Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > “குடிசையில் வாழும் அந்த துறவிக்கு உதவி செய்” – கனவில் கட்டளையிட்ட துர்க்கா தேவி!

“குடிசையில் வாழும் அந்த துறவிக்கு உதவி செய்” – கனவில் கட்டளையிட்ட துர்க்கா தேவி!

print
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் – இந்த பெயரை சொல்லும்போதெல்லாம் ஒரு இனம் புரியாத உற்சாகம் பீறிட்டு கிளம்பும். நம்பிக்கை துளிர்விடும். மனம் லேசாகும். தாம் வாழ்ந்த காலத்திலேயே அவதார புருஷராகக் கொண்டாடப்பட்டவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

மிக கடினமான வேத, உபநிடத கருத்துக்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் குட்டிக் குட்டிக் கதைகள் மூலம் விளக்கி ஏழை எளியோர்களின் குருவாக திகழ்ந்தார் ராமகிருஷ்ணர். அவரது குருமார்களில் ஒருவர் பைரவி பிராம்மணி என்ற பெண்மணி. இவர் சாஸ்திரங்களில் கரைகண்டவராகவும், கடினமான தவ வாழ்க்கை வாழ்ந்து உயர்ந்த ஆன்மீக அனுபங்கள் பெற்றவராகவும் இருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீக நிலைகளைக் கண்ட இவர், ஸ்ரீராமகிருஷ்ணர் சாதாரண மகான் அல்ல. அவதார புருஷர் என்று தெளிந்தார்; தாம் உணர்ந்தைப் பிறரிடம் வெளிப்படையாக எடுத்துக்கூறவும் செய்தார். அன்று வாழ்ந்திருந்த கௌரி காந்தர், வைஷ்ணவ சரண் போன்ற மிகப் பெரிய பண்டிதர்களை எல்லாம் கூட்டி, ஒரு பண்டித சபையில், தாம் அறிந்த உண்மையைச் சாஸ்திரங்களின் துணையுடன் நிரூபிக்கவும் செய்தார்.

ராமகிருஷ்ணரின் உபதேசங்கள் நம்முடனேயே வாழ்பவர் ஒருவர் சொல்வதைப்போல, அவ்வளவு அன்யோன்யமாக இருக்கும். ஆகவே கடைப்பிடிக்கவேண்டும் என்ற உத்வேகத்தையும் அவசியத்தையும் அவை தாமே ஏற்படுத்திவிடும். “ராமகிருஷ்ண பரமஹம்சருடைய உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமானம் என்றால் மிகையாகாது. பழைய காலத்து ரிஷிகளைப் போன்ற தபோதனர் ஒருவர் நம்முடைய காலத்தில் அவதரித்தார். அவரே ராமகிருஷ்ண பரமஹம்சர்” என்றார் மூதறிஞர் ராஜாஜி.

Ramakrishna

ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு தெரியாத சித்துக்களோ மந்திர தந்திர வித்தைகளோ இல்லை. இருப்பினும் அவற்றை அவர் பயன்படுத்தி பெயரும் புகழும் ஈட்டவேண்டும் என்று ஒரு போதும் நினைத்தது கிடையாது. (ஒன்றுமே தெரியாமல் இன்றைக்கு ஷோ காட்டும் சாமியார்களை இங்கே நினைத்துக்கொள்ளுங்கள்!)

ஸ்ரீராமகிருஷ்ணரின் இறுதி நாட்களில் ஒருவர் அவரிடம், “உங்கள் மன ஆற்றலை பயன்படுத்தி உங்கள் நோயை குணப்படுத்திக்கொள்ளலாமே…” என்று ஆலோசனை கூறினார். அதற்கு அவர், “என்ன அற்பத்தனம்! தேவியிடம் கொடுத்த மனதை சதைப்பிண்டமான உடம்பில் செலுத்துவதா?” என்று வெகுண்டெழுந்துவிட்டார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் தனது மகாசமாதிக்கு பிறகு தனது சீடர் ஒருவரின் வாழ்வில் நிகழ்த்திய அருள்விளையாட்டு ஒன்றை பார்ப்போம்…!

Ramakrishna Paramahamsa

எதற்காக இப்படி வருத்தப்படுகிறாய்?

ரித்வாரில் சுவாமி சுபோதானந்தர் (ராமகிருஷ்ணரின் சீடர்) தங்கியிருந்தபோது பின்வரும் சம்பவம் நிகழ்ந்தது. அதை அவரே கூறுகிறார்;

‘இரண்டு மாதங்களாகக் கடுமையான காய்ச்சலில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன். ஜாடியில் இருக்கின்ற நீரைக் கூட எடுத்துக் குடிக்க முடியாத நிலைமை. ஒரு நாள் இரவு நீர் அருந்துவதற்காக ஜாடிக்கு அருகில் சென்றேன்; இயலாமல் மயங்கி விழுந்துவிட்டேன்.

”சுயஉணர்வு பெற்று எழுந்தபோது மிகவும் பலவீனமாக இருந்தது. என்னுடைய பரிதாபமான நிலைமையைக் கண்டு மனம் நொந்து போனேன். ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கண்ணீர் விட்டு அழுதபடியே, ”குருமஹாராஜ்! என்னைக் கவனித்துக்கொள்ள யாருமே இல்லை. ஒரு வாய் நீர் அருந்தவாவது எனக்கு வலிமை தரக் கூடாதா?” என்றெல்லாம் அரற்றியவாறே தூங்கிவிட்டேன்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் அப்போது என்முன் தோன்றினார். அவர் என் உடம்பை அன்புடன் வருடியபடியே,”எதற்காக இப்படி வருத்தப்படுகிறாய்? நான் எப்போதும் உன் அருகில் இருப்பதை நீ உணரவில்லையா? உனக்கு இப்போது என்ன வேண்டும்? உதவியாளர்களா? பணமா?” என்று கேட்டார்.

அதற்கு நான்,”எனக்கு இரண்டுமே தேவையில்லை. உடல் இருக்கும் வரை வியாதிகளைத் தவிர்க்க முடியாது. எப்போதும் நான் உங்களை மறக்கக் கூடாது. இதை மட்டுமே நான் உங்களிடம் வேண்டுகிறேன். நான் எங்கே சென்றாலும் என்னுடன் வாருங்கள். அப்போதும்” என்று பதில் கூறினேன்.

‘மறுநாள் விடிந்தது. அந்த அதிகாலையில் வெளியில் இருந்து யாரோ என்னை அழைத்து, ”சுவாமி, கதவைத் திறவுங்கள்” என்று கூவினார். நான் தட்டுத்தடுமாறி எழுந்து சென்று கதவைத் திறந்தேன். இளம் துறவி ஒருவர் வெளியில் நின்று கொண்டிருந்தார். அவர் என்னிடம்,”உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள். நான் உங்களுக்கும் சேர்த்து பிச்சை ஏற்று வரட்டுமா?” என்றார். நான் அவரிடம்,”எனக்கு எதுவும் வேண்டாம்” என்று கூறிவிட்டு,”என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Ramakrishna Paramahamsa 3

அந்தத் துறவி கூறினார்; “பிரம்மகுண்டத்தில் சில சடங்குகளைச் செய்வதற்காக ஓரிரு நாட்களுக்கு முன்பு நான் ஹரித்வார் வந்தேன். நேற்றிரவு துர்க்கா தேவி என் கனவில் தோன்றி, ‘நீ இந்தச் சடங்கைச் செய்து பெறப் போகும் நற்பலன்களைவிட அதிகமான பலன்களைப் பெற வேண்டுமானால் குடிசையில் வாழும் உடல்நலமில்லாத அந்தத் துறவிக்குச் சேவை செய்” என்று கூறினாள்.”

‘துறவி கூறியதைக் கேட்ட எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவரிடம், ”மகராஜ், எந்த உதவியும் எனக்கு வேண்டாம். தேவையானால் சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டேன்.

‘அதேநாளில் மற்றோர் அதிசயம் நடந்தது. இன்னொரு துறவிக்கு ஐம்பது ரூபாய் மணியார்டர் வந்திருந்தது. அவர் நேராக என்னிடம் வந்து, ”நீங்கள் காய்ச்சலால் அவதிப்படுகிறீர்கள். உங்களுக்கு நல்ல உணவும் மருந்தும் தேவைப்படுகின்றன. இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார். நான் அதையும் மறுத்துவிட்டேன்.

‘மறுநாளும் ஸ்ரீராமகிருஷ்ணரின் லீலை தொடர்ந்தது. முதலில் வந்த துறவி மீண்டும் என்னிடம் வந்து, ”நேற்றிரவும் தேவி என் கனவில் வந்து உங்களுக்குச் சேவை செய்யுமாறு கூறினாள்” என்றார். நான், “எனக்கு எந்த உதவியும் தேவைப்படவில்லை” என்று அவரைச் சமாளித்து அனுப்பி வைத்தேன். அவர் சென்ற பிறகு ஸ்ரீராமகிருஷ்ணரிடம், ”தயவுசெய்து இதற்குமேலும் என்னைச் சோதிக்காதீர்கள். என் மனத்துயரை நீக்கிவிட்டீர்கள். அதுவே போதும்” என்று கூறினேன். மூன்றாம் நாளும் அந்தத் துறவி வந்தார். பிறகு வரவில்லை.

ஆக்கத்தில் உதவி : ‘என்றும் காக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணர்’

=========================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்….

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check : 

துறவிக்கு கிடைத்த நரகம்! ராமகிருஷ்ண பரமஹம்சர் B’DAY SPL

இந்த உலகிலேயே மிகப் பெரிய கடவுள் பக்தன் யார்?

விவேகானந்தர் செய்த சித்திகள்

ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!

‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

யார் உங்கள் தலைவர்?

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்

நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ?

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *