Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, February 28, 2024
Please specify the group
Home > Featured > ‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

print
ன்று சுவாமி விவேகானந்தர் நினைவு நாள். இதே நாள் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி நம்மை விட்டு அந்த ஞானச்சூரியன் மறைந்தது. சுவாமிஜி இந்த உலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் தான். ஆனால் அந்த குறுகிய காலத்திலேயே வாழ்வாங்கு வாழ்ந்து தனக்குப் பின்னால் இன்னும் பல நூற்றாண்டுகள் பல தலைமுறையினருக்கு வேண்டிய சக்தியையும், உத்வேகத்தையும், தன்னம்பிக்கைகளையும் விட்டுச் சென்றிருக்கிறார்.

சுவாமி விவேகானந்தருக்கும் நமக்கு உள்ள பந்தத்தை நீங்கள் அறிவீர்கள். இந்த களிமண்ணை செதுக்கிய கடவுளின் தூதர் அவர் தான். நம் தளத்தின் பல பதிவுகளில் அது பற்றி நாம் கூறியதை பார்த்திருப்பீர்கள். (அந்தப் பதிவின் சுட்டிகள் இறுதியில் தரப்பட்டுள்ளன).

இந்த புனித நாளில் சுவாமிஜியின் ஒப்பற்ற தியாக வாழ்வை நினைவு கூறும் விதமாக சுவாமிஜி சம்பந்தப்பட்ட மூன்று நிகழ்வுகளை தருகிறோம். மூன்றும் முத்துக்கள் என்றால் மிகையாகாது.

Swami Vivekanandaஎது உண்மையான தேசபக்தி ?

திருவனந்தபுரத்தில், சுந்தரராம ஐயரின் மகனான ராமசுவாமி சாஸ்திரியிடம் சுவாமிஜி கூறிய கருத்துக்கள் பின்னாளில் அவர் எத்தகைய பணியை செய்ய விரும்பினார் என்பதை எடுத்துக்காட்டின.

‘தேச பக்தி, தேச பக்தி என்கிறார்கள். உண்மையில் அது என்ன? கண்மூடித்தனமான நம்பிக்கையா? இல்லை. நாட்டு மக்களுக்கு தொண்டு செய்யவேண்டும் என்பதில் உள்ள பேரார்வம் தான் தேசபக்தி. இந்தியா முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பங்களும், ஒழுக்கச் சீற்குளைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்த தீமைகளை வேரோடு களைந்து எறிய வேண்டும் என்று துடிக்கிறேன். “அவர்களின் தீவினை அது. அதனால் கஷ்டப்படுகிறார்கள்” என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள். கஷ்டப்படுவது அவர்களின் கர்மம் என்றால், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது கர்மம். கடவுளைக் காணவேண்டும் என்றால் மனிதனுக்கு தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டும் என்றால் பட்டினியில் வாடுகின்ற லட்சோப லட்சம் ஏழை நாராயணர்களுக்கு சேவை செய்யுங்கள். அது தான் உண்மையான தேசபக்தி.’

“எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்பவனே அறிவாளி.”

கிறிஸ்தவ மிஷினரியுடன் தங்கிய சுவாமிஜி!

ரு சமயம் சுவாமிஜி ஒரு கிறிஸ்தவ மெஷினரியின் அறையில் தங்க நேர்ந்தது. அந்த அன்பர் முதலில் சுவாமிஜியின் நண்பராக இருந்து பின்னர் மெஷினரியாக மாறியவர். மெஷினரி என்பதால் சுவாமிஜியின் கருத்துக்கள் அவரை வெறுப்படையச் செய்தன. அந்த வெறுப்பை அவர் சுவாமிஜியிடம் வெளிப்படையாகவே காட்டினார்.

அதைப் பற்றி நண்பரொருவர் சுவாமிஜியிடம், “சுவாமிஜி… உங்களுக்கு தொந்தரவு கொடுக்குற உங்களை வெறுக்கிற ஒருவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்? பேசாமல் அவரை விட்டு விலகி வேறு எங்காவது தங்கிக்கொள்ளக்கூடாதா?”

அதற்கு விவேகானந்தர் சிரித்துக்கொண்டே, “ஓ… என்னை கட்டுப்படுத்திக்கொள்ள அவர் எனக்கு நல்ல வாய்ப்பை அல்லவா தருகிறார்! கடவுள் அவருக்கு அருள் புரியட்டும்!!” என்றர.

“மகத்தான செயல்கள் எல்லாம் பெரிய சோதனைக்கு பின்னரே சாத்தியமாகும்.”

எங்கோ விபத்து நடந்ததாம்…. இவருக்கு தூக்கம் கலைந்ததாம்….

சுவாமிஜி ஏழைகளுக்காகவும் துன்பப்படுபவர்களுக்காகவும் துடித்தார் என்றால் அது ஏதோ கருணை காரணமாக அல்ல. சுவாமிஜியின் நிலை அதை விட உயர்ந்தது. அவரது நிலையை ‘விச்வாத்ம போதம்’ என்று என்று விளக்குவார் அகண்டானந்தர். அதாவது அனைத்து உயிர்களையும் தாமாக உணர்கின்ற நிலை அது. அந்த துன்பங்களை அவர் தாமாக உணர்ந்தார். இதற்கு ஆதாரமாக பேலூர் மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பற்றி சுவாமி விஞ்ஞானானந்தர் என்பவர் கூறுவது…

‘பேலூர் மடத்தில் ஒரு நாள், இரவு இரண்டு மணியிருக்கும். திடீரென்று சுவாமிஜியின் தூக்கம் கலைந்தது. எழுந்து வராந்தாவில் நடக்கத் துவங்கினார். அப்போது நான் சென்று, “என்ன சுவாமிஜி, தூக்கம் வரவில்லையா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர், “இதோ பாரப்பா! நன்றாக தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென்று யாரோ என்னைப் பிடித்து தள்ளுவது போல இருந்தது. என் தூக்கம் கலைந்தது. எங்கோ ஏதோ விபத்து நடந்திருக்கிறது. அதனால், பலர் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது” என்றார்.

“எங்கோ விபத்து நடந்ததாம். இவருக்கு தூக்கம் கலைந்ததாம். இதெல்லாம் நடக்கக்கூடியதா என்ன?” என்று எனக்கு தோன்றியது. எனக்குள் சிரித்துக்கொண்டேன்.

ஆனால் ஆச்சரியம்! ஆனால் மறுநாளுக்கு மறுநாள் காலையில் செய்தித்தாளை பிரித்தால் திடுக்கிடும் செய்தி வெளியாகியிருந்தது.

‘சுவாமிஜிக்கு தூக்கம் கலைந்த அதே இரண்டு மணி அளவில், ஃபிஜிக்கு அருகே உள்ள தீவில் எரிமலை வெடித்ததில், பலர் மரணமடைந்தனர். பலர் வீடிழந்தனர், பெருத்த சேதம் உண்டாயிற்று. செய்தியை படித்தபோது நான் திகைத்துப் போனேன். நிலநடுக்கத்தை அறிவதற்கான கருவியைவிட சுவாமிஜியின் நரம்பு மண்டலம் துல்லியமாக இருந்தது. மனிதன் எந்த நாட்டில் எங்கே துயருற்றாலும் அது அவரது நாடி நரம்புகளை தகித்தது!’

“சில நேரத்தில் இன்பத்தை விட துன்பமே, மனிதனுக்கு சிறந்த ஆசிரியராக வாழ்விற்கு வழிகாட்டுகிறது.”

=================================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=================================================================================

Also check :

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

யார் உங்கள் தலைவர்?

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

=================================================================================

[END]

3 thoughts on “‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

 1. சுவாமிஜியின் நினைவு நாளில் அவரைப் பற்றி நினைவு கூர்ந்து அவரின் வாழ்வில் நடந்த முத்தான மூன்று நிகழ்வுகளை அழகாக செதுக்கி இருக்கிறீர்கள் தங்கள் பதிவில்

  சுவாமிஜியின் கொள்கைகளை நாம் பின்பற்றினாலே நாம் வாழ்வில் ஒரு உயர்ந்த உன்னத நிலையை அடையலாம் .

  // மகத்தான காரியங்கள் யாவும் மெல்லத்தான் நடைபெறும் //
  சுவாமிஜி

  // நம்முடைய அதிர்ஷ்டங்களுக்கு நாமே காரணம் , நாமே நமது துன்பங்களுக்கு காரணம் .நமது நன்மை தீமைகளை நாமே உருவாக்கி கொள்கிறோம் . நாமே நம் கண்களை நம் கைகளால் மறைத்துக் கொண்டு இருட்டாக இருக்கிறது என்று கதறுகிறோம் // சுவாமிஜி

  நம் தளத்திற்கு வந்த பின் தான் சுவாமிஜியை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என் விரும்பி அவரைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். என் மனதில் நல்ல எண்ணத்தை விதைத்த தங்கள் தளத்திற்கு நன்றிகள் பல

  வாழ்க … வழமுடன்

  நன்றி
  உமா வெங்கட்

 2. விவேகானந்தரின் நினவு நாள் சிறப்பு பதிவு சூப்பர்.

  தேச பக்திக்கான விளக்கம், இன்றைய அரசயில்வாதிகளுக்கு ஒரு சாட்டையடி

 3. முத்தான மூன்று நிகழ்வுகளை பதிவில் காட்டி…விவேகானந்தரின் நினைவு நாள் பதிவை மெருகேற்றி விட்டிர்கள்.

  விவேகானந்தரின் வண்ணப்படம் மிகவும் அருமை.. தொடர்புடைய சுட்டிகளை இணைத்தது எளிதாக மற்ற பதிவுகளை படிக்க உதவும். ஏனைய பதிவுகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவலை இந்த பதிவு தூண்டிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *