Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > மஹா பெரியவாவின் ஜட்ஜ்மெண்ட்டும் அனுக்ரஹ தெரபியும்!

மஹா பெரியவாவின் ஜட்ஜ்மெண்ட்டும் அனுக்ரஹ தெரபியும்!

print
ந்த வாரம் மூன்று வெவ்வேறு சம்பவங்கள். பெரியவா தொடர்புடைய ஒவ்வொரு அனுக்ரஹத்திலும் சம்பந்தப்பட்ட பக்தர்கள் தவிர, பிறருக்கும் ஒரு மெசேஜ் ஒளிந்திருக்கும். பெரியவாவின் திருவுளம் எப்படியோ அப்படியே நடந்துகொண்டால் நமக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை. ஆன்ம அறிவோடு உலகியல் அறிவு மோதும்போது உலகியல் அறிவு எப்போதும் தோற்றுவிடுகிறது. எனவே குருவிடத்தில் என்றும் எப்போதும் பரிபூரண சரணாகதி அடைந்துவிடுவது சிறந்தது.

===============================================================

Also check :

யாருக்கு தானமளிக்க வேண்டும்? யாருக்கு அளிக்கக்கூடாது?

பாத்திரமறிந்து பிச்சையிடு!

===============================================================

டாக்குமெண்டை பார்க்காமலே பெரியவா கொடுத்த ஜட்ஜ்மெண்ட்!

2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு நாள், வயசான தம்பதி பிருந்தாவன தரிசனம் ஆன பின், எதிரே உட்கார்ந்துகொண்டு தியானம் செய்தனர். 76 வயதான அந்த அம்மாளின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர். ஸ்ரீ சந்திரமௌலி என்கிற தொண்டர் “ஏதாவது கஷ்டமா?’ என்று கேட்டபோது, “துக்கம் எதுவுமில்லை. பெரியவாளின் கருணையை நினைத்தால் கண்ணீர் வருகிறது” என்றார்.

PeriyavaJ

அந்த அம்மாள் சிறு பெண்ணாக இருந்தபோது, திருவையாறில் அவர் அப்பா, ஸ்ரீ பெரியவாளுக்குப் பாத பூஜைகள் செய்தார். குழந்தைப் பெண்ணும் பெரியவாள் மேனாவில் சென்றபோது அந்தக் கூட்டத்துடன் பத்து மெயில் தானாகவே நடந்துபோய்விட்டது. பிறகு அப்பா வந்து அழைத்து போனார்.

இப்போது வீடு கட்டுவதற்கு நல்ல இடத்தில் நிலம் வந்திருக்கிறது என்று அப்பாவிற்கும் பிள்ளைக்கும் அபிப்ராயம். ஆனால் பெரியவாள் அனுமதியில்லாமல் வாங்கக்கூடாது என்பது அம்மாவின் தீர்மானம். பெரியவாளின் படத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, “வேண்டாம்” என்று தலையாட்டினார் போல ஒரு தோற்றம். ஆகையால் நிலம் வாங்குவதற்கு அம்மா ஒப்புக்கொள்ளவில்லை. மற்றைய இருவருக்கும் வருத்தம்.

மூன்று நாள் கழித்து ஒரு தகவல் கிடைத்தது. நிலம் விற்பவன் பொய்யான ரிக்கார்டுகளை தயார் செய்து அதே நிலத்தை மூன்று பேருக்கு விற்றிருக்கிறான் என்று தெரியவந்தது.

பெரியவாள் எந்த டாக்குமெண்டையும் பார்க்காமலே ஜட்ஜ்மெண்ட் சொல்லிவிடுவார்கள்!

===============================================================

Also check : Success Stories of Rightmantra Prayer Club – சந்தான ப்ராப்தி, உத்தியோக ப்ராப்தி, ருண விமோசனம்

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

===============================================================

பெரியவாவின் அனுக்ரஹ தெரபி!

