Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, July 19, 2024
Please specify the group
Home > Featured > சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

print
கா பெரியவாவிடம் வேதம் படித்த பெருமையையுடைய திரு.நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகளை காஞ்சிபுரத்தில் அவர் இல்லத்தில் சந்தித்தபோது அவர் கூறிய பெரியவாவின் மகிமைகள் இது.

சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ ?

பெரியவா சின்ன காஞ்சிபுரத்தில் முகாம். பலர் வந்து ஆசிபெற்று சென்ற வண்ணமிருந்தனர். லால்குடி முன்னாள் ஜில்லா ஜட்ஜ் எல்.எஸ் பார்த்தசாரதி ஐயர் அவர்கள் தன் மனைவியுடன் அப்போது பெரியவாவை தரிசனம் செய்ய வந்திருந்தார்.

Maha Periyava reading manuscript copy copyகடைசி நாள், பெரியவாவிடம் சொல்லிவிட்டு விடைபெற வந்திருந்தார். புறப்படுவதற்கு டிக்கட் ரிசர்வேஷன் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் தயார்.

“இன்னைக்கு நைட் லால்குடி புறப்படுறேன். பெரியவா உத்தரவு கொடுக்கணும்…”

“நாளைக்கு போலாமே…”

பெரியவா வேறு எதுவும் சொல்லவில்லை. தீர்த்தம் கொடுத்துவிட்டார்.

இவருக்கு ஒரே குழப்பம். இன்று புறப்படுவதாக சொன்னால் பெரியவா ‘நாளைக்கு புறப்படு’ என்கிறாரே…

இப்போது போல, அப்போதெல்லாம் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில ரிசர்வ் செய்ய முடியாது. கம்பூட்டரைஸ்டு ரிசர்வேஷனெல்லாம் அப்போது கிடையாது. என்ன செய்வது? இருப்பினும் பெரியவா உத்தரவை மீற முடியாதே. எனவே அன்றிரவு பயணத்தை ரத்து செய்தார்.

மறுநாள் காலை… கிடைத்த அந்த செய்தி அவர் இதயத்தை உலுக்கியது. அரியலூர் அருகே மருதையாறு பாலத்தில் செல்லும்போது ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் சிக்கி கிட்டத்தட்ட 25 பேர் பலி. (இது நடந்தது மார்ச் 15 அதிகாலை 1987.)

Neelakkal Ramachandhira Sasthirigal 4“சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ ? உன்  வார்த்தையை மீறிப் போயிருந்தால்… நினைத்துக்கூட பார்க்க முடியவில்லையே….” உருகினார் பார்த்தசாரதி ஐயர்.

முந்தைய அத்தியாயத்தில் “மகா பெரியவா நாவினின்று வரும் ஒவ்வொரு வார்த்தையும் பொருள் மிக்கது. அவை வாக்கல்ல… சத்திய வாக்கு!!” என்று நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் கூறியது எந்தளவு உண்மை என்று புரியுமே!

இந்த இடத்தில சிலருக்கு சந்தேகம் எழக்கூடும். ஏன் அந்த விபத்தையே பெரியவா தடுத்து எல்லோரையும் காப்பாற்றியிருக்கலாமே என்று. சில கேள்விகளுக்கு விடைகள், ஆண்டவன் ஒருவனுக்கு தான் தெரியும். நம்மால் அதை உணரமுடியாது. அதை ஆராய்ச்சி செய்வது வீண்.

ஜட்ஜ் தம்பதிகளின் நல்லநேரம், அவர்கள் குருவை தரிசித்தது அவர்களுக்கு வரவிருந்த ஆபத்தை தடுத்துவிட்டது! அவ்வளவே!!

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவனருளாலே
– திருமூலர்

(சந்திப்புக்கு உதவியவர் : நண்பர் திரு.நாராயணன்)

=====================================================================

Also check :

யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

குரு என்பவர்  இறைவனை விட உயர்ந்தவரா? MUST READ

=====================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…

“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

=====================================================================

Articles about other Gurus in Rightmantra.com

மனித முயற்சி + குருவருள் = திருவருள்! (ஞானானந்தம்-2)

ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!! 

“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச்சைக்காரன் ஓடி வந்து உதவி செய்வான்!” – யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி SPL

“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

=====================================================================

Articles on Ramana Maharishi

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

=====================================================================

Articles about Sri Ragavendra Swamy

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து  இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

=====================================================================

[END]

12 thoughts on “சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

 1. குருவே சரணம்.
  நினைக்கும் போதே உடல் சிலிர்க்கிறது.

  வாழ்க வளமுடன்
  நன்றி

 2. எதுவும் நடந்து முடிந்த பின் மட்டுமே நமக்கு காரணம் தெரிகிறது.
  சில விஷயங்களுக்கு அந்த காரணமும் தெரிவதில்லை.
  ஆனால் துன்பங்களும், ஆபத்துக்களும் வரும் முன்பே நம்மை கண்ணின் மணி போல காத்து ரட்சிப்பவர்கள் நம்முடைய குருக்கள் மட்டுமே.

 3. Maha Periyava is a living God. Avar Kan kanda kaduval enbathil Iyamillae.
  The Interview With Ramachandra sastigal is an nice Experience. Myself and our Editor stay with his house for nearly 4 hours and enjoy the fruits of Mahaperiva.
  That Meeting I cant Forget in my life. Our Editor Sundar ask many questions and noted. Even I also forget many things, but our editor gathered and displyed sequecenly. I got an good Opportunity to take many photos with Ramachandra sastrigal. His son Sarma Sastrigal is also accompained with our Interview and shared many Information.

  We Went to Kamatchi Temple with his son, and had an Excellent Darshan. Now after reading this articles, all the things happen on that day was come again once in my mind to recollect those things.

  My sincere Thanks to Mr. Sundar for for sharing many good things about Maha Periyva in a excellent Mode. I continously disturbing sundar to put the article many times. But each and every time sundarji told me to be pataience for an excellent delivery of article. Now it is quite Proved that the Article with Ramachandra sastigal comes out in a good way about Maha Periva,

  MAHA PERIYAVA THIRUVADI SARANAM.
  IF GURU BLESSINGS IS AVAILBLE, GOD BLESSINGS WILL COME AUTOMATICALLY. This is Happened in My life.

  Thanks & Regards With an Nice Experience,
  S.Narayanan.

  1. Writing Maha Periyava’s Mahimai from the words of the person who was his student is an astounding experience. Sri.Sastri floored us by his simplicity. As Narayanan said, we had a wonderful darshan of Kamakshi ambal which would never be possible without Syama Sastrigal’s help. Thanks to Narayanan once again.

 4. குருவின் தீர்க்க தரிசனம் தான் அந்த அடியவரை காப்பாற்றி இருக்கிறது. இதே போல் ஞானானந்த கிரி ஸ்வாமிகள் தம் அடியவரை காப்பாற்றி இருப்பதை என் அம்மா நேரிலேயே பார்த்திருக்கிறார். அவர் சொல்லுக்கு கட்டுப்படாமல் சென்றவரின் நிலையையும் என் அம்மா பார்த்து இருக்கிறார்.

  நாமும் போன ஜன்மத்தில் செய்த நற்செயல்களின் குவியலே, வாராவாரம் நம் தளம் மூலம் குருவின் மகிமையை படிக்கும் யோகம் கிடைக்கிறது

  குருவே சரணம்

  நன்றி
  உமா வெங்கட்

 5. குருவே சரணம்……….. குருவே சரணம்………… குருவே சரணம்…………

 6. படிக்கும் போதே சிலிர்த்து விட்டது. பெரியவாளின் மகிமையே மகிமை.

  குருவே சரணம்.

 7. சுந்தர்
  அது என்ன பார்த்த சாரதி அய்யர் அவரும் இந்த உலகத்தில் ஒரு மனிதர் தானே பார்த்த சாரதி அய்யர் …… சாதீயமா ……….

  1. சில பெயர்களின் அடையாளங்கள் அவர்களது சாதியோடு தான் அழைக்கப்படும். சமீபத்தில் காலமான சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் கடைசி வரை ‘வி.ஆர். கிருஷ்ண ஐயர்’ என்று தான் அனைவராலும் அழைக்கப்பட்டார். அவர் பெயரை கையாண்ட அனைத்து ஊடகங்களும் அவ்வாறு தான் இறுதிவரை குறிப்பிட்டன. அதற்காக அவர்கள் சாதீயத்தை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமா?

   என்னைப் பற்றியும் இந்த தளத்தை பற்றியும் இங்கு தொடர்ந்து வரும் வாசகர்களுக்கு தெரியும். பிராமணர் அல்லாதவர்களுக்கும் மகா பெரியவர் எந்த அளவு அருள்மாரி பொழிந்திருக்கிறார் என்றும் தெரியும்.

 8. சுந்தர் அண்ணா..

  மெய் சிலிர்க்க வைக்கும் குரு தரிசனம்.

  வார்த்தைகளில் வடிக்கமுடியாத குரு தரிசனம்.

  மிக்க நன்றி அண்ணா..

 9. வணக்கம் சுந்தர். தினமும் அவரிடம் படித்து ,பார்க்கும் பேறு பெற மிக்க புண்ணியம் செய்து இருக்கவேண்டும் நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள். அவரையும் வணங்குகிறேன். குருவே சரணம். இவர் படத்தை பார்க்கும் போதுஎல்லாம் எனக்கு தோன்றுவது ஒரே ஒரு முறை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்து இருக்கலாம் என்பதுதான். அந்த அளவு புண்ணியம் செய்யவில்லை . நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *