நேற்றைக்கு ராகவேந்திர சுவாமியின் அவதார தினம் என்பதால் அவரது பிருந்தாவனத்திற்கு சென்று சுவாமியை தரிசித்துவிடவேண்டும் என்று விரும்பி அலுவலகம் முடித்து கிளம்பும்போது தி.நகர் ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம் சென்றேன். கூட்டமென்றால் கூட்டம் அப்படியொரு கூட்டம்.
உள்ளே பிருந்தாவனத்தில் உள்ள மெயின் ஹாலில் ரெய்ச்சூர் சேஷகிரி ராவ் அவர்களின் கச்சேரி நடைபெற்றுகொண்டிருந்தது. தேனினும் இனிய குரலில் ராகவேந்திர சுவாமிகளை பற்றி பாடல்களை பாடிக்கொண்டிருந்தார் சேஷகிரி ராவ். பிரகாரத்தை சுற்றி வந்து, கல்கண்டும் அட்சதையும் பெற்ற பிறகு சுமார் அரை மணிநேரம் அங்கு பக்தர்களுடன் உட்கார்ந்து ராவ் அவர்களின் பாடல்களை கேட்டேன். முன்னதாக ஒரு பத்து நிமிடம் அமர்ந்து தியானம் செய்துவிட்டு செல்லலாம் என்று தான் உத்தேசித்திருந்தேன். இது போன்ற பக்தி பாடல்களை மனம் ஒன்றி கேட்பது தியானத்தைவிட சிறந்தது என்பதால் அப்படியே அமர்ந்துவிட்டேன். நான்கைந்து பாடல்கள் கேட்ட பிறகு கிளம்ப மனமில்லாமல் கிளம்பினேன்.
ராகவேந்திர சுவாமிகளின் பரம பக்தன் நான் என்று சொல்லிக்கொள்ளமுடியாவிட்டாலும் அவர் அருள் எனக்கு பரிபூரணமாக இருக்கிறது என்று திடமாக நம்புகிறேன். அனுதினமும் ஒவ்வொரு கணமும் அவரையே நினைத்து உருகும் எண்ணற்ற பக்தர்கள் அவருக்கு இருக்கிறார்கள். அவரது பிறந்தநாளில் அவருக்கு நான் என்ன செய்துவிட முடியும்? தீவிரமாக யோசித்து நான் மாற்றிக்கொள்ளவேண்டும் என்று நீண்ட நாள் நினைத்து – முடியாது திணறி வந்த என் குணம் ஒன்றை நேற்று மாற்றிக்கொண்டேன். இது தான் ராகவேந்திரருக்கு நான் செய்யும் உண்மையான பூஜை என்பதை நானறிவேன்.
ராகவேந்திரரின் பக்தன் என்று கூறிக்கொள்ள விரும்பும் ஒருவன் குறைந்தபட்சம் அவரது கொள்கைகள் உபதேசங்கள் ஏதாவது ஒன்றையாவது பின்பற்ற முயற்சிக்கவேண்டும் அல்லவா?
ஒ.கே. நாம் முன்னர் சொன்ன நிகழ்வு ஒன்றிற்கு வருவோம்.
ஸ்ரீ ராகவேந்திரரின் பரிபூரண அனுக்ரஹம் நம் அனைவருக்கும் உண்டு என்பதை விளக்கும் நிகழ்வு இது.
சென்ற மாதம் – பிப்ரவரி 24 – கடைசி தினத்தன்று இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சிக்கு நண்பர்களுடன் நான் சென்றபோது, ஒவ்வொரு ஸ்டாலாக பார்த்து புகைப்படமெடுத்து கொண்டே சென்றோம். சரியாக நான்கு ஐந்து வரிசைகள் கடந்த பிறகு நாம் பார்த்த ஸ்டால் என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது.
ஆம்… மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனத்தின் அதிகாரப்பூர்வ ஸ்டால் அது. ஹிந்து ஆன்மீக கண்காட்சியில் முதல் முறையாக இடம்பெற்றிருந்தது. இது வரை நான் மந்த்ராலயம் சென்றதில்லை என்பதால் எனக்கு ஒரே பரவசம். மந்திராலயத்தில் உள்ளது போலவே தத்ரூபமாக பிருந்தாவனத்தை வடிவமைத்திருந்தார்கள்.