பண்டர்பூரில் ஸ்ரீ பெரியவாள் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் பம்பாய் அனந்தராமன் மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் தரிசனத்திற்கு வந்தார். அப்போது தரிசனம் பண்ண வைத்துக்கொண்டிருந்த ஜகதீஷ் பட், அனந்தராமனை விசாரிக்க ஆரம்பித்தார். ஸ்ரீபெரியவாள், “அவனிடம் ஒன்றும் கேட்கவேண்டாம்” என்று சொல்லி,அனந்தராமனை உட்கார சொல்லிவிட்டு மற்ற பக்தர்களுக்கு தரிசனம் தந்துகொண்டிருந்தார்கள்.

Maha Periyaval

சுமார் ஒரு மணிநேரம் கழித்து அனந்தராமனை பார்த்த ஸ்ரீ பெரியவாள், “உன் சம்சாரத்திற்கு அந்த விஷ சிகிச்சை வேண்டாம்.நிறுத்திவிடு” என்றார்.

அவர் சன்னதியை விட்டு வெளியே வந்ததும், அவரை நாங்கள் விசாரித்தபோது சொன்னார், “என் மனைவிக்கு கான்ஸர் ஆப்பரேஷன் ஆகி ஒருவாரம் ஆகிறது. கீமோதெரபி செய்கிறார்கள். ஆனால் வியாதியைவிட சிகிச்சை பொறுக்கமுடியாத அளவு துன்பத்தை கொடுக்கிறது.” என்றார்.

ஸ்ரீ மகாபெரியவாளின் உத்திரவுப்படி சிகிச்சையை நிறுத்தவேண்டும் என்று சொன்னபோது, பம்பாய் டாக்டர்கள் “சிகிச்சையை நிறுத்தினால் நோயாளி ஒருவாரம் கூட உயிருடனிருக்கமாட்டார்” என்று சொன்னார்கள். அனந்தராமனின் சம்சாரமோ தான் செத்துப்போனாலும் ஸ்ரீ பெரியவாளின் உத்திரவுப்படி தான் நடப்பேன்.” என்று தீர்மானமாக சொல்லிவிட்டார். அதன் பிறகு எந்தவித சிரமுமில்லாமல் இருக்கிறார்.

பெரியவாளுக்கு கீமோதெரப்பி தெரியாமல் இருக்கலாம். ஆனால் அனுக்ரஹ தெரபி செய்யத் தெரியுமே! அவர்களுடைய ட்ரீட்மெண்ட் அமுதமயமானவை என்பது பக்தர்களுக்கு தெரியும்.

– ஸ்ரீ மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்

===============================================================

Also check : பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

===============================================================

ஆடி அமாவசை – தேடி வந்த குருமார்கள் தரிசனம்!

அடுத்து நம் சொந்த அனுபவம்!

சென்ற ஆடி அமாவாசை அன்று நம் வாசகர் திரு.நாராயணன் (திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகளுடனான நமது சந்திப்பில் உடனிருந்தவர்) நம்மை தொடர்புகொண்டார்.

“உங்களை பார்க்க உங்கள் அலுவலகம் வரவேண்டும். எங்கே இருக்கிறீர்கள்? எப்போது வரலாம்??”

நாம் அப்போது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தின் குளக்கரையில் ஆடி அமாவாசை தொடர்புடைய புகைப்பட கவரேஜ்ஜில் இருந்தோம்.

ஆடி அமாவசை அன்று பரபரப்பாக காட்சியளிக்கும் மயிலை கபாலீஸ்வரர் கோவில் குளம்
ஆடி அமாவசை அன்று பரபரப்பாக காட்சியளிக்கும் மயிலை கபாலீஸ்வரர் கோவில் குளம்

“இப்போது மயிலையில் ஆடி அமாவசை கவரேஜ்ஜில் இருக்கிறேன். இன்னொரு நாள் பார்க்கலாமே!” என்று குறுந்தகவல் அனுப்பினோம்.

அன்று மதியமே அவரை அலுவலகத்திற்கு வரச் சொல்லலாம் தான். ஆனால் அன்று Rightmantra Prayer Club பதிவை அளிக்கவேண்டியிருந்ததால் தயங்கினோம்.

ஆனால் நாராயணன் திரும்ப மதியம் தொடர்புகொண்டார்.

“அலுவலகம் வந்துவிட்டீர்களா? உங்களை பார்த்து ஒன்று கொடுக்கவேண்டும்.”

“பிரார்த்தனை கிளப் பதிவை அளிக்க வேண்டியிருப்பதால் இன்னொரு நாள் வாருங்களேன். இன்று வந்தால் என்னால் உங்களிடம் ஃப்ரீயாக பேசமுடியாது. அதனால் தான் சொல்கிறேன்” என்றோம்.

“பரவாயில்லை. உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ளமாட்டேன்….” என்றார் விடாப்பிடியாக.

“சரி வாருங்கள்” என்றோம்.

சொன்னதைப் போல மதியம் 3.00 மணியளவில் வந்தார்.

வந்தவர் சுருட்டி ரப்பர் பேண்ட் போட்டிருந்த காலண்டரை கொடுத்தார்.

“பிரித்துப் பாருங்கள்!”

Kanchi Acharyas

சஸ்பென்ஸ் தாங்காமல் பிரித்துப் பார்த்தால், ஆதிசங்கர பகவத் பாதாள் தொடங்கி இதுவரை பீடத்தை அலங்கரித்த அத்தனை ஆச்சார்யாள்களும் அடங்கிய காலண்டர் அது.

பவித்திரம் மிக்க ஆடி அமாவாசை அன்று இத்தனை குருமார்களும் தேடி வந்திருக்கிறார்களே… என்ன என் பாக்கியம் என்று கண்களில் ஒற்றிக்கொண்டோம்.

மனைவி வழி உறவினர் ஒருவரின் வீட்டுக்கு போயிருந்தபோது அங்கு கிடைத்ததாகவும், நம் நினைவு வரவே நமக்காகவும் ஒன்று கேட்டு வாங்கி வந்ததாகவும் கூறினார்.

இத்தனை பெரிய பரிசை தந்தவருக்கு பதிலுக்கு என்ன தருவது?

சென்ற வாரம் திருமலை சென்று ஸ்ரீனிவாசனை தரிசித்துவிட்டு வந்திருந்தோம். ஏழுமலையானின் லட்டு பிரசாதம் கொஞ்சம் இருந்தது. அதை கொடுத்தோம். கண்களில் ஒற்றி வாங்கிக்கொண்டார்.

70 Acharyas of Kamakoti Peedam

மேற்படி காலண்டரின் ஆக்கத்திற்கு பின்னே மிகப் பெரிய அதிசயம் ஒன்று இருப்பதாகவும், மஹா பெரியவாவின் ஆக்ஞையின்படியே இது அச்சடிக்கப்பட்டதாகவும் கூடுதல் தகவல் ஒன்றையும் சொன்னார்.

அது என்ன?

விபரங்கள் அடுத்த வாரம்!

================================================================

Also check : மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !

================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-Development and True Values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us to keep this site active. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

For more details : http://rightmantra.com/?page_id=7762

================================================================

Also check :

பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!

அடியார்கள் வழியனுப்பு விழாவும், ஏமாற்றத்தில் வெளிப்பட்ட அருளும்! ஆடி ஸ்பெஷல் (3)

திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)

ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)

================================================================

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

================================================================

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?

‘நல்ல காலம் நிச்சயம் வரும்!’

================================================================

Also check : கர்மவீரர் காமராஜர் மகா பெரியவாவை சந்தித்த போது

ஞானசூரியனும் தியாக சூரியனும் சந்தித்தபோது….! காமராஜர் B’DAY SPL 1

================================================================

எல்லா பிரச்சனைகளுக்கும் சேர்த்து ஒரே பதிகம் / ஸ்லோகம் இல்லையா?

எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

================================================================

Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…

அலகிலா விளையாட்டுடையான் ஒரு தாயுடன் விளையாடிய விளையாட்டு!

‘சில சமயம் பகவான் மீதே கோபம் வருகிறதே?’ – தெய்வத்திடம் சில கேள்விகள்! (Part II)

“தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது எதை ஸ்வாமி?” தெய்வத்திடம் சில கேள்விகள்!

தெய்வத்தின் குரலில் தெய்வக் குழந்தையின் வரலாறு!

தர்மம் தழைக்க தோன்றிய தயாபரன் – மகா பெரியவா ஜயந்தி Spl & Excl.Pics!

எது நிஜமான பக்தி?

“கேட்டால் கொடுக்கும் தெய்வம். கேளாமலே கொடுப்பவர் குரு!” – குரு தரிசனம் (37)

தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)

மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)

நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)

அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு!  குரு தரிசனம் (33)

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!!  குரு தரிசனம் (32)

சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

================================================================

[END]

8 thoughts on “மஹா பெரியவாவின் ஜட்ஜ்மெண்ட்டும் அனுக்ரஹ தெரபியும்!

  1. மகா பெரியவா சரணம்

    இந்த இரண்டு சம்பவங்களையும் படிக்கும் படிக்கும் பொழுது மகா பெரியவா நீதி அரசருக்கெல்லாம் நீதி அரசர் மற்றும் டாக்டருக் கெல்லாம் உயர்ந்த டாக்டர் என்று சொல்லத் தோன்றுகிறது. அவரின் தீட்சயன்யமான பார்வையே எல்லோருக்கும் அருள் மழை பொழியும்

    தங்கள் அலுவலகத்தை தேடி வந்த மகான்கள்… இனி எல்லாம் சுபமே…

    காலெண்டரின் அடுத்த நிகழ்வை எதிர்பார்க்கிறேன்

    இன்று குரு தரிசனம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
    மகா பெரியவா படம் கொள்ளை அழகு. அவர் நமது கோரிக்கையை செவி மடுத்து கேட்பது போல் உள்ளது.

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ

    நன்றி
    உமா வெங்கட்

  2. Sudarji,
    Very Big Thanks to You. It is a great Pleasure to See the Maha Periya Padam in our Site.

    Maha Periyava Thiruvadi Saranam.

    Narayanan.

  3. மிகவும் அற்புதம்
    சுந்தர்.
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    சிவசிவ. New Tamil channel
    launched Sivam Tv
    www​.sivamtv.com

  4. Dear Sundar Sir

    Super. Really I also Lucky enough to have a darshan of all Acyaryas right from Adi Sankara Bhagawat Badal to Bala Periyava. I will pray Mahaperiyava to bless you all walks your life. Thank you very much for publishing this calender. I will also going to pray for your firend Sri Narayanan who presented you this calendar.

    Regards

    S. Chandrasekaran

  5. குருவே சரணம்……… நம் குருதேவரின் ஜட்ஜ்மெண்ட்டும் அனுக்ரஹ சிகிச்சையும் அருமை…….. நம்பினாரை வாழவைக்கும் தெய்வம் அவர்……. நம் தள அலுவலகத்திற்கு குருமார்களின் படம் அடங்கிய காலண்டர் கிடைத்தது அவர்களின் ஆசி எனலாம்……… நம் தளம் மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்………

  6. மஹா பெரியவா சரணம்.

    நீதி, அனுகிரகதேரபி மற்றும் காலண்டர் சம்பவம் என பெரியவாவின் மகிமைகளை பேசும் நிகழ்வுகள்.மூன்றுமே முத்தாய்ப்பு .
    பெரியவாவிடம் சரண் அடைந்தால் தான் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும். பெரியவா மகிமை போற்றும் இந்த பதிவும் மகத்துவமான ஒன்று.

    காலண்டர் பின்னே உள்ள நிகழ்வை நம் தலத்தில் எதிர்பார்க்கிறோம் அண்ணா.
    இந்த பதிவை பார்த்த மாத்திரத்தில், நம் பாவம் எல்லாம் போகட்டும். உண்மை ஒளி நம் உள்ளத்தில் வீச,நம் பெரியவா அனுகிரகம் புரியட்டும்.

    “பார்த்த மாத்திரத்தில் பாவத்தை
    அலம்பிடும் தீர்த்தப் பெருக்கை
    திருவாசகத்தின் உட்பொருளைக்
    கூர்த்த மதியினை வேண்டிக்
    கொண்டேன்!”

    பெரியவாவின் பொற்பாதங்கள் சரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *