று பொருட்கள் அனைத்தும் பத்திரமாக இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டு, வீட்டில் படிக்க ஒரு சில புத்தகங்களை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி வந்தோம்.

(அலுவலகத்தில் அன்று விடுபட்ட பிராட்பேண்ட் & ஃபோன் இணைப்பு இன்று வரை சரியாகவில்லை. வீட்டில்  இன்று மாலை தான் இணைப்பு வந்தது. அதையொட்டியே இந்த பதிவை அளிக்க முடிந்தது.)

west mambalam 3

west mambalam 4இதற்கிடையே சென்னையை தவிர்த்து வெளிமாவட்டம், வெளிமாநிலம், மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பல வாசகர்கள் நம்மை தொடர்புகொண்டு கொண்டு நமது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள முயன்றனர். ஆனால், நான்கு ஐந்து நாட்கள் மொபைல் வேலை செய்யாததால் யாராலும் நம்மை தொடர்புகொள்ளமுடியவில்லை. நம்மாலும் நமது நிலையை தெரிவிக்க முடியவில்லை.

(இது எந்த இடம் தெரிகிறதா? எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம்!)
(இது எந்த இடம் தெரிகிறதா? எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம்!)
மியாட் பாலம் - தண்ணீர் லெவல் தெரிகிறதா?
மியாட் பாலம் – தண்ணீர் லெவல் தெரிகிறதா?

ஆனால், இந்த இடைப்பட்ட காலங்கள் பல விஷயங்களை நமக்கு உணர்த்தியது.

நமக்கு என்ன ஆனதோ என்று கவலைப்பட்டவர்கள் ஒரு விதம். கவலைப்பட்டதோடு நமக்காக இறைவனிடம் பிரார்த்தித்தவர்கள் ஒருவிதம். நமது பதிவுகள் ஓரிரு நாள் நின்று போய்விட்டனவே என்று கவலைப்பட்டவர்கள் ஒரு விதம். பதிவுகள் நின்று போனதால் நமது தளத்தின் அருமையை உணர்ந்துகொண்டவர்கள் ஒரு விதம். நமக்கு என்ன தேவைப்படுகிறதோ என்று பதறிப்போய் உதவ நினைத்தவர்கள் ஒரு விதம். நம்மைக் கொண்டு பிறருக்கு உதவ நினைத்தவர்கள் ஒரு விதம்… இப்படி பல விதமானவர்களை உணர்ந்துகொண்டோம்.

நமது நெட்வொர்க் சரியானவுடன் முதலில் நமது உழவாரப்பணிக்குழு நண்பர்கள், மற்றும் நெருங்கிய வாசகர்கள் வட்டங்களில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று உறுதிப்படுத்திக்கொண்டோம்.

ஊடகத்துறை நண்பர்கள் சிலர் பத்திரமாக இருந்தாலும் பாதிப்புக்கள் அவர்களுக்கு அதிகம் என்பதை பின்னர் தான் அறிந்துகொண்டோம். அவர்களுக்காக நமது பிரார்த்தனைகள்.

பிறகு நண்பர் முல்லைவனம் அவர்களை சந்தித்து அவருடன் ஓரிரு இடங்களுக்கு அவருக்கு உதவியாக சென்றோம். பல வித அனுபவங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் ஏதேனும் செய்யவேண்டும் என்றால் அதற்கு இது சரியான தருணம் அல்ல என்று உணர்ந்துகொண்டோம்.

காஞ்சி உள்ளே நுழையும்போது - பார்த்தாலே பரவசம்!
காஞ்சி…. பார்த்தாலே பரவசம்!

இதனிடையே கடந்த புதன்கிழமை (09/12/2015) நண்பர் ராகேஷ் அவர்களை அழைத்துக்கொண்டு திடீர் காஞ்சி பயணம். பல நாட்கள் திட்டமிட்ட பயணம் ஏதேனும் தடை வந்து தள்ளிப் போய்கொண்டே இருந்தது. ஆனால், ஏன் தள்ளிப்போனது என்று பிறகு தான் புரிந்தது. பல முறை நாம் போய் சாதிக்கக் கூடிய மகத்தான் விஷயங்கள் ஒரே ஒரு பயணத்தில் சாத்தியப்பட்டது மஹா பெரியவாவின் கருணையே அன்றி வேறில்லை. (குருவருளால் உங்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து நம் தளத்தில் பல பொக்கிஷங்கள் காத்திருக்கின்றன!)

11 ஆம் தேதி வேலூரில் நடைபெற்ற நமது சொற்பொழிவும் இனிதே நிறைவு பெற்றது!

* நமது தளம் இரண்டு வாரம் அப்டேட்டுகள் இல்லாமல் இருந்தாலும் நமக்கு ‘விருப்ப சந்தா’ செலுத்திவரும் சில வாசகர்கள் தவறாமல் இந்த காலகட்டங்களில் அதை நமது கணக்கில் செலுத்தி நமக்கு பேருதவி புரிந்திருக்கிறார்கள். அவர்கள் இல்லையேல் இந்த தளம் இல்லை. என்றென்றும் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். அவர்கள் அனைவருக்கும் நிச்சயம் அவர்கள் எதிர்பாராத ஒரு வகையில் நமது RECIPROCAL இருக்கும்.

மழை வெள்ள அனுபவத்தை எழுதினால் எழுதிக்கொண்டே போகவேண்டியது தான். மற்றொருமொரு பதிவில் விரிவாக பார்ப்போம்.

இப்போதைக்கு பதிவின் மையக்கருத்துக்கு வருகிறோம்.

==========================================================

இழந்த அனைத்தும் திரும்ப கிடைக்கும்!

** இந்த மழை வெள்ளம் பலருக்கு ஆற்றொண்ணா பாதிப்பை (உடமை, பொருட்கள் சேதம் etc.) ஏற்படுத்தியிருக்கிறது. நாம் அவர்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்று தான். நீங்கள் இழந்த அனைத்தையும் நிச்சயம் பன்மடங்கு திரும்ப பெறுவீர்கள். காரணம் இந்த மழை வெள்ளத்தின் நோக்கம் மக்களை தண்டிப்பது அல்ல. வேறு சில விஷயங்களை உணர்த்துவது தான். அதை அது செவ்வனே செய்துவிட்டது. எனவே கவலை வேண்டாம். உங்கள் இழப்புக்கள் அனைத்திலிருந்தும் இறைவனருளால் நலம்பெற்று எழுவீர்கள் என்பது உறுதி!

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

இயற்கை சீற்றத்தை தணிக்கும் கோளறு பதிகம் !

1960ம் வருடம். அஷ்டகோளங்கள் (கிரகங்கள்) ஒரே நேர்க்கோட்டில் அமைந்து வலம் வருவதால், அந்த நாளன்று இந்த பூலோகம் அழிந்து விடும் என்று ஜோதிடர்கள் அழிச்சாட்டியமாக அச்சுறுத்த, அச்சமிகுதியால் அடங்கிக்கிடந்தனர், மக்கள் தத்தம் வீடுகளில்.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கிய மகா பெரியவா மக்கள் யாவரையும் “அச்சம் கொள்ளவேண்டாம். கோளறு பதிகம் பதிகம் படியுங்கள். நவக்கிரகங்கள் நல்லதே செய்யும்” என்று அருளினார்.

Maha Periyava Gangabishekam

ம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருமறைக்காடு என்னும் தலத்தில் சில காலம் இருந்தனர். அச்சமயம் பாண்டிய நாட்டில் சமண சமயம் வெகுவாகப் பரவியிருந்தது. பாண்டிய மன்னர் நெடுமாறனும் சமண சமயத்தைத் தழுவி இருந்தனர். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்ற வண்ணம் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் பாண்டிய நாட்டில் சமண சமயத்தவராயினர். அங்கே சைவத்தே மாறாமல் பின்பற்றியவருள் பாண்டிய மன்னனின் தேவியும் சோழ மன்னனின் திருப்புதல்வி மங்கையர்கரசியாரும், பாண்டிய நாட்டின் அமைச்சராம் குலச்சிறையாரும் முக்கியமானவர்.

ஞானசம்பந்தரின் பெருமையை செவியுற்ற மங்கையர்கரசியார் அவரைக் கொண்டு சமண இருளை தம் நாட்டிலிருந்து நீக்க வேண்டும். தம் கணவராகிய பாண்டிய மன்னன் மீண்டும் சைவ மதத்தினராக வேண்டும் என்று எண்ணி ஞானசம்பந்தப் பெருமானை தக்க தூதுவர் மூலம் பாண்டிய நாட்டிற்கு எழுந்தருளுமாறு விண்ணப்பம் செய்தார். அப்பொழுது ஞானசம்பந்தப் பெருமான் உடன் இருந்த திருநாவுக்கரசு சுவாமிகள் சமண சமயத்தார் பொல்லாங்கு செய்யக்கூடும் என எண்ணி சம்பந்தரை “இப்பொழுது நாளும் கோளும் சாதகமாகத் தோற்றாமையால்” செல்ல வேண்டாம் எனக் கூறினார்.

சம்பந்தப் பெருமான் “இறைவன் ஈசனின் துணை இருப்பின், நாளும் கோளும் இன்ன பிறவும் என் செய்யும்! அவை நல்லனவையே செய்யும்?” என்று பொருள்படும் கோளறு பதிகத்தை பாடி அவரை அமைதி பெறச் செய்து பாண்டிய நாடு சென்றார்.

கோளறு பதிகம் படிப்பதால், நவக்கிரஹத்தால் உண்டாகும் இயற்கை சீற்றங்களும், தோஷங்களும், தீவினைப்பயன்களும் குறையும் என்பது திண்ணம்.

வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள்
அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

திருச்சிற்றம்பலம்

கோளறு பதிகம் by திரு.சீர்காழி கோவிந்தராஜன்  – யூ-டியூப் வீடியோ

==========================================================

Also check similar articles :

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்!

எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!

வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

==========================================================

For Maha Periyava Articles…

ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே – மஹா பெரியவா லீலாம்ருதம்!

மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)

அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!

நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!

புடவை முதல் கோலம் வரை – மகா பெரியவா பெண்களுக்கு சொல்லும் டிப்ஸ்!

மஹா பெரியவாவின் ஜட்ஜ்மெண்ட்டும் அனுக்ரஹ தெரபியும்!

அலகிலா விளையாட்டுடையான் ஒரு தாயுடன் விளையாடிய விளையாட்டு!

‘சில சமயம் பகவான் மீதே கோபம் வருகிறதே?’ – தெய்வத்திடம் சில கேள்விகள்! (Part II)

“தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது எதை ஸ்வாமி?” தெய்வத்திடம் சில கேள்விகள்!

தெய்வத்தின் குரலில் தெய்வக் குழந்தையின் வரலாறு!

தர்மம் தழைக்க தோன்றிய தயாபரன் – மகா பெரியவா ஜயந்தி Spl & Excl.Pics!

எது நிஜமான பக்தி?

“கேட்டால் கொடுக்கும் தெய்வம். கேளாமலே கொடுப்பவர் குரு!” – குரு தரிசனம் (37)

தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)

மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)

நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)

அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு!  குரு தரிசனம் (33)

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!!  குரு தரிசனம் (32)

சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

==========================================================

[END]

3 thoughts on “திகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’!

  1. வணக்கம் நண்பர் சுந்தர்,

    எல்லாமே நன்மைகேக, இதுவும் கணடது போகும்.

    நாராயணன்.

  2. ஒரு திகில் படத்தை பார்த்தது போல் உள்ளது. கோளறு பதிகத்தின் அருமையை தெரிந்து கொண்டோம்

    அடுத்த பதிவுகளை குருவருளின் பொக்கிஷங்களை படிக்க ஆவல் . கிட்டத்தட்ட 10 நாட்கள் கழித்து மீண்டும் பதிவை படித்ததில் பிரமிப்பு …..
    நன்றி
    வாழ்க … வளமுடன்
    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *