இரண்டு குறுநில மன்னர்களில் முதலமானவன் படைபலம் சற்று அதிகம் கொண்டவன். திறமைசாலி. ஒரு நாள் குருவை சந்திக்க வந்தான். “குருவே, நான் என் எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டிய வேளை வந்துவிட்டது. போரில் எனக்கு வெற்றி கிடைக்குமா இல்லையா என்று உங்கள் யோகசக்தியை வைத்து கடவுளிடம் கேட்டு சொல்லுங்களேன்…” என்றான்.
குருவும் கண்களை சிறிது நேரம் மூடிக்கொண்டு தியானம் செய்த பின்னர், “இந்தப் போரில் நீ தான் வெற்றி பெறுவாய்!!” என்றார்.
சந்தோஷமாக விடைபெற்றுச் சென்றான் மன்னன்.
அடுத்த நாள் இரண்டாம் மன்னன் வந்தான். இவனிடம் படைபலம் சற்று குறைவு தான். ஆனாலும் தைரியசாலி. அவனும் இதே கேள்வியை குருவிடம் கேட்டான். அவரும் சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு, “இந்த போரில் நீ தோல்வியடையும் வாய்ப்பே அதிகம்” என்றார்.
அடிப்படையில் இந்த மன்னன் அசாத்திய தைரியசாலி + தன்னம்பிக்கை மிக்கவன் எனவே குரு சொன்னதைக் கேட்டு கலங்கவில்லை.
நேராக தனது நாட்டுக்கு சென்று, பாதுகாப்பு அமைச்சர், தளபதி, முன்னணி வீரர்கள் அடங்கிய கூட்டம் ஒன்றை கூட்டினான்.
“வீரர்களே, இந்த போரில் நாம் வெற்றியடைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே நமது எதிரியை தோற்கடிக்க, நாம் எல்லா விதங்களிலும் முயற்சிக்கவேண்டும். இன்றிலிருந்து நமது வீரர்கள் போருக்கான ஒத்திகையை துவக்கட்டும். அது போக வீட்டுக்கு ஒருவரை தயார் செய்யுங்கள். குதிரைகளை தயார்படுத்துங்கள். ஆயுதங்களை கூர் தீட்டுங்கள். ஜெயிப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றை கூட விடக்கூடாது!” என்றான்.
முதலாவது மன்னனோ, வெற்றிச் செய்தி முதலிலேயே கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், கேளிக்கைகளிலும் கொண்டாட்டங்களிலும் காலத்தை கழித்தான். அவன் வீரர்களோ ஒரு படி மேலேச் சென்று, நாம் தான் ஜெயிப்போம் என்று விதி நம் பக்கம் இருக்கும்போது நாம் எதற்கு வீணாக ஒத்திகைகளில் காலத்தை கழிக்கவேண்டும் என்று அஜாக்கிரதையாக இருந்தனர்.
போருக்கான நாளும் வந்தது. இரு நாட்டு வீரர்களும் எதிரெதிரே அணிவகுத்து நின்றனர். இரண்டாம் நாட்டு மன்னனும் அவன் வீரர்களும் பல நாட்கள் ஒத்திகை பார்த்து போருக்கு தயார் நிலையில் இருந்தனர். முதலாம் நாட்டு மன்னனும் வீரர்களும் முன்தினம் இரவு முழுதும் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையால் முழுக்க முழுக்க போதையில் இருந்தனர். போர் துவங்கிய சிறிது நேரத்திலேயே இரண்டாம் நாட்டு வீரர்கள் மிகச் சுலபமாக முதல் நாட்டை தோற்கடித்து கோட்டையை கைப்பற்றிவிட்டனர். முதல் நாட்டு மன்ன சிறை வைக்கப்பட்டான்.
தண்டனை விதிக்கப்படும் முன், தன் கடைசி ஆசையாக தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய தன் குருவை பார்க்கவேண்டும் என்றான்.
அதன்படி குருவின் முன்னர் கொண்டு போய் நிறுத்தப்பட்டான்.
“உங்கள் வாக்கு பொய்த்துவிட்டதே. நான் தோற்றுவிட்டேனே… இது நியாயமா?” என்றான்.
குரு சிரித்துக்கொண்டே, “உழைப்பவர்களுக்கே இந்த உலகம் சொந்தம். உன்னிடம் திறமை இருந்தும் நீ தான் வெற்றிப்பெறப் போகிறாய் என்று நீ தெரிந்துகொண்டதால், நீ உனது வெற்றிக்கு உழைக்கவில்லை. அஜாக்கிரதையாக இருந்தாய். ஆனால், உன் எதிரி நாட்டு மன்னனோ, அவன் தான் போரில் தோற்பான் என்று தெரிந்துகொண்டபோதும், நம்பிக்கையை இழக்காமல், இரவு பகல் பயிற்சி செய்து படையை தயார்படுத்தினான். அந்த ஏழு நாட்களும் அவன் தூங்கவில்லை. ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் கொள், திறமை உழைக்கத் தவறினால், உழைப்பு திறமையை வென்றுவிடும். இதை மாற்ற யாராலும் முடியாது!” என்றார்.
அற்பணிப்பு உணர்வு கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டால் விதியையும் வெல்ல முடியும் என்று உணர்ந்துகொண்ட மன்னன் மன்னிப்பு கேட்டுக்கொண்டு விடைபெற்றான்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். (குறள் 620)
விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் விடாமுயற்சியே!
அடுத்த முறை எந்த சூழ்நிலையிலாவது ‘நம்மால் விதியை வெல்ல முடியுமா?’ என்ற சந்தேகம் உங்களுக்கு வந்தால், இந்த கதையும் அதை ஆமோதிக்கும் மேற்படி குறளும் உங்களுக்கு நினைவுக்கு வரவேண்டும்!
===============================================================================
* இது முழுக்க முழுக்க ரைட்மந்த்ரா வாசகர்களுக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்படுவதாகும். இதை சமூக வலைத்தளங்களில் காப்பி பேஸ்ட் செய்து வெளியிடுவது சட்டப்படி குற்றம். நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் முகநூலில் ஷேர் செய்யவும் விரும்பினால் பதிவின் துவக்கத்திலும் இறுதியிலும் பிரத்யேக வசதிகள் உள்ளன. அதைக் கொண்டு ஷேர் செய்யவும் நன்றி.
===============================================================================
ஒரு முக்கிய விஷயத்தை அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்!
நம் தளத்தில் பதிவுகளின் இறுதியில் விருப்ப சந்தா குறித்த கோரிக்கை அளிக்கப்படுவது நீங்கள் அறிந்ததே. அது தவிர அவ்வப்போது நாம் செய்யக்கூடிய அறப்பணிகளுக்கும் உதவி கோரி அறிவிப்பு வெளியிடுகிறோம். அது குறித்து ஒரு சிறு விளக்கம்.
1) விருப்ப சந்தா
இது தான் நமது வாழ்வாதாரம். தளம் நடப்பது இதைக் கொண்டு தான். இதன் மூலம் தான் தளத்தின் நிர்வாக செலவுகள் செய்யப்படுகிறது. இதை அனைத்து வாசகர்களிடம் இருந்தும் – அவரவர் சக்திக்கு ஏற்ப – எதிர்பார்க்கிறோம். ஆனால் இதைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. பெயரைப் போலவே இது விருப்ப சந்தா. (VOLUNTARY SUBSCRIPTION).
நம் தளத்தின் நிர்வாகப் பணிகளில் உதவுவதே சிறந்த புண்ணிய காரியம் தான் என்றாலும் ‘விருப்ப சந்தா’ செலுத்தும் வாசகர்களுக்கு பிரதியுபகாரம் செய்யவேண்டி அதில் கிடைக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை நூம்பல் கோவிலில் நடைபெறும் கோ-சம்ரட்சணத்திற்கு பயன்படுத்தப்படுகிறோம்.
2) சேவைகளில் உதவி வேண்டி விடுக்கும் கோரிக்கைகள்
இது அவ்வப்போது நாம் செய்யக்கூடிய, ஒப்புக்கொள்ளக்கூடிய அறப்பணிகளுக்கு. இதை நாம் அனைத்து வாசகர்களிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை. அந்தந்த சேவைகளில் இணைய விருப்பமுடைய வாசகர்களிடமிருந்து தான் எதிர்பார்க்கிறோம். அவ்வளவே. செய்யும் சேவையானது செம்மையாக செய்ய இது துணை புரியும். இதில் கிடைக்கும் தொகையை வைத்து பிரதி மாதம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோ-சம்ரட்சணம் செய்யப்படுகிறது. (இது நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.)
விருப்ப சந்தா என்பது அனைத்து வாசகர்களின் கடமை. சேவைகளில் உதவி என்பது அவரவர் சௌகரியம். இரண்டிற்கும் உதவ விரும்பினால் மிக்க மகிழ்ச்சி.
===============================================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
===============================================================================
Also check for more motivational stories :
நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?
‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?
சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?
இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?
நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!
அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?
நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!
மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?
===============================================================================
[END]
”விதியை நம்மால் வெல்ல முடியும்” என்பதை ஒரு அழகான கதையின் மூலம் நம் வாசகர்களுக்காக தொகுத்து அளித்து இந்த வாரத்தை இனிமையான வாரமாக ஆரம்பித்ததற்கு நன்றிகள் பல.
//ஒரு மனிதனின் வெற்றி அல்லது தோல்விக்கு அவனது அறிவுத்திறனை விட மனப் பாங்கே முக்கிய பங்காற்றுகிறது / — kemmons wilson
// Visualize the beginning with the end in mind //
வாழ்க ……….. வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
Wonderful article that truly demonstrates the importance and significance of hard work. “… முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்…”
Regards
Prabu
வணக்கம் சுந்தர். உழைக்காத திறமை பட்டை தீட்டாத வைரம் என்பது உண்மை .பசி நோக்கார் , கண் துஞ்சார், கருமமே கண் ஆயினர் என்று இருந்த மன்னனுக்கு வெற்றி கிடைத்தது.நல்ல பதிவு . நன்றி
விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வார்கள். இந்த பதிவை கூர்ந்து நோக்கிய பிறகு தான் – மதி என்று சொல்லுவது – விடாயமுயற்சியுடனான உழைப்பு என்பது புரிகிறது.
மறக்க முடியாத சிறுகதை..சிறுகதை பெரிய தத்துவத்தை பேசி …என்னை கவர்கிறது..அடிக்கடி நாம் சோர்வுறும் போது, இந்த கதையை அசை போடுவது, நம் நலத்திற்கு உரம் சேர்க்கும் என்பது உறுதி..
நன்றி அண்ணா…