Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 27, 2024
Please specify the group
Home > Featured > பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

print
க்ஷய திரிதியை அன்று சென்னையில் மட்டும் சுமார் 1,000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது. ‘அக்ஷய திரிதியை என்பதே ஏமாற்று வேலை, நகை வியாபாரிகளின் சூழ்ச்சி’ என்று சில அமைப்புக்கள் பிரச்சாரம் செய்து வந்தாலும் அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை.  காரணம், தங்கம் வாங்குவது எப்படி பார்த்தாலும் ஒரு பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு தானே என்கிற எண்ணம் மக்கள் மனங்களில் ஆழமாக பதிந்துள்ளது.

நம்மை பொருத்தவரை, அக்ஷய திரிதியை பற்றியும் அன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி ஒரு விரிவான பதிவை சென்ற ஆண்டே அக்ஷய திரிதியை முன்னிட்டு அளித்திருந்தோம். (அட்சய திரிதியை – வேண்டும் ஓர் சரியான புரிதல்!)

ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டது போல, அக்ஷய திரிதியை அன்று என்ன வாங்கலாம் என்று சிந்திப்பதைவிட அன்று என்ன கொடுக்கலாம் என்று சிந்திப்பது சிறந்தது. புண்ணியத்தை முதலீடு செய்ய அக்ஷய திரிதியை போல நல்ல நாள் வேறு எதுவும் இல்லை என்றும் நாம் குறிப்பிட்டிருந்ததால், அன்று நாம் செய்யக்கூடிய அறப்பணிகளுக்கு துணையாக நம் வாசகர்கள் சிலரும் அவர்களால் இயன்ற தொகையை அனுப்பியிருந்தார்கள்.

அக்ஷய திரிதியையை முன்னிட்டு அறப்பணிகள் நிச்சயம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்திருந்தாலும் என்னென்ன செய்யவேண்டும் என்று திட்டமிடமுடியவில்லை. மே 1 விடுமுறை என்பதால் அன்றைக்கு தான் ஓரளவு முடிவு செய்ய முடிந்தது.

DSC09362

மே 1 அன்று நம் நண்பர் முல்லைவனம் அவர்களின் பிறந்த நாள். இவரை பற்றிய அறிமுகம் உங்களுக்கு தேவையில்லை. நமது 2012 ஆம் ஆண்டின் பாரதி விழாவின் சிறப்பு விருந்தினர். உண்மையான பசுமைக் காவலர். சென்னையில் மட்டுமே இதுவரை 4.60 லட்சம் மரக் கன்றுகளை நட்டிருக்கிறார். அவற்றில் பலவற்றை பராமரித்தும் வருகிறார். (அகில இந்திய அளவில் இவரால் நடப்பட்ட மரக்கன்றுகள் மட்டும் 90 லட்சத்துக்கும் மேல்). பசுமைக் கலாம் திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர். தன்னைத் தேடி வருபவர்களுக்கு இலவசமாக மரக் கன்றுகளைக் கொடுத்து சமூகக் கடமையில் நம்மையும் ஒருவராக இணைத்துக்கொள்ளும் பசுமை மனிதர் இவர்.

நம் வாசகர் திரு.சிவக்குமார் அவர்கள் மூலம் திரு.முல்லைவனம் கௌரவிக்கப்படுகிறார்
நம் வாசகர் திரு.சிவக்குமார் அவர்கள் மூலம் திரு.முல்லைவனம் கௌரவிக்கப்படுகிறார்

தற்போது ‘பசுமைக் குழந்தைகள்’ என்கிற திட்டத்தை துவக்கி, அதன் மூலம் 3 வயதிலிருந்து 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை சந்தித்து அவர்களிடம் தலா ஒரு மரக்கன்றை கொடுத்து மரம் நடுவதை பற்றியும் அதை பராமரிப்பதை பற்றியும் எடுத்து கூறுகிறார். ஒரு லட்சம் குழந்தைகளை இப்படி சந்திப்பதாக திட்டம். இதுவரை 36,000 குழந்தைகளை சந்தித்துவிட்டார். மீதமுள்ள குழந்தைகளை ஜூன் 2 க்குள் சந்திப்பதாக திட்டமாம். அடேங்கப்பா… நினைத் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது இல்லையா?

DSC09343

அவரவர் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்காகவும், சொத்துக்களை சேர்க்கவும் உழைத்து வரும் சூழ்நிலையில் பசுமைக்காக உழைக்கும் இவரை என்னவென்று பாராட்டுவது? இப்போது சொல்லுங்கள் உழைப்பாளர் தினத்தன்று பிறந்த மிகப் பெரிய உழைப்பாளி இவர் அல்லவா?

இப்படிப்பட்டவரை அவர் பிறந்த நாளன்று நேரில் சந்தித்து நம் தளம் சார்பாக கௌரவித்து வாழ்த்துக் கூறுவதை கடந்த இரண்டு ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம்.

Tree Bank Van

சென்ற ஆண்டு, இவரது பிறந்த நாளின் பொது இவரது சேவைக்கு தோள் கொடுக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. மரக்கன்றுகளை செடிகளை ஏற்றிச் செல்ல உதவும் இவரது வாகனம் (மினி வேன்) ரிப்பேராகிவிட, அதை பட்டறையில் கொடுத்து சரி செய்து, போக்குவரத்து அலுவலகத்தில் FC பெறுவதற்கு உதவவேண்டும் என்று பகிரங்க கோரிக்கை விடுத்திருந்தார்.

Tree Bank 1

Tree Bank 2நமக்கு அது பற்றி தெரியவந்ததும் கடந்த ஆண்டு மே 1 அன்று நம் வாசகரும் நண்பருமான சிவக்குமார் அவர்களை உடன் அழைத்துச் சென்று அவரை சந்தித்து கௌரவித்தோம். மேலும் அவரது வாகனத்தை சரி செய்ய நம் தளம் சார்பாக ஒரு தொகையை அவருக்கு அளித்தோம். இது தவிர தனிப்பட்ட முறையில் அவருக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டபோது நம் நண்பர் ஒருவரிடம் சொல்லி. அவர் மூலமே நேரடியாக அவருக்கு உதவிகள் பெற்று தந்தோம்.

Tree Bank 3

இதை எதற்கு இங்கே குறிப்பிடுகிறோம் என்றால் தகுதியானவர்களுக்கு உதவிடம் நாம் என்றுமே தயங்கியதில்லை, மறந்ததுமில்லை.

Tree-Bank-54

Tree-Bank-4இந்த ஆண்டு, மே 1 முல்லைவனம் அவர்களின் பிறந்த நாளை முல்லைவனம் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறினோம். பசுமைக் காவலுருக்கு பசுமையான கௌரவம். ஆம்… அருஞ்சுவை பழங்கள் அவருக்கு அளிக்கப்பட்டது. அந்நேரம் பார்த்து, அவரது TREE BANK VOLUNTEER ஆக இருக்கும் பவித்ரா என்கிற கல்லூரி மாணவி ஒருவர் அங்கு வர, அவரை வைத்தே முல்லைவனம் அவர்களை கௌரவித்தோம்.

DSC00735

“எதுக்கு சார் இதெல்லாம்? உங்க அன்பு ஒன்றே போதாதா?” என்று முல்லைவன் சற்று சந்கொஜப்பட்டார்.

“நீங்க வேற சார்… இது எங்க கடமை!” என்று அவரை சமாதானப்படுத்தி வாங்கவைத்தோம்.

DSC00737

அடுத்து அவருக்கு நம் தனிப்பட்ட முறையில் அக்ஷய திரிதியையை முன்னிட்டு ரெடிமேட் ஷர்ட் ஒன்று பரிசளிக்கப்பட்டது. (அடுத்த நாள் மே 2 அக்ஷய திரிதியை!).

அக்ஷய திரிதியை அன்று ஆடை தானம் செய்வது மிகவும் விஷேடம். நாம் தனிப்பட்ட முறையில் செய்தால் அதை இங்கு சொல்ல நாம் விரும்பவில்லை. இருப்பினும் நமது செயல்கள் அக்ஷய திரிதியை போன்ற புண்ணிய நாட்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்ய வேண்டியவை குறித்து உங்களுக்கு விளக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்குமே என்று கருதித் தான் இதை வெளியே சொல்கிறோம். இந்த விஷயத்தில் ராமானுஜர் தான் நமக்கு வழிகாட்டி.

Sri Ramanujar 1

பகவத் ராமானுஜர் திருக்கோட்டியூர் சென்று திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ஸ்ரீமன் நாராயணனின் மூல மந்திரம் பற்றி உபதேசம் கேட்டார். அதற்காக அவர் 18 முறை திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூர் வரை (சுமார் 120 கி.மீ.) சென்று வந்தார்.

18வது முறை சென்றபோதுதான் ராமானுஜருக்கு திருமந்திரமான எட்டெழுத்தை உபதேசித்தார் நம்பிகள். அப்போது, “இந்தத் திருமந்திரத்தை வேறு யாருக்கும் உபதேசிக்கக் கூடாது’ என்றும், “அப்படிச் செய்தால் உனக்கு நரகம் தான் கிடைக்கும்’ என்றும் நிபந்தனை விதித்தார். ஆனால் ராமானுஜரோ “மந்திரோபதேசம்’ முடிந்த உடனே திருக்கோட்டியூர் கோயில் கோபுரத்தில் ஏறி நின்று, அந்த ஊர் மக்களையெல்லாம் அழைத்து, அனைவருக்கும் காதில் விழும்படியாக உங்களை நற்கதிக்கு அழைத்து செல்லும் மகாமந்திரம் ஒன்றை உங்களுக்கு கூறப்போகிறேன் என்று கூறி ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்தை உரக்கக் கூவினார். “இந்த நாமத்தை ஜெபித்து வந்தால் நீங்கள் அனைவரும் பரமபதம் அடைவீர்கள்” என்று கூறினார்.

Sri Ramanujar 2

இதையறிந்த திருக்கோட்டியூர் நம்பிக்கு மிகவும் கோபம் வந்தது. தான் இட்ட நிபந்தனையை மீறி அரியதொரு திருமந்திரத்தை நாடறியச் சொன்ன ராமானுஜரைக் கண்டித்து, “இதனால் என்ன விளைவு நேரிடும் என்று தெரிந்தும் இவ்வாறு செய்துவிட்டீரே?’ என்று கேட்டார். அதற்கு ராமானுஜர், “இதனால் அடியேன் ஒருவனுக்கு நல்லது நடக்காமல் போனாலும், இதைக் கேட்ட மக்களுக்கு நல்ல கதி கிடைக்குமே என்ற நல்ல எண்ணத்தில்தான் இதைச் செய்தேன்” என்றார்.

எனவே நமது பதிவுகளை படிக்கும் அன்பர்கள் அவற்றை படிப்பதோடு விட்டுவிடாமல் அதில் கூறப்பட்டுள்ளவைகளை தங்களால் இயன்றளவு நடைமுறைப்படுத்தவேண்டும். இல்லையெனில், என் எழுத்துக்கள் விழலுக்கு இறைத்த நீராக வீணாகப் போய் தற்பெருமை பேசிய பாவம் மட்டுமே எம்மை வந்து சேரும். உங்களை சுற்றி நீங்களே நேரடியாக செய்யக்கூடிய எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. நேரமும் சந்தர்ப்பமும் கிடைக்கும் போதெல்லாம் அந்த நல்ல செயல்களை செய்து வாருங்கள். கடவுளை கருவறையில் மட்டுமே தேடுகிறவர்களுக்கு அவன் எந்த காலத்திலும் தென்படமாட்டான்.

BACK TO முல்லைவனம் அவர்கள்.

நாம் ஷர்ட்டை பரிசளித்ததும், “இதெல்லாம் எதுக்கு சார் ? தெரிஞ்சிருந்தா ஏழை ஸ்கூல் குழந்தைகள் ரெண்டு பேருக்கு யூனிபார்ம் எடுத்துக் கொடுக்கச் சொல்லியிருப்பேனே” என்றார்.

“அப்படி தேவை இருக்கும் தகுதியுடைய குழந்தைகள் இருந்தால் அழைத்து வாருங்கள். இயன்றதை செய்ய காத்திருக்கிறோம். இது முழுக்க முழுக்க என்னுடைய அன்புக்காகவும், அக்ஷய திரிதியையை முன்னிட்டு ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்யவேண்டும் என்பதற்காகவும் தான் செய்தேன். எங்கள் தள வாசகர்களுக்கு அக்ஷய திரிதியையை முன்னிட்டு நாளை பல அறச் செயல்களை செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. செய்யப்போவது நாம் தான் என்றாலும் உண்மையாக செய்வது அவர்கள் தான். நாம் வெறும் கருவி. அன்னத்தை பரிமாறுகிற கைகளுக்கு தான் அன்னதானப் புண்ணியமே தவிர, இந்த கரண்டிக்கு என்ன கிடைக்கப்போகிறது. எனவே எனக்கு தனிப்பட்ட முறையில் புண்ணியம் சேர்க்கவேண்டும் என்று கருதி தான் இதை செய்தேன். மேலும் உங்கள் மீதுள்ள அன்பும் ஒரு காரணம். புண்ணியம் இல்லையென்றாலும் என்னுடைய நெருங்கிய நண்பருக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்த சந்தோஷம் எனக்கு போதும்” என்றேன்.

DSC00743

அந்த ஷர்ட்டை கூட, அங்கு வந்திருந்த பவித்ரா அவர்கள் மூலமாகவே முல்லைவனம் அவர்களிடம் ஒப்படைத்தோம்.

முல்லைவனம் அவர்கள் இந்த உலகிற்கு செய்து வரும் சேவைக்கு, இந்த வையத்தையும் வானகத்தையும் ஒருங்கே அவருக்கு கொடுத்தாலும் அது ஈடாகாது எனும்போது தகுதி வாய்ந்த அவருக்கு நம்மால் இயன்ற ஒரு சிறு உதவியை அக்ஷய திரிதியையை முன்னிட்டும் அவரது பிறந்த நாளை முன்னிட்டும் செய்த திருப்தி நமக்கு ஏற்பட்டது.

இரண்டு நாட்கள் கழித்து ஒரு நாள் திரு.முல்லைவனம் அவர்களிடமிருந்து போன் வந்தது.

“சார்… நீங்க கொடுத்த ஷர்ட் ரொம்ப சூப்பர். கச்சிதமா இருந்தது. நேத்தைக்கு (அக்ஷய திரிதியை அன்று) அதை போட்டுக்கிட்டு தான் வடபழனி முருகன் கோவிலுக்கும் பெசன்ட் நகர் அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்கும் போனேன்!” என்றார்.

அப்போது நாம் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அடுத்து அக்ஷய திரிதியை முன்னிட்டு நம் தளம் சார்பாக செய்தது என்ன?

வழக்கமாக ஒவ்வொரு மாதக்கடைசியும் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் கோ-சாலைக்கு நம் தளம் சார்பாக இரண்டு மூட்டை தீவனங்கள் இறக்கப்பட்டுவிடும். நமக்கு இதை செய்ய உதவி கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் இது தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். வேண்டுமானால் எதிர்காலத்தில் இறையருளால் நாம் வழங்கும் மூட்டைகள் அதிகரிக்குமே தவிர குறையாது. (ஒரு மூட்டை கலப்பு தீவனம் = 50 கிலோ = Rs.1,100​).

DSC00669

அக்ஷய திரிதியை மே 2 அன்று வருகிறது என்பதால் எப்போதும் மாதக்கடைசிக்குள் நாம் ஆர்டர் செய்யும் தீவனத்தை இம்முறை இரண்டு நாட்கள் கழித்து ஆர்டர் செய்தோம். சரியாக அக்ஷய திரிதியை அன்று பசுக்கள் நாம் வழங்கும் தீவனத்தை உட்கொள்ளவேண்டும் என்கிற விருப்பம் தான் காரணம்.

நண்பர்கள் ஒரு சிலர் இம்முறை நம்முடைய அக்ஷய திரிதியை அறப்பணிகளில் தங்களையும் ஈடுபடுத்திகொள்ளவேண்டும் என்று அவர்களால் இயன்ற தொகையை அனுப்பியிருந்ததால், இம்முறை கூடுதலாக ஒரு மூட்டை ஆர்டர் செய்தோம். மொத்தம் மூன்று மூட்டைகள்.

DSC00672

தீவனத்தை இறக்குவது அத்தனை சுலபமல்ல.. ஆர்டர் செய்து அதற்கு கடையில் சென்று பணம் கட்டி, பின்னர் தீவனம் இறக்கப்படும் வரை அருகே இருந்து அதை உறுதிப் படுத்திக்கொண்டு தான் வருவோம். இந்த விஷயத்தில் நாம் சுணக்கம் காட்டுவதில்லை.

DSC00684

இம்முறையும் அதுவே… என்ன ஒரு முன்னேற்றம் என்றால், முன்பெல்லாம் நாம் நேரில் சென்று பணம் கட்டிய பிறகு மட்டுமே தீவனத்தை கலக்கவே ஆரம்பிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் நாம் ஃபோன் செய்து சொல்லிவிட்டால் போதும், கலந்து ரெடியாக மூட்டை கட்டி வைத்திருப்பார்கள். நாம் சென்று பணத்தை கட்டியவுடன் ட்ரை சைக்கிளில் கொண்டு வந்து போட்டுவிட்டு போய்விடுவார்கள். (கோவிலில் இருந்து மூன்று தெருக்கள் தள்ளி தீவனக்கடை அமைந்துள்ளது).

DSC00691

மே 1 அன்று மாலை சற்று சீக்கிரம் கிளம்பி தீவனக்கடைக்கு சென்றோம். முன்பே ஆர்டர் செய்துவிட்டபடியால்… கலக்க ஆரம்பித்திருந்தார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் மூட்டை கட்டி விஸ்வநாதர் கோவிலில் இருந்த நாயன்மார்கள் சாட்சியாக அவர்கள் முன்பு தீவன மூட்டைகள் இறக்கப்பட்டது.

பசுக்கள் கட்டப்பட்டிருப்பது தெரிகிறதா....?
பசுக்கள் கட்டப்பட்டிருப்பது தெரிகிறதா….?

பின்னர் பாலாஜியை அழைத்து, “நாளைக்கு நம்ம மூட்டையில் இருந்து தான் தீவனம் எடுத்து போடனும்” என்று அன்புக் கட்டளையிட்டுவிட்டு கிளம்பினோம். எதிரே இருந்த துர்கா பவன் போய் ஒரு தோசையும் பில்டர் காபியும் சாப்பிட்டுவிட்டு அப்படியே நேரே ராயப்பேட்டை பயணம் .

(இங்கே காசி விஸ்வநாதர் கோவிலுக்கு எதிரே துர்கா பவன் என்கிற உடுப்பி ஓட்டல் உண்டு. டிபன் எல்லாம் ரொம்ப பிரமாதமா இருக்கும். குறிப்பாக தோசை டாப். இந்த பக்கம் போனால் செல்லும் நேரத்தை பொறுத்து காபியோ அல்லது டிபனோ சாப்பிடாமல் வராமாட்டோம். குடும்பத்தோட ஒரு நாள் விஸ்வநாதரை தரிசனம் பண்ணிட்டு அப்படியே இங்கே போய் பசியாறிட்டு வாங்க!)

மறுநாள் அக்ஷய திரிதியை அன்று மதியம் பாலாஜிக்கு போன் செய்து அவர் அவ்வாறு செய்தாரா என்று உறுதிப்படுத்திக்கொண்டோம். “நம்ம மூட்டையில இருந்து எடுத்து தான் காலைல எல்லா மாடுகளுக்கும் தீவனம் வெச்சேன் சார். திரும்பவும்  சாயந்திரமும் வைப்பேன்” என்றார்.

பசுக்களுக்கு சரியான நாளில் உணவு போய் சேர்ந்ததில் நமக்கு பரம திருப்தி. இந்த சேவையை செய்திட உறுதுணையாய் இருந்த வாசகர்களுக்கு நம் நன்றி.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

(இந்த தளத்தில் நமது புகைப்படங்கள் எதுவும் வெளியாகாதவாறு கூடுமானவரை பார்த்துக்கொள்கிறோம். இருப்பினும் நம்முடன் நம் நண்பர்களோ வாசகர்களோ எவரும் வராத பட்சத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிடவேண்டியுள்ளது. அதற்காக வாசகர்கள் மன்னிக்கவேண்டும். நாம் இருக்கும் புகைப்படங்களை நமது தனிப்பட்ட படமாக கருதாமல், உங்கள் அனைவரின் சார்பாகவும் உங்களின் பிரதிநிதியாக நாம் செய்யும் பணிகளை உங்கள் கவனித்திற்கு கொண்டு வரவேண்டியே பதிவு செய்யும் படமாக கருதும்படி கேட்டுக்கொள்கிறோம்.)

மேற்கு மாம்பலத்தில் இருந்து நேரே ராயப்பேட்டை.

சென்ற முறை அரிசி வாங்கிய அமுதம் கூட்டுறவு அங்காடிக்கு மே 1 ஐ முன்னிட்டு விடுமுறை என்பதால், இம்முறை ராயபேட்டை முழுக்க சுற்றி, கடைசியில் ஒரு மொத்தவிலை அரிசிக் கடையில் நாம் எதிர்பார்க்கும் விலையிலும் தரத்திலும் அரிசி கிடைத்தது. ஒரு மூட்டை ஆர்டர் செய்துவிட்டு, சேகர் அவர்களின் வீட்டு முகவரியை கொடுத்து உடனே அங்கே மூட்டையை இறக்கிவிடவேண்டும் என்றோம். அரிசியோடு இரண்டு கிலோ உளுந்தும் வாங்கிக்கொண்டோம்.(உளுந்து எதுக்கு? கொஞ்சம் பொறுங்க!) நாம் முன்னே மெதுவாக  செல்ல, நமக்கு பின்னாலேயே கடை பையன் அரிசி மூட்டையை சைக்கிளில் கட்டி கொண்டு வந்துவிட்டான்.

வழக்கமாக நாம் 50 கிலோ அரிசி தான் கிளிகளின் உணவுக்கு நாம் வழங்குவது வழக்கம். ஆனால் அக்ஷய திரிதியையை முன்னிட்டு 25 கிலோ எக்ஸ்ட்ராவாக 75 கிலோ கொண்ட ஒரு மூட்டையாக ஆர்டர் செய்தோம்.

சேகர் அவர்களிடம் அந்த மூட்டையை ஒப்படைத்து, “இது இந்த மாதத்துக்கான எங்கள் தளத்தின் கோட்டா. நாளை அக்ஷய திரிதியை என்பதால் இந்த மூட்டையில் இருந்து அரிசியை எடுத்து கிளிகளுக்கு வைத்தால் சந்தோஷப்படுவோம்” என்றோம்.

DSC00712

காலை வேளைக்கு தேவையான அரிசி பதப்படுத்தி தயார் நிலையில் இருப்பதாகவும், மாலை வேளைக்கு வேண்டுமானால் நம் அரிசியை பயன்படுத்திக்கொள்வதாகவும் கூறினார். எப்படியோ அக்ஷய திரிதியை அன்று கிளிகள் நம் அரிசியை கொண்டு பசியாறினால் நமக்கு அது போதும். (ஒரு வேளைக்கு சுமார் 500 முதல் 1000 கிளிகள் வரை பசியாற 7.5 கிலோ அரிசி செலவாகிறது.).

அடுத்து உழைப்பாளிகள் தினத்தை முன்னிட்டு சேகர் அவர்களை கௌரவித்தோம்.

DSC00716

நாம் வாங்கிக்கொண்டு சென்ற உளுந்து ரெண்டு கிலோவை கொடுத்து, “சார் உழைப்பாளிகள் தினத்தை முன்னிட்டு உங்களை கௌரவிக்க இதை தருகிறேன். சால்வை வாங்கி அணிவித்தால், அதனால் யாருக்கு என்ன பயன்? இந்த பக்கம் சென்றவுடன் அந்த பக்கம் தூக்கி போட்டுவிடுவீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே பயனுள்ளதாக தான் உளுந்து வாங்கி வந்தேன். உங்களுக்கு என்று தனியாக அரிசி வாங்கி வந்தால் அதையும் நீங்கள் கிளிகளுக்கு வைத்துவிடுவீர்கள். எனவே தான் உளுந்து வாங்கி வந்தேன். இதன் அருமை உங்கள் வீட்டம்மாவுக்கு தெரியும். இந்தாருங்கள் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.  வாங்கிய சொத்துக்கு லோன் கட்டவும், அவரவர் குடும்பத்தை காக்கவும், உழைப்பவர்கள் மத்தியில் நீங்கள் ஊருக்கு உழைப்பவர். உங்களை நம்பி தினமும் இரண்டு வேளை நூற்றுக்கணக்கான கிளிகள் பசியாறுகின்றன. ஒரு நாள் கூட விடாமல் தொடர்ந்து தினமும் இரண்டு வேளை தலா இரண்டு மணிநேரம் (மொத்தம் 4 மணிநேரம்) ஒதுக்கி, கிளிகளுக்கு உணவளிக்கிறீர்கள். உங்களுக்கு ஏதேனும் இன்று செய்ய விரும்பியே இந்த எளிய பரிசு. தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.” என்றோம்.

“இதெல்லாம் எதுக்கு சுந்தர்?” சற்று நெளிந்தார் சேகர்.

“எங்க சந்தோஷத்துக்கு!” என்றோம்.

கிளியோடு (இறக்கை வெட்டப்பட்ட) சில நிமிடங்கள்….

அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, முன்பொரு பதிவில் நாம் கூறிய இறக்கை வெட்டப்பட்ட கிளிகளை (இறைவனின் படைப்பும் மனிதனின் புத்தியும் – மனம் விட்டு பேசலாமா?)  அவர் வீட்டில் பார்க்க நேர்ந்தது. கிளி வளர்க்க ஆசைப்பட்ட எவரோ ஒருவர் ஒரு ஜோடி கிளிகளை கூண்டோடு கடையில் வாங்கி வந்து வீட்டில் வைக்க, இறக்கை வெட்டப்பட்ட அந்த கிளிகள் கத்திய கத்தலில், எரிச்சலுற்ற அந்த ‘X’ மனிதரின் மனைவி, “இதை முதல்ல போய் எங்கேயாவது ஒழிச்சுட்டு வாய்யா… அப்போ தான் உனக்கு சாப்பாடு” என்று கூறிவிட, சேகர் அவர்களை பற்றி கேள்விப்பட்ட அந்த மனிதர் இவரிடம் கொண்டு வந்து அதை கொடுத்து, “இவற்றை நீங்கள் தான் பார்த்து வளர்த்து, இறக்கை வளர்ந்தவுடன் மற்ற கிளிகளுடன் சேர்த்து விடுங்கள்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.

DSC00722

நாம் சென்ற போது அந்த கிளிகள், வீட்டில் சுதந்திரமாக பீரோ மீது உலவிக்கொண்டிருந்தன.  (அவற்றால் பறக்க முடியாது!)

“நைட் ஆனா கூண்டுல அடைச்சிடுவேன். பூனைகளோட பயம் தான் வேற ஒண்ணுமில்லே சுந்தர். இல்லேன்னா எப்புவுமே இப்படியே விட்டுடலாம்.. இன்னும் நாலஞ்சு மாசத்துல இறக்கை வளர்ந்துடும். அதுக்கப்புறம் அந்த கிளிகளோடவே பறந்து போய்டும்” என்றார்.

DSC00699

கையில் ஒரு பேனாவை எடுத்துக்கொண்டு அவற்றை நோக்கி நீட்ட, அழகாக அதன் மேல் வந்து உட்கார்ந்துகொண்டன. கிளிகளை அத்தனை பக்கத்தில் இருந்து அப்போது தான் பார்க்கிறேன். அத்தனை சந்தோஷம். அவற்றை ஆசை தீர கொஞ்சிக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் நமக்கு நெருங்கிய நண்பர்களாகிவிட்டன. நம்மை பிரிய மனமில்லை. சுதந்திரமாக பாடித் திரியவேண்டிய கிளிகளை இப்படி இறக்கைகளை வெட்டி கூண்டில் அடைக்க பாவிகளுக்கு எப்படித் தான் மனம் வருகிறதோ.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது, சேகர் அவர்களின் நண்பர் ஒருவர் வந்தார். அவர் ஒரு ஜோதிடர் + புகைப்படக்காரராம். இதுவரை 5000 திருமணங்களுக்கும் மேல் புகைப்படங்கள் எடுத்தவராம். அவரிடம் நம்மை திரு.சேகர் அறிமுகப்படுத்த, அவரிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அடேங்கப்பா… பல புதிய விஷயங்களை தெரிந்துகொண்டோம். (இது பற்றிய பதிவு வேறொரு நாளில் தருகிறோம்).

DSC00709

பின்னர் சேகர் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினோம்.
ஆக… அக்ஷய திரிதியை முன்னிட்டு மூன்று நல்ல விஷயங்களை செய்தாயிற்று. மே ஒன்றை முன்னிட்டு நாட்டுக்காக இந்த சமூகத்துக்காக நமது சந்ததிகளுக்காக உழைக்கும் இரண்டு நல்லவர்களை சந்தித்தாயிற்று.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அடுத்த நாள் அக்ஷய திரிதியை. அக்ஷய திரிதியை முன்னிட்டு ஏதாவது ஒரு கோவிலில் நம் தளம் சார்பாக அன்னதானம் செய்யவேண்டும் என்று ஆசை. ஆனால் வேலை நாளில் அக்ஷய திரிதியை வருவதால் நம்மால் நேரில் செல்ல முடியாது. சரி நேரில் செல்ல முடியவில்லை என்றால் என்ன இப்போது? பரவாயில்லை… பணத்தை கட்டிவிடலாம் என்றால் எங்குமே ஸ்லாட் கிடைக்கவில்லை. நங்கநல்லூர் நிலாச்சாரல் நினைவுக்கு வந்தது. பார்வையற்ற கிராமப்புற மாணவிகள் இங்கு தங்கி படிக்கிறார்கள். இங்கு ஏற்கனவே சில முறை நம் தளம் சார்பாக அறப்பணிகள் நடைபெற்றுள்ளன. நிலாச்சாரல் திருராதாக்ருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்டு அக்ஷய திரிதியை முன்னிட்டு மாணவிகளுக்கு உணவு ஸ்பான்சர் செய்ய விரும்புவதாக  தெரிவித்தோம். இங்கும் ஸ்லாட் கிடைக்கவில்லை. “ஏற்கனவே மூணு பேர், நாளைக்கு மூணு வேளை சாப்பாட்டுக்கும் பணம் கட்டியிருக்காங்க சுந்தர். முன்னாடியே சொல்லியிருக்கக்கூடாதா?” என்றார். “ஆமாம் சார். முன்னாடியே சொல்லியிருக்கணும். ஆனா கடைசி நேரத்துலதான் ஃபண்ட்ஸ் கிடைக்குது. கையில இருந்து ஓரளவுக்கு மேல் என்னால போட முடியலே…” என்றோம்.

“வேணும்னா ஒன்னு பண்ணுங்க… நாளைக்கு நைட் டின்னருக்கு பிறகு சாப்பிட ஐஸ்க்ரீம் வேணும்னா வாங்கிட்டு வாங்க… பிரியமா சாப்பிடுவாங்க. நீங்களும் அப்படியே அவங்க கூட டின்னருக்கு ஜாய்ன் பண்ணிக்கலாம்” என்றார்.

DSC05232

‘சார் என்னால கமிட் பண்ண முடியாது. நாளைக்கு டயம் எப்படி போகும்னு தெரியாது. நிலாச்சாரல் வர்றதா இருந்தா உங்களுக்கு ஒரு ஃபோன் பண்ணிட்டு வரும்போது ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்துடுறேன். அவங்க கிட்டே இப்போதைக்கு எதுவும் சொல்லாதீங்க. நான் வரலேன்னா ஏமாந்துடுவாங்க!”

“நோ ப்ராப்ளம். நீங்க வர்றதா இருந்தா கிளம்பும்போது எனக்கு ஒரு கால் பண்ணிட்டு வாங்க…. அது போதும். ஐஸ்க்ரீம் தனித் தனி கப்பா வாங்காதீங்க. ஒரு கிலோ பேமிலி பேக் வாங்கினீங்கன்னா.. ஒரு 10, 12 பேர் தாராளமா சாப்பிடலாம்” என்றார்.

“ஓ.கே.சார்…!” என்றோம்.

முந்தைய தினம் விடுமுறை என்பதால் அக்ஷய திரிதியை அன்று காலை சற்று சீக்கிரமே அலுவலகத்துக்கு கிளம்ப வேண்டியிருந்தது. ஏதாவது ஒரு கோவிலுக்கு போக நினைத்தோம். ஆனால் பரபரப்பில் முடியவில்லை. சரி… மாலை பார்த்துக்கொள்ளலாம்… என்று விட்டுவிட்டோம். மாலை அலுவலகத்தை விட்டு கிளம்பவே நேரம் 7 மணியாகிவிட்டது. நிலாச்சாரல் செல்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. காரணம் ஏற்கனவே மே 1 விடுமுறை நாள் என்பதால் பதிவு எதுவும் அளிக்கவில்லை. நிலாச்சாரல் சென்று, பிறகு வீட்டுக்கு செல்ல எப்படியும் இரவு 10 மணியாகிவிடும். மறுநாள் எப்படி பதிவு போடுவதாம்? தவிர மனம் வேறு சற்று அமைதியில்லாமல் இருந்தது. நிச்சயம் கோவிலுக்கு செல்லும் மனநிலையில் நாம் இல்லை. (கோவிலுக்கு செல்ல நம்மை பொறுத்தவரை MINDSET மிகவும் முக்கியம். அவசர அவசரமாக பரபரப்பாக நம்மால் ஏதோ ஊர்சுற்றி பார்ப்பது போல கோவிலுக்கு செல்ல முடியாது. ஆலய தரிசன விதிமுறைகளை ஓரளவு பின்பற்றி ஒரு முழுமையான தரிசனமாகத் தான் கோவிலுக்கு செல்வது வழக்கம்!)

கோவிலுக்கு தான் போகலே… நிலாச்சாரல் போய் அந்த மாணவிகளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்து அவங்க கூட கொஞ்ச நேரம் இந்த நல்ல நாளில் செலவு செய்வோமே என்று நிலாச்சாரல் புறப்பட்டோம்.

திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஃபோன் செய்து, நாம் வரும் விஷயத்தை சொன்னோம்.

“நான் வெளியிலே இருப்பேன். எப்படியும் 8.30 PM ஆயிடும் நான் வர்றதுக்கு. நீங்க வந்தீங்கன்னா… அவங்களோட பெசிக்கிட்டுருங்க நான் வந்துடுறேன்” என்றார்.

சென்ற தீபாவளியை நம் பெற்றோரை அழைத்துச் சென்று நிலாச்சாரலில் மாணவிகளுடன் கொண்டாடியபோது….

நாம் நங்கநல்லூர் செல்லும்போது மணி 8.00 இருக்கும். அங்கேயே அருண் ஐஸ்க்ரீம் பார்லரில், ஐஸ்க்ரீம் 1 கிலோ ஃபேமிலி பாக் வாங்கிக்கொண்டோம். நேரே நிலாச்சாரல் சென்றோம். மாணவிகள் நாம் வந்திருப்பதை அறிந்தததும் ஒரே குஷியாகிவிட்டார்கள்.

ராதாகிருஷ்ணன் அவர்கள் இல்லை. போன் செய்து நாம் வந்துவிட்டதை தெரியப்படுத்தினோம்.

“நீங்க பேசிக்கிட்டு இருங்க.. நான் இன்னும் 20 மினிட்ஸ்ல வந்துடுவேன்” என்றார்.

மாணவிகளுடன் ஜாலியான அரட்டை துவங்கியது.

(இங்கே நீங்கள் பார்க்கும் புகைப்படங்கள், சென்ற தீபாவளி அன்று மாலை நம் பெற்றோருடன் நிலாச்சாரல் சென்று அவர்களுடன் கொண்டாடியபோது எடுத்தது. இம்முறை நாம் புகைப்படமெடுக்கவில்லை. எனவே இந்த படங்களை வெளியிட்டுள்ளோம்.)

DSC05297

“என்ன சார் நியூ யாருக்கு அப்புறம் வரவேயில்லை… எப்படி சார் இருக்கீங்க? உங்க ப்ரெண்ட்ஸ் சந்திரன் அண்ணா, பிரேம் கண்ணன் அண்ணா, முகுந்த், ஹரி, கண்ணன் இவங்கல்லாம் எப்படி இருக்காங்க…. அக்காங்கள்ளாம் எப்படி இருக்காங்க…?” அக்கறையுடன் விசாரித்தார்கள்.

ஒவ்வொரு முறையும் அவர்களை நாம் பாடச் சொல்வதும், அவர்கள் நம்மை கதை சொல்லச் சொல்வதும் நடக்கும்.

“நீங்க முதல்ல பாடுங்க… அப்புறம் நான் கதை சொல்றேன்!” என்றோம்.

நமது நிபந்தனைக்கு ஒப்ப்புக்கொண்டார்கள்.

“ஏய்… என்ன பாட்டு டீ பாடுறது….” அவர்களுக்குள் .பேசிக்கொண்டார்கள்.

“ஒவ்வொரு பூக்களுமே பாடலம்டீ..”

“வேணாம்… வேணாம்… தீபாவளிக்கு  தானே பாடினோம். வேற பாட்டு ஏதாவது பாடலாம்….”

கடைசீயில் நமக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றையே தேர்வு செய்தார்கள்.

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் வரும் கடவுள் உள்ளமே பாடல் தான் அது. அவர்கள் கோரஸாக அந்தப் பாடலை பாட, நாம் நம்மை மறந்த படி அந்த பாடலை கேட்டுகொண்டிருந்தோம். இந்த பாடலை இவர்கள் பாடும்போது கேட்பது உண்மையில் உயிரை உருக்கும் ஒரு அனுபவம்.

பட்டாசு வெடிப்பதில் ஒரு மாணவியுடன்....
பட்டாசு வெடிப்பதில் ஒரு மாணவியுடன்….

பாடி முடித்ததும் நாம் தட்டிய நமது கைதட்டலில் அந்த கட்டிடமே அதிர்ந்தது.

“அண்ணா… நாங்க பாடிட்டோம்… நீ சொன்ன மாதிரி கதை சொல்லுங்க… கதை சொல்லுங்க….”

நமது தளத்தில் நாம் அளித்த நீதிக்கதைகள் சிலவற்றை சொன்னோம். குறிப்பாக மதன் மோஹன் மாளவியா இந்து பல்கலைக்கழகம் கட்ட நிஜாமிடம் பட்ட அவமதிப்பை எப்படி வெகுமதியாக மாற்றினார் என்கிற கதையை சொன்னோம். மிகவும் இரசித்து கேட்டார்கள்.

மத்தாப்பு சந்தோஷம்....
மத்தாப்பு சந்தோஷம்….

“அண்ணா நீங்க இன்னைக்கு கோவிலுக்கு போகலியா?” ஒரு மாணவி திடீர் என்று கேள்வியை வீச, “அதுக்கு பதிலாத் தான் இங்கே வந்துட்டேனே!” என்றோம்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ராதாகிருஷ்ணன் வந்துவிட்டார்.

பரஸ்பர நலம் விசாரிப்பு பின்னர், “முதல்ல எல்லாரும் சாப்பிடுங்க…. எல்லாரும் பசியா இருப்பீங்க!”  நம்மையும் அவர்களுடன் சாப்பிட சொன்னார். கொஞ்சம் கேசரி அப்புறம் சப்பாத்தி சென்னா.

பரஸ்பரம் பேசிக்கொண்டு ஜாலியாக அவர்களுடன் பேசிக்கொண்டு சாப்பிட்டு முடித்தோம்.

சாப்பிட்டவுடன் நாம் வாங்கி சென்ற ஐஸ்க்ரீமை ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்து வந்தார்கள். (வந்தவுடனேயே அதை ஃபிரிஜ்ஜில் வைக்கச் சொல்லி கொடுத்துவிட்டோம்.).

எல்லாரும் ஐஸ்க்ரீமை ஆசைதீர சாப்பிட… நாமும் அவர்களுடன் சேர்ந்து நீண்ட நாட்கள் கழித்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம். (நாம் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதில்லை!).

DSC00757

பழையதே ஆனாலும் நான்கு பேரோடு அதை சாப்பிடும்போது அதன் சுவையே தனி. அப்படியிருக்க ஐஸ்க்ரீம் எத்தனை சுவையாக இருக்கும்?

சும்மாவா சொன்னார்கள் பெரியோர்கள் “உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்’ என்று…?

ஐஸ்க்ரீம் சாப்பிட்டுவிட்டு மேலும் கொஞ்ச நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றோம்.

DSC05303

“அண்ணா அடுத்து எப்போண்ணா வருவீங்க?” என்றார்கள்.

“அடிக்கடி… என்னால் முடிஞ்சப்போவேல்லாம் வருவேன்மா… கவலைப்படாதீங்க….!” என்று கூறி விடைபெற்றோம்.

Lord Siva Bijapur

நிலாச்சாரல் போகும்போது ஒருவித மன பாரத்துடன் தான் சென்றோம். (அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்!). ஆனால் வரும்போது என்னமோ தெரியவில்லை. நெஞ்சம் நிறைந்திருந்தது. கோவில்களில் என்னால் காண முடியாத இறைவனை, பார்வையற்ற இவர்களின் கள்ளங்கபடமற்ற சிரிப்பில் மகிழ்ச்சியில் கண்ட நிறைவு ஏற்பட்டது.

ஏனெனில் நாம் செல்லும் பாதையை தீர்மானிப்பது நாமல்ல… அவன்!

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா எம் இறைவா

ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே

இது தான் இயற்கை தந்த பாசபந்தமே!!

[END]

11 thoughts on “பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

  1. தங்களின் நீண்ட பதிவு மிக அருமை. உழைப்பாளர் தினத்தன்று , திரு முல்லைவனத்தை அவரது பிறந்தநாளில் சந்தித்து கௌரவித்தது மிக்க மகிழ்ச்சி. திரு முல்லைவனத்தின் பசுமை திட்ட செயல் அலற்பர்கரியது.
    அவரது ஒரு லட்சம் குழந்தைகளை சந்திக்கும் திட்டம் நிறைவேற எனது வாழ்த்துக்கள்.

    அடுத்து, நாமும் ராமானுஜர் போல்தான். நாம் படித்தவற்றை அடுத்தவர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை மிக ஆவலுடன் செய்து கொண்டிருக்கிறோம். யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன்.

    அடுத்து மேற்கு மாம்பலம் கோசாலைக்கு நம் தளம் சார்பாக நீங்கள் செய்த உதவியில் எங்களுக்கும் கொஞ்சம் புண்ணியம் கிடைக்கும் என நினைக்கிறன்.

    கிளி சேகருக்கு ரைட் மந்திர கௌரவித்தது மிகவும் நல்ல விஷயம். இறக்கை வெட்டப்பட்ட கிளிகள் வெகு விரைவில் இறக்கை முளைக்க வேண்டும்.

    நிலாச்சாரல் குழந்தைகளுடன் நீங்கள் டைம் ஸ்பென்ட் பண்ணி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டீர்கள்/ ஐஸ் கிரீம் சுவையுடன் அவர்கள் மனமும் குளிர்ந்தது .

    நாம் அக்சயதிருதி அன்று பெங்களூர் அல்சூரில் உள்ள எல்லா கோவில்களுக்கும் சென்று வந்தோம்

    நன்றி உமா

  2. சுந்தர்ஜி
    படிப்பதற்கே இந்த பதிவு மிக நீளமாக உள்ளது என்றால், நீங்கள் இவற்றை எல்லாம் செய்வதற்கு, எவ்வளவு சிரமப்பட்டு (தனியாக அலுவலக பணிகளுக்கு இடையில்) செய்து இருப்பீர்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. என்னதான் பணம் இருந்தாலும் சேவை செய்ய நேரம் ஒதுக்கி, சிரமம் பாராமல் அதை நேர்த்தியுடன் சரியான நேரத்தில் செய்து இருப்பது நமது சுந்தர்ஜி அவர்களின் சிறப்பு இயல்பு. சேவைக்கு பண ரீதியாக உதவிய வாசக நெஞ்சங்களுக்கும் நன்றி. அட்சய திரிதியை அன்று உதவிகள் சேரும் படி சுந்தர்ஜி செய்து இருப்பதால் அனைவரும் மென்மேலும் உயர்ந்து நம் தளமும் வளரட்டும். நன்றி

  3. அண்ணா
    ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா இந்த பதிவை
    படிக்கும்போது.
    சுபா

  4. dear sundar,
    Great Work. I appreciatte your helping tendency.Try to go different locations to help people. As of me service to man is service to god.

  5. சுந்தர், நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். மற்றவர்களுக்காக நேரத்தையும் பணத்தையும் செலவு செய்வதற்கு நிச்சயம் இறைவனால் ஆசீர்வதிக்கப்படவேண்டும். எத்தனையோ பேருக்கு அடுத்தவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் ஒரு சில காரணங்களினால் எல்லோராலும் அப்படி செய்ய முடிவதில்லை.

    Highly inspiring article and deeds. You are a truly blessed soul Sundar and I am proud to say that I am associated with Sundar and Rightmantra. This article will go a long way in inspiring others to do good deeds on their own on auspicious days like Akshaya Tritiya.

  6. Nice to read. நல்ல ஒரு உணர்வு படித்தவுடன். ஜிவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல்.

  7. “அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு”

    மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும்
    மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும் – நம்மை
    வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும் – நம்மை
    வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும் – செய்த

    தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்

    அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு
    அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு – வாழ்வில்
    நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு – வாழ்வில்
    நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு – என்றும்

    தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
    கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும் செய்த
    தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்.

    இந்த பணி சிறக்க தோள் கொடுத்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் .நன்றி .நன்றி ….

    -மனோகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *