Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, April 18, 2024
Please specify the group
Home > Featured > “பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

print
ம் மக்கள் பெரும்பாலானோரிடம் இரக்க சுபாவம் இருந்தும் பிச்சைக்காரர்களுக்கு பலர் பிச்சையிட தயங்குவதன் காரணம், அந்த பணத்தை கொண்டு அவர்கள் புகை, கஞ்சா, மது என்று தவறான வழிகளில் பயன்படுத்துவார்கள் என்ற அச்சத்தினால் தான். இது குறித்து சுவாமி விவேகானந்தர் அற்புதமான விளக்கம் ஒன்றை தந்திருக்கிறார்.

Swami Vivekananda Quote_தாய்நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீவிர உணர்வு அவ்வப்போது சுவாமிஜியிடம் மிகவும் உணர்ச்சிப் பிரவாகமாக வெளிப்பட்டது. ஒரு நாள் செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தார். கல்கத்தாவில் ஒருவர் பசியால் வாடி மரணமடைந்ததாக அதில் வெளியாகியிருந்தது. அந்த நிகழ்ச்சி அவரை மிகவும் பாதித்தது. ஆழ்ந்த கவலையுடன் முகம் வாடியவராக அவர் அமர்ந்திருந்தார். அதைக் கண்ட ஹரிபாதர் காரணம் கேட்டபோது சுவாமிஜி கூறினார்.

‘மேலை நாடுகளில் எவ்வளவோ தரும நிறுவனங்கள் உள்ளன. தரும காரியங்களுக்காக அவர்கள் எவ்வளவோ செலவு செய்கிறார்கள். இருந்தும் அங்கே சமுதாயம் ஒதுக்கி வைப்பதால் இறப்போர் பலர். ஏழைகளைச் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை. ஒதுக்கிவிடுகிறது. நமது நாடு ஏழையாக இருந்தபோதிலும், தருமம் செய்ய வேண்டும் என்பது ஒரு சமுதாய நியதியாக உள்ளதால் ஏழையையோ பிச்சைக்காரனையோ சமுதாயம் ஒதுக்குவதில்லை. ஒரு பிடி அரிசியோ ஒரு கைப்பிடி சாதமோ பெறாமல் யாரும் எந்த வீட்டிலிருந்தும் திரும்புவதில்லை. எனவே நமது நாட்டில் பஞ்சம் அல்லாத காலங்களில் பசியால் இறப்போர் மிகமிகக் குறைவு. பசியால் ஒருவன் இறந்தான் என்று இப்போதுதான் நான் முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன்.’

‘ஆனால் சுவாமிஜி, பிச்சைக்காரர்களுக்கு உணவு அளிப்பது வீண்செலவே அல்லவா? நாம் கொடுக்கும் உணவோ பொருளோ அவர்களுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீமையே செய்யும் என நான் நினைக்கிறேன். நாம் கொடுக்கும் பணத்தில் கஞ்சாவோ கள்ளோ குடித்து அவர்கள் கெட்டுப் போவார்களோ தவிர உருப்படியாக எதுவும் நடக்காது’ என்று கூறினார் ஹரிபாதர்.

‘ஒரு பைசா கொடுத்துவிட்டு அதை அவன் என்ன செய்கிறான் என்று கணக்கிட்டு நீ ஏன் உன் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும்? உன்னிடம் பணம் உள்ளது, கொடு, அவ்வளவுதான். நீ கொடுக்காமல் விரட்டினால் அவன் என்ன செய்வான்? திருடுவான். கஞ்சாவோ கள்ளோ குடித்தால் அது அவனை மட்டுமே பாதிக்கும். திருடினால் அது சமுதாயம் முழுவதையுமே அல்லவா பாதிக்கும்!’ என்று கேட்டார் சுவாமிஜி.

மனசாட்சிக்கும் யதார்த்தத்துக்கும் போராட்டம் நடைபெறும்போது சுவாமிஜி கூறியபடியே செய்யுங்கள்!

===========================================================
Also check :
ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!
===========================================================

[END]

3 thoughts on ““பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

  1. டியர் சுந்தர்ஜி

    சுவாமிஜியின் கருத்து மிக அருமை அதை பதிவளித்த உங்களுக்கு நன்றி.

    //மனசாட்சிக்கும் யதார்த்தத்துக்கும் போராட்டம் நடைபெறும்போது சுவாமிஜி கூறியபடியே செய்யுங்கள்!//

    Definitely i will follow the rules of சுவாமிஜி

    நன்றி
    உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *