ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது — சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.
அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.
மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.
இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.
பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.
அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.
அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.
விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.
அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.
“”சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.
அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.
பிரச்சனைகளை எதிர்கொள்வதும் இப்படித்தான்.
வாழ்க்கையின் பிரச்னைகளை கண்டு ஓடி ஒளியக் கூடாது… அனைத்தையும் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளவேண்டும்
பிரச்னைகளுக்கு பயந்து ஓடுபவன் கல்லறை போகும் வரை கூட நிம்மதியாக இருக்கமுடியாது. மாறாக எதையும் நேர் நின்று எதிர்கொள்ள பழகினால், உலகமே உங்கள் காலடியில்!
=================================================================
Also check :
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66
உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65
முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==================================================================
[END]
வணக்கம்………
நல்ல கருத்து……..பிரச்சனைகளை கண்டு பயந்து ஒளியும் என் போன்றோருக்கு சரியான பாடம்…………நன்றிகள் பல………
//வாழ்க்கையின் பிரச்னைகளை கண்டு ஓடி ஒளியக் கூடாது… அனைத்தையும் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளவேண்டும்
பிரச்னைகளுக்கு பயந்து ஓடுபவன் கல்லறை போகும் வரை கூட நிம்மதியாக இருக்கமுடியாது. மாறாக எதையும் நேர் நின்று எதிர்கொள்ள பழகினால், உலகமே உங்கள் காலடியில்!//
monday ஸ்பெஷல் சுபெர்ப். எல்லோருக்கும் இனிய காலை வணக்கங்கள் . இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்
நன்றி
உமா
“””எதையும் நேர் நின்று எதிர்கொள்ள பழகினால், உலகமே உங்கள் காலடியில்!”’
மிகவும் அருமையான பதிவு .
நன்றி ஜி
மனோகர்
Very good example for self confidence & courage . Thanks
அருமையான பதிவு.
பிரச்சனைகள் சிறிதோ பெரிதோ என்பது முக்கியம் இல்லை.
அவற்றை துணிந்து எதிர்த்து நிற்பது தான் முக்கியம்.
அருமையான கருத்து
ஏற்கனவே படித்து இருந்தாலும் நம் பதிவில் படிப்பது இன்னும் நன்றாக உள்ளது
நன்றி.
\\ பிரச்னைகளுக்கு பயந்து ஓடுபவன் கல்லறை போகும் வரை கூட நிம்மதியாக இருக்கமுடியாது. மாறாக எதையும் நேர் நின்று எதிர்கொள்ள பழகினால், உலகமே உங்கள் காலடியில்! \\
அருமையான வைர வரிகள். ஒவ்வொரு ஐந்து வருட முடிவிலும் நாம் பயந்த நிகழ்ச்சிகளை பின்னோக்கி பார்த்தோமானால், நாம் இதற்காகவா அப்போது பயந்தோம் என்று வியப்பாக இருக்கும். ஏனெனில் அவற்றையெல்லாம் தாண்டிதான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருப்போம்.
அடுத்து, ஓடுவதினால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்றால் எல்லோருமே சாதனையாளர்கள் தான், அதை எல்லோராலும் செய்ய முடியும். ஆனால் சாதனையாளர்களின் பட்டியல் சிறியதாகத்தான் உள்ளது.
Very nice story with lot of meaning
Thanks
Nagaraj T
மிகச் சிறந்த பதிவு. தக்க சமயத்தில் எங்கள் கவலைகளுக்கு ஆறுதல் அளித்த பதிவு.
நன்றி,
வெங்கட்.
Nalla padivu thank u
அவசரச் செய்தி (இது பற்றி தாங்கள் கண்டிப்பாக எழுதவேண்டும்).
கீழ்க்கண்ட பதிவை ஒரு “பேஸ் புக்இல் ” படித்தது. நிஜத்தின் சுடும் பதிவிற்காக இங்கே அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது.
https://www.facebook.com/unmaiseithigal
உங்களுக்கும் இதில் பஙகிருக்கிறது..
படியுங்கள்.பகிர்ந்து கொள்ளுங்கள்
1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.
2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், “நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்” என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.
3.குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.
4.விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.
சகோதர, சகோதரிகளே இதை பாரக்கும் நம் வீட்டு குழந்தைகளும் ஆபாசத்தின் வலையில் விழ அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் இந்நிகழ்ச்சி தடை செய்ய பட வேண்டும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக!
நம்மால் செய்ய முடிந்து இதை தடுக்க எந்த முயற்சியையும் செய்யாமல் குழந்தைகளுக்கு எதிரான இந்த உளவியல் தாக்குதலை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம்.
இந்த சிறுப்பெண்கள் பாடும் காதல் பாட்டுகள்,குத்துப் பாடல்கள்,விரசா வரிகள் – சே ரத்தம் கொதிக்கவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை!
இந்த குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பாட வைத்த வக்கிரப் பாடல்கள் சில.
1.நேத்து ராத்த்தீரி அம்மா.
2.வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
3.கல்யாணம்தான் கட்டிட்டு ஓடி போலாமா
இன்னும் நிறைய விரல்கள் டைப் அடிக்க மறுக்கின்றது.
இதை பெருமையுடன் அப்பனும் ஆத்தாளும் உட்கார்ந்து பார்ப்பதுதான் வேதனை.
இந்த பதிவு உங்கள் மனதிற்கு நியாமாக பட்டால் இதை தயவு செய்து பகிரவும் – அவசரம் – Share now to save the kids —
இதை நம் தளத்தில் பகிர்ந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. சற்று கூடுதல் குமுறல்களுடன்.
http://rightmantra.com/?p=13603
– சுந்தர்