ஸ்டாலில் பொறுப்பாளராக இருந்தவரிடம் நமது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டேன். ஸ்டாலுக்கு பக்தர்களிடையே கிடைத்த வரவேற்ப்பு மற்றும் மகிழ்ச்சி பற்றி கேட்டு தெரிந்துகொண்டேன். கண்காட்சிக்கு வருகை தரும் பக்தர்கள் ஸ்டாலை பார்த்ததும் மிகவும் பரவசப்படுகிறார்கள் என்றும் பலரும் பிருந்தாவனத்தின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு செல்வதாகவும் சொன்னார் அவர்.
சற்று பேசிக்கொண்டிருந்தேன். நம்மை சற்று காத்திருக்குமாறு கூறியே அவர், உள்ளே சென்று மந்த்ராலயத்தில் வழங்கப்படும் பால்கோவா போன்ற ஆரஞ்சு நிற பிரசாதம் ஒன்றை நமக்கு கொடுத்தார். சிறுது அட்சதையும் கொடுத்தார். அதை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டோம்.
பிருந்தாவனத்தின் முன்பு நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பின்னர், நண்பர் ராஜா பக்கத்து ஸ்டால்களை படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
தொடர்ந்து அவரிடம் பேசிக்கொண்டிருக்கையில், மந்திராலயத்தில் அவர் வேத பாட சாலை நடத்திவருவதாக கூறினார். நம்மை பற்றி விசாரித்தபோது, நமது தளத்தை பற்றி கூறி எனது விசிட்டிங் கார்டை அளித்தேன்.
நமது விசிட்டிங் கார்டில் நடுநாயகமாக இருப்பவர் ராகவேந்திர சுவாமிகள் என்பதால் அதை பார்த்ததும் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். நமது தளம் பற்றியும் அதன் நோக்கம் மற்றும் பணிகள் பற்றியும் விசாரித்தார். அனைத்தையும் அவருக்கு விளக்கினேன்.
“இன்றைய இணைய உலகிற்கும் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் தேவை எதுவோ அதை சரியாக செய்துவருகிறீர்கள். பலன் கருதாமல் செய்துவரும் உங்கள் சேவைக்கு குருராஜரின் ஆசி எப்போதும் உண்டு” என்று நம்மை வாழ்த்தினார் அவர்.
என்ன நினைத்தாரோ பேசிக்கொண்டிருக்கும்போதே “சற்று பொறுங்கள்” என்று கூறிய அவர், உள்ளே சென்று ஒரு பொன்னாடையை எடுத்து வந்து நமக்கு அங்கிருந்த (வேதம் படித்த) குட்டி அர்ச்சகரை வைத்து போர்த்த செய்தார். அட்சதையும் தரப்பட்டது. இது நடந்தது ஜஸ்ட் ஒரு சில வினாடிகளில் தான்.
எனக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. குருராஜரின் சன்னதியில் நம்மை தேடி வந்த மரியாதையை எண்ணி ஆனந்தக் கண்ணீரில் திக்குமுக்காடி போனேன். ஏற்கனவே முன்பு ஒரு பதிவில் கூறியிருந்தபடி – இதற்கு சில தினங்கள் முன்பு – நான் கடும் மன உளைச்சலில் இருந்தேன். தளத்தை வெற்றிகரமாக தொடர்வது குறித்த மலைப்பும் அவநம்பிக்கையும் தலைதூக்கியது. எதையுமே பாஸிட்டிவ்வாக பார்த்து பழக்கப்பட்ட எனக்கு இந்த எண்ணம் சவாலாக இருந்தது. நானும் மனிதன் தானே? ஆனால் என் உள்ளத்தின் விசும்பல் மனிதர்களுக்கு புரியவில்லை என்றாலும் இறைவனுக்கு தெரியுமல்லவா? இது போன்ற ஒரு நேரத்தில் நமது பணியை தொடருமாறு சாட்சாத் ஸ்ரீ ராகவேந்திரரே கட்டளையிடுவது போன்று உணர்ந்தேன். மன சஞ்சலம் அகன்றது. உற்சாகம் பெருகியது.
அவரது அதிகாரப்பூர்வ மூல பிருந்தாவனத்தின் ஸ்டாலில் – அவர் சன்னதி முன்பாக – நமக்கு கிடைத்த இந்த கௌரவத்திற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? நமக்கு நமது பணிக்கும் ஸ்ரீ ராகவேந்திரரின் பரிபூரண ஆசி இருக்கிறது என்பதற்கு இதை விட பெரிய சாட்சி வேண்டுமா என்ன?
விடைபெறும்போது, அவசியம் மந்த்ராலயம் வருமாறும், தங்குவது, உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாகவும், தரிசனத்தின்போது உடனிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். திருவருள் துணையிருந்தால் விரைவில் மந்த்ராலயம் செல்வேன் என்று கருதுகிறேன்.
குறிப்பு : நமது தளத்தில் கூடுமானவரை எனது தனிப்பட்ட புகைப்படங்கள் இடம்பெறுவதை தவிர்க்க முடிவு செய்திருக்கிறேன். மிக மிக அவசியம் ஏற்பட்டாலொழிய எனது புகைப்படங்கள் நமது தளத்தில் இடம்பெறாது. ஒரு விஷயத்தை அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலே நமக்கு கிடைத்ததாக நான் கூறியுள்ள இந்த கௌரவம், மரியாதை – சுந்தர் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்தது அல்ல. எனது தோற்றத்திற்கோ ஆளுமைக்கோ கிடைத்ததும் அல்ல. இது நமது முயற்சிகளுக்கு கிடைத்தது. எண்ணங்களுக்கு கிடைத்தது. நமது தளத்திற்கு கிடைத்தது. உங்கள் அனைவருக்கும் கிடைத்தது. எனவே இந்த புகைப்படத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
சுந்தர் மைனஸ் ரைட்மந்த்ரா ஒரு மிகப் பெரிய பூஜ்ஜியம் என்பதை நானறிவேன். இறைவனும் அறிவான்.
[END]
நான் இந்து ஆன்மீக கண்காட்சிக்கு சென்ற பொழுது , ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனத்தை நேரம் இல்லாமையல் பார்க்க முடியவில்லை , rightmantra.com தளம் மூலமாக பார்த்து வணங்க
வாய்ப்புக்கு நன்றி சுந்தர் சார்.
விவேக் ராம்
Much more to come in the form of his blessings in your way. Those who follow his path and him, for which he will take care of everything.
***
God bless you. And I’m very happy for you for this surprise accreditation from the great Rayar.
***
Be happy always.
***
Chitti.
மந்த்ராலய மகானின் ஆசிர்வாதம் சுந்தருக்கும் நம் தளத்திற்கும் இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும். இதை படிக்கும்போதே நமக்கு ஏற்படும் உணர்வு வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை என்றால், அந்த நேரத்தில் சுந்தரின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது. This is the proof that Rightmantra is going in the Right Direction. Way to go Sundar!
SUNDARJI+RIGHTMANTRA = GODS AASHIRVAD
You are one of the Holy Instrument of GOD to make this world “sundar”( in Hindi / sanskrit)
Sankar S
i have also visites those stalls .in most of the stall i received prasadas, akshathas , sadari .i also spoke with those persons who were in the stall .they informed about meditation in jothir lingam stall. i have also seen mahavilvam plant . it was wonderful. through this i have received lot of informations .
உங்கள் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்லலாம்..! நீங்கள் இந்தத் தளம் மூலம் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது என்று இறைவன் குறிப்பால் உணர்த்தியுள்ளான்…..! இறைவனின் துணை நின்று மென்மேலும் பல வெற்றிகள் படைக்க வாழ்த்துகள் !
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”
—
விஜய் ஆனந்த்
Good acknowledgement Ji…Keep rocking :))
இறைவன் (நம்மை) மனிதனைப் படைத்து ஏதோ ஒரு மகத்தான காரியத்தைப் புரிய உலகிற்கு அனுப்புகிறார். ஆனால் அவன் இங்கு வந்ததும் எந்நேரமும் எதையாவது பிடித்துக் கொண்டுச் சுற்றித் திரிகிறான். (நானும்தான்) எதற்காக? அனைத்தும் வயிற்றுக்காகத்தான். உணவு உடலுக்குப் போகிறது. அவ்வுடல் ஆண்டு அனுபவித்த பின் இறுதியில் மண்ணிற்குப் போகிறது. இறைவன் அளித்த உயிரோ கர்மத்தோடு போகிறது. நல்லவை செய்திருந்தால் நல்லவிதமாகப் போகும். தீயதைச் செய்திருந்தால் தீயதாகப் போகும். இப்படி, தான் படைத்த மனிதன் மண்ணோடும் கர்மத்தோடும் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதைப் பார்த்து, இறைவன் உயர்ந்த காரியம் செய்ய உலகிற்கு அனுப்பி வைத்தேன்; இவன் இப்படி ஆகிவிட்டானே! என்று கண்ணீர் வடிப்பாராம்.
நானும் தங்களுடன் சேர்ந்து கரையேறிவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.RIGHTMANTRA வுடன் இணைத்து இருப்பதில் பெருமை கொள்கிரேன்.
//இப்படி, தான் படைத்த மனிதன் மண்ணோடும் கர்மத்தோடும் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதைப் பார்த்து, இறைவன் உயர்ந்த காரியம் செய்ய உலகிற்கு அனுப்பி வைத்தேன்; இவன் இப்படி ஆகிவிட்டானே! என்று கண்ணீர் வடிப்பாராம்.//
Excellent. True words Manoharan.
– Sundar
சுந்தர்ஜி
மந்த்ராலயம் செல்லும் போது நானும் வர ஸ்ரீ ராகவேந்திர சுவாமியை வேண்டி கொள்கிறேன்
நாம் என்ன தான் வேண்டினாலும் கடவுள் மனது வைத்தால் மட்டுமே நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும் ,அது போல் திடீர் என்று கிளம்பிய கண்காட்சியில் நிறைய அதிசயங்கள் நடந்தது அதுவே மிக பெரிய பாக்கியம்
சுந்தர், அருமை. என்னிடம் போனில் தெரிவித்ததை விட படிக்கும்போது உணர்வுபூர்வமாக இருக்கிறது. குருராஜரின் பரிபூரண ஆசி உங்களுக்கு நிச்சயம் உண்டு. அன்பன், பி. சுவாமிநாதன்
சுந்தர் மைனஸ் ரைட்மந்த்ரா ஒரு மிகப் பெரிய பூஜ்ஜியம் என்பதை நானறிவேன். இறைவனும் அறிவான்
சுந்தர்ஜி நீங்களே பூஜ்யம் என்றால் நாங்கள் என்ன மைனஸா ??
சுந்தர்ஜி, you deserve more . இது போல இருப்பது உங்கள் மட்டுமே முடியும்.
தங்களுடைய வார்த்தைகள் தற்பொழுது எங்களுடைய மனதையும் தாண்டி ஆன்மாவிடம் பேசுகிறது..
வஸி , தங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து வரவும்.
நன்றி.
– சுந்தர்
உங்கள் பதிவு ஒவ்வொன்றும் மெய் சிலிர்ப்பை உண்டாக்கிறது என்னை அறியாமலே ஆனந்த மழையில் நனைகிறேன்…. உங்கள் பணி தொடர நான் குருநாதரை பிரார்த்திக்கிறேன்… ஓம் ஸ்ரீ சாய் சமர்த்…
வணக்கங்குளுடன்
கார்த்திக்
/// மந்த்ராலயத்தில் வழங்கப்படும் பால்கோவா போன்ற ஆரஞ்சு நிற பிரசாதம் ஒன்றை நமக்கு கொடுத்தார். சிறுது அட்சதையும் கொடுத்தார்.///
அந்த ஆரஞ்சு நிற பிரசாதத்தின் பெயர் “பரிமள பிரசாதம்”.. பரிமள பிரசாத்தின் பெயர் காரணம் …..
ராகவேந்திர சுவாமிகளின் புனை பெயர்களில் ஒன்று “பரிமளாச்சாரியார்” என்பதாகும். ராகவேந்திர சுவாமிகளின் குரு மத்வாசாரியார் வழங்கிய பட்டம் இது.
பரிமளம் + ஆச்சரியார் = பரிமளாச்சாரியார்
பரிமளம் – சுகந்தம்,
ஆச்சரியார் – ஆசிரியர், குரு, போதகர்.
“மலரின் சுகந்தம் எப்படி காற்றில் பரவி அனைவருக்கும் இன்பம் அளிக்கிறதோ… அதுபோல, உன் (ராகவேந்திர சுவாமிகளின்) வாக்கியங்கள் (அ) வாக்குகள் சுகந்தம் நிறைந்து கேட்பவரின் மனதை கொள்ளை கொள்பவை” என்று மத்வாசாரியார் இப்பட்டத்தை சுவாமிகளுக்கு அளித்தார்.
அற்புதமான இதுவரை அறியாத விளக்கம். நன்றி.
ஸ்ரீ ராகவேந்திரர் மகானை எப்படி வணங்குவது வழிபடும் முறையை விளக்கவும் நண்பரே
ராகவேந்திரர் வழிபாட்டு முறைகள் புத்தகம் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கிப் பார்க்கவும். மந்த்ராலயம் ஒரு முறை சென்றுவிட்டு வந்தால் ஒரு தெளிவு கிடைக்கும். நன்றி.